திரைபடங்கள் சமூகத்தை பிரதிபலிக்கின்றன சமூகமும் திரைப்படத்தை பிரதி பலிக்கிறது என சொல்லலாம் .
நமது வாழ்வில் அழுகை சந்தோசம் தொழுகை அன்பு, பாசம் இவற்றினூடாக சினிமாவை பார்ப்பதும் சினிமாவின் ஊடாக வாழ்க்கையை பார்ப்பதும் நடந்து வருவதை தவிர்க்க இயலாது .
சினிமாவின் மூலம் இன்றுவரை நாம் முதலமைச்சர்களை தேர்வு
செய்து வருகிறோமே அல்லாது இலக்கியத்தின் மூலமோ எழுத்து மூலமோ அல்ல என்கிற
எதார்த்தம் மிகை எதார்த்தமல்ல .
மாற்றான் திரைப்படத்தையும் அத்தகைய ஒரு விமர்சன கண்ணோட்டத்தோடு பார்க்க முயற்சி செய்தேன்: என சொல்வதை விட படம்
பார்க்க முயலும் போது விமர்சனமும் செய்கிறேன் என்பதே யதார்த்தம் .
ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் ஒருத்தன் கம்யூனிச சிந்தனை உடையவன் இன்னொருத்தன்
முத்லாளித்துவ சிந்தனை உடையவன் (இரண்டு பேருக்கும்
ஒரே இதயம் ) எதோ ஒன்றுதான் வாழ முடியும் என்னும் போது கம்யூனிஸ்டுடைய இதயம் முதலாளித்துவ சிந்தனைகாரனுக்கு பொருத்தப்படுகிறது.
(இவனுக்கு இதயமில்லை ஆனால் ஈரம் இருக்குன்னு வசனம் முயன்று
திணிக்கப்படுகிறது) முதலாளித்துவம்தான் கம்யூனிசத்தை நடைமுறைக்கு கொண்டுவரும் என இயக்குனர் நினைத்திருக்கலாம் :)
கதை :
மிகப்பெரிய வெற்றிநடைபோடும் ஒரு ஊட்ட சத்து மாவு பவுடர் விற்கும் தந்தை வில்லந்தான் ஒட்டி பிறந்த கதாநாயகர்களின் தந்தை . இவர் ஒரு முன்னாள் மரபியல் விஞ்ஞானி , மரபணு மாற்ற பெற்ற உணவை மாடுகளுக்கு கொடுத்து அதன் மடி கொள்ளாத அளவுக்கு பாலை சுரக்க வைத்து அதிலிருந்து தயாரிக்கப்படும்
ஊட்ட மருந்தை விற்று கொள்ளை லாபம் அடிக்கும் ஒரு பக்கா முதலாளி
இரட்டையர்களை
பாசத்தை கொட்டி வளர்க்கும் அம்மா .
இதற்கிடையே உடைந்த ருஸ்யாவில் இருந்து வந்து, இந்த
டுபாக்கூர் முதலாளியை வேவு பார்க்கும் வோல்கா மூலம் உண்மையை உணர்ந்துகொள்ளும்
கம்யூனிச சிந்தனை கதாநாயகன் ஒரு சண்டையில் கொல்லப்படுகிறான்.
ஏன் கொல்லப்படுகிறான் என விசாரித்து அறிய முயலும், இன்னொரு கதாநாயகன் மூலம்
கதை சுமூகமாக சில சண்டைகளுடன் முடிகிறது .
லாபத்துக்காக பெற்ற மகனை கூட கொல்ல முனைபவர்கள்தான் முதலாளிகள் என்பது பிரத்யட்ச உண்மை அதற்கு காரணம் முதலாளித்துவ உல்கின் தனிநபர் வாதம் இதை இன்னொரு முதலாளியால் கலைய முடியாது என்கிற உண்மையை முதலாம் கதாநாயகனை கொல்வதன் மூலம் கொல்கிறார் இயக்குனர்.
சமூக முரண்பாடும் குடும்ப முரண்பாடும் :
முதலாளித்துவ உலகில் போட்டியில் ஜெயிக்க எதையும் செய்வதுதான் முதலாளித்துவம் அதுவே குடும்பத்தில்
வந்து முரண்பாடாக நிற்கும் போது அந்த முரண்பாட்டை வழக்கமான கொலை மூலம் தீர்த்துவைக்க
முடியும்
என சொல்வது சினிமா பாணி மழுங்கதனம் .
சமூகமுரண்பாட்டை தீர்க்க வேறு சமூக உற்பத்தி நடைமுறையே தேவை
சந்தைக்கான உற்பத்தி நடக்கும் போது சந்தை போட்டியில் செயிப்பவனே
உயிர்வாழ முடியும் என்கிற உண்மையை அவன் தந்தை சொல்லும் போது அவனை வில்லனாக காட்ட
அவன் மரபியல் மாற்றபட்ட உணவை சந்ததிகளுக்கு அளிக்கிறான் எனவே கொல்லப்பட வேண்டும் என்கிற நியதி சொல்லப்படுகிறது
அப்படி இல்லை முதலாளித்துவ நியதியே அந்த இடத்துக்குத்தான் வந்து சேரும் .
மாற்ற வேண்டியது அந்த முதலாளி அல்ல கொல்லப்பட வேண்டியது அவனும் அல்ல
மாற்ற வேண்டியது சமூகம் கொல்லப்பட வேண்டியது தனிநபர் வாதம்