எங்கள் வீட்டின் பின்புறமுள்ளது அந்த முருங்கை மரம் சில நாட்களுக்கு காய்களை தந்து பின் அந்தமரம் பூச்சிகள் நிறைந்த மரமாகி பக்கத்து வீட்டுகாரருக்கு தொந்தரவானது .
எனவே அந்த மரத்தைவெட்டி விடுவதென தீர்மானித்து பின்பு அதில் ஒரு கிளையில் காக்கை ஒன்றின் கூடு இருந்ததால் வெட்டாமல் விட்டு விட்டோம் .
கூட்டில் பின்பு ஒரு காக்கை குடியிருந்து குஞ்சுகளை பொறித்து விட்டது. அந்த ம்ரத்துக்கு நேர்கீழே யாராவது நின்றால் மிகவும் டென்சனாகும் அந்த காக்கை அங்கே இருக்கும் வாழை மரத்தின் இலைகளை மிக கோபமுடன் கொத்தி போடும் தலைக்கு மேலே பறக்கும் குறிப்பாக அந்த காக்கை என்னை நன்றாக அடையாளம் பார்த்து கொண்டது நான் வீட்டு விட்டு வெளியே எங்கு சென்றாலும் துரத்தி வரவும் தலைக்கு மேல் காதுக்கருகில் கத்தவும் துவங்கி விட்டது
இது நடப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே சொந்த ஊருக்கும் தனது தாயார் இறந்தமையால் சென்றுவிட்ட பக்கத்து வீட்டுகாரர் ஊரில் அவரது தந்தையை கவனிக்க ஆளில்லாதமையால் தனது வீட்டை காலிசெய்து விட்டு
சொந்த ஊருக்கு போய்விட முடிவுடன் வந்து உள்ளார் .
இந்த காக்கை அவரையும் விடாமல் துரத்த ஆரம்பித்தது .முன்பு எனக்கும் காக்கைக்கும் நடந்துள்ள விவகாரம் ஏதும் தெரியாமையால் பக்கத்து வீட்டுகாரர் குழம்பி போய் சாமி பார்க்கும் ஒரு பெண்ணிடம்
முறையிட அந்தம்மாவோ இறந்து போன உங்கம்மா உங்களை வீட்டை காலி செய்ய விடமாட்டேங்கிறார் என ஒரு குண்டை தூக்கி போட்டு விட்டார்
இரவு நான் வந்ததும் விசயத்தை சொன்னேன் . இது காக்கைக்கும் எனக்கும் இருக்கும் வாய்க்கா தகராறு காக்கை என்னை என நினைத்து உங்களை துரத்தி இருக்கிறது எனவே நோ மோர் அசம்சன் நீங்கள் கிளம்பலாம் என்றேன்
# யப்பா மூச்சு வாங்குது எப்படி எல்லாம் மூடநம்பிக்கை உருவாக்கிறாய்ங்கப்பா