செல்லம்மாவை கொஞ்சநாளைக்கு முன்புதான் எனக்கு தெரியும் செல்லம்மா நன்கு படித்து பட்டம் பெற்றவள் ஆனால் வெகுளி இந்த வெகுளிக்கு ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை கிடைத்தது .
செல்லம்மாவுக்கு யாரிடம் எப்படி பேசனும்னு தெரியாது அதை போல யார் எதுக்கு பேசுறாங்கன்னும் தெரியாது .
பள்ளிக்கூடத்தின் அரசியல் புரியாதது மட்டுமல்லாமல் தனது வெகுளித்தனத்தை மொத்த அரசியலுக்கும் பதிலாக கொடுப்பவள்தான் செல்லம்மா ?
என்னுடன் பேச ஆரம்பிக்கும்போது இருக்கும் மனநிலை செல்லம்மாவுக்கு பேச்சை முடிக்கும் போது இருக்காது என்பதை அறிய எனக்கு வெகுநாள் ஆனது,
தனது பள்ளியில் இருக்கும் தனக்கு மேலுள்ள டீச்சருக்கும் கரெஸ்பாண்டென் சாருக்கும் எதோ இருக்கும் போல என்பாள் எப்படி சொல்றேன்னா அப்படித்தான் பேசிக்கிறாக என்பாள்
சரி அதனால உனக்கென்ன பிரச்சனை என கேட்டாள் “அந்த பொம்பள கூட முகம்கொடுத்து பேச மாட்டேன்ல என்பாள் “
கொஞ்ச நாளைக்கு முன்னால இவளுக்கும் அந்த எச் ஓ டிக்கும் உரசல் வர மேனேஜ்
மெண்டு செல்லம்மாவை கண்டித்து அனுப்பி விட்டார்கள் .
செல்லம்மாவுக்கு ஒண்டும் விளங்கவில்லை ஏன் தன்னை திட்டினார்கள் என
என்னிடம் அடிக்கடி கேட்டு கொண்டே இருந்தாள் .
இப்பவெல்லாம் அந்த எச் ஓ டி இடம் நல்லா பேசிக்கிறேன்னு சொன்னாள் ஆனால்
திரும்பவும் பிரச்சனை வருதுன்னு சொன்னாள்
செல்லம்மாவுக்கு அறிவுரை சொல்பவன் ஒன்னு எல்லாம் தெரிஞ்சவனா இருக்கனும்
இல்லைன்னா கடவுளா இருக்கனும் நான் இரண்டுமில்லை என்பதால்
பிரச்சனையை யூகித்து ஒரு பதிலை சொல்வேன் அவளும் போய் அப்படியே
சொல்லிடுவாள் .
அந்த பிரச்ச்னைக்கு காரணம் வேறொன்றாக இருக்கும் இவளது கற்பனை வேறொன்றாக இருக்கும்
செல்லம்மாவின் மூலம் நான் விசயங்களை யூகித்து அறியமுடியாமையால் நான் கற்றுள்ள அரசியல் பொருளாதாரத்துன் மூலம் அலசி ஆராய்ந்து முடிவுகளை சொல்வேன்
அதிகார வர்க்கம் ஆதிக்கத்தின் பால் ஈர்ப்பு பிழைப்பு வாதம் இதையெல்லாம் சொன்னா செல்லம்மாவின் முகமோ அஸ்ட கோணலாகிடும் .
வெட்டு ஒன்று துண்டு ரெண்டுன்னு சொல்லிபுடுவேன்னு நிறைய நாள் சொல்லிட்டு இருந்தாள் ..
ரொம்ப நாள் கழிச்சு செல்லம்மாவை பார்த்தேன் அதேமாதிரி வெகுளியாத்தான் இருந்தாள்
ஆனால் அவளுக்கு கெடுதல் செய்தவள் அட்ரசே இல்லையாம் அசிஞ்கபட்டு
அனுப்பிட்டாங்களாம் என பெருமை பட்டு கொண்டால்
செல்லம்மா இன்னொரு பள்ளிக்கு போகிறாள் ஆனால் இன்னும் நான் சொன்னதை புரிஞ்ச மாதிரி தெரியலை