ஒரு ஞாயிற்று கிழமை நாளில் மண்டையில் மயிர் நட்டுகிட்டது why?

ஒரு ஞாயிற்று கிழமை நாளில் எனது பதிவை படித்தவிட்ட நடுத்தரவர்க்கத்து ஆசாமிக்கு
மண்டையில் மயிர் நட்டுகிட்டது என்னது இந்தாள் இந்தியாவில் புரட்சி வரும்னு பேசிட்டு இருக்கான்
என்னமோ புரோட்டா வேண்டும் என்பதுபோல அப்படின்னு அவனுக்கு
சந்தேகம் ?

ஒரு கிலோ கறியை வாங்கி மசால் போட்டு வறுத்து சாப்பிட்டு தூங்கும்
நேரத்தில் லேசா ஆனந்த விகடனோ குமுதமோ மண்டையில் எந்த டிஸ்டர்ப்பும் செய்யாத ஒரு பீரோ குடித்து விட்டு ஒரு ஞாயற்று கிழமை நாளை தள்ளி இருக்கலாம்

இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையாகவெனும் டிவிக்காரன்
போடும் படத்தை பார்த்துட்டு அக்கடான்னு சாயுங்காலம் போய்
மைலாப்பூர் கோவிலில் உக்கார்ந்துட்டு

நாடே கெட்டு குட்டி சுவராயிட்டுது ஒரு மாற்றம் வரனும் பாஸ்னு
மாற்றத்தை பத்தி பேசுபவனிடம் புலம்பிவிட்டு காருக்கு டோக்கனாக பத்து ரூபாய் கேட்பவனிடம் சண்டை பிடித்து விட்டு சமூகத்தில் ஒழுக்கமே இல்லை என்று அந்த சைக்கிள் ஸ்டாண்டு காரனின் ஒழுக்க குறைவு போல சமூகமெங்கும் ஒழுக்கமும் சீர்கேடும் விரவி கிடப்பதாகவும் ஒரு ஞாயிற்று கிழமையை சரியாக கழிக்க முடியலை என்றும் அந்த ஆசாமிக்கு கன்னாபின்னாவென கோபம் வந்துட்டது

என்ன செய்வது இந்தியாவில் அவர்களும் வாழ்கிறார்கள் இவர்களும் வாழ்கிறார்கள் இன்றுக்கு பூராவும் ஒரு ஆத்தா கூடை நிறைய வாழைபழத்தை சுமந்து விற்கிறது ஒரு ரூபாவுக்கு வாங்க நாதி இல்லை தம்பி என சொல்லும்
அந்த ஆத்தாவுக்கு கோபி போர பாதையில் ஒரு ஏக்கர் தோட்டம் இருக்கு
பூச்சி உழுகிதா காத்தடிக்கிதான்னு பாத்து பார்த்து வளர்த்த வாழை தரும்
வருமானம் அம்புட்டுதான் .

சைக்கிளில் பேப்பர் போடுபவன் , கூலிக்கு மூட்டை சுமப்பவன் எல்லாருக்கும்
ஞாயிற்று கிழமை என்பது ஒருதனி நாள் அல்ல அது வாரத்தில் எல்லா நாளையும் போலவே ஒரு நாள்தான் கஸ்டப்பட்டு தள்ளப்படும் காலத்தில்
ஒரு சிறு துளி பெரிய மலையான பகுதி அது.

நிசமாகவே நடுத்தர மேல்தட்டு நடுத்தர வர்க்கத்துக்கு விவசாயிகள் தொழிலாளர்கள் அல்லது இந்தியாவின் 39 சதவீதமான வறுமை கோட்டு பேர்வழிகளை பற்றி தெரியாது அப்படி தெரிந்தாலும் பேப்பரில் வரும்
கோல்கேட் விளம்பரம் போல வெறும் செய்தி .

இவர்களுக்கு ஆட்சி மாற்றம் ஏன் அதான் ஜனநாயகம் இருக்கே ஒட்டு போடுறமே என்கிற நினைப்பால் இந்தியாவில் புரட்சி பற்றி பேசுகிறவன் மேல் வரும் கடுப்பு இருக்கே அது வயிற்றாலை போல வயிற்றில் வயித்த கடுப்பு வந்தது போல இருக்கும் உணர்வு

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post