தீ பரவட்டும்



தீ பரவட்டும்

போர்காலங்களை போன்ற ஒரு தோற்றமும் மக்கள் மனதில் ஒரு கோபமும் காணப்படுகிறது. காந்தியவாதி சசிபெருமாள் மரணம் என்பது அனைவரிடமும் தூங்கி கொண்டிருந்த மது எதிர்ப்புக்கான காரணத்தை தூண்டி விட்டுள்ளது.





அரசுக்கு எத்தனையோ தொழில்கள் இருக்க மதுபான கடையை நடத்துவது என தீர்மானித்த பிறகு மதுவினால் , மாணவர்கள் ,இளைஞர்கள் பிறகு பெண்கள் குழந்தைகள் வரையிலும் போதைக்கு அடிமையான பின்பும் அரசு நேரத்தை மட்டுமே குறைத்தது வன்மையாக கண்டிக்க தக்கது.







எப்போதுமே வேடிக்கை பார்க்கும் மத்தியதரவர்க்கமும் மதுவுக்கு எதிராக போராட களமிரங்கியது ஹைலைட் .
பூரண மதுவிலக்கு சாத்தியமற்றது என அரசு சொல்லும் காரணங்கள் சொத்தையானவை மேலும் குடிகாரனை கருத்தில் கொள்பவர்கள் ஏன் குடும்ப பெண்கள் மாணவர்கள் குழந்தைகளின்  மனநிலையை கருத்தில் கொள்வதில்லை . சில நாட்களுக்கு முன்பு 4 வயது குழந்தை தண்ணி அடிப்பது வாட்ஸ் அப்பில் வந்து பரபரப்பு ஏற்படுத்திய பிறகு .
 ++


 பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை திரட்டி கொண்டுவந்தது மக இக (வாழ்த்துக்கள்)







மதுவிலக்கு பிரச்சனை வர்க்க பேதமற்ற முறையில் அனைத்து வர்கத்திற்கும் எதிரானதாக மாறியது .
செய்தி : 
1. இரு இளைஞர்கள் நாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரியில் மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி, ஜஸ்டின் சுதாகர், ராஜ்குமார் என்ற இரு வாலிபர்கள், சனிக்கிழமையன்று இரவு மொபைல் போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தினர்.

2.கடலூரில் முற்றுகை கடலூர் மாவட்டம் தொரவலூர் திறக்கப்பட்டிருந்த மதுக்கடையை தேமுதிக, விசிக தொண்டர்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து முழக்கமிட்டனர்.


3.இதேபோல தமிழகத்தின் பல பகுதிகளிலும் மதுவுக்கு எதிராக நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. மதுபானக் கடைகளை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, தூத்துக்குடி நகரில் 6 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன.
4.
திருவண்ணாமலையில் முற்றுகை திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே தரடாப்பட்டு கிராமத்தில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி கிராமம் அருகேயுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
5.பொள்ளாச்சியில் மது கடையை முற்றுகையிட முயன்ற தே.மு.தி.க.வினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். பேருந்து நிலையம் அருகே சூலூர் எம்.எல்.ஏ தினகரன் உள்ளிட்ட தே.மு.தி.க.வினர் கைது செய்யப்பட்டனர்.


6.
மார்த்தாண்டம் அருகே 2 அரசுப் பேருந்துகள் மீது மர்மநபர்கள் கல்வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மர்மநபர்கள் கல்லுத்தொட்டியில் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து விட்டு தப்பி சென்றனர். மார்த்தாண்டத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து மீது கல்வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் பள்ளி பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து விட்டு மர்மநபர்கள் தப்பி சென்றனர். 
//பேருந்தின் மீது கல் எறிவதெல்லாம் போராட்டம் அல்ல இவ்வாறு செய்வதன் மூலம் பொதுமக்களுக்கே ஊறுவிளைவிக்கிறார்கள் //



கருணாநிதி அறிவிப்பு:
திமுக ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுப்போம் என்று கருணாநிதி கூறியுள்ளதை தேர்தல் உத்தி என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.
 
ராமதாஸ்: மது விலக்கு தொடர்பாக கருணாநிதி கூறியுள்ள ஒவ்வொரு வரியும் பாவ மன்னிப்பு கோருபவரின் மனதிலிருந்து எழும் வார்த்தையாக உள்ளது. 1948-ஆம் ஆண்டில் இருந்து 23 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைமுறையில் இருந்த பூரண மது விலக்கை 1971-ஆம் ஆண்டு கருணாநிதிதான் ரத்து செய்தார். கொட்டும் மழையிலும் கருணாநிதி வீட்டுக்குச் சென்று, ராஜாஜி மது விலக்கை ரத்து செய்யச் சொன்னார். ஆனால், கருணாநிதி மறுத்துவிட்டார்.
 
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் உள்ள நிலையில், மக்களின் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காகவே மது விலக்கை அமல்படுத்தப் போவதாகக் கூறுகிறார்.

இம்மாதிரி வாதங்கள் நமது பிரச்சனையில் இருந்து திசைதிருப்பும் செயலாகும் . கருணாநிதி மதுவிலக்கை ரத்து செய்திருக்கலாம் மேலும்
அவரே சாராயகடை நடத்தி கூட இருக்கலாம் ஆனால் விசயம் அதுவல்ல தற்போது சாராயகடைகளை மூடுவோம் என சொல்கிறாரே அவரையும் அவரது கட்சியையை போராட்டத்துக்குள் இழுக்க வேண்டும் என்பதே எனது கருத்து .
ஏனெனில் இலவசங்களின் மூலம் ஆட்சியை பிடித்தவர் ஜெயலலிதா என்பதும் இனிமேல் இந்த இலவசங்களின் போட்டியை மேற்கொண்டு நடத்த முடியாது என்பதும் அறிந்த பின் கருணாநிதி ரிவர்ஸ் கியர் போடுகிறார் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் .
ஒரு பக்கம் மக்களை குடிகாரர்களாக்கி அவர்களின் பாக்கெட்டில் இருந்து எடுக்கும் பணத்தை கொண்டு அவர்களுக்கு இலவசங்கள் தருவது என்கிற இந்த விச சுழலை நாம் முறிக்க வேண்டும் . ஆனால் இதை கருணாநிதி
செய்கிறேன் என சொல்லும் போது நாம் அவரை பயன்படுத்தி கொள்ளவேண்டும் -

இந்நிலையில் மதுவிலக்கையே தனது உயிர் மூச்சுன்னு பேசின ராமதாஸ்
வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைக்கிறார் . ஏனெனில் மதுவிலக்குதான் உண்மையான கோரிக்கை அல்ல ராமதாசுக்கு ஆட்சி கட்டில்தான் கனவு –
ஆகவே மதுவிலக்கை ஆதரிப்பவர்களின் வாக்குகளை அறுவடை செய்வது முக்கியம் என கருதும் அவர் உண்மையான மதுவிலக்குக்கு எதிரான போராட்டம் கூர்மை அடையும் போது வராமல் போர்வையை போர்த்தி தூங்குகிறார்.

ஈழ பிரச்சனையில் ஓட்டு வங்கியை கைபற்ற நினைத்த வைக்கோ அவரால் முடியாமல் போனதால் தமிழகத்துக்கு என்று மதுவிலக்கு போராட்டத்தில் பங்கேற்கிறார் . அவர் எதுக்கு வந்தாலும் சரி மக்களின் நோக்கம் மதுவிலக்கு
அதை அடைய அவரையும் பயன்படுத்தனும் .
மற்றபடி திருமா , கம்யூனிஸ்டுகள் எல்லாம் இதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.
போராட்டமும் அதன் தன்மையும் :
தற்போது நடக்கும் போராட்டங்கள் அதன் தன்மையால் போலீஸ் அடக்கு முறைக்கு உள்ளாகி நீர்த்து போகும் வாய்ப்பு அதிகம் – ஆகவே ஆர்பாட்டங்களும் , உண்ணாவிரதங்களும் தொடரவேண்டும் . ஏனெனில் கடையை உடைப்பது எளிதான விசயம் அதனால் அதையே காரணம் காட்டி போலீஸ் அடக்குமுறை மூலம் போராட்டங்கள் முடிவுக்கு வந்துடும் .

ஒட்டுகட்சிகளின் நலனும் / மக்களின் நலனும்:
மக்களின் நலனும் ஓட்டு கட்சிகளின் நலனும் ஒன்றாக இருப்பதாக தெரியும் இதுபோன்ற காலகட்டங்களின் மக்கள் மக்களின் நலனை முன்னிருத்தி போராட்டத்தை ஆரம்பிக்கவும் தொடரவும் செயல் திட்டங்களை வகுக்க வேண்டுமே அல்லாது பெரிய தலைவர் என்ன சொல்கிறார் என வாயை பார்த்து கொண்டு இருக்க கூடாது. ஏனெனில்
இன்றைக்கு மதுவிலக்கை ஆதரிக்கும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை எதிர்க்கலாம் அதனால் எச்சரிக்கை உணர்வுடன் மக்கள் போராடவேண்டியது அவசியம்.

மது விலக்கு பற்றிய எனது முந்தைய பதிவை படிக்க : இங்கே அழுத்துங்கள் 


டபாய்க்கும் திமுக:

மது ஆலைகளை நடாத்தி கொண்டே மதுவிலக்கு குறித்து பேசுகிறார் கருணாநிதி என எழுந்த குற்றச்சாட்டுக்கு அப்படி பேசுபவர்கள் தான் இவ்வாறு செய்கிறார்கள் என சின்னபுள்ள தனமா ஸ்டேட்மெண்டு உட்டுள்ளார் கருணாநிதி .

http://www.dinamalar.com/news_detail.asp?id=1310270

 ஸ்டாலின்:

'தி.மு.க.,வினர் சார்பில் நடத்தப்படும் மதுபான ஆலைகள் மூடப்படுமா என, சீமான் கேட்டுள்ளாரே' என, நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ஸ்டாலின், ''சீமான் மட்டுமல்ல; ராமதாஸ், தமிழிசை சவுந்தரராஜன் போன்றவர்களும், இதே கேள்வியை எழுப்பி உள்ளனர். அவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மதுவிலக்கு வந்து விட்டால், மது ஆலைகள் மூடப்பட்டு விடும் என்ற, 'காமன் சென்ஸ்' அவர்களுக்கு இருந்தால் நல்லது,'' என, பதிலளித்தார்.- நமது நிருபர் -http://www.dinamalar.com/news_detail.asp?id=1310297

ஓ மைடியர் ஸ்டாலின் அவர்களே நீங்களே பெரியார் தனது தோட்டத்தின் பணைமரத்தை வெட்டி வீழ்த்தி கள்ளுகடை மறியல் செய்தாரே அவ்வாறு உங்கள் சொந்த ஆலையை மூடி செய்யலாமே 

சமூகவியலாளர் ஞானியின் மனம்திறந்த கடிதத்தில் 70 சதவீதம் சாலை விபத்துக்கு மதுவே காரணம் என்கிறார் 

தமிழக இளைஞர்களையெல்லாம் குடிகாரர்களாக ஆக்கிய பெருமை, உங்களுக்கு மட்டுமே உரியது என்று நிச்சயம் நான் சொல்லமாட்டேன். அதைத் தொடங்கி வைத்தவர் உங்களுக்குப் பிரியமான அரசியல் எதிரி கலைஞர் கருணாநிதிதான். 1972ல் அவர் மதுவிலக்கை நீக்கியதில் முதல் பலி அவர் மகனேதான். உங்கள் வயதுதான் அவருக்கும். அப்போது 24 வயது இளைஞராகவும், பின்னாளில் சிறந்த பாடகராகவும் வரும்  ஆற்றலுடனும் இருந்த முத்துவின் வாழ்க்கை மதுப் பழக்கத்தால்தான் சீர்குலைந்தது. கலைஞர் கருணாநிதி அரசியலில் தொடங்கிவைக்கும் ஒவ்வொரு தவறையும் முறைகேட்டையும். பல மடங்கு பிரும்மாண்டமானதாக செய்யும் ஆற்றலும் உறுதியும் உடையவர் நீங்கள். வெறும் 3000 நூலகங்களே இருக்கும் தமிழகத்தில், 7500 மதுக்கடைகளை அரசின் மூலமே திறந்து. வீட்டுக்கொரு முத்துவை உருவாக்கியிருக்கிறீர்கள்.





Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post