இரண்டாம் புலிகேசி வினவு
(இந்த கதை முற்றிலும் கற்பனையானது
கதையில் வரும் கதாபாத்திரங்கள் புனைவுதான்
இது யாரையும் புண்படுத்த எழுதப்பட்டதள்ள
மாறாக அவர்களின் புகழை மணக்க எழுத
பட்டது)
புலிகேசி மன்னன்:வினவு
மங்குனி அமைச்சர்:ராஜா
மந்திரிகள் : அரைடிக்கெட்,கேள்விக்குறி,
ரியல் எண்கவுண்டர் மற்றும் பெயர்
சொன்ன சொல்லாத நபர்கள்
மன்னர் மண்டபத்துக்கு வருகிறார் ...
வாயில் காப்போன் "ராஜாதி ராஜ , பதிவுலக திலக
பாயும் புலி, வேணல் மழை, கவிதை கசிவு, புலிகேசி மன்னன் வரார் வரார்"
நிறுத்து "எங்கே வாசகத்தை திரும்ப சொல்
(சொல்கிறான்)
யாரங்கே "கேள்விகுறி ஓடி முன்வருகிறார்"
உடைவாளாம் கமெண்டு பாக்சை தேடுகிறார்
மன்னன் யோவ் மங்குனி உனது உடைவாளை எங்கய்யா
மன்னா வீட்டிலேயே வைத்து விட்டேன்
சரியான மங்குனி அய்யா நீர்
கோபத்தை அடக்கும் மன்னனுக்கு தொண்டைகுழி
வரை கெட்டவார்த்தை வந்து பிறகு கேள்விகுறியை
அழைத்து அந்த வாயில் காப்போனை "
இவனை கெட்டவார்த்தையால் நாலு மாமாங்கத்து
திட்டு கேள்விகுறி"
வாயில் காப்போன் அலறுகிறான்
மங்குனி :ஏன் மன்னா அவன் என்ன குற்றம்
செய்தான்
"கவனிக்க வில்லையா நீர்"
"இல்லை மன்னா"
"புரட்சி புலியை விட்டுவிட்டான் அய்யா விட்டு விட்டான்"
"அதை விட்டுவிட்டானா இவனுக்கு தண்டனை
தேவைதான்"
"சரியான மங்குனி அமைச்சரைய்யா நீர்"
"மன்னா பதிவுலகம் முழுக்க ஒரு குஸ்தி
சண்டை நடக்கிறது அதை தாங்கள் தடுத்து
நிறுத்த கூடாதா"
"ஏன் நிறுத்த வேண்டும் சண்டையை நமக்கு
சாதகமாக பயன்படுத்த வேண்டும் "
ஆமாம் மன்னா
"என்ன செய்யலாம் என்றால் எல்லா சண்டைகளையும்
நடத்த நாமே ஒரு தளம் அமைத்து கொடுக்கலாம்
ஆணாதிக்கம் பெண்ணியம் இப்படி "
"சண்டையில் வெற்றி பெருபவர்களுக்கு
நாமே பரிசு கொடுக்கலாம் இதனால் எல்லா
பக்கமும் போற பதிவர்கள் நமது மண்டபத்தில்
ஒன்றுகூடி கும்பி அடிப்பார்கள் எப்படி
என் யோசனை"
"சூப்பர் மன்னா"
"மங்குனி இப்ப சொல்லு மண்டை இருக்கும்
இடத்தில் கொஞ்சம் மூளையும் இருக்க
வேண்டும் நாம்தானே புரட்சியை கொண்டுவர
வேண்டும் தானா வருமா "
வாழ்த்து சொல்லும் அரைடிக்கெட்டும் ,ரியலும்
கோரசாக "குஸ்தி மைதானத்தை திறந்து வைத்தமையால்
இன்றுமுதல் "குஸ்திகண்ட குறட்டை புலி" என்று
வரும்கால சந்ததியினரால் அன்போடு
அழைக்கப்படுவாய் .
காட்சி மைதானம் பதிவர்கள் இரு பிரிவாக
பிரிந்து நிற்கிறார்கள் பெண்ணிய பதிவர்களும்
ஆணாதிக்க பதிவர்களும் முஸ்டியை தூக்கி
காட்டுகிறார்கள்
தீவிர பெண்ணிய பதிவர்களுக்கு ஆதரவாக
மங்குனியும் மைதானத்தில் குதிக்க ஆட்டம்
ஏழரை என்ற மந்திரியையும் சேர்த்து கொண்டது
ஆண்களின் சார்பாக இரும்பு திரையும் முகிலனும்
களம் காண முதல் ரவுண்டிலேயே பெண்ணிய
பதிவர்கள் அடி வாங்க
மன்னனுக்கு மகிழ்சி இருந்தாலும் இந்த
மங்கினி இப்படி உதை வாங்க கூடாது.
வெற்றி கண்ட பதிவருக்கு பரிசாக பன்னிகுட்டி
பொம்மையை அளிக்கும் மன்னர்
இந்த சண்டையின் வெற்றியை பற்றி
கொஞ்சம் சொல்லுங்க என சொல்ல
" நான் இந்த சண்டையில் இரண்டு பேர
போட்டேன் இதில முக்கியமா எங்க
கேப்டன் உங்க மங்குனி அமைச்சரை
அல்லையில் போட்டது எங்கள் வெற்றி
வாய்ப்பை அதிகபடுத்தியது " இதுக்கெல்லாம்
காரணம் எங்க வாத்தியார் ''
வாதுவென்ற சூரப்புலிதான்
காட்சி ( பல தலைப்புகளில் பதிவர்
சண்டை நடந்தமையால் )
வினவின் ஹிட் கூடிப்போய்
கஜானா நிரம்பி வழிந்தது
அரண்மனைக்கு செல்லும் மன்னனுக்கு
ஒரு பலத்த சந்தேகம் வந்துவிட்டது
ஆப்பிரிக்க கண்டம் கட்டுரையில் நாலாம்
வரிசையில் ஐந்தாம் வார்த்தை என்ன
அரை டிக்கெட்டை வினவுகிறார்
"மன்னா சத்தியமா அந்த கட்டுரையை
படிக்கவில்லை மன்னா படிக்கவில்லை"
"யாரங்கே இவனை கொண்டுபோய்
இருட்டு அரையில் அடைத்து
துரை சண்முகத்தின் கவிதைகளை
படிக்க கொடு"
மன்னரிடம் பயந்து குழை நடுங்கி
அடுத்த மந்திரி தற்கொலை
செய்துகொண்டதாக கேள்வி
தொடரும்
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================