ரத்தத்தில் சாதி இல்லை –சிறுகதை



ரத்தத்தில் சாதி இல்லை –சிறுகதை

வீடு பூராவும் ஆட்கள் நிறம்பி இருந்தார்கள் , வாசலில் நுழையும் போதே தெரிந்தது ராசுவுக்கு எதோ பஞ்சாயத்துன்னு.
இன்னைக்கு ராத்திரிக்கு அவனை போடனும்ணே – இது தெரு கடைசியில் இருக்கும் பாலுத்தேவன் .
சித்தப்பாவுக்கு மீசை துடிப்பதும், கண் சிவப்பதுமாக வித்தியாசமாக இருந்தார்.
அவர் பேரும் ராசுதான் ;எதுக்கும் அஞ்சாம இருப்பதாக அடிக்கடி சொல்லி கிறவர், நாட்டின் சகல பிரச்சனையையும் தனது அரிவால் மூலம் தீர்த்துவிட நினைப்பவர் .

அலங்கா நல்லூர் ஜல்லி கட்டும் / சாதி மோதலும் கொலையும் , ரவுடிதனமும் வீரம் என யாரோ அவருக்கு அல்லது இந்த சாதிசனம் சொல்லி கொடுத்திருக்கனும் .

பெரும்பாலும் நல்லவர்தான் சித்தப்பா ஆனால் சாதி விசயத்தில் தாய் தடுத்தாலும் விடமாட்டார்.

என்னதான் சாதி சாதின்னு இவர் சண்டை போட்டு ஜெயிலுக்கு போனாலும், இவரை பார்த்தா பயப்படுவானுகளே தவிர ஒருத்தனும் மதிக்க மாட்டானுக.

காதுக்கு கேட்காம ஊரில் மாட்டு மூளைகாரனுகன்னு பேசிக்கிறதை ராசு கேட்டு கவலை கொள்வான்.

ஏன் நம்ம குடும்பம்மும் சில குடும்பங்களும் மட்டும் சாதியை கட்டி கிட்டு அழுனும் என நினைப்பான்.

என்னடா படிக்கிறன்னு............. ராசுவ கேட்பார் எம் பி ஏ ப்பா என்பான்
நல்லா படி படிச்சி நம்ம ஜாதிகாரனுக முன்னால தல நிமிர்ந்து வாழனும்

எல்லாமே சாதிதான் அவருக்கு பிறப்பது , வாழ்வது சாவது எல்லாமே சாதிசித்தப்பாவுக்கு சாதியப்பான்னு பேரு வச்சிடலாம்.

”தம்பி உங்க சித்தப்பன சாதாரணமா நினைக்காத, கத்தி எடுத்தான்னா நாற்பது பேரை விரட்டுவான் பெரிய வீரன் “ என பாலு சொன்னது சிரிப்பா இருக்கு
என்னய்யா வீரம் மனுசனை மனுசன் கொல்வது வீரமான்னு கேட்க தோனும் ராசுவுக்கு கேட்கமாட்டான்.

சின்னுதான் ஒரே நண்பன் ராசுவுக்கு
அய்யா வணக்கம் என ஒரு பய கையெடுத்து கும்பிடவும் நீ யார்ரா என ராசு ஒருமுறை விளையாட போகையில் கேட்டான்
என்பேரு சின்னுங்க சேரில எங்க வூடு என்றான்.
இனிமே கையெடுத்து கும்பிட கூடாது . ராசுன்னு கூப்பிடு என சொன்னதை அவன் நெம்ப நாளா கேட்கலை .
சின்னுவின் அப்பா செருப்பு தைக்கும் தொழிலாளி அந்த ஊருக்கு அவன் வந்து ரொம்ப நாட்களாக ஆகிறது . ராசுவை விட அதிகம் நல்லா படிப்பான் சின்னு .
கணக்கு புத்தகத்தை எடுத்தால் தலை சுத்தும் மற்றவர்க்கு ஆனால் சின்னுவுக்கு கணக்கு உயிர் .
ஒரு நாள் வகுப்பில் டீச்சர் போட்ட கணக்கின் விடையில் நாலு வரிகளை குறைத்து விடை கொண்டு வந்துவிட்டான் சின்னு.
ஆனால் டீச்சர் ரெண்டு அடி போட்டு அவரை உக்கார சொல்லிட்டாக
என்னமோ சின்னு பள்ளிக்கி வராத நாட்கள் வெறுமையானவை அவற்றால்
எந்த பலனும் இல்லை .
சின்னுதான் உலகம் உலகம் என்றால் அது சின்னுதான் ராசுவுக்கு.
டே இங்க வாடான்னு ஒரு முறை சின்னுவை சித்தப்பா கூப்பிட்டு அறைந்து விட்டார் . இந்த பக்கம் வராதே என மிரட்டி இருக்கார்.
ஒரு வாரம் சித்தப்பனிடம் பேசாமல் இருந்து அம்மாவிடம் சொல்லி சண்டை போட்டு சின்னுவை தோட்டத்துக்கு அழைத்து செல்வான் ராசு.
இவன் ஒரு தனி டைப்பு அத்தாச்சி நம்ம சாதியா ?
ஒரு மாதிரியா போரான் வரான் , சினேகம் எல்லாம் சின்னுவோடதான்.
நம்ம சாதி சனத்தை அண்ட மாட்டேங்கிறான்.
என அம்மாவிடம் எத்தனை பிராது கொடுத்தாலும் சின்னுவை விடலை
சில வருடங்களுக்கு பிறகு
அலுவலக உதவியாளர் சொல்ல ரிசப்சனில்  போய் பார்த்தால் சித்தப்ப்பா
தனது பெண்ணை அழைத்து வந்திருந்தார்.
வேலை கேட்டு ,ராசு அவரை வீட்டுக்கு கூட்டி போய் ஒரு வாரம் இருக்க சொன்னான் .
சித்தப்பா இன்னும் திருந்தலை என்பது மிகப்பெரிய வருத்தம் ராசுவுக்கு
சின்னுவும் என்னுடன் இருப்பதை அவர் கொஞ்சம் வெறுப்புடன் பார்த்தார்.
சின்னு என்னோட ஆபிசில் முக்கிய பணியில் இருந்தான்.
அன்று காலை வழக்கம் போல ஆபிஸ் போனதும் அவசர போன் வீட்டில் இருந்து சித்தப்பா படியில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டதாகவும்
உடனே வரும்படி அழைத்தாள் மனைவி .
4 யூனிட் ஓ பாசிட்டிவ் ரத்தம் வேணும் உடனே ஏற்பாடு செய்யுங்க என்றால் அந்த வெள்ளை கார பெண் போல இருக்கும் நர்ஸ் .
பிளட் பேங்கில வாங்கலாமே என்ற ராசுவின் யோசனைக்கு “நீக்க எதாவது பிளட் கொடுத்தா தான் அவங்க ஓ பாசிட்டிவ் தருவாங்க” என்றாள் .
ஆபிசில் இருந்து நான்கு பேரை அழைத்து சென்று கொடுத்து விட்டு அன்று இரவு பதினோறு மணிக்குதான் திரும்பினான் .
காலையில் சித்தப்புக்கு நினைவு வந்துடுச்சி
ஊருக்கு போகனும்னு ஒரே பிடிவாதம் பிடிச்சி கிளம்பினார் மனுசன்.

போகும் போது காதருகில் “அந்த சின்னு பயலோட சேராதேன்னார் ரகசியமாக”

அவருக்கு ஏத்தின ரத்தம் ஒரு பாட்டில் நம்ம சின்னு வோடதுன்னு
சொல்லவில்லை .



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post