கம்யூனிசம் என்றால் என்ன?-13



நாம் கம்யூனிசம் கற்றுகொள்வதில் வாழ்நிலைதான் சிந்தனையை தீர்மானிக்கிறது என்கிற பகுதியை மிக மிக அழுத்தி சொல்கிறோம்.

அதிக மதிப்பெண் எடுக்க கோரும் பெற்றோர் ; மதிப்பெண் எடுக்க படித்தும் மறுபடி எந்த காலேஜில் எந்த கோர்சில் சேருவது என்கிற டென்சன் முதல் ஒரு கலேபரமே ஒவ்வொரு வீட்டிலும் நடப்பதையும் தந்தைக்கும் குழந்தைகளுக்குமிடையே இந்த போராட்டத்துக்கு என்ன காரணம் எனவும்

உங்களை கேட்கிறார்கள் என வைத்து கொண்டால்.
ஒரு கருத்து முதல்வாதி எப்படி பதில் சொல்வான் என பார்ப்போம்
1.நன்றாக படித்தால் எங்குமே சீட் கிடைக்கும் பிரச்சனையே இல்லை
2.குழந்தைகளுக்கு வரவர படிப்பு மீது கவனமில்லை
3.அதிகம் பீஸ் வாங்குகிற பள்ளியில் பிள்ளையை சேர்க்கனும்
இப்படித்தான் சொல்வீர்கள் .

ஆனால் வாழ்நிலைதான் சிந்தனையை தீர்மானிக்கிறது. கல்வி வியாபாரம் ஆன காரணத்தினால் ; நிலவு கின்ற போட்டி என்பது மாணவர்களின் மேல் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. வெறும் மதிப்பெண் எடுப்பவனே அறிவாளி என்கிற தீர்மானத்தை வழங்கி விட்ட இந்த சமூக அமைப்பு
மதிப்பெண்ணுக்கான பிரசரை அனைவருக்கும் கொடுக்கிறது. உதாரணத்துக்கு இங்கு இருக்கிற அனைத்து பொறியியல் மருத்துவ கல்லூரியிலும் சேர்ந்த்து 5000 சீட்டுகள் என வைத்து கொள்வோம் 6000 மாணவர்கள் கல்லூரி கேட்கும் கட் ஆப் எடுத்து விட்டால் என்ன செய்வார்கள்.

http://admission.aglasem.com/total-number-engineering-seats-india-state-wise/
என்ன செய்வார்கள் என்றால் ரிசர்வேசன் அல்லது கிராமத்து மாணவர்கள் என எதாவது ஒரு ஃபில்டர் போட்டு வடிகட்டுவார்கள்.
ஆக இந்த விசயம் ஏன் எழுகிறது. இந்த போட்டிக்கு அடிப்படை என்ன?
முதலாளித்துவ சமூக அமைப்புதான். இந்த அமைப்பு போட்டி போட்டால் வாழலாம் என்கிறது. உடனே நீங்கள் நினைக்கலாம் ஆரோக்கியமான விசயம்தானே என்று இல்லை . இந்த போட்டி கல்வியைமட்டும் அல்ல பணத்தின் அடிப்படையிலும்
உருவாகிறது .பணக்காரர்களின் குழந்தைகளுக்கு எப்ப்டியும் சீட் கிடைத்துவிடும் .நடுத்தர ஏழை மாணவர்கள் ஆர்ட்ஸ் காலேஜில் தான் சீட் கிடைக்கும் .
மீண்டும் அதே வர்க்கம் அதாவது ஏற்கனவே ஆளும் வர்க்கமாக இருக்கும் வர்க்கத்தின் வாரிசுகளே மிகப்பெரிய படிப்பை படித்து . ஒரு எஞ்சினியராக , மருத்துவராக , கலெக்டராக வர வாய்ப்பு இருக்கிறது.
இதுதான் நீதியற்ற சமூக வாழ்வு இதற்கு அடிப்படை இந்த முதலாளித்துவ சமூகம்.
ஆக விசயங்களை மனரீதியாக ஆராயாமல் சமூக ரீதியாக புறவயமாக ஆராயவேண்டும் .
 சமூகத்தின் போட்டியை ஒழிக்க / சந்தை போட்டியை ஒழிக்க வேண்டும்
அதுவரை ஒரு ஓட்ட பந்தைய வாழ்க்கையை விட்டு நீங்கள் விலகவே முடியாது

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post