எது பெருசுன்னு வினவு சொல்கிறார்




http://www.vinavu.com/2010/08/31/jyovram-pala/






சுந்தர் (ஜ்யோராம் சுந்தருக்கு பதில் அளிக்கும் வினவு எழுதிய வற்றின் மீது ஒரு

மீள் வாசிப்பு)

ம.க.இ.க பெரிய கட்சியா, சிறிய கட்சியா?

இணையத்தை மட்டும் படிப்பவர்களுக்கு மக இக பெரிய கட்சியொன்னு ஒரு பிரமை வருகிறது உண்மைதான் மெய் உலகம் மெய் நிகர் எது உண்மை ?

மெய் உலகம் தான் உண்மை இணையம் பொய்தான் அதற்காக அங்கே

இருப்பவருக்கு வினவு சொல்கிறார்:
//இணையத்தை அறியாத சாதாரண

மக்களிடம் உள்ள சமூக அறிவு, இணையத்தில் மட்டும் உலவும் மக்களிடம்

இருப்பதில்லை என்பது உண்மைதான். ஒன்றுமில்லாதவற்றைக் கூட கஷ்டப்பட்டு

புரிந்து கொள்ள முயற்சி செய்து இறுதியில் குழப்பமாகவே காட்சியளிக்கிறார்கள்

என்பதும் உண்மைதான். இதற்குக் காரணம் இணையம் மட்டுமே அல்ல. நுகர்வு

கலாச்சாரத்தில் முனைவர் பட்டம் பெறும் அளவுக்கு முக்குளித்து வாழ்ந்து வரும்

நடுத்தர வர்க்கத்தின் ‘அறிவு’ வெளிப்பாடே இது
.//


நாம் சொல்கிறோம்

தவறான புரிதல் முதல் பாராவில் தினதந்தி முதல் குமுதம் வரை இருக்கும் அரையனா பத்திரிக்கை படிப்பவர்கள்

வினவு சொல்கிறார்:

/சன் நியூஸையும், சீரியலையும், பஜ்ஜியின் எண்ணெயை உறிஞ்சுவதற்காக சேட்டன்மார்களால் வாங்கப்படும் தினத்தந்தியின் தலைப்புச் செய்திகளையும், தேநீரோடு சேர்த்து உறிஞ்சி, தம் அறிவை
மேம்படுத்திக் கொள்பவர்களாகத்தான் பெரும்பான்மையான மெய் உலக
தமிழர்கள் இருக்கிறார்கள்
. //

நாம் சொல்கிறோம்:

மேற்கண்டவர்கள் மெய் உலகத்தில் இருக்கிறார்கள் என சொல்லி விட்டு கடைசி பாராவில் ஆனால் அவர்களுக்கு இருக்கும் சமூக அறிவு நடுத்தர வர்க்க இணைய உலாவி களுக்கு இல்லை என சொல்வது முரண் நகை.

--------
மெய் உலக தமிழர்களுக்கு சமூக அறிவை புகுத்துவது எந்த பத்திரிக்கையும் இல்லை அதே நேரத்தில் மெய் நிகர் உலகிலும் அவர்களுக்கு சொந்த அறிவு இல்லை தாங்கள் மட்டுமே அறிவின் மொத்த குத்தகையை ஆயிரம் ஆண்டுகளுக்கு எடுத்து இருப்பதாக வினவு சொல்வது தமாஸ்
---------------


இணையத்தில் ம.க.இ.க –

திட்டமிடப்பட்டதா?


திட்டம் இல்லாமல் ஒரு கூட்டத்துக்கு கூட போகாத தோழர்கள் எதேச்சையான
விசயம் என சொல்வது பொய்

வினவு சொல்கிறார்:

//வினவும், ம.க.இ.க தோழர்களும் இணையத்தில் செய்யும் வேலையின்

பொருள் என்ன? மெய் உலகத்திற்கும் மெய் நிகர் உலகத்துக்கும் இடையில்

நிலவும் இடைவெளியை அகற்ற முனைகிறோம். மெய் உலகத்திலும் இதே

பணியைத்தான் செய்து வருகிறோம். இந்த முயற்சியின் நோக்கம் சமூக அக்கறை.

இதில் குறிப்பிட்ட அளவுக்கு வெற்றியும் கண்டிருக்கிறோம். இவ்வளவுதான் விசயம்./
/


நாம் சொல்கிறோம்:
இதில் தான் எத்தனை சொதப்பல்கள் இடைவெளி என்னவென் முதலில் கண்டறியுங்கள் அதை நீக்க முயலுங்கள் என நான் சொல்ல முடியாது .

இப்போதைக்கு கூட்டத்துக்கு போய் கலாட்ட செய்வது உங்களின் மெய் உலகம்
என்றால் .

அதை வந்து வேறுமாதிரி எழுதுவது உங்களின் மெய்நிகர் உலகம்

சோ நீங்க உங்க அளவில் இடைவெளிய எப்பவுமே நீட்டிச்சுட்டு இருக்கேளே ?

ரசியல் வலிமை எண்ணிக்கையிலா, ஆளுமையிலா?

வினவு சொல்கிறார்:

//
அடுத்த கேள்வி, ஒரு அரசியல் இயக்கம் வலிமையானதா இல்லையா என்பதை எதை வைத்து முடிவு செய்வது? முதலில் நமக்கு தெரிகின்றவை புள்ளிவிவரங்கள். எந்தக் கட்சியில் எத்தனை உறுப்பினர்கள் என்ற விவரங்களை வைத்து அதை முடிவு செய்ய முடியுமென்று பலர் எண்ணுகின்றனர்.//

நாம் சொல்கிறோம்:

அப்படியா மிகப்பெரிய ஆளுமை என தோற்றம் காட்டும் உங்களால் ஏன்

இலங்கையில் நடந்த இனபடுகொலையை தடுக்க முடியவில்லை
அல்லது முத்துகுமார் பிணைத்தை கைப்பற்றி போராட்டத்தை நீடிக்க
முடியவில்லை புள்ளி விபரங்களை சமார்த்தியமாக பேசும் அதியமான உள்ளிட்ட நபர்களின் நோக்கம் முதலாளித்துவம் நியாயமானது என்றால்

புள்ளி விபரம் சரியானது அல்லவென சொல்லும் நீங்கள் சொல்லும் காரணம்
என்ன?

ஆக தேவைப்பட்டால் புள்ளி விபரம் இல்லாவிட்டால் அள்ளி (விடும்)விபரமா?
அரசியல் வலிமை எண்ணிக்கையிலும் ஆளுமையிலும்தான் என்பது உங்களுக்கு
நன்றாக தெரியும்

சும்மாக்காச்சும் கட்டுரை எழுதி சுந்தரை மிரட்டத்தானே எழுதினீங்க (நான் சொ

ல்லமாட்டேன் சுந்தர் கிட்ட)

அரசியல் ஈடுபாட்டில் எது பெரிய கட்சி?

நாம் சொல்கிறோம்:

மாநாட்டுக்கு சொந்தமா ஆள் கூட்டி போறதெல்லாம் ஒரு உரைகல்லா

சொந்தமா ஒரு 25 ஆயிரம் பேர் திரண்டு விட்டால் பெரிய கட்சிதான் என
சொ ல்வதும் பொருத்தமானதல்ல

//ம.க.இ.க வும் அதன் தோழமை அமைப்புகளும் தனது பிரச்சாரம்,

போராட்டங்களுக்கு மக்களை மட்டுமே சார்ந்திருக்கின்றன. முதலாளிகள், பெரும்

வணிகர்கள் முதலானோரிடம் நன்கொடைவாங்குவதில்லை. தமிழகத்தின் பேருந்து

நிலையங்கள், இரயில் நிலையங்கள்,கடைவீதிகளில் தன்னந்தனியாக பிரச்சாரம்

செய்து நிதி வசூலிக்கும் தோழர்களை யாரும் எங்கும் பார்க்கலாம்
.//

நாம் சொல்கிறோம்:

மக்களை மட்டுமே சார்ந்து இயங்கினாலும் கட்சி ஏன் வளரவில்லை என ஆய்வு

செய்யாமல் போனால் சி பி எம் மாதிரி ஆகிடும் மக இகவும் அதான் உண்மை ................

அறிஞர் அ.மார்க்சின் ஆதங்கம்!

வினவு சொன்னது:
/
ஒரே ஆள் பல பெயர்களில் பின்னூட்டம் போடுவதாகவும், பல பெயர்களில் வலைப்பூ

நடத்துவதாகவும் முன்னாள் பேராசிரியர் அ.மார்க்ஸ் ஒரு முறை எழுதியிருந்தார்.

இதனை அவதூறு என்று சொல்வதை விட அவரது ஆதங்கம் என்று சொல்வது

பொருத்தம். அவரது கருத்துப்படி ம.க.இ.க வினர் எனப்படுவோர் ஒரு சில நபர்களால்

ஆட்டுவிக்கப்படும் சொந்த புத்தி இல்லாத மந்தைகள். மந்தைகள் எப்படி சொந்தமாக

வலைப்பூ நடத்தமுடியும், பின்னூட்டம் போட முடியும் என்பது அவரது ஆய்வுக்

கண்ணோட்டம் எழுப்பும் கேள்வி
. //

நாம் சொல்கிறோம்:
ஒரே ஆள் பலபெயர்களின் பின்னூட்டம் போடுகிறார்கள் என்பது உண்மையே

நீங்க மார்க்ஸ் ஏமாத்தலாம் இணையத்தில் ஐந்தாண்டாக குப்பை கொட்டும் என்னை ஏமாற்ற இயலாது..
( பா என ஆரம்பிக்கும் ஒரு நபர் உங்க ஆபிசில் இருக்கார் அவருக்கு எத்தனை
ஐடி இருக்குன்னு கேட்டு பாருங்க தோழர்ஸ்)

ஆமாம் சொந்த அறிவுன்னு சொல்றீங்களே அது இருந்தா அவனை உடனே துரோகின்னு முத்திரை குத்திட மாட்டீங்க ?

சரி சரி எனக்கு உங்க தலைப்புக்கு பதில் அளிச்சு போரடிச்சு போச்சு
நான் போய் கொழுக்கட்டை திங்கறேன்

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post