வினவிடம் ஒரு பேட்டி



http://www.vinavu.com/

வினவிடம் ஒரு பேட்டி



நாம்: வினவு சமீபகாலமாக நீங்கள் முதுகில் நிறைய வாங்குகிறீர்கள் போல தெரிகிறது என்ன காரணம்

வினவு: நாம் மக்களுக்காக போராடுகையில்
டின் கட்டி வர மறந்து விட்டோம்

நாம்: மக்கள் மக்கள்னு சொல்றீங்களே எந்த மக்கள்

வினவு : இணையத்தை படிக்கிறாங்களே அந்த மக்கள்தான்

நாம் : பெரும்பாலான பொதுஜனம் உழைக்கும் மக்கள் வினவை படிக்கவில்லையே அப்புறம் ஏன் இணையத்தில் போராட்டம்

வினவு : உங்களுக்கு விசயமே தெரியாது போல இருக்கு இப்போ பதிவு எழுதுபவர்களின் பஞ்சாயத்தை யார் தீர்ப்பது - அது சமூக கடமை இல்லையா?

நாம்: உங்கள் கடமை வாழ்க, மெய் நிகர் உலகையும் மெய் உலகையும் எப்படி ஒன்றாக்குவீர்கள்

வினவு : கம்யூட்டர்ல இருந்து டக்குன்னு வெளிய குதிச்சா அது மெய் உலகம் அதற்கான முயற்சிகளை எடுக்கிறோம்

நாம்: என்னமாதிரி முயற்சி எடுக்கிறீங்கன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா

வினவு: ஆலோசனை நடந்து வருகிறது
அரைடிக்கட்டு முழுடிக்கட்டு ஏழரை எட்டரை இவர்களுடன் கலந்து பிறகு சொல்கிறோம்

நாம் :எவ்ளோ அடிச்சாலும் தாங்கிறீங்களே அது எப்படி

வினவு : இந்த கேள்விக்கு இரண்டாம் நம்பர் விடையை பார்க்கவும்

நாம்: உங்களுக்கு சறுக்கல்னு எதை நினைக்கிறீங்க

வினவு : சிவராமன் எழுதி கொடுத்ததை சுகுணா கண்டு பிடித்து வெளியிட்டதை நாம் அவ்வாறு கருதுகிறோம் இருந்தாலும் ஒரு வழியா சமாளிச்சுட்டோம் இன்னும் அதை கூட்டு பொறியல் பதிவாக சொல்லிட்டு இருக்கோம்
இணையத்தில் இவ்வாறு வெற்றி பெற்று இருக்கிறோம் .

நாம்: நீங்கள் எதை சொன்னாலும் இன்னும் சிலரை ஏன் கோர்த்து விடுறீங்க

வினவு : அப்போதான் கலை கட்டும் சும்மா ஒருத்தரை சொல்ல முடியாது
எல்லாத்துக்கும் இந்த சமூகம் தான் காரணம் ஒப்பீட்டளவில் நாம் குறைவான
ஆட்களையே கோர்த்து விட்டுள்ளோம்


நாம் : எப்போ புரட்சி செய்வீங்க

வினவு : புதிய கலாசாரம் 1 கோடி பிரதி ஓடும் போது

நாம் : எப்போ ஒரு கோடி பிரதி ஓடும்

வினவு : அதை எல்லாம் வரையறுத்து சொல்ல முடியாது எண்ணிக்கையிலா இருக்கு ஆளுமையில் இருக்கு புரட்சி


நாம்: அறிஞர் அ. மார்க்ஸ் மேல என்ன கோபம் உங்களுக்கு

வினவு : எங்களை பஜனை கோஸ்டின்ன்னு திட்டிட்டார் அந்த ஆளு (நற நற )

நாம்: நீங்க மார்க்ஸ் பேருடன் யோனின்னு எழுதியதற்கு கோபிச்சுட்டீங்களே ஒருவேளை
மார்க்சியத்தை மத மாக்க போறீங்களா

வினவு :தவறான புரிதல் நாங்கள் மதத்துக்கு எதிரானவர்கள் ஆனால் கூட்டமா சேர்ந்து போய் சண்டை போடுவதால் உங்களுக்கு அப்படி தெரிந்து இருக்கலாம்

நாம் : லீணா உங்களை ஏன் அடிக்க வந்தார்

வினவு : நாங்கள் கேள்வி கேட்பது சிலருக்கு எரிச்சலாக இருக்கிறது என்ன செய்ய
மக்கள் சார்பாக நாங்கள் கேட்டுத்தான் ஆகனும்



சரிங்க வினவு இத்துடன் எனது பேட்டியை
முடிச்சிக்கிறேன்

வினவு : ஒரு நிமிடம் உங்க அட்ரசை கொடுங்க நாளைக்கு உங்க வீட்டுக்கு ஆள் அனுப்பனும்

எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

65 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post