சாதி ஆதிக்க அரசியலும் வர்க்க ஒற்றுமையை கைவிட்டமையும்
-----------------------------------------
தர்ம புரியில் நடந்த சாதிகலவரம் - என்ன சொல்கிறது
1.சாதி ரீதியாக மக்கள் இன்னும் பிளவு பட்டிருக்கிறார்கள் என்றா ?
2.சாதி ரீதியான தீர்வு சரி என்றா ?
3.ஓட்டு கட்சிகள் தீர்வு தரும் என்றா ?
இல்லை மேற்கண்ட மூன்றிலிலும் இல்லை என்பதே எனது பதில் என்னடா சாதிரீதியான தாக்குதல் நடக்கும் போது சாதிரீதியான எதிர்ப்பை பற்றி பேசாமல் வர்க்க ரீதியான ஒன்று திரட்டலை பற்றி பேசுகிறேன் என்று நினைக்கிறீர்கள் சரிதான்
சாதிய மேலாதிக்க தாக்குதல் நடக்கும் போது எதிர் தாக்குதலும் நடக்கும் என்பது சாதிய மேலாதிக்க தாக்குதலை கண்டித்து நிச்சயம் போராட வேண்டும் என்பது சரியே
ஆனால் இந்த விசயங்களின் உள்கூடாக காண கிடைப்பது என்ன எந்த ஒரு சாதிய -மத தாக்குதல்களில்அதிகம் பாதிக்கப்படுவது பாட்டாளி மக்களே உழைக்கும் மக்களே .
வர்க்கம் வளரும் சக்தி -சாதி தேயும் சக்தி அழிவு கருவி
-----------------------------------
திராவிட கருத்தியல் ஆரம்பித்த போது அம்பேத்கரில் ஆரம்பித்து பெரியார் தற்போதைய திராவிட கட்சிகள் வரை சாதி ரீதியான ஒடுக்குதலுக்கு அதே சாதிரீதியான தீர்வையே முன்வைத்தன
என்ன அந்த தீர்வுகள் என்றால் ஒடுக்கப்படும் மக்கள் சாதிரீதியாக ஒன்றிணைந்து பதில் தாக்குதல் நடத்த வேண்டுமென்பதே அது
அதையே பின்பற்றி மக இக உள்ளிட்ட கட்சிகளும் தலித் விடுதலை அமைப்புகளை போலவே பேச ஆரம்பித்தன
ஆனால் மார்க்சியத்தின் அடிநாதத்தை இவர்கள் மறந்து விட்டார்கள் அல்லது மறைத்து விட்டார்கள் என சொல்லலாம் அனைத்து பிரிவினைக்கும் மூல காரணம் வர்க்கமே - சாதி என்பது மேற்கட்டுமானமாக அடிகட்டுமானமாகவும் இருப்பினும் அது அடிகட்டுமானத்தில் இருந்து விடுபட்டு கொண்டே வருகிறது
எப்படி எனில் சமூகத்தில் முதலாளித்துவ வளர்ச்சி வளர வளர இந்த சாதிய அடிகட்டுமானம் தகர்ந்து கொண்டே வருகிறது. ஒரு நிறுவனத்தில் அல்லது தொழிற்சாலையில் வேலை செய்பவர்களிடையே சாதி அடிப்படையிலான
பாரிய வேறுபாடுகள் இல்லை
இப்படி சாதியத்தை உற்பத்தி உறவுகளின் வளர்ச்சி மாற்றி இருப்பதை காணலாம் .
சரி அப்படி எனில் இன்னமும் சாதி எப்படி இருக்கிறது கலவரம் எப்படி நடக்கிறது என கேட்கலாம்
சாதி திருமணபந்தத்தில் மட்டும் இருந்து வருகிறது உற்பத்தி நடைமுறையில் சாதி இல்லை
எனவே வர்க்கம்தான் வளர்ந்து வருகிறது சாதியை வளர்க்க நினைப்பவர்கள் யார்?
-------------------------
மிக முக்கியமானது இந்த கேள்விதான் ஏனெனில் வர்க்க ரீதியான ஒரு ஒன்றுதிரட்டும் கம்யூனிஸ்டு கட்சி இல்லாத வெற்றிடத்தை ஏறத்தாழ சாதி அடிப்படை கூறுகளை கொண்ட திராவிட கட்சிகள் ஒன்றிணைத்தன
கட்சி ரீதியாக ஒப்பீட்டளவில் கொள்கை ரீதியாக மக்களை ஒன்றிணைத்தன
பார்பனியத்துக்கும் அந்த கருத்தியலுக்கும் எதிரான இந்த போரில் அவை பெற்ற வெற்றிகளை அதன் தலைவர்களின் வாரிசுகள் பயன்படுத்தி கொண்டமை அந்த கடிச்களின் கொள்ளை நீஎர்த்து போகவும்
பிழைப்பு வாதம் எங்கும் தலைதூக்கவும் துவங்க காரணமானது
என்ன பேசினாலும் அடிப்படை என்பது பேங்கு பேலன்ஸை உயர்த்துவதே என்கிற பிழைப்புவாதம் தலைவிரித்து ஆட காரணம் திராவிட கட்சிகளே
இந்த பிழைப்புவாதத்தை சாதிய கூறுகளுடன் கட்சி ஆரம்பித்தவர்களும் எடுத்தாண்டார்கள் பிழைப்புவாதமே பிரதானம் சாதி ஒரு காரணம் ஒரு கருவி என எடுத்து கொண்டார்கள்
ஒருபக்கம் வன்னிய சாதி -ராமதாஸ் பிழைப்புவாதத்துக்கு சாதியை எடுத்து கொண்டால் இன்னொரு பக்கம் தேவர் சாதியை சேதுராமன் மற்றும் பார்வர்டு பிளாக் கட்சியினர் கையில் எடுத்து கொண்டனர்
தங்களது கட்சி கொள்கையை மேலும் மேலும் வளர்த்தெடுக்க சாதிய அமைப்பு தடையாக இருக்கும் என நேர்மையுடன் சிந்திக்காக திராவிட கட்சிகள் - ஓட்டை மட்டுமே குறிக்கோளாக கொண்டு சீட்டுகளை
வளங்கி சாதிய கட்சிகளுக்கு அரசியல் களத்தில் இடம்கொடுத்து விட்டன .
இதான் சாதி ஆதிக்கம் தற்போது தமிழ்நாட்டில் இருக்கிறது என்கிற தோற்றத்தை காட்டும் வரலாறு
வர்க்க ஒற்றுமை என்பது அறிவியல்பூர்வமானது :
-------------------------------
உலகமெங்கும் இருக்கும் நிலமைகளை கணக்கில் எடுத்து கொண்டாலும் இந்தியாவில் பிரத்யேகமாக சாதிய நிலமைகள் இருக்கின்றன என்பதை ஏற்றுகொண்டார் மார்க்ஸ் . ஆனால் இயக்கவியல் ரீதியான எந்த
பார்வையுமின்றி -உயர்ந்த சாதிகாரனை வெட்டினால் தாழ்ந்த சாதிக்காரன் உயருவான் என்கிற மொட்டை மனப்பான்மை ஒரு இயக்க மறுப்பியல் சிந்தனையே
எது இயகக்வியல் :
------------
எந்த ஒரு பொருளுக்குள்ளும் பாசிட்டிவ் நெகட்டிவ் சக்திகள் இருக்கின்றன சமூகத்தின் நெகட்டிவ் முதலாளித்துவம் என்றால் அதன் பாசிட்டிவ் உழைக்கும் வர்க்கம்
உழைக்கும் வர்க்கமே இங்கு சாதியாக பிரிந்து கிடக்கிறது ஆனால் எல்லா சாதியிலும் ஒரு வர்க்க ஒற்றுமை
நிலவுகிறது என்பதை காணத்தவறுவது பேதமை
இந்த பேதமை சமூக நீதிக்கான போராட்டத்தை செய்தவர்களிடம் காணலாம் ஆனால் மார்க்சியம் பேசுபவர்களிடம் காணக்கிடப்பது வேதனை ..
எல்லா சாதிகளிலும் இருக்கும் உழைக்கும் வர்க்கத்தை ஒன்றிணைக்கும் பொதுவான பிரச்சனைகளை பேசவும்
வர்க்க போராட்டங்களை நடத்தவும் உண்மையில் சாதியை பற்றிய தெளிவான பார்வை கொண்ட கட்சிகள் தேவை
சாதி என்பது முதலாளித்துவ உற்பத்தி உறவு வளர தேயவேண்டும் என்பது முன்நிபந்தனை (ஆனால் முதலாளிகள் இதை உணர்ந்திருக்கிறார்கள் என சொல்ல வரவில்லை )
எப்படி எனில் : ஒரு நிறுவனத்தில் லாபமீட்ட அந்த நிறுவனம் குறிப்பிட்ட சாதியை கொண்டு இயங்க வேண்டும்
என ஒரு முதலாளி நினைக்க மாட்டான் இது சாதிய ஒழிப்பின் முதல் படி
அடுத்து இயல்பாகவே ஏற்படும் தொழிலாளிகளின் வர்க்க உணர்வை வளர்த்தெடுக்க வேண்டுவது ஒரு உழைக்கும் வர்க்க கட்சியின் தலையாய கடமை இப்படி சாதி என்பது முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் அடிபட்டுபோகும் என்பதை கணிப்பதுதான் இயக்கவியல்
பார்வையின் முதல் படி
ஓட்டு கட்சியாக இருப்பதா ஓட்டுக்கு எதிரானதாக இருப்பதா?
----------------------------------------
சமூக முரண்பாடுகளின் அடிப்படையில் சிந்திக்காமல் ஓட்டு கட்சியாக இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது என நினைப்பதும் . ஓட்டு கேட்காத கட்சியாக இருப்பதே முக்கிய நிபந்தனை என நினைப்பதும் தவறானதாகும்
சாதியை வளர்த்து கொண்டிருப்பது எது?
---------------------------
இந்த போலி ஜனநாயகமே சாதியை ஒட்டுக்களின் எண்ணிக்கையில் பெறும் லாபத்துக்காக வளர்த்து கொண்டிருக்கிறது தேவர் ஜெயந்தியை நடத்த போட்டி போடும் முதல்வர்களால் சாதி ஒழியாது அதே போல அந்த செயந்திக்கு வரும் மக்களை வெட்டி போடுவதால் சாதிய திமிரை ஒழிக்க முடியாது
இன்று கொல்லப்படுபவன் நாளை கொலை செய்ய எத்தனிப்பான்
கத்திக்கு கத்தி பதில் இல்லை என்பதை உழைக்கும் மக்களிடம் சாதிய பாகுபாடின்றி விளக்க வேண்டும்
அதற்குரிய முக்கிய நிபந்தனை எந்த சாதி ஆதரவும் இல்லாமல் இருக்க வேண்டும் கம்யூனிஸ்டுகட்சிகள்
அதுவரை வன்னி அரசு போன்றவர்கள் புரட்சிகர கட்சியை இப்படித்தான் தாக்குவார்கள்