மருதையன் உரை குறித்து ஜெயமோகன் கேலி

மருதைய்யன் சமூகத்தில் காணப்படும் விசயத்தை சொல்கிறார் ஆனால் அது பிரசாரத்துக்காக கொஞ்சம் அதிகப்படுத்தப்பட்டதை புரிந்து கொண்டு கேள்வி கேட்கிறார்கள்.

பாப்கார்ன் தலைமுறை என்றால் இத்தனை விவாதங்கள் வருமா எனும் சின்ன கேள்வியிலேயே அடிபட்டுபோகிறது அவரது வாதம்.

இயக்கவியல் என்ன சொல்கிறது ஒரு விசயத்தின் நன்மை தீமை இரண்டையும் எடுத்துகொள் என்கிறது.

தீமை என்பது பாப்கார்ன் தலைமுறை என்றால் நன்மைன்னு ஒன்று இருக்கும் அது பிரசாரத்துக்காக மறைக்கப்படுகிறது அதான் சொல்கிறார் ஜெயமோகன் ஆனால் ஜெயமோகனுக்கு இதை சொல்லும் யோக்கியதை கொஞ்சமாவது இருக்கான்னு அடுத்த கேள்வி வருது .


ராஜாஜி குலகல்வியை பற்றி ஒன்றுமே சொல்லவில்லை என்கிறார் அவர் என்ன சொன்னார்னா அப்பா தொழில மகன் பார்க்கட்டும்னு சொன்னார் அப்படிங்கிறார்.

அதானே குலத்தொழில் - இப்படி சப்பை கட்டும் கட்டும் ஜெயமோகனுக்கு மருதையனின் பிரசாரம் எவ்வளவோ மேல் மருதைய்யன் வரலாற்றை படி என சொன்னதில் எந்த தவறும் இல்லை ஏனெனில் இந்த வலதுசாரிகள் சொல்வதை மக்கள் நம்பும்போது அதை விளக்க உதவியாக இருக்கும்.

என்னை கேட்டால் ஜெயமோகனை பற்றி வரிகளை சொல்லி இந்தாளை பெரிய ஆளாக நினைத்து பேசி இருக்க கூடாது மருதையன் போன்றவர்கள் .

ஜெயமோகனிடம் எப்படி எழுதுவது என ஒருவர் கேள்வி எழுப்புகிறார்

எழுது எழுதினால் எழுத்து வரும் என்கிறார் இப்படித்தான் குழப்பி குழப்பி மீன்பிடிக்கிறார்
ஜெயமோகன்; இவர்கள்தான் வரலாற்றை திரித்து சொல்பவர்கள் மற்றும் நடைமுறையில் இலக்கிய புரட்சி தலைவர்கள் .கதை எழுதுவது எப்படி என மார்க்சிம் கார்க்கியை தோழர்கள் கேட்கிறார்கள்அவர் நடைமுறை சாத்தியமான பதிலை தருகிறார் .

இவரோ எழுதுங்கள் வரும் என பூடகமான சப்பையான பதிலை தருகிறார் இவரது குருநாதரோ உண்மை என்ற தனிபட்ட ஒரு வஸ்துவை தேடி தேடி வாழ்நாளை இழக்கிறார் .

வாழ்க்கையில் காண முடியாத ஒன்றை மூன்றுவேளை சோறுதின்று கட்டிலில் கால் நீட்டி படுத்து கொண்டு இலக்கிய சர்ச்சையில் தேடுகிறார் .

சுந்தர ராமசாமி தேடும் உண்மை வேட்டைநாயை போல நாலுகால் பாய்ச்சலில் செல்கிறது இவங்கள் நாற்பதுகால் பாய்ச்சலில் இலக்கியத்தில் தேடுகிறார்கள் இது மோதிரம் விழுந்துடுச்சு எல்லாரும் குளத்தில் குதிச்சு தேடுங்க பாணி இலக்கியவாதி .

ஆனால் இவர்களது கதையை படிக்கும் வாசகன் இவர்களை தெய்வமாக மதித்து அன்றாடம் கக்கூஸ் போவது எப்படி என்பதுமுதல் தனது மயிரை பிளக்கும் தத்துவ சந்தேகம் வரை கேள்வி கேட்கிறான்.

தனது பாதையில் இவர்கள் எல்லாவற்றுக்கும் தீருவு சொல்லி பார்பனியத்தின் கொட்டைதாங்கிகளாக வலம் வருகிறார்கள்.

இன்னொருவர் கேட்கிறார் யோகா என்றால் என்னவென .

அதற்கும் ”யோகா என்றால் செய்துபார் என சொல்லுவார் போல ”

இந்த லோகத்தில் இருக்கும் அனைத்து சிக்கல்களுக்கு தீர்வை கையில்வைத்துகொண்டு நடமாடுகிறார்கள் ஜெமோவும் சாருவும் அதுதான் நமது நமது துரதிருஸ்டம் .

அடிக்கும் காற்றில் சில இலைகள் விண்நோக்கி எழத்தான் செய்யும் காற்றுதான் தீர்மானிக்கிறது இலையின் அடுத்த நகர்வை
.



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post