பொங்கலோ பொங்கல்

செங்கதிரோன் ஒளியூட்ட
செலுத்துயோட்டி மாடுகளை
செந்நெல்லை பெற்றெடுத்த
செந்தமிழனுக்கு விழா 

கருக்கலில் எழுந்திருச்சு
கால் வயிறு சோறுண்டு
கழனி கட்டி வாய்க்கா வெட்டி
கடுமுழைப்பை சோறாக்கும்
கவிஞனுக்கோர் விழா

விற்கவா வைக்கவென
வீணுக்கு விற்காமல் நெல்
விதைத்து விட்டு
வெறுங்கனவை வளர்க்கின்ற
வள்ளுவனுக்கு விழா

இவனிருந்தான் எனவொருநாள்
ஏருடன் மெழுகுபொம்மை
செய்வார்கள் இச்செகத்தோர்
என்பதனால் எதிர்ப்புகாட்ட
உரத்து செய்வீர் விழா


இலவசமாய் தரவேண்டாம்
அரிசியோ தொலை
காட்சியோவென சொல்லி
தந்தவனே தன்மான
தமிழனென்று குரலெழுப்பி
வைத்திடுவோம் விழா

ஓட்டு வாங்க  வருவரின்
மோட்டுவாயை யுடைக்க
வெட்டருவா உயர்த்தி வீறு
கொண்டு முழங்கிடுவீர் விழா

அதுவே பொங்கல் விழா
அது நம் இல்ல விழா

விலைவாசி பொங்கையிலே
விலைச்சலெலாம் மங்கையிலே
எங்கிருந்து பொங்குவது
குக்கரிலே பொங்கலையும்

அரைவாசி விவசாயி
அறுத்துகிட்டு சாகையிலே
முழுவாசி நிலமெல்லாம்
முழுசாக போகையிலே
பொங்குவது எங்களையா
பொங்கலையா சொல்வீர்

கணினிகளில் ஏறுபூட்டி
கழனிகளில் ஓட்டுங்கள்
நிலமில்லை என நினைத்தால்
இணையத்தில் ஓட்டுங்கள்
கூவுங்கள் இதிகாசப்
பொங்கலென

விவசாயம் அழிவதெனில்
பிடிசோறு யார் தருவார்
பணசாயம் எங்கு வரும்
மனசாயம் நீக்கிடுவோம்
பொங்கலன்று புதுசபதம்
ஏற்றிடுவோம் பொங்கலோ
பொங்களென்றே கூவிடுவோம்

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post