அவரது லட்சியம் உலகத்தில் இந்தியாவை வல்லரசாக்குவதாக இருக்கலாம்
ஆனால் வல்லரசு என்பதே முதலாளித்துவத்தின் உச்சம் ஏகாதிபத்தியமே என்ற லெனின் வரையறையும் , ஆக பெரும் தீங்குக்கு எல்லாம் அதுவே காரணமாய் அமையும் என்பதும் அவருக்கு தெரியாமல் பேசி இருக்கலாம் என்று கருதுகிறேன்.
ஒரு முதலாளித்து நாட்டில் முதலாளித்துவ உற்பத்தி சமூகத்தில் முதலாளிகளுடன் சேர்ந்து நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் அதே முதலாளித்துவத்தின் சுயநலம் , காலை வாருதல் , துரோகம் , தன்னை போனித்தனம் இல்லாமல் இருந்தது எப்படி?
அடி கட்டுமானம் முதலாளித்துவமாக இருக்க , மேல் கட்டுமானத்தில் அதன் உச்சத்தை தொட்டு விட்டாலும் இந்தியாவில் இருக்கும் தொழிலாளியோ அல்லது உலகத்தில் இருக்கும் எதோ ஒரு நாடோத்தான் சுரண்டப்பட போகிறது என்று தெரியாமல் இந்தியாவை வல்லரசாக்க கனவு கண்டவர் - தனது சொந்த குடும்பத்தை சொர்க்க புரியாக்க நினைக்கவில்லை என்றால் என்ன அர்த்தம் .
மிகப்பெரிய விஞ்ஞானிகளை எல்லாம் தனது கூலி அடிமைகளாக முதலாளித்துவம் மாற்றிவிட்டது என்று மார்க்ஸ் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.
கலாமை இந்த முதலாளித்துவ சமூகம் கூலி அடிமையாக்கியது .
ஆனால் கலாம் இந்த சமூக அமைப்பை புரிந்து கொள்ளவே இல்லை அதற்கு இந்த கல்விமுறையும் அமைப்பும் இடங்கொடுக்கவில்லை.
மன உந்துதல்களை பெற உதவும் மேல்நாட்டு பேச்சாளர்களின் பேச்சு போலத்தான் கலாமின் பேச்சுகள் அமைந்தன. ஆனால் அவற்றை குழந்தைகளும் மாணவர்களும் ஏன் விரும்பினார்கள்.
ஏனெனில் - கல்வி வியாபாரமாக காரணம் இந்த முதலாளித்துவ அமைப்பில் போட்டி - அதன் உடனடி பாதிப்பு மாணவர்கள்தாம்.
படி படி என சொல்லும் பெற்றோர் ஆசிரியர் மத்தியில்
நேர்மறையாக சாதனை செய் என பேசினார் கலாம்.
இது மாணவர்களுக்கு உவப்பாக இருந்தது - மக்களுக்கும் ஒரு கானல் நீர் தேவை பட்டது இதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் நமது கஸ்டங்கள் முடிந்து போகும் என கனவு கண்டனர் .
அதே நேரத்தில் கலாமின் சிறப்பான பேச்சுகள் எடுபட்ட காலகட்டம் மிக முக்கியமானது அதுதான் உலகமயமாக்கல் காலகட்டம் .
உலகமயமாக்கலின் மூலம் சில பிபிஓ வேலை வாய்ப்புகளும் கொஞ்சம் பொருளாதார உயர்வும் அனைவருக்கும் போனும் வண்டியும் கிடைத்த காலகட்டமாகும் .
அப்போது மனதில் தன்னம்பிக்கை இருந்தால் உயரலாம் என கலாம் சொன்னது மிக சிறந்த பொருத்தமானதாக பட்ட கருதுகோள் ஆகும்.
நமது கனவே மற்றவர்களின் தலைமேல் ஏறி நிற்பது என்றும் / நமது கனவே மற்றவர்களை சுரண்டுவது என்றும் சொல்ல முடியுமா கலாமால்
ஆம் முடியும் அவர் மார்க்சியம் படித்திருந்தால் முடியும்?
தனியார் பள்ளிகள் புற்றீசல் போல புறப்பட்டு கிளம்பியதும் ஐ ஐ டி களில் படித்தவர்கள் அமெரிக்காவை நோக்கி ஓடியதும் ஆன இந்த காலகட்டத்தில் கலாம் இந்தியாவை நேசிக்க சொன்னது - இந்திய முதலாளித்துவத்துக்கு மிகவும் உவப்பானதாகும் .
இந்திய ஊடகங்கள் , இந்திய முதலாளிகள் , இந்திய கல்வியாளர்களால்
கலாம் மிக சிறந்த முன்மாதிரியாக நிறுத்தப்பட்டார்.
ஆனால் இதையெல்லாம் கலாம் அறிவாரா ? என்பது தெரியாது.
ஆனால் கலாமின் புகழ் என்பது முதலாளித்துவ கட்டமைப்பின் மூலம் வந்தது -முதலாளித்துவ வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பணிக்கு அவர்கள் செய்த கைமாறு ஆகும்.
கலாமை பொறுத்தவரை அவர் செய்ததெல்லாம் நாட்டுக்கு அமெரிக்கா போன்ற ஒரு மிகப்பெரிய வல்லரசுக்கு எதிராக இந்தியாவை நெஞ்சை நிமிர்த்தி வைக்க என்ன முடியுமோ அதை செய்தார்?
இதுதான் அவரை பொறுத்தவரை தேசபக்தி கடவுள் பக்தி இதெல்லாம்
இதெல்லாம் விமர்சிக்காமல் கலாமை ஆராதனை செய்ய முடியாது?
ஆனால் கலாமை விமர்சிக்க / காலம் இருக்கிறது அவரது இறப்பின் போது அல்ல
பிரபாகரனால் துன்புறுத்தபட்ட எத்தனையோ பேர் / இயக்க விரோதிகள் கூட அவரது மரணம் கண்டு கலங்கினார்கள்
ஒட்டுமொத்த தமிழ் மக்களின் தலையெழுத்தை கண்டு அஞ்சினார்கள்.
அப்படித்தான் கலாம் .
இந்த முதலாளித்துவ கல்வி அமைப்பில் உருபோடப்பட்டு வளர்க்கபட்டு தேச நலன் என்கிற கடமை கருதுகோளால் வார்க்கப்பட்ட கலாம்
என்றாலும் தேசத்துக்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்தார்?
பல்வேறு அரசியல் / பிற்போக்கு கருத்துக்கள் கொண்ட ஒரு மனிதன்
தனது நேர்மையால் , எளிமையால் , உண்மையான அன்பால் மக்களை கவர முடியும் என்று சொன்னால் அவர்தான் கலாம்
கலாமின் மீதான விமர்சனத்துடன் அவர் ஆற்றிய சேவைகள் மதிக்கப்படவேண்டும் .

முதலாளித்துவ விஞ்ஞானம்
மொத்தமே விமர்சனத்துக்கு உட்பட்டதுதான் எப்படி எனில் முதலாளித்துவ மூலதன வளர்ச்சிக்கு
சேவை செய்வதே அதன் அடிப்படை நோக்கம் ஆனால் முதலாளித்துவம் தன்னை தேசபக்தி / ஜனநாயகம்
/ கடமை என்ற பூக்களை கொண்டு மூடி வைத்துள்ளது.
இந்த பூக்களை உண்மை
என நம்புபவர்களதாம் அப்துல்கலாம் போன்ற விஞ்ஞானிகள் . இவர்கள் தமது உடல் பொருள் ஆவி
அனைத்தையும் கொடுத்து கண்டுபிடிக்கும் அல்லது மறுகண்டுபிடுப்புகள் முதலாளித்துவ சேவை
செய்கிறது என்ற பார்வை கொண்டிருக்கவில்லை ? ஏனெனில் நமது பள்ளி முதல் கல்லூரிவரையிலான
கல்வி முறை முதலாளித்துவத்திற்கு சேவை செய்யவே மாணவர்களை பயிற்றுவிக்கிறது.
அதன் அச்சில் வார்க்கப்பட்டவர்கள் யாரையும் எதிர்த்து பேசினால் அரசியல் என கருதுகிறார்கள்
. அதனால்தாம் கலாம் ஈழப்பிரச்சனை குறித்தும் /
குஜராத் பிரச்சனை
குறித்தும் கருத்து சொல்வதில்லை .
ஊன்றி கவனித்தால்
மத்தியதரவர்க்கம் முழுமைக்கும் கலாமின் பார்வைதான் இருக்கும் . ஈழத்திலோ குஜராத்திலோ
யார் செத்தாலும் அதெல்லாம் வெறும் செய்தியாக பார்க்கும் போக்கு மத்தியதரவர்க்கத்திடம்
வளர்ந்து விட்டது.
ஒரு பக்கம் நமது
கல்வி அமைப்பு காரணம் என்றாலும் மற்றொரு பக்கம் தனிமனித கருத்தை முக்கியதுவ படுத்தும்
போக்கு முதலாளித்துவத்தின் உடனடி விளவு ஆகும்
1.நான் முன்னேற
எனது உழைப்பு போதும்
2.நானும் எனது
குடும்பமும் எப்படியாவது முன்னேற வேண்டும்
3.உலகில் நடக்கும்
அக்கிரமங்களுக்கு பேஸ்புக்கில் ஒரு கண்டனம் தெரிவித்து விட்டு நான் எனது அன்றாட வேலையை பார்க்க போகவேண்டும்
இதற்கு காரணமும்
உள்ளது எதாவது பொது அமைப்பில் தங்களை இணைத்து கொண்டவர்களை கம்பெனிகள் விரும்புவிதில்லை
எதிர்த்து பேசுபவர்
என முத்திரை குத்தி வெளியே அனுப்ப முயலும் .
இதையெல்லாம் மீறி
வரும் ஒன்று இரண்டு பேரை இந்த இடதுசாரி அமைப்புகள் ஏற்று கொள்வதில்லை ஏனெனில் மத்திய
தரவர்க்கம் எப்போதுமே கேள்வி கேட்டுத்தான் போராட வரும் .
ஆனால் அவர்களின்
புத்திசாலி தனத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அவர்களின் வர்க்கத்தை குத்தி காட்டி அவர்களிடம்
இருந்து விலகி போய்விடுவர் இடதுசாரிகள் .
இதனால்தான் இந்த
வர்க்கம் பெரும்பாலான விசயங்களில் மூக்கை நுழைப்பதில்லை .
மேலும் இங்கு இடதுசாரிகளும்
சாதிகட்சிகளாகவே வலம் வருகிறார்கள்.
பார்பனர்களை திட்டுவதும்
/ பூணூல் அறுப்பை ஆதரிப்பதும் தமது அரசியல் செயல்திட்டமாக வைத்து கொண்டு மக்களை எப்படி
வர்க்க ரீதியாக திரட்ட போகிறார்கள் என்பது தெரியவில்லை .
இதனால் மாபெரும்
குழப்பம் நிலவுகிறது.
யாரை பார்த்தாலும்
சந்தேகம் யாரை பார்த்தாலும் விமர்சனம் என ஒரு கடும் போக்கு நிலவுகிறது .
இடதுசாரிகள் தமது
போராட்டத்தில் மத்தியதர வர்க்கத்தை இணைத்து கொண்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்காதவரை
.
கலாம் போன்ற விஞ்ஞானிகளின்
சேவை முதலாளித்துவத்துக்கு பயன்படுவதை தவிர்க்க முடியாது
கலாமை திட்டி பயனில்லை
கலாம் மத்தியதரவர்க்க
முகம் என்றால் அந்த வர்க்கத்தை பாட்டாளிவர்க்க ஆதரவாக திரட்ட செயல்திட்டம் என்ன வைத்திருக்கிறீர்கள்
Tags
abdulkalam