தொலைக்காட்சிகள் (தொடர்களின் துன்பம்)
நமது வீட்டுக்குள் அமர்ந்து இருக்கும் எதிரி என சொல்லலாம் ..............
அநேக மக்கள் பார்க்கும் ஒரு ஊடகத்தில் வரும் ஒரு கலைபடைப்பை பற்றி நான் இப்படி சொல்வது உங்களுக்கு வியப்பளிக்கலாம் ஆனால் அதுதான் உண்மை .
ஆதிகாலம்தொட்டு மனிதன் தனது உணர்வுகளை கலைபடைப்பாக்கி
வெளியிட்டு வருகிறான் .
குகை ஓவியங்கள் தொடர்ந்து இன்றுள்ள சினிமா , தொலைகாட்சி நாடகம் வரை
கலை கலைக்காகவே என்கிறார்கள் கலைஞர்கள் கலை புரட்சிகர மாற்றங்களுக்காகவே என்கின்றனர் புரட்சிகாரர்கள் ஆனால் கலை "காசுக்காகவே" என ஆகிவருகிறது இப்போது .
----தொடர்கள்------
சில பட்டிமன்றங்களில் சொல்வது போல தொடர்கள் வந்தால் "தவிச்ச வாய்க்கு தண்ணி"கூட தரமாட்டார்கள் தாய்மார்கள் அவர்களது ஐம்புலனும் தொடர்களில் ஒன்றிவிடுதலின் பலன் இது.
எதையும் பெரிதுபடுத்தி காண்பிப்பது கலை என்றால் சினிமா ஆயிரம் மடங்கு காண்பிக்கும் என்றால் அதை அளவு காண்பிக்கும் இந்த தொடர்கள் கெடுபலன்களை மட்டும் தினமும் கொண்டு வருகின்றன.
ஆமாம் விசத்தை உங்களுக்கு ஒரே மடக்கில் கொடுத்தால் உங்களால் விசயம் என அறிந்துகொள்ள முடியும் ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்தால் தெரியாது.
கணவரின் அண்ணனுக்கு கொடுக்கும் சாப்பாட்டு தூக்கில் நகையை வைத்து போலீசில் மாட்டி விடும் தம்பி மனைவி(இளவரசி )
நினைத்ததை சாதிக்க சொந்த கணவனை ஆள்வைத்து அடிக்கும் மனைவி (அத்தி பூக்கள் )
எல்லாமே செய்வது சராசரி குடும்ப பெண்கள்தான்.
இவர்கள் வில்லன்களை உருவாக்குவதில்லை வில்லி வில்லன்களை உருவாக்க நடைமுறை வாழ்க்கைக்கு புறம்பான எங்கோ தப்பி தவறி நடக்கும் உதாரணங்களை அல்லது கற்பனைகளை ஒரு பிம்பமாக்கி இயக்குகிறார்கள்.
நடைமுறை வாழ்வின் முரண்களே பெரும் வில்லன்களாய் இருக்கும் போது அவற்றை
கதைக்குள் கொண்டுவராமல்.
முரண்பாடுகள் நிறைந்த மனிதர்களை உருவாக்குகிறார்கள் அதனாலேயே ஒரு
அளவுக்கு மேல் இவர்களால் கதையை நகர்த்த முடிவதில்லை (அத்திப்பூக்கள் இப்போது இருக்கும் நிலை)
நோக்கற்று பரந்து விரியும் கதை சூழலை உருவாக்கி ரொம்ப நல்லவனை அதீத
மனிதனை உருவாக்கி அலைய விடுகிறார்கள் (திருமதி செல்வத்தில் -செல்வம்)
நடைமுறையில் மிக அதிக நல்லவன் யாரும் இல்லை நிகழ்வு போக்குகள் தாம்
நல்லவனை கெட்டவனாகவும் , கெட்டவனை நல்லவனாகவும் மாற்றும் என்பதை உணராமல் மனிதர்களை என்றும் மாறாதவர்களாக சிருஸ்டி செய்கிறார்கள்
இயக்கமறுப்பியல் பார்வையின் உச்சகட்டமாக நாடகத்தின் கடைசிவரை வில்லன் வில்லதனமே செய்பவனாக வலைய வருகிறான்(ள்).
காட்சியின் அதீததன்மையை உணர்த்த நிற்காத அழுகையும், ஒன்றுமில்லாத விசயத்துக்கு அழுது ஆர்பாட்டம் செய்வதும், வீடுகளை இறந்தவீடுகளை போல ஆக்கிவிடுகிறது .
தொலைகாட்சிமுன்பாக மக்களை சோகமே உருவானவர்களா மாற்றி உக்காரவைத்து விடுகிறார்கள் .
வன்முறையும், கற்பழிப்பும் பஞ்சமில்லாமல் வருகிறது (செல்வி தொடர்)
இதை பார்க்கும் பெரியவர்களை விடுங்கள் சின்ன பிஞ்சு குழந்தைகள் மனநிலை பாதிக்கப்படுவது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகிறது .
எனது வேண்டுகோள் உங்கள் வீட்டில் தொலைகாட்சி இருந்தால் முதலில் தொடர்கள் பார்ப்பதை நிறுத்துங்கள் .
கொஞ்சம் நாட்கழித்து பாருங்கள் மனநிலையில் பெரிய மாறுதல்கள் உருவாகி இருக்கும் .
பதிலாக நல்ல நாவல்கள் கட்டுரைகள் வாசிக்க பழக்குங்கள் நீங்களும் அதை செய்யுங்கள் .
வீட்டில் உக்கார்ந்து நாவல்களை பற்றி கலந்துரையாடுங்கள்.
ஆரோக்கியமான சூழல் உருவாகும் .
-தியாகு