இதைவிட சிறந்த தலைப்பு இருந்தால் அதை போட்டு கொள்ளுங்கள்
தற்கொலைக்கு ஆதரவான சப்பை கட்டுகள் இதோ
http://www.vinavu.com/2009/01/30/eelam14/
//ஒவ்வொரு தற்கொலையும் அநீதியான இந்த சமூக அமைப்பிற்கு எதிராக நடத்தப்படும் கலகம் என்றார் மாவோ. பிறந்தவர் எவரும் என்றாவது ஒரு நாள் மரிக்கப் போகிறோம் என்றாலும் அனைவரும் வாழவே விரும்புகிறோம். வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் உயிருள்ள மனதனுக்கு மரணம் என்றால் அச்சம்தான்.//
இந்த பாராவின் முதல் வரி மாவோ தற்கொலை சரி என சொன்னதை போல திரிக்கப்பட்டுள்ளது அடுத்த வரி
தற்கொலை செய்பவர்கள் வீரர்களை போல சொல்லப்பட்டுள்ளது எத்தனை முரண்.
அரசு என்பது ஒரு எந்திரம் அது இதை போன்ற தற்கொலைகளை கண்டுகொள்வதில்லை என்பதை அறியாதவர் செங்கொடி அதையும் புரிந்து கொண்டுதான்
இருக்கிறார்கள் வினவு அன் கோ இதோ
//எனினும் போருக்கெதிராக தமிழகத்தில் எழுப்பப்படும் கோரிக்கைகளையோ போராட்டங்களையோ இந்திய அரசு கடுகளவும் சட்டை செய்யவில்லை. எத்தனை ஆயிரம் ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்பட்டாலும், விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்துக் கட்டும் வரையில் இந்தப் போரைத் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் ராஜபக்சே அரசுக்கு உறுதுணையாக நிற்கிறது இந்திய அரசு.//
ஏனெனில் அரசு என்பது ஒரு ஒடுக்குமுறை கருவி என்கிற முடிவுக்கு வரும் கட்டுரையாளர் இன்னமும் தற்கொலை
என்பது சரியானது என்கிற நிலைபாட்டை எடுத்து கொண்டுதான் இருக்கிறார்
உலகில் தோன்றிய கம்யூனிஸ்டு போராட்டங்கள் மக்கள் எழுச்சிகள் என எத்தனையோ முன் உதாரணங்களும்
போராட்ட வடிவங்களும் இருக்கும் சூழலில் தற்கொலை
என்பதை ஒரு போராட்டமாக அங்கீகரிக்கும் மனநிலை என்ன என்பதே கேள்வி
இத்தகைய எழுச்சிகளை தற்கொலைகள் கொண்டு வருமென்றால் உழைக்கும் மக்களை தற்கொலை செய்து கொள்ள தூண்டும் இவர்கள் ஏன் தாங்களே தற்கொலை செய்து ஒரு முன் உதாரணத்தை ஏற்படுத்த கூடாது ?
தட்டச்சு செய்து பிழைத்த முத்துகுமாரனும் , உழைக்கும்
வர்க்கத்தை சேர்ந்த செங்கொடியும் சாவதை வாயார புகழும் மத்தியதர வர்கத்து வினவு இதே தற்கொலையை
அது செய்வதில்லை ஏனெனில் உபதேசம் மக்களுக்கு மட்டுமே (இது தனிமனித தாக்குதல் அல்ல )
தற்கொலை என்பது ஒரு போராட்டமல்ல என்பதை ஆணித்தரமாக எடுத்து வைக்கும் பகத் சிங் இன்றிருந்து சுமார் 75 ஆண்டுக்கு முன்னமே மார்க்சிய ரீதியான ஒரு கண்ணோட்டத்துக்கு வந்து பேச முடிகிறதென்றால்
அவரது புரிதலுக்கும் இவர்களின் புரிதலுக்கும் உள்ள இடைவெளி மலைக்கும் மடுவுக்கு இடைப்பட்டதாகும்
சுகதேவ் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார்
//சுகதேவ் தனது கடிதத்தில் தனக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எழுதியிருந்தார். ஒன்று, தனக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட வேண்டும் ; இல்லாவிட்டால் விடுதலை செய்யப்பட வேண்டும். இரண்டுக்கும் இடைப்பட்ட தண்டனை எதிலும் தனக்கு உடன்பாடில்லை என்று அவர் கூறியிருந்தார். //
அவருக்கு பதிலளிக்கும் முகமாக பகத் சிங் எழுதிய கடிதம்
//ஒரு நாள் தற்கொலையைப் பற்றி உன்னிடம் நான் விவாதித்தேன். அதனை இப்பொழுதும் கூட நினைவுபடுத்திப் பார்க்க முடியும். அப்போது நான், சில சூழ்நிலையில் தற்கொலை நியாயப்படுத்தப்படக் கூடியதாக இருக்கலாம் என்று கூறினேன். ஆனால் எனது கருத்திற்கு நீ எதிர்ப்புத் தெரிவித்தாய். நாம் பேசிக் கொண்டிருந்த இடமும் நேரமும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஷாகன்ஷாஹி குடியாவில் ஒரு மாலைப் பொழுதில் இதனைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருந்தோம். அத்தகையதொரு கோழைத் தனமான செயலை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்று நீ இகழ்ந்து கூறினாய். இது போன்ற செயல்கள் கோரமானவை என்றும் கொடுமையானவை என்றும் கூறினாய்.
ஆனால், இப்பொழுதோ இந்த விஷயத்தில் நீ தலைகீழாய் மாறியிருப்பதை நான் பார்க்கிறேன். இப்பொழுது, சில சூழ்நிலைகளில் தற்கொலை ஏற்றுக் கொள்ளத்தக்கதே என்பதாக மட்டுமல்ல, அது தவிர்க்க முடியாததாகவும் - ஏன் அவசியமான தாகவும் கூட நீ பார்க்கிறாய். முன்பு நீ என்ன கருத்து வைத்திருந் தாயோ அதுவே இன்று என்னுடையது. அதாவது, தற்கொலை என்பது ஒரு கொடுமையான குற்றம். அது முழுக்க முழுக்க ஓர் கோழைத்தனமான செயல். புரட்சியாளர்களை விடு, எந்தவொரு தனிமனிதனும் அத்தகைய செயலை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது.//
தற்கொலை என்பது புரட்சியாளர்கள் அல்ல யாருமே செய்ய
கூடாத ஒன்றானது என்பதை அடித்து பேசும் பகத் சிங்,
மார்க்சிய ரீதியாக தனது சித்தாந்தத்தில் பற்று கொண்ட ஒரு மனிதனாக தெரிகிறார்
எனக்கோ ராஜீவ் கொலையாளிகள் எனப்படும் மூவருமோ
அல்லது அவர்களை விடுதலை செய்யகோரும் செங்கொடியோ தமது சித்தாந்தத்தின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையோ தெளிவோ இருப்பதாக படவில்லை
எல்லாவற்றையும் மெய்நிகர் உலகத்தில் எழுதி திரியும் இந்த மக இக கும்பலோ இந்த திரிபுவாதத்தை உணர்ந்தே செய்கிறது ஏன்?
மரணத்துக்கு காத்திருக்கும் பகத் சிங்
தான் கொண்ட லட்சியத்தின் மீது உறுதியாக இருக்கிறார்
//இது தவிர, நமது தோழர்களில் தமக்கு மரணதண்டனை வழங்கப்படும் என்று நம்பும் தோழர்கள், தண்டனை அறிவிக்கப் பட்டு அவர்கள் தூக்கிலிடப்படும் நாள் வரையிலும் பொறுமையாக காத்திருக்க வேண்டும். இந்த மரணமும் கூட மனநிறைவானதே. //
ஆனால் தனி ஈழத்தை கனவாக கொண்டவர்களோ உயிர் பிச்சை கேட்கிறார்கள்
அவர்களுக்காக போராடுபவர்களோ தற்கொலை செய்து
போராடுகிறார்கள்
ஒரு பக்கம் உயிரின் மேன்மையை பேசும் ஒருவன் இன்னொரு பக்கம் தற்கொலையை ஆதரிப்பதுதான்
அன்னா போராட்டம் முடிந்ததும் மங்காத்தா படம் பார்க்கும் மனநிலை இதுதான்
இன்னொரு விமர்சனத்தில்
பணத்துக்காக காதலை உதரும் கதாநாயகனின் மீது
விமர்சனம் வைக்கும் விதமாக
//லட்சுமிராயுடன் படுத்துவிட்டு அவரை தந்திரமாக வெளியேற்றிவிட்டு, காதலி த்ரிஷாவை அப்பாவி போல வரவேற்கிறார். கண்மூடி முத்தமிடுகிற இடைவேளையில் த்ரிஷாவுக்குத் தெரியாமல் லட்சுமிராயின் பர்சை வெளியே நிற்கும் அவரிடம் கொடுத்து விட்டு "என்னாச்சு" என்று கேட்கும் த்ரிஷாவிடம் பல் விளக்கிவிட்டு வரவா என்று இந்தப்பூனையும் பால் குடிக்குமா என்பது போல் சொல்லும்போது இரசிகர்களின் நகைப்பு ஆரவாரத்துடன் மயிர் கூச்செரிகிறது. பணம் கொள்ளையடிக்கப்பட்டவுடன் இனி காதலுக்கு வேலையில்லை என்றவுடன் த்ரிஷாவின் முன்னே அவரது தந்தை செட்டியாரை ஓடும் காரிலிருந்து தள்ளிவிடுகிறார். அப்போது காட்டும் அஜித்தின் முகபாவம் " போங்கடி நீங்களும் உங்கள் காதல் மசுரும்" என்பது போல அபிநயிக்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது//
பணம் வேலை செய்யும்போது காதல் செத்துவிடும் என்பதை அழகாக சொல்பவர்கள்
தற்கொலை பற்றிய போதனை வேறு நிசத்தில் அரசியலுக்காக தற்கொலைகள் வேறு என சிந்திப்பதில் இருந்து மங்காத்தா நாயகனை விட வேறானவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கிறார்கள்
முத்துகுமார் இறந்தபோதே ஏன் போனீர்கள் என கேட்டார் இரயாகரன் அவர் வறட்டுவாதி என இகழ்ந்த இவர்கள்
இன்று செங்கொடியை தூக்கி நிறுத்தி தங்களின் ஓட்டாண்டிதனம் அம்புட்டு தூரம் கெட்டது என
காட்டிவிட்டார்கள்
செங்கொடிகள் போற்றப்படவேண்டியவரல்ல
கண்டிக்கப்பட வேண்டியவர்
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================