மலர்களை பறிப்பதை போன்றிருப்பதில்லை விவாதங்கள்
நடைபாதை ஓரத்து இருக்கையில் அமர்ந்து மெல்லிய இசையை கேட்டபடி அமர்ந்திருக்கும் ஒரு நபரை போல நீஙகள் விவாதத்தை படிக்கவோ கேட்கவோ முடியாது .
விவாதிப்பவர்களை விட இதில் பார்வையாளர்களும் தங்களை அறியாமல் பங்கேற்கிறார்கள் ஆகவே விவாதத்தில் பார்வையாளர்கள் இருக்க முடியாது
விவாதம் என்பது சர்ச்சை அல்ல அதை சர்ச்சையாக்க வேண்டியதுமில்லை
ஒரு வேளை விவாதத்தில் இருந்து நீங்கள் விலகலாம் ஆனால் விவாதம் உங்கள் மனதுக்குள் தொடர்கிறது எந்த விவாதமும் வீணாவதில்லை என்றாவது ஒரு நாள் திறந்த மனமும் செயலூக்கமும் கொண்டவர்களுக்கு அது பயன்படலாம் .
விவாதத்துக்கு முக்கியம் கருபொருள் என்பதை நான் மறுக்கிறேன் விவாதம் என்பது ஒரு கருபொருளை கண்டடைய முயல்கையில் நிறைய விசயங்களை தொடுகிறது
சர்ச்சையாக மாறும் விவாதத்தில் கவனித்து பாருங்கள்
யாரொ ஒரு பகுதியாட்கள் விவாதத்தை நடத்த முடியாமல் சர்ச்சையாக்கி இருப்பார்கள் அப்போது எதிர்தரப்பினரின் வாதங்களில் உண்மை இருக்கலாம்
உண்மையாகவே விவாதம் செய்ய முற்படுபவர் கற்பவராக இருந்தால் நிறைய கற்று கொள்கிறார் போதிப்பவரும் கற்று கொள்ளாமல் விவாதத்தை தொடர முடியாது அதனால் விவாதத்தின் அடிப்படையே கற்றல்தான்
புதிய விவாத களங்களை எவ்வளவுக்கு எவ்வளவு உருவாக்குகிறோமோ அவ்வளவு அவ்வளவு நாம் கருத்துரீதியாக விடுதலை அடைகிறோம்
விவாதத்தின் முக்கிய எதிரி நம்பிக்கை நீங்கள் நம்பிக்கையை வைத்து கொண்டு விவாதத்தில் இறங்கினால் உங்களின் ஒரு கால் இன்னும் தரையிலேயே இருக்கும் நீச்சல்காரனை போன்றது
அடுத்தவர்களின் முரண்பாடுகளை எடுத்து காட்டுதலே சிறந்த விவாதம் இது சாக்ரடீசிடம் இருந்து தொடங்குகிறது
--
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================