THIS DISCUSSION GOOGLE BUZZ I HERE POST IT FOR ALL THE PEOPLES WHO MAY NOT FOLLOWED ME ON BUZZ AND ALSO SAVE THIS ARGUMENT - THIAGU
சிங்களர்களோடு சேர்ந்து சிங்களமேலாதிக்கத்தை எதிர்க்கலாம் என சொல்பவர்கள் ஒரு பத்து சிங்களவனை ஈழவிடுதலைக்காக வென்றெடுக்க முடியுமாEdit
சிங்களர்களோடு சேர்ந்து சிங்களமேலாதிக்கத்தை எதிர்க்கலாம் என சொல்பவர்கள் ஒரு பத்து சிங்களவனை ஈழவிடுதலைக்காக வென்றெடுக்க முடியுமாEdit
3 people liked this - Shanmuga Raja, அத்திவெட்டி ஜோதிபாரதி and அருணையடி .
Swathi Swamy - சிங்களவர் சிங்களவர்களை எதிர்ப்பார்கள்; உதாரணம் விஜேபி. ஆனால் தமிழனோடு சேர்ந்து தம் இனத்தை எதிர்க்க மாட்டார்கள்..! தமிழர்களிடம் இல்லாத அவர்களிடமிருக்கும் சிறப்பு இது!20 Jan (edited 20 Jan)DeleteUndo deleteReport spamNot spam
தியாக ராஜன் - அப்போ முஸ்லீம்கள் மற்றும் மலைவாழ் தமிழர்கள் என்கிற கூட்டனி அமைத்து எதிக்கனும் வேற வழியில்லைEdit20 JanDeleteUndo deleteReport spamNot spam
Swathi Swamy - இலங்கை வாழ் முஸ்லீம் மக்களின் பெரும்பான்மயர் தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. ஆரம்பகாலத்திலிருந்தே சிங்கள அரசியல்வாதிகளின் அபிமானிகளாகவே அவர்கள் இருந்தார்கள். கருணா இயக்கத்தை விட்டு நீக்கப்பட்ட உடனேயே கருணாவை தன் காரில் மறைத்து வைத்து கொழும்புக்குக் கூட்டிச் சென்று ரணிலிடம் ஒப்படைத்தது இலங்கையின் பிரபலமான முஸ்லீம் அரசியல்வாதி தான். அதன் பின் இஸ்லாம் மக்கள் ஈழத்தமிழர் மீதும் புலிகள் மீதும் வெறுப்புறும் வண்ணம் மட்டக்களப்பில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட நிகழ்வுகள் யாவுக்கும் பின்புலம் கருணவும் அவனது அடியாட்களும் இந்த அரசியஅல் வாதியும் தான். மலைவாழ் தமிழர்களும் இரண்டும் கெட்டான் மனநிலையுடையவர்களே. தமிழனின் விடிவு காலம் முதலில்தமிழனின் ஒற்றுமையிலும் கூட்டு முயற்சியுலும் தான் போராட்டமாயினும் சரி, அரசியல் தீர்வாயினும் சரி தங்கியிருக்கிறது. மற்றப்படி எந்த சக்தியாலும் சரி எந்தக் கூ்ட்டணியாலும் சரி தீர்வு காணமுடியுமென்ற நம்பிக்கை எனக்கில்லை.20 JanDeleteUndo deleteReport spamNot spam
தியாக ராஜன் - 1//தமிழனின் விடிவு காலம் முதலில்தமிழனின் ஒற்றுமையிலும் கூட்டு முயற்சியுலும் தான் போராட்டமாயினும் சரி, அரசியல் தீர்வாயினும் சரி தங்கியிருக்கிறது.
//
2. //மற்றப்படி எந்த சக்தியாலும் சரி எந்தக் கூ்ட்டணியாலும் சரி தீர்வு காணமுடியுமென்ற நம்பிக்கை எனக்கில்லை//
மேற்கண்ட பாயிண்டு 1 ம் 2ம் முரண்பாடா தெரியுதே மேடம்Edit20 JanDeleteUndo deleteReport spamNot spam
Swathi Swamy - நான் சொல்ல வருவது : தமிழனிடம் ஒற்றுமையிருந்தால் மட்டுமே எந்த வழியிலும் அதாவது போராட்டமாயினும் சரி அரசியல் வழியாயினும் சரி சிங்கள அரசை வெற்றி பெறலாம். இந்த ஒற்றுமையில்லாமல் வேறு எந்த உந்து சக்தி மூலமும் தமிழனால் விடிவு பெற முடியாது .20 JanDeleteUndo deleteReport spamNot spam
Swathi Swamy - கண்கூடாகப் பார்த்த வரலாற்று உண்மை அது தானே?20 JanDeleteUndo deleteReport spamNot spam
தியாக ராஜன் - தமிழன் என்ற வரையறையில் பல்வேறு பிரிவுகள் இருப்பட்தாக கருதுகிறீர்களா
சாதி ரீதியா வர்க்க ரீதியா
இட ம் ரீதியா ( திருகோணமலை தமிழன் , யாழ் தமிழன் இம்மாதிரி)Edit20 JanDeleteUndo deleteReport spamNot spam
Swathi Swamy - என்னைப் பொறுத்தவரை இல்லை; சாதி , வர்க்கம் எல்லாம் ஒரு காலத்திலிருந்தது; ஆனால் போராட்டம் தொடங்கும் முன்பே சாதி வெறி ஜீவா போன்றவர்களால் ஒடுக்கப்பட்டுவிட்டது. போராட்டம் தொடங்கியபின்னாலான சமுதாயம் பெரும்பான்மையினர் திருந்திவிட்டனர்; ஆனால் முற்றிலும் திருந்தியதாக ஒப்புக் கொள்ளமாட்டேன். ஆனால் ஊரில் சாதிக் கொழுப்பெடுத்த பல குடும்பங்களின் இளைஞர் சமுதாயம் புலத்திலும் சரி புலம் பெயர் நாடுகளிலும் சரி சாதி வேற்றுமை பாராமல் திருமணங்கள் மூலம் சாதியை புறந்தள்ளி வருகின்றனர் . என்னுடைய அம்மாவும் அப்பாவும் வெவ்வேறு ஜாதியினரே. அந்தக் காலத்திலேயே இரண்டு குடும்பங்களின் சாதி வெறியையும் எதிர்த்து அதே சமயம் இரண்டு குடும்பத்தாரையும் இணங்க வைத்து நடந்த திருமணமாம். அதனால் எனது குடும்பத்தில் சாதி பற்றிய பேச்சே இல்லை; என் பிள்ளைகளுக்கு சாதி என்றாலே என்னவென்று தெரியப்போவதில்லை. காரணம் அவர்கள் பிறந்த, வளாரும் சூழல் வேறு. இடம் ரீதியான தமிழ் என்ற வேறுபாடு ஒரு சமூகத்தின் சீர்குலைவுக்கு காரணமாயிராது என்றே நம்புகிறேன். அவர்கள் பேச்சு வழக்கு மட்டுமே வித்தியாசமானது. மற்றப்படி தமிழுணர்வு எல்லாருக்கும் இருக்கிறது. வர்க்க பேதமென்றால் என்னவென்று உண்மையிலேயே எனக்கு புரியவில்லை.20 JanDeleteUndo deleteReport spamNot spam
Swathi Swamy - இப்ப தூங்கப் போகிறேன். மிதி காலையில் வந்து பார்க்கிறேன். :) இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.20 JanDeleteUndo deleteReport spamNot spam
Swathi Swamy - தூங்கப் போகும் முன் உங்களுக்கு ஒரு சுட்டி தருகிறேன். படியுங்கள். http://tamilnathy.blogspot.com/2011/01/blog-post.html20 JanDeleteUndo deleteReport spamNot spam
Swathi Swamy - சாதி வெறி பிடித்த பலரின் வீட்டு கூடத்தில் இன்று பிரபாகரனின் படம் கடவுளுக்கு சமனாக பெருமையோடு மாட்டப்பட்டிருக்கிறது என்றால்... எந்தளவு மாற்றத்தை அவர்கள் உருவாக்கியிருக்கின்றனர் என்று நீங்கள் உணரலாம்.20 JanDeleteUndo deleteReport spamNot spam
தியாக ராஜன் - நீங்க கொடுத்த சுட்டி சொல்லும் சாராம்சம் புலிகள் சாதி எதிர்ப்பாளர்கள் என்பதாலேயே தோற்கடிக்கப்ப்ட்டார்கள் என என்னை புரிந்துகொள்ள சொல்கிறது
அப்படியா
1.ஒரு போராட்டம் எந்த அடிப்படையில் ஒன்றினைத்து இருக்கப்படவேண்டும்
2.மக்களின் பங்களிப்பு என்ன
இதையெல்லாம் விட்டு விட்டீர்கள்Edit20 JanDeleteUndo deleteReport spamNot spam
Dhinesh Kumar (முகிலன்) - ஸ்வாதி அக்கா, நீங்கள் இன்னும் வலையில் இருந்தால், பதில் அளியுங்கள். இலங்கையில் இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் தமிழர்தானா? சிங்கள முஸ்லிம்களே இல்லையா??
முஸ்லிம்கள் தங்களை தமிழர்களாக அடையாளப்படுத்திக் கொள்வதில்லை என்று சொல்கிறீர்களே அதற்கு என்ன காரணம்?>20 JanDeleteUndo deleteReport spamNot spam
Swathi Swamy - இல்லை தியாகு..! இன்னமும் சாதி வெறி பிடித்த மனிதர்களுக்கு பிரபாகரனும் புலிகளும் தோற்றுப் போனதில் மிகவும் சந்தோசம் என்பதை யும் புலிகள் சாதி வேறுபாட்டுகளை உடைத்தெறிந்தவர்கள் என்பதையும் சொல்கிறது. புலிகளின் தோல்விக்கு சாதி காரணமல்ல. ஏனெனில் புலிகள் இயக்கத்தில் எல்லா சாதி இளைஞர்களும் போராட்டத்தில் பங்கேற்றார்கள். போராளிகளின் வாழ்கை துணைகள் வெவ்வேறு சாதியைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள்; அதுமட்டுமல்ல புலிகள் மறு மணம், கணவன் இறந்தால் பொட்டழித்தல் , வெள்ளை அல்லது கறுப்புச் சேலை உடுத்துதல் போன்ற சமுதாயக்கட்டுப்பாட்டுகளை உடைத்தெறிந்தார்கள். இன்றைக்கு கணவரை இழந்த வெள்ளாலப் பெண்கள் எவரும் வெள்ளைச் சேலையில் வலம் வருகிறார்களா ...இல்லையே?? ஆக புலிகள் எல்லாருக்கும் எல்லா வழியிலும் தான் போராடினார்கள். தமிழ் நதியின் பதிவில் இருப்பது போல் எங்கள் குடும்பத்தில் அநேகமாக எல்லா சாதியும் கலந்திருக்கிறது. எங்கள் அப்பா இறந்த பின் எங்கள் அம்மாவை வெள்ளைச் சேலை அணிய நானோ என் தம்பிமாரோ அனுமதிக்கவில்லை. குங்குமம் வைக்க அம்மா விரும்பவில்லை; தாலி போடுவதில்லை. இதையும் தகர்க்கலாம். ஆனால் அவை அவை அந்த பெண்ணின் மனவிருப்பத்தைப் பொறுத்தது. யாருடைய கட்டாயப்படுத்தலும் இல்லாமல் அவளாக முடிவு செய்ய வேண்டிய உணர்வுபூர்வமான விசயம் விதவைக் கோலம். அவ்வளவே..!
ஈழத்தில் நடந்த விடுதலைப் போராட்டத்துக்கு இவை தடையானவை அல்ல; ஆனால் புலி எதிர்ப்பாளர்களுக்கு இது ஒரு பெரிய தோல்வி. சாமி, சாதி , கலாச்சாரம் என்ற பெயரில் பிறரை ஒதுக்கவும் ஒடுக்கவும் , அவர்கள் கையாண்ட முக்கிய விசயங்கள் தகர்க்கப்பட்ட தோல்வியை தாங்க முடியாத குமைச்சல் இப்போது பூனை யில்லாத வீட்டின் எலிகளின் கொண்டாட்டமாக கொட்டமடிக்க எத்தனிக்கிறார்கள் புலிகளை தூற்றுவதன் மூலம்.
என்னைப் பொறுத்தவரை ஒட்டு மொத்த இன விடுதலைக்கான போராட்டமொன்றில் அவ்வின மக்கள் அனைவரும் ஒருமுகமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒரு இயக்கமாக செயல் பட்டிருந்தால் இந்த தோல்வி எங்களுக்கு வந்திருக்காது. புலிகளைத் தவிர மற்ற எந்த இயக்கமும் போராட்டத்துக்காக ஆயுதங்களை பாவிக்கவில்லை. சொந்த மக்களை வீடு வீடாக புகுந்து மிரட்டி கொள்ளையடித்தார்கள்; டெலோ இயக்கத்தினரும், ஈ ஆர் எல் ஃஎப் இயக்கத்தினரும் புலிகளை காட்டித் தரச் சொல்லி புலி வீடுகளிலும் , புலி வீட்டினரின் அயலவர் வீடுகளிலும் இந்திய இராணுவத்தை வீடு வீடாக கூட்டிச் சென்று பெண்களை கற்பழிக்க வைத்தவர்கள் தான் . வயலில் பயிர்களுக்கிடையில் களைகள் பெருகினால் என்ன செய்வீர்கள்?? இந்திய இராணுவத்துக்கு எதிராக திரும்பவும் ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயத்துக்கு புலிகளை கொண்டுவந்த காரணங்கள் அரசியல் ரீதியாக ராஜிவின் செயல்பாடுகளும், இது போல் உள்ளூரில் நடந்த அசம்பாவிதங்களால் வெறுப்புற்ற மக்களும் தான் . எங்கள் வீட்டுக்கு மாவிடித்துக் கொடுக்க வரும் 18 வயதுப் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்று கிணற்றில் வீசிவிட்டனர் அந்தப் பெண்ணின் பாட்டியின் கண்முன்னாலேயே...தலைவிரி கோலமாக அந்த பாட்டி நேரே போனது புலிகளிடம் தான்.. என்ர குஞ்சை கொன்றவங்களை கொல்லுங்கடா...ஏனடா மரம் மாதிரி இருக்கிறியள் இன்னும் என்ன நடக்க வேணும்ண்டு காத்திருக்கிறியள் என்று ஒரு போராளியின் சட்டையை உலுக்கியதை நேரில் பார்த்தவர்கள் நாங்கள்...! மக்களின் ஆதரவு இல்லாமல் எந்த போராட்டமும் தலையெடுக்கவில்லை; என்ன பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் வலி அதிகம்; கோவம் அதிகம்; அவர்களுக்கு மாத்திரம் தான் விடுதலையின் தேவை புரிந்திருக்கிறது. போராட்டத்தை விமர்சனம் செய்பவர்களும், சிங்களவர்களோடு சேர்ந்து வாழ்ந்தால் தான் என்ன என்று கேட்பவர்களும் கொழும்பு உயர் மட்ட வாழ்கையை நேசிப்பவர்களாயோ அல்லது எந்தவித பாதிப்புக்குமுட்படாதவர்காளாயோ தான் இருப்பார்கள் பெரும்பாலும்.20 JanDeleteUndo deleteReport spamNot spam
Swathi Swamy - முகிலன்! மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வியாபாரத்துக்காக வந்த இஸ்லாமியர்கள் ஒரு காலகட்டத்தில் இலங்கையில் குடியேறிய போது இங்கு அவர்கள் சமுதாயம் வளரத்தொடங்கியது என்பது தான் நான் இலங்கை சரித்திரத்தில் இஸ்லாமியர்கள் பற்றிப் படித்தது. வடக்கு , கிழக்கு பகுதிகளில் வியாபாரிகளாக வந்து சந்ததிகளாக பெருகியவர்கள் தமிழ் மொழியும், சிங்கள பகுதியில் குடியேறியவர்கள் சிங்கள மொழியையும் பேசத் தொடங்கி இப்போது பல சந்ததிகளைக் கடந்த இஸ்லாமிய சமுதாயமாக தான் இங்கிருக்கிறது. இலங்கை அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சிங்களவர், தமிழர், இஸ்லாமியர், மலையகத் தமிழர், பறங்கியர் என்று 5 இனத்தவராக மக்கள் பிரிவுகள் இருக்கின்றன. இஸ்லாமியரை தனித்த இனமென்ற அடையாளமாக இது காட்டுகிறது.
இது என்னுடைய புரிதல் மட்டுமே. தவறாகவும் இருக்கலாம். உண்மையில் இதைப் பற்றி விலாவாரியாக விளக்கம் கொடுக்க உகந்த ஒருவர் ஆசிப் அண்ணாவின் தந்தையாரான ஜப்பார் ஐயா தான். அவர் ஒரு அரசியல் அவதானி மட்டுமல்ல போராட்ட காலத்துக்கு முந்தைய நாட்களில் ஊடகவியலாளராக இலங்கையில் வாழ்ந்தவர். என்னை விட அவர் நிறைய தகவல்கள் தருவார். பஸ்ஸில் அவர் இருக்கிறாரான்னு தெரியவில்லை.20 JanDeleteUndo deleteReport spamNot spam
இது என்னுடைய புரிதல் மட்டுமே. தவறாகவும் இருக்கலாம். உண்மையில் இதைப் பற்றி விலாவாரியாக விளக்கம் கொடுக்க உகந்த ஒருவர் ஆசிப் அண்ணாவின் தந்தையாரான ஜப்பார் ஐயா தான். அவர் ஒரு அரசியல் அவதானி மட்டுமல்ல போராட்ட காலத்துக்கு முந்தைய நாட்களில் ஊடகவியலாளராக இலங்கையில் வாழ்ந்தவர். என்னை விட அவர் நிறைய தகவல்கள் தருவார். பஸ்ஸில் அவர் இருக்கிறாரான்னு தெரியவில்லை.20 JanDeleteUndo deleteReport spamNot spam
Dhinesh Kumar (முகிலன்) - நான் ஏன் கேட்டேன் என்றால், முன்பு ஒருமுறை இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப் படுகிறார்களா என்ற விவாதத்தில், இலங்கைக் கிரிக்கெட் அணியில் முரளியைத் தவிர எத்தனைத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று கேட்டபோது, இஸ்லாமிய வீரர்களின் பெயரைக் கொடுத்து அவர்கள் எல்லாரும் தமிழர்கள் தான் என்று வாதிட்டனர். அதனால்தான் புரிதலுக்காகக் கேட்டேன்.20 JanDeleteUndo deleteReport spamNot spam
தேவியர் இல்லம் திருப்பூர் - தன் காரில் மறைத்து வைத்து கொழும்புக்குக் கூட்டிச் சென்று ரணிலிடம் ஒப்படைத்தது இலங்கையின் பிரபலமான முஸ்லீம் அரசியல்வாதி தான்.
அந்த நபரின் பெயரை பொதுவில் படைத்தால் பிரச்சனை வரும் என்று நினைக்குறீங்களா? விருப்பம் இருந்தால் சொல்லுங்களேன்.20 JanDeleteUndo deleteReport spamNot spam
தியாக ராஜன் - //அந்த நபரின் பெயரை பொதுவில் படைத்தால் பிரச்சனை வரும் என்று நினைக்குறீங்களா? விருப்பம் இருந்தால் சொல்லுங்களேன்.// பிரச்சனை வரலாம்Edit20 JanDeleteUndo deleteReport spamNot spam
தேவியர் இல்லம் திருப்பூர் - அட என்ன தியாகு? எந்த பயலுக பிரச்சனையின்னு நினைக்கப் போறாங்க. இங்கு பலரும் இதுவும் ஒரு செய்தி என்று கடந்து போறவுங்க தான். ரணில் கருணா பின்னால் உள்ள நிகழ்வுகள் ஊடகத்தில் பதிவு செய்யாத ஒன்று20 JanDeleteUndo deleteReport spamNot spam
தியாக ராஜன் - எதுக்கும் நாம சுவாதியக்கா கருத்தை கேட்போம் - சொல்லலாம்னா சொல்லுங்க அந்த முஸ்லீம் தலைவர பத்தி மேடம்Edit20 JanDeleteUndo deleteReport spamNot spam
Swathi Swamy - இப்ப வெளியில் கிளம்பிட்டு இருக்கிறேன். தெவியர் இல்லம் சொன்னது போல் ரணில் கருணா விசயங்களுடன் முழு விபரமாக செய்தி தர எனக்கு அட்லீஸ்ட் ஒரு 4 அலது 5 மணிநேரமாவது தேவை. :)20 JanDeleteUndo deleteReport spamNot spam
Swathi Swamy - பிரச்சினை??? இருக்கு நிறைய..விலாவாரியாக சொல்ல முடியாது.. இந்தியாவில் காலடி வைத்து பார் அடுத்த நிமிசமே உள்ள தூக்கிப் போடுவோம்ன்னு குழுமத்தில் இருக்கும் ஒருவரே ஆள் வைத்து மிரட்டியிருக்கிறார்.. :):) இந்தமாதிரியானவை எல்லாம் தமிழ் நாட்டுக்கு வந்தாலோ அல்லது இலங்கைக்கு போனாலோ தான் பிரச்சினை என்று பெயர்..அது வரை ஜோக்காக வைத்து கொள்வேன். வேறென்ன செய்ய முடியும் சொல்லுங்கள்?? :):)20 JanDeleteUndo deleteReport spamNot spam
Dhinesh Kumar (முகிலன்) - தனி பஸ்ஸா விடுங்க அக்கா..
அது யாரு உங்களை மிரட்டினது? சொல்லுங்க ஆட்டோ வச்சி தூக்கிரலாம். :))20 JanDeleteUndo deleteReport spamNot spam
அது யாரு உங்களை மிரட்டினது? சொல்லுங்க ஆட்டோ வச்சி தூக்கிரலாம். :))20 JanDeleteUndo deleteReport spamNot spam
தேவியர் இல்லம் திருப்பூர் - பொதுவில் படைக்க விருப்பம் இல்லாவிட்டால் கூட என் மின் அஞ்சலுக்கு அனுப்புங்க. எனக்கு தேவையான விசயம். புரியும் என்று நினைக்கின்றேன்.
texlords@gmail.com20 JanDeleteUndo deleteReport spamNot spam
தியாக ராஜன் - //ழுமத்தில் இருக்கும் ஒருவரே ஆள் வைத்து மிரட்டியிருக்கிறார்.. :):) //
இதுவும் யாருன்னு தெரியனும் அவரை நாம தூக்கிடலாம் எனக்கு தனிமடல் அனுப்புங்கEdit21 JanDeleteUndo deleteReport spamNot spam
Swathi Swamy - வந்துட்டேன்... 4மணி நேரத்தில் திரும்பிட்டேன்..ஆனால் திடீரென்று கனடாவிலிருந்து வந்த உறவினர்களை அள்ளிக் கொண்டு அட்லாண்டிக் சிட்டி போக வேண்டிய சூழல்...நேற்றுப் போய் இன்று தான் திரும்பினோம். மன்னிக்கவும்.22 Jan (edited 22 Jan)DeleteUndo deleteReport spamNot spam
Swathi Swamy - மேலே நான் சொன்னவற்ரில் ரனில் விக்கிரமசிங்கேயின் பெயரை தவறாகக் குறிப்பிட்டுவிட்டேன்; தவறுக்கு மனம் வருந்துகிறேன்.22 JanDeleteUndo deleteReport spamNot spam
Swathi Swamy - நான் குறிப்பிட்ட இஸ்லாமிய அரசியல் வாதியின் பெயர்: அலி சாஹிர் மவ்லானா.
அவர் நேரடியாக - ஏற்கனவேயே செய்த ஏற்பாட்டின் படி - பனகொட ராணுவ முகாமுக்குச் சென்று அங்கு கருணாவை ஒப்படைத்து விட்டார். பின்னாளில் கருணா சரணடைந்தார் என்றும் , கைது செய்யப்பட்டார் என்றும் இரண்டுவிதமாக செய்தி பரப்பப்பட்டது.
இது ரனிலுக்குத் தெரியாது. தெரியவந்தது மட்டுமல்ல , கருணாவை கொண்டு வந்ததை வைத்து ரணிலுடன் அரசியல் பேரத்தில் அவர் இறங்கியதாலும் அவரை கட்சியை விட்டு வெளியேற்றினார் ரணில் என்று சொல்லப்படுகிறது. அவரும் தன்
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமெரிக்காவில் குடியேறிவிட்டதாகவும்
இப்போதும் அங்கேயே வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இது பற்றி மேலும் விரிவாக படிக்க http://www.kalachuvadu.com/issue-112/page33.asp22 JanDeleteUndo deleteReport spamNot spam
Swathi Swamy - முகிலன்! முன்பு ஒருமுறை இலங்கையில் தமிழர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப் படுகிறார்களா என்ற கேள்விக்கு வருகிறேன். இலங்கையின் அரசியல் சட்டத்தின் படி இலங்கையில் வாழும் எந்த இன மனிதரும் சம உரிமை உள்ளவர்களே. இலங்கை நாட்டின் சட்டம் ஜனநாயகக் கொள்கையின் அடிப்படையில் எழுதப்பட்டது. ஆனால் ஜனநாயகம் என்பது எங்களுக்கு சரிவரக் கிடைத்திருப்பின் நாங்கள் ஏன் போராட்டக் களத்துக்கு ஆயுதங்களை தேர்வு செய்திருக்கப் போகிறோம்?? கல்வியிலும்,உழைப்பிலும் இலங்கையில் மற்ற எந்த இனமும் தமிழினத்தை மிஞ்சமுடியாத நிலையில் தான் நாட்டின் பல முக்கிய உயர் பதவிகளை தமிழர்களே ஆக்கிரமித்துக் கொள்ளப் போகிறார்கள் என்ற பயத்தில் தான் தரப்படுத்தல் முறை எம்மீது பாய்ந்தது. இலங்கை அரசியல் , நீதித்துறை போன்றவற்றின் ஜனநாயகக் கோட்பாடுகள் எழுத்தில் எழுதி வைக்கப்பட்டிருப்பது போல் நடைமுறைப்படுத்தலிலும் சரிவர பாரபட்சமின்றி இருந்திருந்தால் தமிழர்கள் இரண்டாம்பட்ச குடிமக்களாக இருக்க வேண்டியதேயில்லை. அவர்கள் சம உரிமை பெற்ற இனமக்களாக இலங்கையராக இருந்திருப்போமே..??
இரண்டாவது இலங்கைக் கிரிக்கெட் அணியில் முரளியைத் தவிர எத்தனைத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்ற கூற்று . முதலாவது முரளிதரன் முத்தையா மலையகத் தமிழர்; இரண்டாவது அவர் வீட்டிலும்ச் அரி வெளியிலும் சரி சிங்களம் மட்டுமே பேசுபவர். (அவருக்கு தமிழ் தெரியாது என்று அவரே பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஆனால் திருமணத்தின் பின் என்ன மொழியில் மனைவியுடன் பேசுகிறார் என்று தெரியாது.) அவர் வட கிழக்கு தமிழர் அல்லர் என்பதாலும், அவருடைய அபாரமான, வித்தியாசமான பந்துவீச்சும் அவருக்கு அணியில் இடம்பெற பலமான வாய்ப்பாக இருந்தது. காலப் போக்கில் முரளியின் பந்துவீச்சு இலங்கை அணியினருக்கு தவிர்க்க முடியாத கட்டாயத் தேவையாக போன பின் அவரை அவர்களால் புறந்தள்ள இயலவில்லை.... என்னைக் கேட்டால் முரளிதரன் ஓடுகிற நீரில் நழுவுகிற மீன் மாதிரி. ! :):)
கட்டாயம் இதையும் படியுங்கோ...
http://rishanshareef.blogspot.com/2010/08/blog-post.html
முரளிக்கு முன்பும் ஒரு தமிழர் இருந்தார். பெயர் நினைவில்லை; என்ன காரணமோ அவரை சில ஆட்டங்களின் பின் அணியில் காணக்கிடைக்கவில்லை . என்னுடைய கேள்வி என்னவென்றால் ஜனநாயக நாடான இலங்கையில் இத்தனை மக்களில் சிறந்த வீரர்களாக சிங்களவர்கள் மட்டும் தான் இருக்கின்றனரா?? அல்லது வட கிழக்கு மாகாண தமிழ் இளைஞர்கள் எவரையாவது கிரிக்கெட் வாரியம் பரிசீலித்திருக்கிறதா??
இஸ்லாமிய வீரர்களின் பெயரைக் கொடுத்து அவர்கள் எல்லாரும் தமிழர்கள் தான் என்று வாதிட்டனர் ....
இது கொஞ்சம் தர்மசங்கடமான விசயம் தான் எனக்கு. ஏனெனில் இலங்கை அணியில் முரளிதரனை தவிர வேறு எவரது பெயரும் எனக்கு தெரியாது. அதனால் அதில் விளையாடிய இஸ்லாமிய வீரர்கள் பற்றிய விபரம் தெரியாது என்பது ஒரு புறம் இருக்கட்டும்..
இரண்டாவது தமிழ் பேசுபவர்கள் எவரும் தமிழர்களா? தமிழுணர்வு இல்லாதவர்கள் யாரும் தமிழர்களே இல்லையா? தமிழர்களாக சந்ததி வேர் இருந்தாலும், தமிழும் தெரியாமல் தமிழ் மாநிலங்களிலும் வாழாமல் புலம் பெயர்ந்த தமிழ் குடும்பங்கள் தமிழினத்தைச் சார்ந்தவர்களா? இதே போல் ஒரு கேள்விக் குறி தான் இலங்கையில் வாழும் தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளும்.
இன்னொரு விசயம்...எங்கள் மக்களிடம் அது ஈழத்தமிழராயினும் சரி, தமிழகத் தமிழராயினும் சரி நாட்டின் அரசியலையும், அரசாங்கத்தையும் , அரசியல்வாதிகளையும் வெறுத்தாலும் நாட்டை இன்னொருவரிடம் விட்டுக் கொடுத்து பேச மாட்டார்கள். இந்தக் குணம் தமிழர்களிடம் தான் காண்கிறேன். எத்தனை அடி வாங்கி எத்தனை பேரை பலி கொடுத்துவிட்டோம்...ஆனால் இன்றைக்கும் ஈழத்தமிழர்களில் பெரும்பான்மையோர் கிரிக்கெட்டில் இலங்கை அணி கோப்பையை கைப்பற்ற வேண்டுமென்று மனதார வேண்டிக் கொண்டிருப்பார்கள். ஒலிம்பிக்கில் இலங்கை வீரர் யாராவது கலந்து கொள்கிறார்கள் என்றால் பெருமையாக பேசிக் கொள்வார்கள்..! இது நல்லதா அல்லது நமக்கு நாமே செய்யும் துரோகமா என்று என்னால் சொல்ல முடியவில்லை..
ஆனால் பாகிஸ்தானில் இலங்கை அணியினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் வந்த போது என் மனம் பதறவில்லை..அவர்களில் எவனாவது செத்துப் போயிருக்கலாம் என்ற வெறுப்பு வந்ததை நான் மறைக்க விரும்பவில்லை. ஏனெனில் அப்போதைய மனநிலையில் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளில் என் உறவினர்களில் 27 பேர் இறந்த துயரம் தான் மிஞ்சிப் போயிருந்தது. குழுமத்தில் பாகிஸ்தானில் இவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுச் செய்தி பற்றி இழை போடப்பட்ட போது நான் நினைத்தது போலவே பலரும் நினைத்திருக்கிறார்கள் என்று தெரிந்தது..இன்னொரு பெண் உறுப்பினரும் அதே மனநிலையில் நான் நினைத்ததை அப்படியே எழுதியிருந்தார் தைரியமாக. உடனே பல கண்டனக்குரல்கள்..மனிதாபிமானமேயில்லாமல் எழுதியிருக்கிறார் அப்படி இப்படி என்று....என்னையா மனிதாபிமானம்... ஒரே நாட்டில் ஒரு பகுதியில் கூட்டம் கூட்டமாக மக்கள் நச்சுக் குண்டுப் பொழிவில் துடிக்க துடிக்க எரிந்து சாம்பலாகிக் கொண்டிருக்க ..அதற்கு ஒரு மனிதாபிமானக் குரல் கொடுக்காத நாட்டின் விளையாட்டு வீரர்கள்.. ஊடகங்கள்; அரசியல்வாதிகள்..! நாங்கள் சாவதைப் பற்றி அக்கறை கொள்ளாதவர்கள் மீது அக்கறை எங்களுக்கு மட்டும் எப்படி வரும்? இயேசு நாதர் போல் வாழ முடியுமோ என்னமோ ஆனால் அவரைப் போல் வேசம் போடுபவர்கள் பலர்; ஆனால் அந்தப் பெண் வேசம் போடவில்லை என்பதில் அவரின் வெளிப்படுத்தலை நான் மனதுக்குள் பாராட்டினேன். ஏனெனில் நான் கூட அதே நினைப்பிருந்தும் அவரைப் போல் தைரியமாக வெளிப்படுத்த முனையவில்லையே...!! :):)22 JanDeleteUndo deleteReport spamNot spam
Swathi Swamy - பல நாட்களாக என்னுடைய மனதில் இருந்தவற்றை எழுதிவிட்டேனே தவிர உங்களில் எவருடைய கேள்விக்கும் சரியாக விடையளித்திருக்கிறேனா என்று எனக்கு தெரியவில்லை. :):)22 JanDeleteUndo deleteReport spamNot spam
எம்.எம். அப்துல்லா - // இஸ்லாமிய வீரர்களின் பெயரைக் கொடுத்து அவர்கள் எல்லாரும் தமிழர்கள் தான் என்று வாதிட்டனர்
//
// இதே போல் ஒரு கேள்விக் குறி தான் இலங்கையில் வாழும் தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளும்
//
ஒருவனைத் தமிழன் என்பதோ,மலையாளி என்பதோ தெலுங்கன் என்பதோ அவன் தாய்மொழியை வைத்துதான்.மதத்தை வைத்து அல்ல.. ஹிந்து மதத்தில் பிறந்த ஒருவன் அவன் தாய்மொழி தமிழாக இருக்கும்போது தமிழன் என்றால், இஸ்லாம் மதத்தில் பிறந்த ஒருவன் அவன் தாய்மொழி தமிழாக இருந்தால் தமிழன் இல்லாமல் இஸ்லாமியன் மட்டும்தானா??22 JanDeleteUndo deleteReport spamNot spam
தேவியர் இல்லம் திருப்பூர் - இஸ்லாம் மதத்தில் பிறந்த ஒருவன் அவன் தாய்மொழி தமிழாக இருந்தால் தமிழன் இல்லாமல் இஸ்லாமியன் மட்டும்தானா??
அப்துல்லா அற்புதமான புரிந்துணர்வு. இதில் பேசிக்கொண்டுருக்கும் ஸ்வாதி ஈழத்தில் வாழ்ந்தவர். இதைக்குறித்து பேச சிறிது சங்கடம் கூட உருவாகலாம். சிலவற்றை நான் பகிர்ந்து கொள்கின்றேன். நீங்கள் சொல்வது அடிப்படையில் உண்மையாக இருந்தாலும் ஈழத்தில் வாழ்ந்த இஸ்லாமியர்களின் வாழ்க்கை நெறிமுறை முற்றிலும் வேறாகத் தான் இருந்ததுள்ளது. கடற்கடையோரமாக வாழ்ந்த இஸ்லாமியர்கள் தொடக்கம் முதல் தங்கள் கடல் சார்ந்த வாழ்க்கை முறையில் கவனம் செலுத்தினர். படிப்பில் அல்ல. இந்த காரணமே யாழ்பாண மக்களை நோக்கி பாதிரியார்கள் படையெடுத்த போது அதை பக்குவமாக பயன்படுத்தி இரண்டு தலைமுறைக்குள் 80 சதவிகித தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில்அமர்ந்தனர். ஆனால் பின்னால் வந்த பிரித்தாளும் சூழ்ச்சி படைத்த வஞ்சக தலைவர்கள் பொருளாதார ரீதியாக சமூக ரீதியாக பின்தங்கியிருந்த இஸ்லாமியர்களை உண்டு இல்லை என்று ஆக்கி வெகுஜனப் போராட்டத்தில் பங்கெடுக்க விடாமல் கெடுத்தும் நிறுத்தினர். இடையே கல்வி நிலைக்காக அவர்களின் வாழ்க்கை வசதிகளுக்காக போராடிப்பார்த்த கிறிஸ்துவ பாதிரிகள் அவமானப்பட்டது தான் மிச்சம். இது குறித்து நிறைய எழுதலாம். நாம் வேறு? அவர்கள் வேறு? இந்த கொள்கையேபின்னால் வந்த பல கொலைகளுக்கு காரணமாக இருந்தது. இதில் ஒரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால் சிங்களர்களில் அடித்தட்டு மக்களும் தமிழர்களைப் போல நிறைய வர்க்க பேதங்கள் உண்டு. அவர்களை எந்த சிங்கள தலைகளும் தொடக்கம் முதல் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. இன்றும் கூட. இனப் பெருமை பேசியே தங்களை தங்களின் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதில் தான் ஒவ்வொரு இஸ்லாமிய சிங்கள தலைவர்களும் கடைசி வரை இருந்தனர் இருக்கின்றனர். இதில் மக்கத்தான் ஆச்சரியம் இன்று பிரபாகரன் குறித்து அறிவீலிகள் சொல்லும் மடத்தனமாக வாத பிரதிவாதங்களில் அவரின் இந்த வர்க்க பேதமற்ற செயல்பாடுகளைப் பார்த்து எவரும் பேசத்தயாராய் இல்லை என்பதும் உண்மைதான். நான் பார்த்தவரையிலும் ஈழம் மட்டுமல்ல இந்தியாவிலும் இந்து முஸ்லீம் கிறிஸ்துவத்துக்காக நாங்கள் பாடுகின்றோம் என்கிற என்ற தலைவர்களும் இவர்களின் தனிப்பட்ட கல்வி பொருளாதார வாழ்க்கை முன்னெடுக்கத்தயாராய் இல்லை. குறிப்பாக ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் இஸ்லாமியர்களின் தனிப்பட்ட உயர்வான வாழ்க்கை அவரவர் உழைப்பின் மூலம் உருவானதே.
உங்கள் தொடர்சசி பார்த்து நான் நானும் தொடர்கின்றேன். ஸ்வாதி நீங்க கொஞ்சம் ஒதுங்கி இருங்க. அப்துல்லாவிடம் பேச இப்படி ஒரு வாய்ப்பு இப்போது தான் கிடைத்துள்ளது.22 JanDeleteUndo deleteReport spamNot spam
Dhinesh Kumar (முகிலன்) - அப்துல்லா அண்ணன், ஸ்வாதி அக்கா சொல்லவந்தது இதுதான் என்று நினைக்கிறேன்.
தமிழ் பேசினால் மட்டும் தமிழனாகிவிட முடியாது. தமிழுணர்வும் இருக்கவேண்டும். அப்படி தமிழுணர்வு இல்லையென்றால் அவன் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியனாக இருந்தாலும் கிறிஸ்தவனாக இருந்தாலும் அவன் தமிழன் இல்லை.22 JanDeleteUndo deleteReport spamNot spam
Swathi Swamy - அப்பாடா...!! :):) நன்றி சகோதர ? சகோதரி?? தேவியர் இல்லம்!!
எனக்கு யாரிடமும் பேதம் பார்க்க விருப்பம் இல்லை. ஆனால் என்னுடைய இனத்தின் விடுதலை என்ற பேச்சு வரும் போது அது மற்ற எல்லாவிடயத்தையும், எவரையும் விட விட முக்கியம்.
இலங்கையில் நான் பிறந்த காலத்துக்கும் முன்னாலிருந்து கடைசியாக நடந்த முள்ளியவளை கோடூரம் வரை எந்த அரசியல், போராட்ட சார்புமில்லாத நிலையிலிருந்தும் ஒவ்வொரு இன ஒழிப்பின் போதும் பாரிய இழப்புகள் (சொத்து, பணம் இழப்பைப் பற்றி சொல்லவில்லை) உயிர்களாய், உறவுகளாய் பறி கொடுத்த குடும்பம் என்னுடையது. அந்த ஒரு நிலையிலிருந்து தான் நான் என்னுடைய கருத்தை சொல்கிறேன். இதற்கு மேலும் என்னால் சொல்ல முடியும் என்று தோன்றவில்லை.
கும்மியும், மொக்கையுமாய் இருந்த என்னை சீரியஸாக எழுத வைத்த மூவருக்கும் கண்டணம் தெரிவிக்கலாமா அல்லது நன்றி சொல்லலாமான்னு நாளை யோசித்து முடிவு எடுக்கிறேன்(இது பகிடி..தவறாக எடுக்க வேண்டாம்) :):)
மற்றப்படி தேவியர் இல்லம் அவர்களும் தம்பி முகிலனும், தியாகுவும் தொடருங்கள்...!22 JanDeleteUndo deleteReport spamNot spam
தேவியர் இல்லம் திருப்பூர் - ஸ்வாதி என் பெயர் ஜோதி கணேசன் (ஜோதிஜி) . சகோதரன் தான். குழப்பம் வேண்டாம்.22 JanDeleteUndo deleteReport spamNot spam
Swathi Swamy - :) ஓ..அப்ப சரி..!
தேவியர் இல்லம் திருப்பூர் என்ற புனை பெயருக்கு பின்னால் ஏதும் காரணம் இருக்கா??23 JanDeleteUndo deleteReport spamNot spam
தேவியர் இல்லம் திருப்பூர் - வீட்டின் பெயர். குழந்தைகள் பெயர்கள் தேவியில் முடியும்,23 JanDeleteUndo deleteReport spamNot spam
மின்னலன் /\/\/ - @எம்.எம். அப்துல்லா
இலங்கை முஸ்லிம்கள் தமிழ் பேசும் முஸ்லிம்களாக இருந்தாலும் தங்களது சுய வாழ்வியல் பாதுகாப்பு கருதி
தங்களை தமிழர்கள் என்று உயர்த்தி பிடிக்கவோ தமிழர்களுக்கு காட்டப்படும் இன வெறுப்பை மறுத்து போராடவோ முன்வரவில்லை என்பதே உண்மை...
(அதற்கு காரணங்கள் எதுவோ...இன அழிப்பு என்ற ஒன்று நடக்கும் போதவது அவர்கள் வாய் திறந்திருக்கலாம் என்ன செய்ய....கருணாக்களை பார்த்து பார்த்து அவர்கள் அடிமனம் பயத்தால் அடைக்கப்பட்டு விட்டது )
ஆகவே இலங்கயில் முஸ்லிம்கள் என்றால் அவர்கள் என்ன மொழி பேசினாலும் அவர்கள் முஸ்லிம்கள் மட்டுமே
தமிழ்னாடிலும் ஜிகாத் பேசும் முஸ்லிம் நண்பர்களின் மன நிலை இதுதான்!!!!23 JanDeleteUndo deleteReport spamNot spam
தியாக ராஜன் - madam can i save this argument in my blogEdit25 JanDeleteUndo deleteReport spamNot spam
தியாக ராஜன் - Sorry to type in eng
at present io have net connection i will be back in 2 days
i strongly make my opinon on ltte
1.the war must the peoples war
2.the people may be common people who suppressed by the government
3.ltte not allowed to the people to participate in politics
4.so that the war end when ltte endEdit25 JanDeleteUndo deleteReport spamNot spam
at present io have net connection i will be back in 2 days
i strongly make my opinon on ltte
1.the war must the peoples war
2.the people may be common people who suppressed by the government
3.ltte not allowed to the people to participate in politics
4.so that the war end when ltte endEdit25 JanDeleteUndo deleteReport spamNot spam
தியாக ராஜன் - //என்னைப் பொறுத்தவரை ஒட்டு மொத்த இன விடுதலைக்கான போராட்டமொன்றில் அவ்வின மக்கள் அனைவரும் ஒருமுகமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒரு இயக்கமாக செயல் பட்டிருந்தால் இந்த தோல்வி எங்களுக்கு வந்திருக்காது. புலிகளைத் தவிர மற்ற எந்த இயக்கமும் போராட்டத்துக்காக ஆயுதங்களை பாவிக்கவில்லை. சொந்த மக்களை வீடு வீடாக புகுந்து மிரட்டி கொள்ளையடித்தார்கள்; டெலோ இயக்கத்தினரும், ஈ ஆர் எல் ஃஎப் இயக்கத்தினரும் புலிகளை காட்டித் தரச் சொல்லி புலி வீடுகளிலும் , புலி வீட்டினரின் அயலவர் வீடுகளிலும் இந்திய இராணுவத்தை வீடு வீடாக கூட்டிச் சென்று பெண்களை கற்பழிக்க வைத்தவர்கள் தான் . வயலில் பயிர்களுக்கிடையில் களைகள் பெருகினால் என்ன செய்வீர்கள்?? இ//
புலிகள் சொந்த சகோதர இயக்கங்களை கருவறுத்தது இந்த ஒரு காரணத்துக்காக என்றால் வரவேற்கலாம் ஆனால் அவர்கள்
முப்பதைந்து இயக்கத்தை கொன்று புதைத்து இருக்கிறார்கள்
தாம் ஒரு தனிப்பெரும் இயக்கமாக வளர இது
முதல் மக்களிடம் இருந்து விலகியதென கருதுகிறேன்
அடுத்து முஸ்லீம்களை ஒரு குறிப்பிட்ட கால கெடுவுக்குள் வேறு இடத்துக்கும் செல்லும்படியும் அப்படி செல்லாத பட்சத்தில் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்கள்
இது அடுத்தது
இவையெல்லாம் எதை காட்டுகிறது மக்களிடம் இருந்து ஒரு போராளி இயக்கம் தனிமை பட்டதை காட்டவில்லையா மேடம்,Edit26 JanDeleteUndo deleteReport spamNot spam
kalaiy Arasan - Swathi Swamy என்பவர் பல தவறான விளக்கங்களை கொடுக்கிறார்.
ஜேவிபி ஆரம்பத்தில் சிங்களவர்கள் என்ற இன உணர்வுடன் போராடவில்லை. அடித்தட்டு மக்களினதும், வேலையற்ற இளைஞர்களின் அடிப்படை உரிமைப் போராட்டம். தமிழ் மக்களை தமிழ் தேசிய தலைவர்கள் இனவுனர்வூட்டி வளர்த்ததால் அவர்களுக்கு ஜேவிபி பற்றி அதிகம் தெரியாது. போராட்டம் தோல்வியடைந்து பாராளுமன்றம் வந்த பின்னர் தான் ஜேவிபி இனவாத அரசியலுக்குள் புகுந்தது.
முஸ்லிம் மக்கள் எப்போதும் தம்மை தமிழர்களாக தான் காட்டிக் கொள்கின்றனர். தமிழர்கள் என்றால் யார்? தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் தானே? மதம் மட்டுமே அவர்களை பிரிக்கின்றது. பொதுவாகவே இந்து/கிறிஸ்தவ தமிழர்கள், முஸ்லிம்களை அவநம்பிக்கையுடன் பார்ப்பது வழக்கம். கருணாவை பிரித்தது முஸ்லிம்கள் என்பது போன்ற அர்த்தத்துடன் எழுதுகின்றார். அந்த முஸ்லிம் ஐ.தே.கட்சியை சேர்ந்தவர். கட்சியின் கொள்கையின் படி தானே செயற்படுவார்? கிழக்கு மாகாணத்தில் கருணா இருந்த காலத்தில் தான் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.26 JanDeleteUndo deleteReport spamNot spam
kalaiy Arasan - இவர்கள் எப்போதும் தமிழன், தமிழன் என்று மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அப்பால் வேறு எந்த இனத்தைப் பற்றியும் அவர்களுக்கு கவலை இல்லை. சிங்களவர்களின் பிரச்சினைகள்,அல்லது தமிழ் பேசும் முஸ்லிம்களின், மலையகத் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி கூட எந்த அக்கறையும் கிடையாது. ஆரம்பத்தில் இருந்தே அத்தகைய நிலைப்பாடு ஈழ விடுதலைப் போராட்டத்தை பலவீனப் படுத்தியுள்ளது. ஈழத்தில் தமிழன் பாதிக்கப்பட்டால் உலகம் முழுவதும் அழ வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் வேறொரு நாட்டில் எந்த இனம் பாதிக்கப்பட்டாலும் இவர்கள் அழ மாட்டார்கள். Swathi காட்டிய பாகிஸ்தானை உதாராணமாக எடுத்துக் கொள்வோம். முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைகள் நடந்த அதே காலத்தில் பாகிஸ்தானிலும் இனப்படுகொலை நடந்தது. பாகிஸ்தான் இராணுவம் அந்த நாட்டின் சிறுபான்மை இனத்தை சேர்ந்த மக்களை இனப்படுகொலை செய்தது இவர்களுக்கு தெரியாதா?26 JanDeleteUndo deleteReport spamNot spam
kalaiy Arasan - //சிங்களர்களோடு சேர்ந்து சிங்களமேலாதிக்கத்தை எதிர்க்கலாம் என சொல்பவர்கள் ஒரு பத்து சிங்களவனை ஈழவிடுதலைக்காக வென்றெடுக்க முடியுமா//
பத்து அல்ல, நூறு சிங்களவர்கள் ஆவது தயாராக இருந்தார்கள். ஆரம்ப காலங்களில் புளொட், ஈபிஆர்எப் போன்ற இயக்கங்களில் சேர்ந்திருந்தார்கள். சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் சில சிங்களவர்கள் வன்னி சென்று புலிகளிடம் பயிற்சி பெற்றார்கள். தென்னிலங்கையில் சிங்களப்புலி என்று கூறி அரசாங்கம் அவர்களை கைது செய்தது. புலிகளுக்கு ஆதரவான சிங்களவர்கள் தான் சனல் 4 ஒளிபரப்பிய வீடியோவை வெளியிட்டவர்கள்.
இவ்வளவும் இருந்தும் தமிழர்கள் மனதில் உள்ள குறுகிய இனவாத சிந்தனை சிங்களவர்களை நட்பு சக்தியாக ஏற்க மறுக்கிறது.26 JanDeleteUndo deleteReport spamNot spam
Swathi Swamy - கலை அரசன் என்பவரது கருத்துக்கு மிக நீண்ட விளக்கம் தர வேண்டும்.. ஆனால் இப்போதைய
என் சூழ்நிலையில் முடியவில்லை.. இரண்டொரு நாள் எடுக்கும். தியாகு உங்களுக்கும் தான்.. பொறுத்துக் கொள்ளுங்கள்.. அஷ்வத்தாமாவுக்கு உடம்பு சரியில்லை என்பதால் அவரை ம்ருத்ஹ்டுவமனையில் வைத்திருக்கிறோம். அதனால் எனக்கு இங்கு நீண்ட பதில் எடுதும் சூழ்நிலை இல்லை. ஆனால் ஒரு விடயத்துக்கு மட்டும் இங்கே பதில் சொல்ல விரும்புகிறென். ரணில் விக்கிரம சிங்கே அதாவது கட்சியின் தலைமைக்கு தெரியாமலேயே கருணாவை கடத்திக் கொண்டு போனவர் தான் அந்த இஸ்லாம் அரசியல்வாதி. அதுவும் போர் அமைதி சாமாதானப் பேச்சு வார்த்தையின் நடுவிலேயே தானே இந்த காரியம் மேற்கொள்ளப்பட்டது?? இதன் காரணமாகவும் கருணாவை வைத்து அரசியல் பேரம் பேசியதாலும் தான் அந்த அரசியல் வாதி கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். இப்போது அவர் அரசியலை விட்டே வெளியே வந்து அமெரிக்காவில் குடியேற என்ன காரணம்?? என்பதை மட்டும் எனக்கு விளக்கினால் போதும். நான் சாதாரணமானவள். கலையரசன் போன்றவர்களை போல் வாதிட எனக்கு தெரியாது. அதனால் நான் பார்த்தவற்றையும் அறிந்தவற்றையும் மட்டுமே விபரிக்க முடியும்.26 JanDeleteUndo deleteReport spamNot spam
Dhinesh Kumar (முகிலன்) - //அஷ்வத்தாமாவுக்கு உடம்பு சரியில்லை என்பதால் அவரை ம்ருத்ஹ்டுவமனையில் வைத்திருக்கிறோம்.//
அக்கா என்ன பிரச்சனை? சீரியஸ் ஒன்றும் இல்லையே?26 JanDeleteUndo deleteReport spamNot spam
Swathi Swamy - என்னன்னு தெரியலை..2 நாளா வாந்தி எடுக்கிறார். அடிவயிற்றில் வலிக்கிறதாம்.. விடிகாலையில் நித்திரையிலிருந்து எழும்பி ஒரே அழுகை. அதான் கூட்டிட்டு போனோம்.. அப்பெண்டிக்சைட்டோ என்னமோ...சில டெஸ்ட்டுகள் எடுத்திருக்காங்க.. அட்மிட் பண்ணியிருக்காங்க..பார்க்கலாம். சிநேகன் அவரோடு அங்கு நிற்கிறார், . மாத்து துணி எடுத்திட்டு போறேன் திரும்ப.. :):) மாறி மாறி மருத்துவமனை வாசமாவே போச்சு எனக்கு :(:(26 JanDeleteUndo deleteReport spamNot spam
Dhinesh Kumar (முகிலன்) - கலங்காதீங்க அக்கா. நான் ப்ரேயர் பண்ணிக்கிறேன். பெருசா ஒண்ணும் இருக்காது.26 JanDeleteUndo deleteReport spamNot spam
அத்திவெட்டி ஜோதிபாரதி - கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்...
விரைவில் குணமடைவார்... கவலை வேண்டாம்...26 JanDeleteUndo deleteReport spamNot spam
தேவியர் இல்லம் திருப்பூர் - கலையரசன் நீங்க கலையகம் என்ற தளத்தில் எழுதிக் கொண்டுருப்பவர் தானே?26 JanDeleteUndo deleteReport spamNot spam
kalaiy Arasan - //கலையரசன் நீங்க கலையகம் என்ற தளத்தில் எழுதிக் கொண்டுருப்பவர் தானே?//
ஆமாம்26 JanDeleteUndo deleteReport spamNot spam
49 previous comments from Swathi Swamy, தியாக ராஜன், செல்வன் S and 6 others
தேவியர் இல்லம் திருப்பூர் - ஜேவிபி யை பெருமையாக சொல்லியிருக்கீங்க. நன்றி. எனக்கு ஆச்சரியம். ஆனால் ஜேவிபி தலையுடன் நம்பிக்கையுடன் பேச சென்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்களை அவர்கள் பக்கம் சேர்ந்து போராடச் சொல்ல என்று பிளேட்டை திருப்பி போட்ட கதைகள் பலவற்றை நான் படித்து இருக்கின்றேன். குறிப்புகளுடன் உரையாட இப்போது உள்ள சூழ்நிலையில் நேரமில்லை. ஆனால் தொடர்வேன். அதே போல சிங்களர்கள் தமிழ் இயக்கத்தில் இணைந்து போராடியிருக்கிறார்கள் என்று நீங்க சொல்லியிருப்பதை சற்று விவரமாகச் சொன்னால் மிகுந்த மகிழ்ச்சியாய் தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். இதுவரைக்கும் கேள்விப்படாத செய்தி. மலையகத்தமிழர்கள் என்றால் சிங்களர்கள் தமிழர்கள் இருவரும் ஒன்று தான் சொல்லி சேனநாயகா அரசாங்கத்தில் மந்திரி பதவி வரைக்கும் வந்த கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் காங்கிரஸ் வரைக்கும் எவருமே இந்த மலையகத்தமிழர்களை கண்டு கொள்ளவே இல்லை என்பது தானே உண்மை. ஒவ்வொரு சிங்களர்களும் பதவிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு வந்த பிறகு நான் சிங்கள இனத்தின் சார்பாளன் என்று மாறித்தான் போயிருக்கிறார்கள். வரலாறு முழுக்க நிறைய செய்திகள் உண்டு. அவர்கள் சிங்களர்களுக்காக உழைத்தார்களோ இல்லையோ அவர்கள் தங்கள் எண்ணத்தை இனவாதத்தை கடைசி வரைக்கும் விட்டுக் கொடுக்கக்கூட தயாராய் இல்லை என்பதை மறுக்க முடியுமா? ஆனால் தமிழ் அகிம்சைவாதி தலைவர்கள்? ஏன் தந்தை செல்வா இதற்காகத்தானே ஜீஜீ பொன்னம்பல்த்தை விட்டு வெளியே வந்து தனிக்கட்சி தொடங்கினார். என்ன சாதித்தார். இவர் மறைவதற்குள் தானே அத்தனையும் நடந்து முடிந்தது. அப்புறம் ஸ்வாதி என்ன தப்பாக சொல்லிவிட்டார்? என்பதையும் புரியவைத்தால் நலமே விழைவு.26 JanDeleteUndo deleteReport spamNot spam
kalaiy Arasan - //இதன் காரணமாகவும் கருணாவை வைத்து அரசியல் பேரம் பேசியதாலும் தான் அந்த அரசியல் வாதி கட்சியிலிருந்து விலக்கப்பட்டார்.//
கருணாவை நாங்கள் தான் பிரித்தோம் என்று ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் பெருமை பேசவில்லையா? இலங்கை புலனாய்வுத் துறைக்கும், இந்திய ரோவுக்கும் ஒரு பங்கும் இல்லையா?26 JanDeleteUndo deleteReport spamNot spam
தேவியர் இல்லம் திருப்பூர் - கலையரசன் தொடக்கத்தில் இருந்து பேசுவோம். கருணா என்பவர் யார்? படிப்படியாக உயர்ந்து பிரபாகரனின் மெய்காப்பாளர் வரைக்கும் உயர்ந்தவர். அவர் சொன்ன முக்கிய குற்றசாட்டு என்ன? 50 000 (2004 ஆம் ஆண்டு) விடுதலைப்புலி இயக்கத்திற்கு புலம் பெயர்ந்தோர் மற்ற எல்லாவிதங்களிலும் மாத வருமானமாக 50 000 கோடி வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் என் பொறுப்பில் இருக்கும் பகுதிக்கு கொஞ்சூண்டு தான் கொடுக்கிறார்கள். அடுத்த குற்றச்சாட்டு பிரபாகரன் நல்லவர் ஆனால் அவரைச்சுற்றியுள்ள மூவர் தான் கெட்டவர்கள். இவர்கள் தான் பிரபாகரனை ஆட்டுவிக்கிறார்கள். அடுத்த குற்றச்சாட்டு எங்கள் மாவட்ட போர்வீரர்கள் மட்டும் தான் போரில் இறக்கிறார்கள். யாழ்பாண தலைவர்கள் மட்டும் மேலாதிக்கம் செய்கிறார்கள். இது போல போல பலப்பல. கூர்ந்து கவனித்துப் பார்த்தால் இவற்றையெல்லாம் எப்போது பேசுகிறார். ரணில் காலத்தில் நடந்த ஜெனிவா பேச்சு வார்த்தை வெளிநாடுகளுக்கு கோட்டு சூட்டு போட்டு பிஸ்லரி வாட்டர் குடித்து போஸ் கொடுத்து விட்டு பல இடங்கிளில் உள்ள ஆடம்பரத்தையும் பார்த்து விட்டு பேசுகிறார்கள். ஆண்டன் பாலசிங்கம் போன்றவர்கள் தொடக்கம் முதல்இது போல பல மாநாடுகளில் பங்கெடுத்து இருந்தாலும் அவர்களின் ஒற்றை நம்பிக்கை பிரபாகரன் என்ன எதிர்பார்ப்பார்? என்ன கேட்பார்? எது சாத்தியம்? எது பிரச்சனை? என்பதை புரியவைப்பது மட்டுமே. பல இடங்களில் தேவையில்லாமல் ஆன்டன் பாலசிங்கம் மூக்கை நுழைப்பதே இல்லை. பலபோர்த் தந்திர திட்டங்களை பிரபாகரன் சொன்ன பிறகே பாலசிங்கம் கேட்டுத் தெரிந்து கொள்வதுண்டு. இதுவொரு பரஸ்பர புரிந்துணர்வு என்று எடுத்துக் கொள்ளலாம். அல்லது தனக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுவது என்ற நோக்கமாகவும் எடுத்துக் கொள்ளலாம். டெலோ தலைமையில் ஐந்து குழுக்களாக இருந்த போது உள்ளே நடந்த அத்தனை கொடூரங்களும் உங்களுக்கு தெரியும் தானே? அதனால் தான் பிரபாரகன் தொடக்கம் முதல் ஒரு தலை ( அதுக்கு சர்வாதிகாரம் என்று பெயர்இட்டாலும் கவலையில்லை) ஒரு கட்டளை. ஆனால் வெளியுலகத்தை பார்த்து வந்த கருணாவின் ஆழ்மன எண்ணங்களில் எத்தனை பேர்கள் நுழைந்தார்கள். எவர் எவரை சந்தித்தார் என்ற பல செய்திகள் உண்டு. இதன் காரணமாகத்தான் நான் உண்மையை பிரபாகரனிடம் எடுத்துரைத்தேன். அவர் ஒப்பந்தத்தை கிழித்துவிட்டார் என்று வந்த அடுத்த குற்றச்சாட்டு. ஆக மொத்தம் கதை திரைக்கதை வசனம் எல்லாவற்றையும் எழுதி வைத்து சமயத்திற்காக காத்திருந்தது கருணா. ஸ்வாதி சொன்ன இயக்கம் அந்த இஸ்லாமிய தலை.
ஸ09:35DeleteUndo deleteReport spamNot spam
தேவியர் இல்லம் திருப்பூர் - அடுத்து...........................09:35DeleteUndo deleteReport spamNot spam
தேவியர் இல்லம் திருப்பூர் - தொடக்கம் முதல் உள்ளேயிருந்த பல இஸ்லாமிய தலைவர்கள் வால் ஒருபக்கம் தலை ஒரு பக்கம் என்று தான்இருந்து வந்துள்ளார்கள். ஆனால் முல்லை மார்க்கெட் போன்ற பல சம்பவங்களால் பாதிக்கப்பட்டது அப்பாவிகள் மட்டுமே. விடுதலைப்புலிகள் மேல் குற்றச்சாட்டு சொன்னாலும் இதற்குள்ளும் ஆயிரம் புரிந்துணர்வுக்ள் உண்டு. அது இப்போது வேண்டாம்.
கருணாவின் நோக்கம் உயிர்பயம். இஸ்லாமிய தலையின் நோக்கம் தனக்கான இடத்தை பிடித்துக் கொள்ள வேண்டும். அப்புறம் ரணிலின் நோக்கம் எப்போதும் போல ஒவ்வொருசிங்கள தலைகளைப் போல தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து புரிந்து செயல்பட காத்திருந்தல். ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். இந்தியா ஈழம் இரண்டிலும் உள்ள அரசியல் தலைவர்கள் எல்லாவகையிலும் சொத்தை. ஆனால் இரண்டு நாடுகளிலும் உள்ள புலனாய்வு மக்கள் தான் கெட்டிக்காரர்கள். காரணம் நிச்சயம் இந்த தகவல் புலனாய்வு மக்களுக்குத்தான் சென்று இருக்க வேண்டும். ஈழ புலனாய்வு மக்களை விட ரா வுக்குத் தான் இதில் ஆர்வமும் அக்கறையும் அதிகம். இறுதிக்கட்ட போராட்ட நிகழ்வுகளில் அரசாங்கத்தை மீறி பல இடங்களிலும் மூவரின் வார்த்தைகள் ஆளுமைகள் தான் கொடி கட்டி பறந்துள்ளது. இதில் மலையாளி என்று இனபேதம் போன்ற கொச்சைத்தனமாக விவாதங்களில் நான் இறங்க மாட்டேன். ஒரு குறிப்பிட்ட பதவிக்கு மேலேயும் உயர்ந்துவிட்டால் அவர்களுக்கு ஜாதி மதம் இனம் செக்ஸ் கலாச்சாரம் போன்ற எந்த கோட்பாடுகளும் இருக்காது. அதிலும் புலனாய்வுத் துறை மக்கள் என்றாலே கேட்கவும் வேண்டுமா? மொத்தத்தில் இந்தியா புலனாய்வு துறை அறிவுரை இல்லாமல் ரணில் கூட இந்த ஆட்டத்தில்இறங்கி இருக்க மாட்டார் என்பது என் எண்ணம்.09:46DeleteUndo deleteReport spamNot spam
தேவியர் இல்லம் திருப்பூர் - ஸ்வாதி சொல்ல வந்தது. கோலத்தின் தொடக்க புள்ளியை போட்டவர் அந்த இஸ்லாமிய தலை. ஆனால் தண்ணிர் தெளித்து மொத்த இனத்தையம் பாடையில் ஏற்ற உதவியது இரண்டு புலனாய்வு துறையினர் மட்டுமே. ஏன் இன்றைக்கு சிறையில் டவுசர் பாண்டியாக களி தின்று கொண்டு இருப்பவர் படையெடுப்பை தொடங்கியது எந்த பகுதியை நோக்கி? அதற்கு காரணம் என்ன? எவர் கொடுத்த ஆதரவு? எப்படி இந்த தைரியம் வந்தது. மேலை நாடுகள் இது நாள் வரைக்கும் செய்யாத உதவியா? சரித்திர பக்கங்களில் பல இடங்களில் இலங்கை இராணுவத்தினர் செல்வதற்கு அஞ்சிய இடங்கள் பல உண்டு. கூட்டிக் கொடுத்து வாழ்ந்து கொண்டுருந்த கூட்டத்தில் காட்டிக் கொடுப்பவன் நுழைந்த காரணத்தால் டவுசர் பாண்டியும் இன்றைய மாமன்னரும் தொட்ட காரியமெலலாம் பெற்றி பெற இன்று "எதுவும் சாத்தியம்" என்று புளாங்கிதம் அடையும் சூழ்நிலையில் உள்ளார்கள்.
நான் மதிக்கும் தலைவர் லீ குவான் யூ சொன்ன வாசகத்தை இங்கே உங்கள் பார்வைக்கு விட்டு விடுகின்றேன்.
"ஈழத்தமிழர்களை ரொம்ப நாள் அடைத்து அமுக்கி வைத்திருக்க முடியாது. முறையான தீர்வு கிடைக்காத வரைக்கும் இது மறுபடியும் வேறு ஏதோவொரு ரூபத்தில் தொடரும்."09:53DeleteUndo deleteReport spamNot spam
kalaiy Arasan - //ஸ்வாதி சொன்ன இயக்கம் அந்த இஸ்லாமிய தலை.//
இதனை சுவாதி தான் புதிதாக கண்டுபிடித்திருக்கிறார். அவரது குற்றச்சாட்டு என்னவென்றால், முஸ்லிம்கள் நயவஞ்சகர்கள் கருணாவைப் பிரித்தார்கள் என்பது தான். இது இனவாதப் பேச்சாக உங்களுக்கு தெரியவில்லையா?
புலிகள் இயக்கத்தினுள் பிளவு ஏற்படுவது இது தான் முதல் தடவையல்ல. முதலில் உமா மகேஸ்வரன் தலைமையில் புளொட் என்று பிரிந்தது. பின்னர் மாத்தையா குரூப் பிரிந்து அவர்களில் பலர் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தார்கள். கடைசியாக கருணா தலைமையில் மட்டக்களப்பை சேர்ந்த குழு பிரிந்தது. மாத்தையா குழு, கருணா குழு பிரிந்த பொழுது பெருந்தொகை புலி உறுப்பினர்கள் சக தோழர்களால் கொல்லப்பட்டார்கள். இவ்வாறான சகோதர சண்டை புலிகள் இயக்கத்தை பலவீனப்படுத்தியது. இறுதியில் எதிரியான சிறிலங்கா அரசுக்கு சார்பாக அமைந்து விட்டது.14:09
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================