புலிகளை ஆதரிப்பதும் கலாமை எதிர்ப்பதும் இரட்டை நிலை?-வினவு மக இக



புலிகளை ஆதரிப்பதும் கலாமை எதிர்ப்பதும் இரட்டை நிலை?-வினவு மக இக


ஈழம் பற்றி நினைவுகளை எழுத அனுமதித்தது:
ஒரு கட்சி அது கம்யூனிஸ்டு கட்சியா இல்லையா என்பது அது எந்த வர்க்கம் சார்ந்து இயங்குகிறது என்பதை வைத்து சொல்லி விடலாம் . தமிழ் ஈழத்தில் புலிகள் எந்த வர்க்கத்தின் பிரதிநிதிகள் என்றால் ஈழத்தின் வலதுசாரிகளின் பிரதிநிதிகள் அவர்கள் ஈழத்தின் பல பல கம்யூனிஸ்டு சித்தாந்திகளை கொன்றிருக்கிறார்கள் / தத்துவார்த்த ரீதியான விவாதங்கள் கூட்டங்களை தடை செய்திருக்கிறார்கள் உண்மையான பாசிச சக்தியாக இயங்கி இருக்கிறார்கள் ஆனால் வினவில் வந்த பதிவு சொல்கிறது
புலிகளுக்கு இந்தியாவில் இருக்கும் தடையை நீக்க வேண்டுமாம்
//இலங்கை அரசே புலிகளை முற்றாக அழித்து விட்டோம் என்று கூறிவிட்ட நிலையில், இங்கு மீண்டும் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்க எந்த நியாயமுமில்லை. அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பில், நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதாக அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் கூட்டம் நடத்தப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், இதை அமெரிக்க அரசு தடுக்கவோ அவ்வமைப்பின் செயல்பாடுகளை முடக்கவோ இல்லை. ஆனால், அவ்வமைப்பையும் அபாயகரமானதாகச் சித்தரிக்கிறது, இந்தியா.///
அமெரிக்காவில் தடை இல்லையே ஏன் இந்தியாவில் தடை என அப்பாவியாக கேட்கிறார்கள் . புலிகள் இலங்கையில் நடாத்திய கொலைகள் போதாதென்று இந்தியாவின் பிரதமரை கொலை செய்திருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க பாசிச சக்தியாக வளர்ந்த புலிகளால்தான் அந்த மக்கள் இப்படி ஒரு துயரத்தை அனுபவித்தார்கள் என இவர்களால் சொல்ல முடியாதது ஏன்.





ஒரு முறை ரதி (இவர் ஒரு புலி ஆதரவாளர்)என்பவர் ஈழத்தின் நினைவுகள் என்ற பதிவை வினவில் எழுதுகிறார் அங்கு வந்து கமெண்டு போடும் இரயாகரன் அவர்கள் பக்க சார்பில்லாமல் எழுதும்படி கோருகிறார் உடனே வரிந்து கட்டி கொண்டு அவரிடம் கேள்வி கேட்கும் வினவு கமெண்டு ஆனாது கம்யூனிசம் தெரிந்தவர்கள் சிரிக்கும் விதமான பதிலாகும்
அதாவது புலிகள் பாசிஸ்டுகள் என்பது அகநிலையான கருத்தாம் புறநிலையாக அப்படி இல்லையாம் //. ஈழப்போராட்டத்தில் புலிகள் தவறுகள் செய்திருப்பதாக நாம் சொல்வது வெளியே ஒட்டுமொத்தமாக ஏற்கப்பட்ட கருத்தல்ல. அப்படி ஏற்கச் செய்வதற்கு நாம் தொடர்ந்து விடாப்பிடியாக போராடுவது வேறு. மாறாக அகநிலையாக நாம் வைத்திருக்கும் கருத்தை புறத்தில் ஒருவர் ஏற்கவில்லை என்றால் உடனே அவருக்கு ஏதாவது ஒரு பெயர் சூட்டுவது எந்த விதத்தில் சரி. இந்த உலகில் பகுத்தறிவுடன் சிந்தித்து அதாவது வர்க்க கண்ணோட்டமின்றி பார்வை கொண்டவர் எவரும் இல்லை/ /http://www.vinavu.com/2009/07/14/memories-of-eelam/#comment-6531
அட அப்பாவிகளா அப்துல்கலாம் ஒரு முதலாளித்துவ விஞ்ஞானி என்பதை கூட ஏற்று கொள்ளாமல் புறநிலையாக அவருக்கு இருக்கும் ஆதரவை கண்டும் காணாமல் வர்க்க ரீதியாக சிந்திக்கும் நீங்கள் புலிகள் பற்றிய இரயாகரனின் கருத்தை எப்படி அகநிலையானது என சொன்னீர்கள்
கலாம் ஒரு முதலாளித்து விஞ்ஞானி அதனால் அவரை எதிர்ப்போம்
புலிகள் அகநிலையில்தான் பாசிச குணாம்சம் கொண்டவர்கள் அவர்களை பொதுபுத்தி படி ஆதரிப்போம்
இதுதான் மக இக அல்லது வினவின் மனநிலை











சரி இவ்வளவு சொல்லும் போது இதன் அகநிலையான் காரணம் என்ன?
ஈழ போராட்டம் என்பது நான் உட்பட வினவும் சரி அல்லது தமிழகத்தின் பலருக்கு புலிகளின் பாசிசம் என்பது எப்படி இருக்கும் என்பதை அறிய மாட்டோம் .
ஒரே ஒரு சோப்பு கட்டியை கொடுத்து நூறு பேரை குளிக்க சொல்லும் வதை முகாம்களை நாடாத்திய கொடூரமான ஒடுக்குமுறை கொண்ட அந்த துப்பாக்கி ஏந்திய அரசியலற்ற பொடியன்கள் பற்றி உங்களுக்கு எனக்கும் தெரியாது ஆனால் அங்கே உள்ள நிலவரம் தெரியாமல் எப்படி புலிகளை ஆதரித்தீர்கள் அதுவும் தன்னை இடதுசாரிகள் என்றும் இந்தியாவில் இருக்கும் அனைத்து ஓட்டு கட்சிகளையும் மறுத்தும் எதிர்த்தும் பேசும் நீங்கள் அவர்களின் கொலைகளை கம்யூனிஸ்டுகளை அவர்கள் துடைத்து எறிந்ததை எப்படி மறந்தீர்கள் .
மிக மிக பாசிச ஒடுக்குமுறை கொண்ட புலிகளை பற்றி தமிழகத்துக்கு போராளிகள் என்ற பிம்பம் மட்டுமே கொடுத்த வைக்கோ , பழ நெடுமாறன் வரிசையில் நிற்கிறார்கள் இவர்கள் .
இன்னும் இவர்களை கம்யூனிஸ்டுகள் என்று அழைப்பது தவறாகும்.
தமிழகத்தின் இளைஞர்களை ஏமாற்றும் போக்கு:
முள்ளிவாய்க்கால் வரை வந்து தோல்வி அடைந்த தமிழீழ போராட்டத்தின் கதாநாயகன் என்றுதான் பல ஆண்டுகள் பிரபாகரனை நானும் நினைத்திருந்தேன் . ஆனால் ஈழ போராட்டத்தை பிரபாகரன் தோற்றுவிக்கவும் இல்லை அவரோடு அது முடிய போவதும் இல்லை என்பதை அந்த போராட்டத்தின் வரலாற்றை படித்து பார்த்தபின்புதான் தெரிந்தது.
பலகதாநாயகர்களை கொன்று தனிகதாநாயகனான பிரபாகரன் தனக்கு பின்பு போராட ஒரு இயக்கமும் இல்லாமம் விட்டதுதான் ஈழ மக்களின் இந்த நிலமைக்கு காரணம் என்பது யாருக்கும் தெரியாமல் மறைக்க
வைக்கோ முதல் ஜெகத்காஸ்பர் வரை முயன்றனர் அவர்களை போலவே
பாசிச இயக்கத்தை மறைத்து அவர்களை விமர்சிக்காமல் தொடர்ச்சியாக ஆதரவு கொடுத்து வந்தீர்கள் என்பது மறைக்க முடியாத உண்மை .
//பகுத்தறிவே குறிப்பிட்ட வர்க்கம் சார்ந்துதான் வெளிப்படும். கடவுகளையும், மதத்தையும் தி..வினர் எதிர்ப்பது போல ஒரு கம்யூனிஸ்டு வறட்டுத்தனமாக எதிர்க்க மாட்டார். இந்த இரண்டிலும் பகுத்தறிவு இருக்கிறது, ஆனால் வர்க்கம் சார்ந்து வெளிப்படுகிறது.//
கடவுளையும் மதத்தையும் திகவினர் விமர்சிப்பது வறட்டுதனமாகவும் இருப்பதும் இரயாகரன் புலிகளை பாசிஸ்டுகள் என விமர்சிப்பது வறட்டுதனமாகவும் இருக்க இரண்டும் ஒன்றா?
கடவுளும் புலிகளும் ஒரு இடத்தில் வைத்து பார்க்கப்படவேண்டியவர்களா?
பகுத்தறிவு வர்க்கம் சார்ந்து வெளிப்படும் சரி – புலிகள் எந்த வர்க்கம் அவர்களின் ஆதரவு எந்த வர்க்கம்
புலிகளின் போராட்டமே வலதுசாரி – முதலாளித்துவ ஆதரவு போராட்டம் என்பதால் தான் அது மீளாத சிக்கலில் சிக்கியது.
புலிகளையும் ஆதரித்து அவர்களால் அழிக்கப்பட்ட கம்யூனிஸ்டுகளுக்கும் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் போலித்தனமான வேலையை செய்யும் நீங்கள். மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு விஞ்ஞானியை போலித்தனமானவர் என எப்படி சொல்கிறீர்கள்.
யாகூப் மேனன் தூக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்படியே ராஜீவு கொலையாளிக்கு கருணைகாட்டி அப்படியே தாவுத் இப்பராகிமை விடுதலை செய்து அப்படியே பின்லேடனை சேகுவேராவாக எழுதி விட்டீர்கள் என்றால் நீங்கள்தாம் இந்த நாட்டின் இந்த உலகில் ஏன் அண்டசராசரமெங்கும் இல்லாத கம்யூனிஸ்டுகள்.

புலிகளுக்கு ஆலோசனை வழங்குதல்:
அதாவது ஒரு கொரில்லா இயக்கம் தனது பாரிய இராணுவ போராட்டமாக பரிணமித்தபின் மீண்டும் அது கொரில்லா போராட்டமாக மாறகூட ஆலோசனை கூறலாம் ஆனால் சமாதானத்துக்கு அழுத்தம் கொடுத்திருக்கனும் என்று உப்பு சப்பில்லாத வாதத்தை வைக்கிறீகள் . இந்த இடத்தில் புலிகள் என சொல்லாமல் தமிழர் தரப்பு என புலிகள் தாம் தமிழர்கள் என்ற வார்த்தையை நீங்களே சொல்கிறீர்கள் ஆனால் அங்கு நிலமைகள் வேறுவகை பட்டன.

துப்பாக்கிகளை நம்பி மட்டும் நடக்கும் போராட்டம் வெல்லாது என்றார் சே (gourilla warfaire )http://www.benjaminjameswaddell.com/wp-content/uploads/2011/01/Guerrilla-Warfare_Che.pdf


Let us first consider the question: Who are the combatants
in guerrilla warfare? On one
side we have a group composed of the oppressor and his agents, the professional army,well armed and disciplined, in many cases rece
iving foreign help as well as the help ofthe bureaucracy in the employ of the oppressor.On the other side are the people of the nation or region involved. It is
important to emphasize that guerrilla warfare is a war of the masses, a war of the people.
மக்களை திரட்டி கிராமங்களை விடுவிக்க சொன்னார் மாவோ 


ஆனால் இரண்டையும் செய்யாமல் குறிப்பிட்ட அளவு இளைஞர்களை மட்டும் திரட்டிபாசிச பாணியில் மற்ற எந்த அரசியல் குறிப்பாக கம்யூனிச அரசியல் வளரவிடாமல் தடுத்த புலிகளை நீங்கள் சமாதானத்துக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம் என சொல்கிறீர்கள் இதுதானே அகவயமான வாதம்
புறவயமாக அங்கு என்ன நடக்கிறது .

 //தன்னளவில் ஒடுக்குமுறையைக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் விடுதலை என்பது மிகக் கடுமையானது. அதாவது தன்னுள் வைத்திருக்கும் முழு வளங்களையும் சரிவரப் பயன்படுத்தும் பட்சத்தில்தான், ஒடுக்குமுறைக்குட்பட்டிருக்கும் ஒரு சிறுபான்பைச் சமூகத்தின் விடுதலை சாத்தியமாகும். ஆனால் பிரபாகரன் இச் சூத்திரத்தின் உள் அர்த்தத்தைப் புரிந்திருக்கவில்லை. புரிந்துகொள்ளத் தலைப்படவும் இல்லை. தன்னார்வத்துடன் இயங்கி வந்த பல சமூக அமைப்புக்களுக்கு தடைவிதித்தார். சன சமூக நிலையங்களைக் கூட தமது கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே இயங்க வைத்தார். முஸ்லிம்களை ஒடுக்கினார். சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான சாதிய அமைப்புகக்களை இயங்க விடாமல் தடுத்தார். மற்றும் தமிழ்த் தேசியம் எனும் ஒரே நேர்கோட்டில் பயணித்த அனைத்து விடுதலை அமைப்புக்களுக்கும் சாவுமணியடித்தார்.//
புலிகளின் நிலமைகள் நாளுக்கு நாள் மோசமாக / புலிகள் நாளுக்கு நாள் மக்களிடம் இருந்து அந்நியபட்ட நிலையில் 2008 புலிகள் தோல்வியை சந்திக்க ஆரம்பித்ததை குறித்து ஒரு கட்டுரை கூட வரவில்லையே வினவில் .
சாராம்சமாக சந்தர்பவாதம் கம்யூனிசமாகாது என்பதை சொல்லி விடுகிறேன்.
உங்களது கருத்துக்கள் உங்களது சித்தாந்ததை பிரதி பலிக்கவேண்டும்
உங்களது தத்துவம் புரட்சிக்கு இட்டு செல்லும் படி இருக்கவேண்டும் என்றால் ஒவ்வொரு நடைமுறை பிரச்சனையிலும் சமரசமற்ற நிலைபாட்டை எடுத்திருக்க வேண்டும் ..

போர் உச்ச நிலையில் இருக்கும் போது ரதியின் கட்டுரையை போட்டு புலி ஆதரவு சரி என்ற நிலைபாடை எடுக்கும் நீங்கள் கலாம் இறந்த போது அவருக்கு கேலி சித்திரம் போடுவது என்ன வர்க்கம் சார்ந்த அரசியல் 





Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post