இன்றைய செய்தியும் கோணமும் 31.10.2013

செய்தியும் கோணமும்

செய்திகள் பெரும்பாலும் ஆளும்வர்க்கத்தின் சார்பான விசயமாகத்தான் பெரும்பாலும் அமையும் அல்லது  பெரும்பான்மை மதம் அல்லது பெரும்பான்மை சாதியை மைய்யபடுத்தி செய்திகள் வருகின்றன

இன்றைய செய்திகளை எனது கோணத்தில் அனுகி இருக்கேன்

1.செய்தி: மோடி கூட்டத்தில் குண்டு வைத்ததாக கைது செய்யப்பட்ட இந்தியன் முகாஜிதீன் அன்சாரி தெரிவித்த தகவல்
---------------------------------------------------------------------
“மக்களை அச்ச படுத்தவும் ,நிறைய உயிர்களை குறிவைத்துமே செய்தோம்”
---------------------------------------------------
மக்களை குண்டு வைத்து பயமுறுத்துவதால் என்ன பயன் , எவ்வளவுக்கு எவ்வளவு  அப்பாவிகளை கொல்கிறீர்களோ அவ்வளவு வெறுப்பைத்தான் சம்பாதிப்பீர்கள்

இந்துத்துவத்தை எதிர்க்கும் ஆயுதம் இதுவல்ல .

2.செய்தி :பெப்ரவரி மாதம் முதல் தடையில்லா மின்சாரம் வழங்குவோம்

-------------------------------------------------------------------------------------------

ஏற்கனவே ஜூலை-2013ல் தடையில்லா மின்சாரம் வழங்குவோம்னு சொன்னீங்க மைலார்ட்


3.ராமநாதபுரத்தில் 50 ஆயிரம் பனைமரங்கள் வெட்டப்பட்டு செங்கல் சூளைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது ஏற்கனவே 1.5 கோடி மரங்கள் இருந்த இராமநாதபுரம்
பனைமரங்கள் அற்ற மாவட்டமாகி வருகிறது 10 ஆயிரம் தொழிலாளர்கள்
வேலை இழந்துள்ளார்கள்
-------------------------------------------------------------------------

பனைக்கு பதிலாக எதுக்கும் உதவாத கருவேல மரங்களை செங்கல் சூளைக்கு
அனுப்பலாம்

4.தர்மபுரியில் கலவரம் பாதித்த மக்களுக்காக வேலூர் மாவட்ட மக்கள்
தீபாவளி புறக்கணிப்பு

-------------------------------------------
நல்ல விசயம் கொல்லப்பட்ட அப்பாவிகளுக்கு இது ஒரு நினைவு கூர்தலாகவும் சாதி மோதல்களுக்கு கண்டனமாகவும் இருக்கும்

5.ஐதராபாத்தில் பாலராஜி -60 என்பவர் இறந்து போனார் இவரது
நல்லடகத்தை செய்ய யாரும் இல்லாமையால் இவரை சுற்றி
இருந்த இந்துக்கள் இந்து முறைப்படி அடக்கம் செய்தனர்

----------------------------------------------------------------------------

கொட்ட எழுத்துக்களில் போடவேண்டிய செய்தி பெட்டி செய்தியாகிப்போனது
வேதனை

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post