போர்னோ சைட்டுகளும் &டாஸ் மாக்கும் நமது குடும்பமும்



போர்னோ சைட்டுகளும் &டாஸ் மாக்கும் நமது குடும்பமும்

பொதுவா நம்ம குடும்பங்கள் மட்டுமில்லாமல் உலகெங்கும் இருக்கும் குடும்பங்கள் அம்மா , அக்கா , தங்கை , பிள்ளை என பல்வேறுவிதமாக பெண்களுடன் உறவுமுறைகளை கொண்ட குடும்பமாகும்.
மனிதன் பாலியல் நடத்தையை நெறிப்படுத்த பல நூற்றாண்டுகள் போராடி இருக்கிறான் என்பது அவனது தற்போதைய நிலமைக்கு ஒரு எடுத்து காட்டாகும். வேட்டையாடும் ஒரு சமூகத்தில் ஆண் பெண் உறவு தற்காலிகமானதாகவும் பெரிய நோக்கமற்றதாகவும் எந்த புனிததன்மை இன்றியும் அமைந்திருக்கும் ஆனால் காலப்போக்கில் அவ்வாறு அமைந்ததால்
மனித மனம் வாழ்வில் பற்றுக்கோடு எதுவும் இல்லாமல் போயிருக்கும் .

எனவே மனையிடம் மட்டுமே பாலியல் உறவு என்பதை இந்த சமூக அமைப்பு நெறிபடுத்தி இருக்கிறது – வழிவழியான மரபின் மூலம் இந்த ஒழுக்க நெறி புகுத்தப்பட்ட நம்மை அறியாமலேயே நமது மூச்சை போல ஒழுக்கம் சாதாரணமான விசயமாகி விட்டது.
இதை எல்லாம் அழித்து ஒழிக்கும் விதமான இரண்டு விசயங்கள் நடக்கிறது ஒன்று போர்னோ சைட்டுகள் மற்றொன்று டாஸ்மாக்.
போர்னோ சைட்டில் ஒரு பாலியல் கொடுமையை கண்ணுறும் இளைஞன் அல்லது இளைஞிக்கு அதை ஊக்கப்படுத்துவது டாஸ்மாக் ஆகும்.





சமீபத்தில் இந்த இரண்டு விசயங்களையும் அடித்து நொறுக்க மக்கள் கிளம்பி விட்டார்கள் என்பது மகிழ்வான செய்தி அதிலும் ஒரு தொழிலாளர் இறந்தது மனதுக்கு வருத்தம்தரும் செய்தியாகும்.
மேலும் மிக அதிக வரவேற்பை பெற்றது போர்னோ சைட்டுகள் நிறுத்தமாகும்.
ஆனால் எங்கள் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது .
ஏன் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் நான் போர்னோ சைட் பார்க்க கூடாதா?
 ஏன் நான் யாருக்கும் தொந்தரவு இன்றி தண்ணி அடிக்க கூடாதா ? என்று
ஒரு சுதந்திர வேட்கையோடு சில அறிவு ஜீவிகள் கிளம்பி இருக்கிறார்கள்.

நான் என்பது இவர்களுடைய உடலை தாண்டி எதுவுமில்லை என்பதாகும் ஆனால் மனிதன் சமூகமாக வாழ்கிறான் என்பது ஒழுக்கம் ,குடும்பம் , வாழ்வு குறித்த பார்வை மனிதன் சமூகமாக வாழும் போது ஏற்படுகிறது என்பதும் – அவ்வாறே சமூக நெறிகளின் மூலமே தனிமனித வாழ்வின்
விருப்பு வெறுப்புகள் தொடரமுடியும் என்பதும் சரியானதே.

தனிமனித வாதம் எந்த நேரத்திலும் சமூகத்தின் பயனை அதன் உண்மையான அர்த்தத்தில் வெளிப்படுத்தாத போது சமூக நலனே முக்கியம்
ஒரு நாட்டுக்காக ஒரு ஊரை எரிக்கலாம் ஒரு ஊருக்காக ஒரு மனிதனை பலியிடலாம் என்ற கோட்பாட்டின் படியே சமூகம் இயங்கி வந்துள்ளது.
தனிமனித சுதந்திரம் எல்லையற்றது
ஒருத்தன் ஆண் ஆண் இணைப்பை கோருகிறான்
ஒருத்தன் பெண் பெண் உறவை வேண்டுகிறான்
இன்னொருத்தன் இன்னொன்றை கோரலாம்
அப்படியே மிருகத்துடன் வாழ தனிமனித விருப்பம் நினைக்கலாம் இது
எண்ணை பூச்சியத்தால் வகுப்பதால் கிடைக்கும் நிகழ்தகவை போன்றது.

எனக்கு டாஸ்மாக் வேண்டும் என்பவர்களுக்கு பேசாமல் லைசென்ஸ் கொடுத்து அதிக விலைக்கு வாங்கி குடிக்க சொல்லலாம் . அவ்வாறே போர்னே தளங்களையும் செய்யலாம் ஆனால் இதற்கும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் . ஆகவேசமூக மொத்த நலனே முக்கியம் என்றால்
போர்னோ தடையும் டாஸ்மாக் தடையும் சரிதான்.

ஒருத்தர் இப்படி எழுதி இருக்கார்:
 இவர் சொல்லும் விசயங்கள் எல்லாம் விளைவுகளே காரணமாக இருப்பது போர்னே சைட்டுகளும் மதுவும்தான்

ஆனால் அவற்றுள் குழந்தைகள் பற்றிய படங்கள் இல்லாத சைட்டுகளை திரும்ப அனுமதி அளித்து இருப்பது கண்டனத்துக்கு உரியது .

http://www.independent.co.uk/life-style/gadgets-and-tech/news/india-porn-ban-reversed-government-turns-adult-sites-back-on-following-protests-10439249.html


இந்த விசயத்தில் ஷோபாசக்தியின் கருத்து சரியானது 

அவரது பதிவு :
http://www.jeyamohan.in/77634#.VcRpmFLcDIU

இந்தியாவில் ‘போர்ன்’ இணையத்தளங்கள் தடை செய்யப்படலாமா கூடாதா என்ற விவாதங்களைக் கவனித்தபோது ஒன்று சொல்லத் தோன்றுகிறது.
போர்ன் இணையத்தளங்களை தடைசெய்யக்கூடாது எனச் சொல்பவர்கள் தனிமனித சுதந்திரம், மேலைநாடுகளில் தடையில்லை, சிறுவர்கள் இவ்விணையங்களைப் பார்க்காமல் ஒழுங்குபடுத்தினால் போதுமானது என்றெல்லாம் சொல்கிறார்கள். இந்த சொல்விற்பன்னர்கள் அதிமுக்கியமான விடயங்களைக் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள்.
இன்று உலகில் நடத்தப்படும் மனிதக் கடத்தல்களில் எண்பது விழுக்காடு கடத்தல்கள் பாலியல் வணிகத்திற்காகவே நடத்தப்படுகின்றன. ஜப்பானில் தொடங்கி இங்கிலாந்து அமெரிக்காவரை இந்தக் கடத்தல் தொழில் கொடிகட்டிப்பறக்கிறது. சர்வதேச மாஃபியாக்களின் கையிலிருக்கும் இந்த வணிகம் போதைப்பொருள், ஆயுதக்கடத்தல் போன்றவற்றிற்கு இணையாகப் பணம் புழங்கும் தொழிலாகயிருக்கிறது. போர்ன் இணையங்களில் வெளியாகும் காட்சிகளில் இவ்வாறாகக் கடத்திக்கொண்டு வரப்படும் பெண்களே பெரிதளவில் நடிக்கவைக்கப்படுகிறார்கள். இணையங்களின் வருகையோடு போர்ன் தொழிலும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அதற்கேற்ப கடத்தப்படும் பெண்களும் சிறுமிகளும் அதிகரித்துள்ளார்கள்.
சிறுமிகளையும் சிறுவர்களையும் பாலியல் பண்டங்களாகக் காட்சிப்படுத்தும் ஏராளமான இணையத்தளங்கள் உள்ளன. இவற்றை அரசுகளால் இன்றுவரை கட்டுப்படுத்த முடியாமலேயே இருக்கின்றது. சிறுவர் பாலியல் இணையங்களும் பல்லாயிரக்கணக்கில் புதிது புதிதாகத் தோன்றியவண்ணமேயுள்ளன.
போர்னோவில் ‘அடிமைகள்’, ‘அடித்தல்’, ‘அவமானப்படுத்தல்’, ‘விலங்குகளோடு புணர்ச்சி’ என்றெல்லாம் ஏராளம் வகைப்பாடுகளுள்ளன. சட்டவிரோதமாக அல்லது ஏமாற்றி அழைத்துவரப்படும் பெண்களும் இந்தப் படங்களில் நடிக்க வைக்கப்படுகிறார்கள். இதைவிடக் கொடுமை என்னவென்றால் உண்மையாகவே பெண்கள் மீது சித்திரவதையை நடத்தி அதை இரத்தமும் பாலும் வழிய இணையங்களில் போடுகிறார்கள்.
பாலியல் விடுதிகளிலே அடிமைகளாக வைக்கப்பட்டிருக்கும் சிறுமிகள் மத்தியில் ‘வன்முறை செக்ஸ்’ குறித்த அச்சத்தைப் போக்கவும் வாடிக்கையாளரின் எந்த விருப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே என்பதைச் சிறுமிகளின் மனதில் படியச் செய்யவும் போர்ன் படங்களே பெரிதும் உபயோகிக்கப்படுகின்றன. இத்தகைய அடிமைச் சிறுமிகள் இருக்கும் விடுதிகளில் இந்தப் போர்னோ படங்கள் இடைவிடால் ஓடவைக்கப்படுகின்றன.
போர்னோவில் நாம் காணும் காட்சிகள் பெரிதும் மிகையானவை மற்றும் போலியானவை. இத்தகைய காட்சிகளில் வன்முறை இருப்பது பொதுவானது. இக்காட்சிகள் மெதுமெதுவாக மனித மனதில் பாலுறவு குறித்த இயல்புக்கு மாறான வன்முறைச் சித்திரத்தைப் பதிய வைக்கிறது. அது குடும்ப வன்முறையாக நீட்சியும் பெறுகிறது. போர்ன் படங்களைத் தொடர்ச்சியாகப் பார்ப்பது மனச்சமநிலையைச் சரித்துவிடுகிறது என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.
இவ்வகைப் போர்னோ இணையத்தளங்கள் எல்லாமே ‘Hidden camera’ என்றொரு வகையை வைத்துள்ளார்கள். குளியலறைகளில், படுக்கையறைகளில், தங்குவிடுதிகளில், மசாஜ் சென்டர்களில், ஆடை அங்காடிகளில் சம்மந்தப்படவர்களிற்குத் தெரியாமலேயே எடுக்கப்படும் படங்கள் இப்பிரிவில் இணையங்களில் பதிவிடப்படுகின்றன. பாதிக்கப்பட்ட எத்தனையோ பெண்களும் குடும்பங்களும் தூக்கிலே தொங்கியிருக்கின்றன. அவமானத்தால் உயிருடன் செத்தவர்கள் பல இலட்சம். இதற்கெல்லாம் எந்த அரசாங்கமும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
போர்ன் இணையத்தளங்களிற்குப் பின்பு இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது போர்ன் இணையங்களைத் தடைசெய்யக்கூடாது எனச் சொல்வதில் ஏதும் நியாயங்கள் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. நம்முடைய சில நிமிட காட்சியின்பத்திற்காக பெண்களும் சிறுமிகளும் கடத்தப்படுவதும் வதைக்கப்படுவதும் மனநிலை சரிவதும் மறுபுறத்தில் மாஃபியாக்களும் இணைய முதலாளிகளும் கொழிப்பதும் எதுவிதத்திலும் நியாயமற்றதென்றே நினைக்கிறேன்.
நாளை நீங்கள் அல்லது உங்கள் பிள்ளைகள், துணையோடு சம்போகத்தில் ஈடுபடும் காட்சி இவ்வகை இணையத்தளங்களில் ‘லைவ்’வாக ஒளிபரப்பப்படுவதற்கு எல்லாவகையான சாத்தியங்களும் உண்டென்பதை மறவாதீர்கள்.


முந்தைய பதிவு http://thiagu1973.blogspot.in/2015/06/blog-post_18.html

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post