ஒரு பிரச்சனையை சிக்கலாக்குவதை பார்த்து இருக்கிறோம் ஆனால் இடியாப்ப சிக்கலாக்குவதை பார்த்து இருக்கிறீர்களா ? அதான் ஈழ பிரச்சனை என்ன பதில் சொன்னாலும் எப்படி பதில் சொன்னாலும் அது தவறாக போககூடிய சிறு சிறு நிகழ்வுகள்
நடந்து வருகின்றன செங்கொடி தற்கொலை சரியா தவறா என்கிற மிக சாதாரண கேள்விக்கே தவறு என ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட முடியும்
கொலை என்பது ஒரு மனிதனுக்கு இழைக்கப்படும் அநீதி என்றால் தற்கொலை என்பது தனக்கே இழைத்து கொள்ளும் அநீதி 60 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதத்தை
சிறைக்குள் செய்யும் பகத்சிங் கூட அதை ஒரு போராட்டமாக செய்கிறார்
சுகதேவுக்கு தற்கொலை தவறானது என எழுதுகிறார் பகத் சிங் போரின் போது உயிர் போதல் என்பது தவிர்க்க முடியாதது ஒரு போராட்டத்துக்கு உயிர் இழத்தலை அவசியமானது எனலாம்
ஆனால் உயிர் இழப்பதையே போராட்டமாக செய்வதும் அதை பயன்படுத்தி சிலர் அரசியல் லாபம் அடைவது சகிக்க முடியாதது இதை சரி என சொல்லும்
மக இக அதன் உறுப்பினர்களும் ஏன் தற்கொலை செய்து அதை ஒரு போராட்டமாக்குவதில்லை என்பது யோசிக்க வேண்டியது .
//அரசியலற்ற அமைதியிலும், விரக்தியிலும், நம்பிக்கையின்மையிலும் மூழகடிக்கப்பட்டிருந்த தமிழகத்தை தனது தீக்குளிப்பினால் இரு ஆண்டுகளுக்கு முன்னர் தட்டி எழுப்பினார் முத்துக்குமார். இன்றும் அதே நிலமையைக் காண்கிறோம். மூவர் தூக்கை நிறுத்தமளவு நம்பிக்கையூட்டும் போராட்டங்களும், அரசியல் முழக்கங்களும் தமிழகத்தை பற்றியிருந்தால் செங்கொடி தீக்குளிக்க நேர்ந்திருக்காது. அந்த வகையில் செங்கொடி தன் மீது ஊற்றிய பெட்ரோலுடன் இன்னும் விழித்தெழாத தமிழகத்தின் அரசியலற்ற கோழைத்தனமும் சேர்ந்திருக்கிறது.//
அதாவது முத்துகுமார் தீக்குளித்தது நியாயம் அதேபோல செங்கொடி தீக்குளித்ததும் நியாயம் அல்லது சரி எனவே போராடாதது மக்களின் முட்டாள்தனம் அல்லது சோம்பேறித்தனம் என விசயத்தை மழுங்கடித்து இன்னொரு செங்கொடி உதயமாக உதவுகிறார்கள்
//தோழர் செங்கொடி சென்று வாருங்கள், உங்களைப் புரிந்து கொண்ட தோழர்கள் பலர் இங்கிருக்கிறார்கள், உயிரைக் கொடுத்து நீங்கள் எழுப்பியிருக்கும் கோரிக்கையை அவர்கள் நிறைவேற்ற போராடுவார்கள். உங்கள் தீக்குளிப்பு அந்தப் போராட்டத்தின் மீது ஒரு நெருப்பாய் பற்றவைக்கும், போய் வாருங்கள்!//
ஆமாம் உங்களை புரிந்து கொண்டு மீண்டும் ஒரு தோழர் தீக்குளித்தால் அதையும் சரி என்போம் என்கிறது இவர்களது கட்டுரை எவ்வளவு பெரிய மடத்தனம் இது
முத்துகுமாரின் சாவின் போதே ஈழத்தை வைத்து பிழைப்பு நடத்தும் வைக்கோ முதல் ராமதாஸ் வரையிலான பிழைப்பு வாதிகள் புலிகளின் அரசியலற்ற போக்கு இவற்றை கண்டித்து இருந்தும்
முத்துகுமாரின் சாவு சரியானது அல்ல என்கிற விமர்சனம் வைத்து இருந்தாலும்
மேலும் மேலும் முத்துகுமார்களும் செங்கொடிகளும் தற்கொலை பாதையே போராட்ட பாதை என சென்றிருக்க மாட்டார்கள் இவர்கள் தான் தோழர்களை கொலை ய்கிறவர்கள்
தவறான வழிகாட்டுதலில்.
போராட்டம் தீர்வு என்று நானும் சொல்கிறேன் ஆனால் இம்மாதிரி தற்கொலை போராட்டம் மூலம் அல்ல நண்பர்களே !
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================