தீர்ப்புகள் திருத்தப்படும் நாளில்










 

சட்டம் ஒரு இருட்டறை என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது . சட்டத்தின் சந்து பொந்துகளின் வழியே பணம் பாதாளம் வரை பாய்ந்து தீர்ப்புகளை எழுதி செல்கிறது. 10 ரூபாய் லஞ்சம் வாங்கி போட்டோவெல்லாம் எடுக்காதீங்க என கெஞ்சும் அரசு அதிகாரிகளின் முகம் வந்து செல்கிறது .வங்கியை கொள்ளை அடித்தவன் விடுதலை ஆகும் போது சைக்கிள் திருடுனவனுக்கு ஜாமீன் எடுக்க ஆள் இல்லை.
இத்தனை ஆண்டுகள் பேப்பரில் எழுதி எழுதி கடையில் பேப்பர் கிழிந்து
உண்மை அம்மணமாக நிக்கிது. அம்மணமான உண்மையை பார்த்து டவுசர் போட்ட பொய் குதூகலமாக கேட்கிறது “ என்ன பாஸ் சவுக்கியமா? “
சர்க்காரியா கமிசனாலேயே ஊழல் வாதிகள் அடையாளம் காட்டப்படலாம்.
கமிசனெல்லாம் கமிசன் வாங்கும் போதும் நாம் மட்டும் காலை பேப்பரை வாங்கி கொண்டு மாங்கு மாங்கு என்று பிளாக் எழுதி/ பேஸ்புக் எழுதி என்னத்த செய்ய .
லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் / இந்த சுவற்றில் விளம்பரம் செய்யாதே மாதிரி ஒவ்வொரு முறையும் நடைமுறைக்கு ஒவ்வாத வசனமாகிறது சட்டம் .
சட்டம் வேறு வாழ்க்கை வேறு அரசியல் வேறு என்று ஒவ்வொரு மனிதனும் பிரிச்சி பார்க்க பழகி கொண்டான் . பேப்பரில் போடும் செய்திகள் மட்டுமே விவாதிக்கப்படுகின்றன . திரைமறைவு காட்சிகள் எப்போதாவது ராடியா டேப்பை போன்றும் / நித்தியானந்தா விடியோ போன்றும் வெளியே வரும்.
அப்போது மட்டுமே தமிழனுக்கு ரத்தம் கொதிக்கும் .
மற்றபடி அம்மா விடுதலை என சொல்லி யார் லட்டு கொடுத்தாலும் வாங்கி திண்று விட்டு . அம்புட்டுதான் இந்த நீதிமன்றமும் கோர்ட்டும் என்று பேஸ்புக்கில் எழுதி விட்டு / காலை கடன்களை முடித்து ஆபிசுக்கு கிளம்பி விடுகிறோம். 
சல்மான்கான்கள் விடுதலை ஆவது / அம்மாக்கள் விடுதலை ஆவதும் கொஞ்சம் அதிர்ச்சி / அயர்ச்சி பிறகு மெதுவான நடை / பிறகு மறத்தல்
என தமிழன் வாழப்பழகி கொண்டான்.
ஈழ படுகொலையே மறந்து விட்ட தமிழனுக்கு / சங்கராமன் கொலைகளும் / மீனவர்கள் சாவுகளும் / செம்மர கடத்தல் என சொல்லி அப்பாவிகள் சாவுகளும் பெரிய விசயமில்லை.
என்ன தீர்வு என்று கேட்டால் நீங்கள் புர்ச்சிவாதி என முத்திரை குத்தப்படலாம் அல்லது பேஸ்புக் போராளி என வர்ணிக்கப்படலாம்.
ஆம் பேஸ்புக்கில் இருந்துகூட ஒரு நாட்டில் புரட்சி கிளம்பியதாக சொல்கிறார்கள். 









பேஸ்புக்கிலும் சாம்பார் வைத்து கொண்டிருந்தால் இதுபோன்ற இன்னும் அதிர்ச்சி தரத்தக்க 3 ஜிக்கள் , சொத்து குவிப்புகள் நடைபெறும்.
வழக்கம் போல இது உனக்கு செய்தி / எனக்கு ஒரு வரலாறு மாற்ற வேண்டிய வரலாறு

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post