கம்யூனிசம் என்றால் என்ன? -14


நாம் இதுவரை பேசி வந்த விசயங்களை திரும்ப ஞாபகபடுத்தி விட்டு அடுத்த கட்டத்துக்கு செல்லலாம் என நினைக்கிறேன்.

சமூகம் வளர்ச்சி பெறுவது இயக்கவியல் நடைமுறை என்றார் காரல் மார்க்ஸ் . இயக்கம் என்பது இரண்டு முரண்பட்ட கூறுகளின் ஒற்றுமை மற்றும் போராட்டமே.

இந்த முரண்பட்ட கூறுகள் என்பது வர்க்கமே .

வர்க்கம் என்பது ஒரு மனிதனின் வாழ்நிலையை கருத்தில் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

எப்போதுமே ஆளும் வர்க்கத்திடம் உற்பத்தி கருவிகள் உடைமை பொருட்களாக இருந்துள்ளன.

1.ஆதி பொதுவுடமை சமூகம்
-------------------------------------------
     வேட்டையாடுக் குழுக்களாக வாழ்ந்த மனிதன் தனக்கென எந்த உடமையும் கொண்டிருக்கவில்லை கிடைப்பதை பகிர்ந்து வாழ்ந்தான். குடும்ப அமைப்பு ஏற்பட வில்லை சொத்து இல்லை . சிறந்த வேட்டையாடும் நபரே தலைவன் அதுவும் தற்காலிகமானதே .

2.அடிமை சமூகம்
---------------------------
இந்த சமூகம் உருவானதே வேட்டையாட முடியாதவர்களும் சண்டையில் தோற்றவர்களையும் கொண்டு விவசாயம் கண்டு பிடிக்கப்பட்டு  அதில் அடிமைகள் ஈடுபடுத்த பட்டார்கள்  . உற்பத்தி கருவிகள் ஓரளவுதான் வளர்ச்சி பெற்று இருந்தது . அடிமைகளின் வாழ்வு மிக கொடூரமானதாக இருந்தது

3.நில உடமை சமூகம்
------------------------------------
 அடிமை சமூகம் சிதைந்து ,அதிலிருந்து நில உடைமையாளர் , பண்ணை அடிமை முறை உருவாகி யது . இந்த சமூகத்தில் நிலம் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்தது மற்றவர்கள் அடிமையாக இருந்தனர் .

இதுவரை இதுதான் பார்த்துள்ளோம்...

தற்போது பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் முதலாளித்துவ சமூகம் தோன்றியவுடன் மார்க்ஸ் சமூகத்தை இயக்கவியல் ரீதியல் / ஆராய்கிறார்

மூலதனம் என்ற தனது நூலில் ஒரு தொழிலாளியிடம் இருந்து
உபரியை எப்படி முதாலி உரிஞ்சி எடுக்கிறான் என்பதை விளக்கியவுடன்

மூலதனம் என்ற புத்தகமே வரவில்லை என்பது போல பாசாங்கு அமைதியை காட்டினார்கள் மூலதன ஆதரவாளர்கள் . ஆனால் வரலாற்றை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு மாற்றி அமைக்க வந்தது அந்த புத்தகம் என்றால் அது மிகை இல்லை

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post