ஊழல் எல்லாம் ஒரு பிரச்சனையா? அதை போய் பேசிகிட்டு போராடிகிட்டு என சொல்வோர் கவனிக்க !

ஊழல் எல்லாம் ஒரு பிரச்சனையா? அதை போய் பேசிகிட்டு போராடிகிட்டு என சொல்வோர் கவனிக்க !

 

 

ஊழல் என்பது நம்ம நாட்டில் மிக சாதாரண பிரச்சனைங்க எல்லா நாட்டிலும் ஊழல் இருக்கும் ஏன் அமெரிக்காவில் இல்லையா இங்கிலாந்தில் இல்லையா கரப்பான் பூச்சி எந்த நாட்டில் இல்லை சொல்லுங்க அதை ஒழிக்க முடியுமா ஏன் கொசு எந்த நாட்டில் இல்லை அதை ஒழிக்க முடியுமா என மிக சாதரணமாக போகிற போக்கில் கேள்விகளை சிலர் கேட்டு விடுவார்கள்

 

ஒரு பாலத்தில் செல்லும் பஸ் பாலம் உடைந்து விழுந்ததால் கீழே விழுந்து நொருங்கி அதில் பயணம் செய்த ஒரு பத்து குழந்தைகள் இறந்து விட்டன ஏன் இந்த பாலம் உடைந்தது என்ற கேள்வியை கேட்டால் சரியான கட்டுமான பணி செய்யப்படலை யார் கான்ராக்டு எடுத்தது நம்ம சுப்பன் வகையறா யார் டெணடர் விட்டது நம்ம சோ கால்டு மந்திரி வகையறா நடந்தது என்னவென விசாரித்தால் "ஊழல்" என்ற மூன்றெழுத்தில் வந்து நிற்கும்

 

மூன்றெழுத்தில் பல குழந்தைகள் இறந்து போக காரணமும் காரியமும் அடங்கி விட்டது .

 

முன்பு பேசினாரே ஊழல் நம்ம நாட்டில் மிக சாதாரணமான பிரச்சனை அப்படின்னு அவரோட குழந்தை

இறந்து போன குழந்தைகளில் ஒருவர்னு வச்சுகிவோம் அப்ப இப்படி பேசமாட்டார்

 

"சார் நாட்டில எங்க பார்த்தாலும் ஊழல் லஞ்சம் தலைவிரிச்சு ஆடுது எதாவது செய்யனும் சார்" என்பார்

 

அட கொய்யால தனக்கு வந்தால்தான் ரத்தம் மத்தவனுக்கு வந்தால் அது தக்காளி சட்னியா ?

 

அடுத்து இந்த போராட்டம் கைது இதெல்லாம் ஒரு நாடகம் இதெல்லாம் ஊடகபரபரப்புகான விசயங்கள் என பேசும் அறிவு ஜீவிகள் இருக்காங்க ஏன் இந்த போராட்டமே ந்க்கொய்யால ஊடகாரன் எழுதுவதால் தான் பேமஸ் ஆகிட்சுட்டு என சொல்லுவாங்க

 

இவங்க வேற டைப்பு சமச்சீர் கல்வி என்கிற மேட்டரை பெரிய புரட்சி மாதிரி பேசி அதில ஒரு சின்ன போராட்டம் செய்து பக்கதில உள்ள போலீஸ் ஸ்டேசனுக்கும் சிறைக்கும் போனவன் எல்லாம் போராளி இவனுகளுக்கு ஆனால் ஊழல் ஒரு பிரச்சனை இல்லை இதெப்படி தெரியுமா தான் செய்யும் போராட்டம் அது உப்புக்கு பெறாத ஒரு பிற்போக்கு போராட்டம் என்றாலும் அது பெரிசு அடுத்தவனுக்கு வந்தா அது தக்காளி சட்னி இதான் இவனுக பாணி முதலாமவருக்கு இரண்டாமவருக்கு இந்த குறிப்பிட்ட விசயத்தில் எந்த வித்தியாசமும் இல்லை

 

சரி மேட்டருக்கு வருவோம்

 

ஊழல் எதனால் உண்டானது எப்படி போகும் இந்த லோக்பால் எல்லாம் முடிவான தீர்வா என்று கேட்டால் இல்லை என்றும் ஆனால் இது ஒரு சீர்திருத்த வகை பட்ட ஒரு முன்னேற்றம் என்றும் கூறலாம்

 

எப்படி தாழ்த்தபட்ட மாணவனுக்கு இடஒதுக்கீடு கொடுத்து கொடுத்து அப்படியே தாழ்த்தபட்ட சமூகத்தை உசத்திட்டா புரட்சி தேவை இல்லைன்னு அர்த்தம் அல்ல ஆனால் இட ஒதுக்கீட்டை ஒரு சீர்திருத்தமாக தற்காலிக நிவாரணமாக் ஏற்று ஆதரிக்கிறோம் அதை போலத்தான் லோக்பால் பில்லும்

 

இதை சும்மா டுபாக்கூர் போராட்டம் என சொல்பவர்கள் இரண்டு பேரு ஒன்று போராட்டத்துக்கு போகாதவன் இன்னொன்ன்னு இதை போல ஒரு போராட்டத்தை நடத்த முடியாதவன்

 

 

லஞ்ச ஊழலின் ஊற்று கண் எது ?விசயத்தை குறுக்கி பார்ப்பதில் பெரிய பிரச்ச்சனைகள் இருக்கின்றன எப்படியெனில் சமச்சீர் கல்வி என்கிற ஒரு விசயத்தை கல்வி என்கிற பெரிய விசயத்துடன் சேர்த்து பார்க்காமல் பார்க்கும் அபாயம்தான் அது ?

 

சமச்சீர்கல்வி தேவையா இல்லையான்னு மொட்டையா ஒரு கேள்வி கேட்டால்

 

ஆனால் மொத்தமா சமூகத்துக்கு வழங்கப்படும் கல்வி அதன் தரம் அதன் மூலம் உற்பத்தி நடைமுறைக்கு தேவை படும் தொழிலாளர்கள் எப்படி உருவாகிறார்கள் அவர்கள் எப்படி ஒரு வேலை கேட்டும் வர்க்கமாக திரளுவார்கள் அவர்களின் கூர்முனையை மழுங்கடிக்க எப்படி பட்ட கல்வியை வழங்குவது மேலும் வர்க்க போராட்டம் இல்லாமல் வெறும் சமூக விடுதலை போராட்டத்தை நடத்துபவர்களின் பார்வை  என்பவற்றை ஆராயாமல் இந்த விசயத்தை பேசும் போது நாம் எப்படி தவறிழைப்போமோ அத்தகைய தவறைத்தான் நாம் ஊழல் அன்னா ஹசாரே என விசயத்தை சுருக்கி பார்க்கும் விசயத்திலும் செய்வோம்

 

ஊழல் எப்படி ஏற்பட்டது என்பதற்கு நீங்க இந்தியாவின் அரசு முதலாளித்துவம் ஏற்பட்ட காரணத்தில் இருந்து வரவேண்டும் எல்லாமே தேசியமயம் எல்லாமே அரசு இயக்கும் நிருவனங்கள் என்பதே சோசலிசம் என புரிந்து கொண்டார் நேரு ( அன்றைய ருஸ்யாவில் இருந்த பலரால் இது கண்டிக்கபட்டது வர்க்க போராட்டம் இல்லாமம் சோசலிசத்தை கனவு காண்கிறார் நேரு என விமர்சிக்கப்பட்டது)

 

 

முக்கிய பலதுறைகளில் அரசு முதலாளித்துவம் தோன்றியபோதே அதில் விரிவான வளர்ச்சி என்பது ஏற்பட முடியவில்லை ஏனெனில் அரசு முதலாளித்துவம் என்பது அதிகாரிகளால் ஆளப்படும் ஒன்றாகையால் அவர்களே லஞ்சத்தை வளர்த்து விட்டவர்கள்

 

இதற்கிடையே மூலதனம் தனது வளர்ச்சியை நோக்கி பரந்து விரியும் போது அது உலகளவில் நடக்கும் போது காட் போன்ற பன்னாட்டு ஒப்பந்தங்கள் வருவது அவசியமே எனும் சூழலில் நாட்டின் உள்ளே தனியார் மயம் வேறு வழியில்லாமல் ஏற்பட்டது இதன் மூலம் மூலதனம் தன்னை நிர்மாணித்து வளர்த்தது

 

இரண்டுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை அரசு முதலாளித்துவம் தனியார் முதலாளித்துவம் என்கிற போட்டியில் தனியார் மயமே ஊழலுக்கு காரணம் என பேசுபவர்கள் அவதாரத்தை விமர்சிப்பவகள்

 

இப்போ கடவுளுக்கு பல்வேறு அவதாரங்களை சொல்வது போல மூலதனம் பல்வேறு அவதாரங்கள் எடுக்கும் அதையெல்லாம் ஒன்றொன்றாய் அழிக்க முடியுமா

 

மூலதனத்தை தடுக்கவும் ஒன்றுப்ட்ட மக்கள் திரள் புரட்சியை நடத்தவும் வேண்டும் என்பதான மைய்யமான ஒரு செயல் நோக்கில்அல்லாமல் கிளை கிளையாக போய் கிட்டே இருப்பதுதான் இவர்கள் செய்யும் வேலை.

 

விசயத்துக்கு வருவோம் அதாவது தனியார் மயத்தை ஒழிச்சிட்டா ஊழல் ஒழியும் சொல்வதும் தப்பு

 

ஊழல் தோன்றியதே அரசு முதலாளித்துவத்தில் தான் எனவே இது சரி அது தப்புன்னு சொல்ல முடியாது ஊழல் என்றால் அதற்கான முதல் முன்நிபந்தனை இந்த அரச முதலாளித்துவமும் ஆகும் தனியார் மூலதனமும் ஆகும் ஒன்றை விட்டு இன்னொன்றை அல்ல

 

அடுத்து ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் அது யாரால் நடத்தப்பட்ட போதிலும் அதிலிருந்து விலகும் இடது சாரிகள் ஆளும் வர்க்கத்துக்கு உதவி செய்கிறார்கள் இதில் மாற்று கருத்து இல்லவே இல்லை



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

6 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post