கல்வி என்பது அறிவுக்கா அல்லது வேலைக்கா என்ற கேள்வியை நாம் பொத்தாம்பொதுவாக கேட்போமானால் கல்வி அறிவுக்கு மட்டுமல்ல சமூகத்தின் கட்டுமானத்தின் மறு உற்பத்திக்கு
கல்வி அவசியம் .
இந்த திரைபடம் பெரும்பாலான நமது மாணவர்களை கொண்டு இயங்கிகொண்டிருக்கிற அரசு பள்ளி ஆசிரியர்களை பற்றியது மாணவர்களுக்கு அவர்கள் வழங்க வேண்டிய விழும்மியங்களையும்
வழங்காமல் விட்ட மதிப்பீடுகளை பற்றி இந்த திரைபடம் பேசுகிறது .
அரசு பள்ளி ஆசியர்கள் :
--------------
சமூகத்தின் மிக முக்கியமான பொறுப்பில் இருக்கும் இவர்கள் பொறுபற்று நடந்து கொள்வதை சாட்டை திரைப்படம் மிக தெளிவாக படம்பிடித்து காட்டுகிறது .
ஒரு பக்கம் பணம் படைத்தவர்களுக்கு தரமான (?) கல்வி கிடைக்கிறது
தரம் என்ற வார்த்தையை போட்டு குழப்பி கொள்ள வேண்டாம் பரீட்சைகளில் பாசாவதற்கு தகுதியானவர்கள் ஆக்குகிறார்கள்
இன்னொரு பக்கம் அரசு பள்ளி ஆசிரியர்கள் அதை கூட செய்யாமல் தமது கடமையை தட்டி கழிக்கிறார்கள் இதற்கு சங்கங்களும் உடந்தை .
இப்படிபட்ட ஒரு அரசு பள்ளி கூடத்தில்தான் தயா என்கிற ஆசிரியர் வருக்கிறார் . மாணவர்களின் மேல் நம்பிக்கை வைத்து அவர்களின் நடத்தையை தனது நடத்தை மூலம் சீராக்குகிறார்.
அந்த ஏ ஹெ ச் எம் மிக சரியான உதாரண புருசன் தற்போதைய பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு
1.வகுப்பு நேரத்தில் சொந்த வேலையை செய்தல்
2.வட்டி கொடுத்து சம்பாதித்தல்
3.சத்துணவுக்கு வரும் பொருட்களை கள்ள மார்கெட்டில் விற்றல்
4.அரசு தரும் நூல்களை வெளியில் விற்பது என
ஒரு கொள்ளை கும்பலுக்கு தலைமை தாங்கு இந்த உ. த. ஆசிரியர் பொறுக்கி எடுக்கப்பட்ட ஒரு சுயநலவாத ஆசிரியரின் கேரக்டரில் நடிக்கிறார்
ஒவ்வொரு முறையில் வசனத்தில் ஆரம்பத்தில் “20” years எக்ஸ்பீரியன்ஸ் என்பதை சொல்வார்
திரைப்படம் தொடங்கும் போதே 1500 பேர் படிச்சிட்டு இருந்த பள்ளிகூடம் இப்ப வெறும் 70 பேர் தான் படிக்கிறார்கள் என தல ஆசிரியர் பேசுவதில் ஆரம்பிக்கிறது .
தயா இந்த பள்ளிக்கூடத்தில் வந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஒரு சேர திருத்தும் பொறுப்பை ஏற்கிறார்
எப்போது ஆசிரியர் திருட்டுதனம் செய்ய ஆரம்பிக்கிறாரோ நேர்மையற்று நடக்கிறாரோ அப்போது எதிர் திசையில் மாணவர்களை உருப்படாதவர்கள் என சொல்லவேண்டியதிருக்கிறது
மாணவர்கள் நல்லா படிப்பார்கள் என சொன்னால் இவருக்கு நல்லா நடத்தவேண்டும் என்கிற பொறுப்பும் கடமையும் வந்துவிடுகிறது எனவே பெரும்பாலும் இவர்கள் இவனுகெல்லாம் உருப்பட மாட்டானுக சார்
என்பதை தாரக மந்திரமாக சொல்வார்கள் .
திருத்த வேண்டியது அரசு பள்ளி ஆசிரியர்களே என்கிற வாதத்தை தெள்ள தெளிவாக இந்த திரைப்படம் எடுத்துரைக்கிறது
கம்யூட்டர்கள் குறைகிறது என்ற கேள்விக்கு உ.த .ஆசிரியரின் பதில் “இவனுகெல்லாம் கம்யூட்டர் படிக்கும் அளவு திறமை இல்லாதவர்கள் “ என்கிற வசனம்
தானும் திருந்தாமல் மாணவர்களையும் மழுங்கடிக்கும் இவர்களை போன்ற ஒரு ஆசிரியர் கூட்டம் இன்று நாடு முழுக்க பரவி வருகிறது இவர்கள் திருத்தப்படாமல் எந்த கல்வி முறையும் பயனளிக்காது
சமச்சீர் கல்வி வந்து விட்டால் இவர்கள் நடத்தி விடுவார்களா மாணவனை படிக்க வைத்து விடுவார்களா நிச்சயம் இல்லை என்பதே இந்த படம் உணர்த்தும் உண்மை .
ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு ஆசிரியரையாவது சொந்த கைகாசை போட்டு அழைத்து சென்று இந்த படத்தை காட்டவேண்டும் .
ஆசிரியர்கள் இப்படி நடந்து கொள்வதன் பின்னனி:
----------------------------
எந்த ஒரு பண்பாட்டு உருவாக்கமும் அடிப்படை இன்றி வந்து விடாது அரசு மூலதனம் சுதந்திர இந்தியாவில் கல்வி - இரயில் - வங்கி என்கிற முக்கியமான துறைகளில் வந்தது - ஒரு போலித்தனமான ஜனநாயக
நாட்டில் இயக்கபபடும் அரசு மூலதன் இதை காட்டிலும் உயர்ந்த விசயங்களை செய்ய முடியாது .
ஏனெனில் அரசு மூலதனம் என்பது ஆளும் வர்க்கத்தின் நலனை மட்டுமே பிரதிபலிக்கும் .
அரசு வேலை வழங்கும் கேள்வி கேட்பாரற்ற சுதந்திரமும் அரசின் கண்டுகொள்ளாமையுமே இப்படி பட்ட
புல்லுருவிகள் ஆசிரியர் துறை எங்கும் வளர காரணம்
அரசு தனியார் கல்வியை வளர்க்க என்ன செய்தது தெரியுமா அரசு பள்ளி கூடங்களை கண்டுகொள்ளாமல் விட்டது
விளை அரசு பள்ளிக்கூடங்களில் நமக்கு குறைந்த கூலிக்கு ஆள்கிடைத்தார்கள் தனியார் பள்ளிகளில் இருந்து
எஞ்சினியர்கள் டாக்டர்கள் சூப்பர்வைசர்கள் வந்தார்கள் .
அரசு பள்ளிக்கூடங்களை அதற்குரிய அக்கறையோடு எப்போது நடத்தும் தெரியுமா அரசு மக்களால் ஆளப்படும்போதுதான் .
இங்கே மக்களாட்சி என்ற பெயரில் நடப்பது கொள்ளை கூட்டத்தின் ஆட்சி .
தனியார் மூலதனம் கல்வியில் இயங்கி கொடி கட்டும் போது அரசு மூலதனம் படுதுறங்குவது தற்செயலானதல்ல
தேவையும் மாற்றமும் :
---------------
இது போன்ற எத்தனை படங்கள் எடுத்தாலும் அரசு பள்ளி ஆசிரியர்கள் திருந்த போவதில்லை தேவை
மாணவர்களின் ஒற்றுமை மாணவர்க்ளுக்கு அரசியல் பார்வை போராட்டம் .
ஆமாம் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவன் எழுந்து கேள்வி கேட்க ஆரம்பிக்கும் போதுதான் ஆசிரியர் சமூகத்துக்கு பொட்டில் அடித்தமாதிரி இருக்கும் .
இந்த படத்தை பொறுத்தவரை தயா மாஸ்டரின் பணி செவ்வனே நடந்து முடிந்து விட்டது ஆனால் சமூகத்தை பொறுத்தவரை தயா மாஸ்டரின்
கருத்து மாணவ சமூகத்தின் மேல் பொறுப்பாக வைக்கப்படுகிறது .
போராட்டமே வாழ்க்கை அதுவே மகிழ்ச்சி அதிலிருந்தான் தீர்வும்