நரோத்தினசத்தை எதிர்த்த போராட்டமே லெனினிசமாக ருஸ்யாவில் வளர்ந்தது . //லெனின் அண்ணன் அலக்சாந்தர் சார் மன்னரை கொலை செய்ய முயன்று தூக்கில் போடப்பட்டவர்//
லெனினின் அண்ணன் சென்றது நரோத்திசம் எனப்படும் தனிநபர் அழிப்பு பாதை அதுவும் தவறானது மற்றும் தற்கொலை பாதை எனப்படும் புலிகளின் பாதையும் தவறானது . இவை எல்லாம் மார்க்சிய வழியல்ல .
எந்த தனிமனித அழிப்பும் எந்த விசயத்துக்கும் தீர்வல்ல
(ஜார் அல்லது ராஜீவ் காந்தி) எந்த தற்கொலையும்
போராட்ட வழியல்ல (முத்துகுமார் அல்லது செங்கொடி)
மக்களின் அறிவை தூண்டாமல் உணர்வை தூண்டுவது இழி செயல்
ஏன்
1.சமூக மாற்றத்திற்கான அடிப்படை வர்க்க போராட்டம் என நம்புபவர்கள் மார்க்சியவாதிகள் அவர்கள் தனிநபர் அழிப்பை அல்லது தற்க்கொலையை பாராட்டுவது ஊக்குவிப்பதும் இல்லை
2.இன போராட்டம் என்பது தற்கால சூழலில் மறுகாலனியாதிக்க சூழலில் வர்க்க போராட்டமாகவே கொண்டு செல்லப்படவும் ஏகாதிபத்திய எதிர்ப்பி மூலமே
உருவாகவும் வேண்டும்
3.தனிபட்ட இனங்களுக்கிடையே மோதல் என்பது பகைமை என்பது தீர்வு நோக்கி செலுத்தாது அது வர்க்க பகைவர்களுக்கு உதவியே செய்யும்
தமிழ்நாட்டில் இன வெறுப்பு வளர்கிறது :
ஈழத்தில் எந்தளவு இனவெறுப்பு அரசியல் நடந்ததோ அது இப்போது தமிழ்நாட்டில் வளர்கிறது
தமிழ் நாட்டின் பிழைப்பு வாத அரசியல் புலிகளின் அழிவுக்கு காரணமாக இருந்தது அது அந்த மக்களை குழி தோண்டி புதைத்தது
அதையே தற்போது இடது சாரிகள் எனப்படும் மக இக செய்து வருகிறார்கள்
வர்க்க பாதையோ
அரசியல் திசைவழியோ எதுவுமே
பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை நோக்கியே இருக்க வேண்டும் என்பதை மறந்து விட்டார்கள் அல்லது மறைக்கிறார்கள்
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================