எது போராட்டம் யார் போராளிகள்
யார் எதிரி என தீர்மானிப்பதில் கம்யூனிஸ்டுகளுக்கு நிகர்யாரும் கிடையாது என்பதை உலக யுத்ததில் சமரமற்ற யுத்தம் நடத்திய ஸ்டாலின் மூலம் உலகமே கண்டு கொண்டது இன்றுவரை எதிரிகளை தீர்மானிப்பதில் கம்யூனிஸ்டுகளின் வழிமுறையே சிறந்தது என
நிரூபிக்கப்பட்டுள்ளது ஆனால் இங்கே சில விசிலடிஞ்சான் குஞ்சுகள் இந்த அரசு
இயந்திரத்தில் அதன் நலன்களுக்காக செய்யும் சில சீர்திருத்தங்களையும் அந்த சீர்திருத்தங்களின் பின்னே ஒழிந்துள்ள வர்க்க விரோத தன்மையையும்
நுணுகிபார்க்காமல் .
அரசை எதிர்க்கும் போராட்டங்கள் எல்லாமே புரட்சிகரமானவை என கருதி பெரும் தவறுகளை புரிகின்றன .சமச்சீர் கல்வி ஆளும் வர்க்கத்தின் நலனைத்தான் பிரதிபலிக்கிறது எப்படி என்பதை பல்வேறு கட்டுரைகளில் விளக்கி இருக்கிறேன் .
http://thiagu1973.blogspot.com/2011/07/blog-post_28.html
http://thiagu1973.blogspot.com/2011/05/blog-post_30.html
http://thiagu1973.blogspot.com/2011/07/blog-post_20.html
http://thiagu1973.blogspot.com/2011/07/blog-post_12.html
http://thiagu1973.blogspot.com/2011/06/blog-post_1018.html
http://thiagu1973.blogspot.com/2011/06/blog-post_14.html
http://thiagu1973.blogspot.com/2011/05/blog-post_25.html
சுருக்கமாக
1.படித்து வேலை கேட்டு போராடும் ஒரு கூட்ட உருவாக கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் குறியாக இருப்பதே 8 ஆம் வகுப்புவரை தொடர்ச்சியாக தேர்ச்சி வழங்குவதன்
அடிப்படை
2.அடுத்து உழைக்கும் மக்களில் ஒரு பகுதியினர் தனியார் பள்ளிகளில் படித்து மேலே வருவது இந்த சமநிலையை குலைக்கும் என்பதால் எல்லா கல்வியையும்
மட்டப்படுத்தும் போக்கு
3.அதற்கான செயல் திட்டத்தின் அடிப்படையில் இயங்கும் அரசும் அதன் துணை அமைப்புகளையும் கணக்கில் கொள்ளாமல் சமச்சீர் கல்வி சிறந்தது என்கிற பிரசாரம்
மேற்கொள்வதும்
4.அரசு பள்ளிக்கூடங்களின் கல்வி புறக்கணிப்பு நிலையை மாற்ற போராடாமல் ( உண்மையில் வர்க்க போராட்டம்) தனியார் பள்ளி கூடங்களின் கல்வியை மட்டுபடுத்தும் போராட்டங்கள் (தனியார் மய கொள்ளை என்கிற கோசத்தில் ) ஆகியவற்றின் மூலம் தான் ஒரு
கம்யூனிஸ்டு கட்சி அல்ல என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது மக இக மற்றும் அதன் துணை அமைப்புகள்
மேற்கண்ட தவறுகளுக்கெல்லாம் என்ன காரணம் அரசமுதலாளித்துவத்தை ஆதரிப்பது என்கிற தேசியவாத புத்தியே காரணம் உண்மையில் ஒரு இரயில்வே போராட்டம் நடந்தால் அதை ஒடுக்க 1971ல் இராணுவத்தை கொண்டுவந்தது இந்த அரசமுதலாளித்துவம்தான்
தனியார் முதலாளித்துவமும் அரசமுதலாளித்துவத்தை போன்றதல்ல ஆனால் அரசமுதலாளித்துவம் போராட்டத்தை போராடுபவர்களை அழித்துவிடும் ஆனால் இதைத்தான் ஆதரிக்கிறார்கள் நம்ம காம்ரேடுகள் தனியார் மய எதிர்ப்பு தாராளமய எதிர்ப்பு
என முழங்குவதில் இருக்கும் உண்மை என்ன முதலாளித்துவம் தன்னை மீட்டமைக்க எடுக்கும் அவதாரங்களே இவை ஆனால் நமது எதிரி யார் என்றால் முதலாளிகளும் முதலாளித்துவ அமைப்புமே தவிர அதன் அவட்தாரங்கள் இல்லை .
எந்தளவுக்கு தனியார் மயத்தை எதிர்கிறீர்களோ அந்தளவுக்கு அரச முதலாளித்துவத்தை ஆதரிக்கிறீர்கள் என அர்த்தம் அத்தகைய அரசமுதலாளித்துவத்தின் ஒரு பகுதிதான் இங்குள்ள பள்ளி கூடங்களும் அதில் கொடுக்கப்படும் கல்வியும் தனியார் மயத்தை எதிர்க்கும் போராட்டங்களை மட்டும் நடத்துவது எதிர்நிலையில் அரசமுதலாளித்துவத்தையும் அதன் பிற்போக்கு நிலையையும் ஆதரிப்பதாகும் இதன் மூலம் தமது மொத்த செயல்பாடுகளுமே பிற்போக்கு தனமாக மாறுவதில் போய் முடிகிறது .
அதற்காக தனியார்மயத்தை ஆதரிக்க சொல்லவில்லை ஆனால் முதலீட்டின் வடிவங்களை எதிர்ப்பதெல்லாம் முதலாளித்துவத்தை எதிர்ப்பதாகாது எனவே முதலாளித்துவத்தை எதிர்த்து நடத்தவேண்டிய மிகப்பெரிய பணியில் திரிபு வாதத்தின் பின்னே செல்வதும் புரட்சிக்கு மிகப்பெரிய தீங்கு விளைவிக்கும் அதைத்தான் இவர்கள் செய்துகொண்டுள்ளார்கள்
அடுத்து தமிழ்நாட்டில் எங்குமே ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் நடக்கமுடியாத அளவுக்கும் ஏன் ஈழ பிரச்சனை உள்ளிட்ட எந்த நியாயமான பிரச்சனைக்கும் போராட துணிபவர்களின் மீது பெரிய அளவில் அடக்குமுறை ஏவிய கருணாநிதி கும்பலின் சமச்சீர் கல்வி திட்டம் என்னவோ பெரிய புரட்சிகர திட்டம்மாதிரியும் அதற்கு போராடி உள்ள இருக்கிறவனெல்லாம் தியாகிமாதிரியும்.
பஸ்ஸ மறிக்க மாணவர்களை அழைச்சிட்டு போய் அவர்களை போராளிகளாகவும் சித்தரிக்கும் இந்த பு.மா.இ.முன்னனி செய்யும் காமடிகள் அளவில்லாமல் போய் கொண்டு இருக்கின்றன
நானும் ரவுடிதான் இவங்க சும்மா டீ குடிக்கிற பிரச்சனைக்கெல்லாம் போராட்டம் நடத்திட்டு நாங்களும் ரவுடிகளுக்கு சமமா பேசிட்டு இருக்கோம்னு சீப்பில் ஏறுவதை சீரியசா செய்துட்டு இருக்கிறார்கள்
சாராம்சமாக:
யப்பா நீங்க போகும் பாதை நெம்ப தப்பு அவ்ளோதான் நான் சொல்லமுடியும்
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================