அகிம்சை மூலம் சுதந்திரம் பெற்றோம் என முக்கி முக்கி சொல்லும் இந்திய சனாதனிகள் இன்று அதே அகிம்சை என்கிற ஆயுதத்தை மூன்று நாளைக்கு மட்டும் பயன்படுத்துமாறு கெஞ்சுகிறார்கள் ( கெஞ்சுகிறார்கள் என்ற வார்த்தையை அவர்களின் செயல்பாடுகளினூடாக
உரைக்கிறேன்)
அகிம்சை முதலாளித்துவத்துடன் வளர்க்கப்பட்டு அதற்கென சேவை செய்யும் போது அது போற்றப்படுகிறது அதே அகிம்சை முதலாளித்துவத்தை அரச முதலாளித்துவத்தை
கார்பரேட் முதலாளித்துவத்தை லஞ்ச ஊழலை எதிர்க்க தலைபடுமானால் அதை ஆயுதம் தாங்கிய போராட்டத்தை விட கொடூரமாக இந்த ஆண்டைகள் ஒடுக்குகிறார்கள்
//கார்பரேட் முதலாளித்துவத்தை லஞ்ச ஊழலை எதிர்க்க தலைபடுமானால் அதை ஆயுதம் தாங்கிய போராட்டத்தை விட கொடூரமாக இந்த ஆண்டைகள் ஒடுக்குகிறார்கள் //
அரசு என்பது இன்னும் மக்களுக்காக இருக்கிறது என நம்புவோர் போராட வேண்டும் அல்லது அரசு உழைக்கும் மக்களின் ஒடுக்கும் கருவி என சொல்லுவோரும் இணைய வேண்டும்
எந்தவகையான போராட்டமாக இருந்தாலும் அதை ஒடுக்க
புறப்பட்டு விட்டது இந்திய ஆளும் வர்க்கம் அதன் அகிம்சை முகமூடி கிழிந்து தொங்கவில்லை அதை துடைத்து வீசிவிட்டது காஸ்மீரில் மக்களை ஒடுக்கும் போதும் இந்தியாவில் இருந்து ஈழத்துக்கு படைகளை அனுப்பும் போது அது படேலின் இந்தியாதான் என்பதை நிரூபித்து விட்டது
இன்னும் மிச்சமிருக்கும் கொஞ்ச நஞ்ச ஜனநாயகத்தின் கால்கள் ஊழல் கேன்சரினால் இத்து விழுந்து விடலாம்
எனவே அறுவை சிகிச்சை அவசியமானது அவசரமானதுமாகும்
இந்தியா ஏகாதிபத்தியமாக மாற அதன் பழைய முகங்களை சுவடில்லாமல் அழித்தும் மறைத்தும் புதிய முகங்களை ஆரம்பிக்கும் போது இன்னும் பழைய சுதந்திரம் அதன் உண்மையான பொருளில் இல்லை என்பதும்
இன்னுமொரு சுதந்திரத்தின் தேவையை நாளுக்கு நாள் உணர்த்தியே வருகிறார்கள் ஆட்சியாளர்கள்
ஆகவே அகிம்சையில் தான் ஆரம்பிக்க வேண்டும் ஆனால்
தொடர்ச்சியான போக்கை தீர்மானிப்பது போராட்ட பாதைதான்
நம்முன் உள்ளது போராட்ட பாதை மட்டுமே:
-------------------------------------------
இந்த போர் எங்களுடன் ஆரம்பிக்கவில்லை எங்களோட முடிந்து விட போவதில்லை என சொன்ன பகத் சிங் வெடி குண்டை எரிந்து " கேளாத செவிகள் கேட்கட்டும் " என முழங்கியது அன்று இருந்த வெள்ளை அரசாங்கத்தால் மிக பெரிய வன்முறையாக கருதப்பட்டது .
லோக்பால் பில் வரைவு கமிட்டியில் எங்களை சேர்த்து கொள் என ஒரு சிறிய கோரிக்கை வைப்பதற்கே இன்றுள்ள அரசு அந்த வெடிகுண்டை கண்டதுபோல மிரளுகிறது .
விசயம் புரிகிறது வெடிகுண்டோ அகிம்சையோ எந்த கருத்தை பேசுகிறது ஆளும் வர்க்கத்தின் நலனையா அல்லது ஒடுக்கும் மக்களின் நலனையா என்பதே கேள்வி
ஒரு நாள் கூட உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்க முடியாது என லத்தியால் அடித்து அன்னா ஹசாரே விரட்டப்படலாம் அதனால் துக்கமடைந்து துயரமடைந்து போகவேண்டிய் நபர் அவரல்ல நாம்தான் ஏனெனில் ஒரு ஜனநாயக கோரிக்கைக்கு இந்த நாட்டின் மரபான அகிம்சை போராட்டத்துக்கு முற்று புள்ளி வைக்கும் அரசு ஒரு பாசிச அரசுதான் இனிமேல்
தேர்ந்தெடுக்கப்படவேண்டுயது போராட்ட முறைகளா போராடும் கருவிகளா என்பதே கேள்வி
"என் ஆயுதத்தை எனது எதிரி தீர்மானிக்கிறான்" என்றார் மாவோ ?"மரம் சும்மா இருந்தாலும் காற்று சும்மா இருக்கவிடுவதில்லை "என்றும் இதே மாவோதான் சொல்கிறார்
என்ன அர்த்தம் எந்த காற்று எங்க போனாலும் நாம் நமது கதவுகளுக்குள் பதுங்கி இருக்க முடியாது என்பதே சாரமான கருத்து அதில்
சுதந்திர தினத்துக்கு வண்ண கொடிகளை வண்டிகளில் வாங்கி வைத்து கொள்வோர் சிந்திக்கவேண்டும்
அந்த வண்ணங்களின் நிறம் இப்போது மாறிவிட்டது
முன்பு சிகப்பு தியாகத்தின் அறிகுறி இப்போது ஒடுக்கப்படும் மக்களின் செங்குருதி
வெள்ளை வறுமையை வழிதெரியா நிலையையும் வழி பிறக்குமா என்கிற ஏக்கம் கடைசி பச்சையாகவும் எனக்கு தெரிகிறது அன்னாவோ காவி துறவியோ கூட போராட அனுமதிக்காத நாட்டில் அரசு அரசின் செயல்பாடுகளும் ஜனநாயக தன்மை உடையன என பேசுபவர்கள் முழித்திருக்கும் போதே தூங்குபவர்கள் அல்லது கயவர்கள்
---
படிக்க செய்தி :
தடையை மீறி உண்ணாவிரதம் : அன்னா ஹசாரே கைது - நாடாளுமன்றம் முடக்கம்
பதிவு செய்த நாள் : 8/16/2011 11:57:15
மாற்றம் செய்த நாள்: 8/16/2011 12:14:10
கடந்த 1&ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. லோக்பாலில் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என பா.ஜ. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் அந்த மசோதா, நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த லோக்பால் மசோதா வலுவாக இல்லை; வலுவான மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் இன்று முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சமூக சேவகர் அன்னா ஹசாரே அறிவித்தார். ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுத்த டெல்லி போலீசார், ஜெயபிரகாஷ் நாராயண் பூங்காவில் போராட்டம் நடத்த அனுமதிப்பதாக கூறி 22 நிபந்தனைகளை விதித்தனர். 3 நாட்களுக்கு மேல் உண்ணாவிரதம் நடத்தக்கூடாது, 5 ஆயிரம் பேருக்கு மேல் உண்ணாவிரதத்தில் பங்கேற்க கூடாது போன்ற 6 முக்கிய நிபந்தனைகளை ஏற்க ஹசாரே தரப்பு மறுத்துவிட்டது.
இதனால் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்படுவதாக போலீசார் நேற்று அறிவித்தனர். இதுகுறித்து ஹசாரே கூறுகையில், ''உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தது பெரிய ஏமாற்றமாக உள்ளது. தடையை மீறி நாங்கள் போராட்டத்துக்கு செல்வோம். என்னை போலீசார் கைது செய்தால் சிறையில் உண்ணாவிரதம் இருப்பேன்’’ என்றார். அதே நேரத்தில் போலீஸ் தடையை மீறி ஹசாரே குழுவினர் செயல்பட்டால் சட்டம் தன் கடமையை செய்யும் என மத்திய அமைச்சர் அம்பிகா சோனி எச்சரித்திருந்தார்.
இதற்கிடையே, ஜெயபிரகாஷ் நாராயண் பூங்காவில் நேற்று மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்கு சென்ற ஹசாரே, திடீர் பிரார்த்தனையில் ஈடுபட்டார். அவரது ஆதரவாளர்களும் அங்கு திரண்டனர். பரபரப்பு ஏற்பட்டதால் போலீசாரும் குவிக்கப்பட்டனர். இன்று காலை காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு உண்ணாவிரதம் தொடங்கப்படும் என ஹசாரே தெரிவித்தார். இதனால் ராஜ்காட்டிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாராயண் பூங்காவில் தடை உத்தரவை மீறி கூடிய ஹசாரே ஆதரவாளர்கள் 50 பேரை போலீசார் சிறை பிடித்தனர்.
இந்நிலையில், டெல்லி போலீசின் மூத்த அதிகாரிகள் படை ஒன்று இன்று காலை மயூர் விஹாரில் உள்ள அன்னா ஹசாரே இல்லத்துக்கு சென்றது. வீட்டுக்கு வெளியே ஏராளமான ஆதரவாளர்கள் கூடியிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் ஊழலுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவர்களை தாண்டி ஹசாரேவின் இல்லத்துக்குள் நுழைந்த போலீசார், வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என அவரை எச்சரித்தனர். தடையை மீறி வெளியே செல்ல முயன்றபோது அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரை காரில் ஏற்றி தனி இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஹசாரே ஆதரவாளர்கள், காரை சூழ்ந்து கொண்டு போலீசுக்கு எதிராக கோஷமிட்டனர். அதே நேரத்தில் ராஜ்காட்டில் ஹசாரேவுக்காக காத்திருந்த அரவிந்த் கெஜ்ரிவால், கிரண்பேடி மற்றும் மனீஷ் சிசோதியா உள்ளிட்ட ஆதரவாளர்கள் பலரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை பஸ்சில் ஏற்றி அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஹசாரே, தண்ணீர் கூட குடிக்க மறுத்து உண்ணாவிரதத்தை தொடர்கிறார். ஹசாரே மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் டெல்லியில் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியது!
அன்னா ஹசாரே கைது குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு விவாதிக்குமாறு பாஜக நோட்டீஸ் வழங்கியது. இதனையடுத்து ப.சிதம்பரம் 12 மணிக்கு இதுகுறித்து விளக்கம் அளிப்பார் என அரசு கூறியது. ஆனால் அரசின் சமாதானத்தை ஏற்க மறுத்து எம்.பி.,க்கள் தொடர்ந்து கூச்சல் குழப்பத் தில் ஈடுபட்டனர். மாநிலங்களவையின் மையப்பகுதிக்கு வந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். எம்பிக்களின் தொடர் ரகளையால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================