இந்தியாவில் இணையம் மூலம் புரட்சி சாத்தியமா

இந்திய ஜனதொகையில் சுமார் 8.5 சதவீதமானோர் இணையத்தை பயன்படுத்துகிறார்கள் அதில் சுமார் 14 சதவீதமானோர் பிளாக்குகளை வைத்துள்ளார்கள் அதாவது 40 லட்சம் பிளாக்குகள் இருக்கின்றன .

எகிப்தில் 80 மில்லியன் பேர் தான் இருக்கிறார்கள் அங்கே ஒரு லட்சத்து 60 ஆயிரம் பிளாக்கர்கள் இருக்கிறார்கள்

என்ன வித்தியாசம் என்றால் இந்தியாவில் எழுதப்படும் நிறைய பிளாக்குகள் சமூக மாற்றத்தையும் அது தொடர்பான பதிவுகளையும் எழுதுவதில்லை

எகிப்தில் எழுதப்பட்ட பெரும்பாலான பிளாக்குகள் ஜனநாயகவாதிகள் நாத்திகர்கள் ,மார்க்சியவாதிகள் எழுதப்பட்டவை மதவாத ஆதரவு பிளாக் 4 மட்டுமே இருந்ததாம்

புரட்சியின் போது பிளாக்கர்களே அரசியல் பங்கேற்பர்களாகவும் அரசியல் பங்கேற்பாளர்கள் பிளார்க்கர்களாகவும் இருந்திருக்கிறார்கள்

அரசியல் கருத்துக்களை விவாதிப்பவர்களாகவும் சிந்திப்பவர்களாகவும் எழுது தூண்டுதலே காரணமாக இருக்கும் போது அது செயல்வடிவம் பெறுவது இயற்கையே மாறாக இன்றுள்ள நிறைய அரசியல் வாதிகள்
எத்தனை பேர் ஒரு விசயத்தை விவாதிக்கிறார்கள் தீர்வுகளை தேடுகிறார்கள் அதற்கான நேரத்தை செலவிடுகிறார்கள் என்றால் மிக சொற்பமே.

அரசியல் என்பது லஞ்ச லாவண்ய பிழைப்புவாதமாக போனதன் ப்பின்னே படித்தவர்கள் இந்தியாவில் அரசியலை விட்டு விலகியே இருக்கிறார்கள் ஆனால் பிளாக்கர்கள் அதை பற்றி சிந்திக்கிறார்கள் எழுதுகிறார்கள் ஒரே குறை அவர்களுக்கு ஒரு செயலை செய்ய ஒருங்கிணைப்பும் அதிக எண்ணிக்கையில் மக்கள் ஆதரவும் இல்லை .


மற்றொன்று இந்தியாவில் இருக்கும் மொழி பிரச்சனை

கீழ்கண்டவாறு இந்தியாவில் பிளாக்கர்கள் முக்கியமாக நகரத்தில் மட்டுமே இருக்கிறார்கள்
(புள்ளி விபரம் பல்வேறு தளங்களில் இருந்து எடுக்கப்பட்டது)
மும்பை - 927 (ப்லொக், வேர்ட் பிரஸ், லைவ் ஜர்னர் சேர்த்து)
டெல்லி - 686
கல்கத்தா - 409
சென்னை -1067
பெங்களூர் -1138
ஹைதராபாத்- 1074
அகமதாபாத் - 119
புனே -821

இந்தூர்- 204
ஜெய்பூர்-188
வ்சாகபட்டினம் -200
பாட்னா -197
ராஞ்சி - 161
கொச்சின் -212
லக்னோ -138
சண்டிகர் - 101
கவுகாத்தி -87
ஜபல் பூர் - 72



மேற்கண்ட கணக்கின் படி பாத்தால் ப்ளாக்கர்கள் ஒரு சிட்டிக்கு ஆயிரம் பேர் இருப்பதே பெரிய விசயமாக இருக்கிறது

இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும்

மேலும் புதிய புதிய பிளாக் எழுதுபவர்கள் வாசிப்பாளர்கள் உருவாக்க ஒவ்வொரு பிளாக்கரும் முனையனும்

இதன் மூலமெல்லாம் புரட்சி நடக்குமென்று நம்புகிறீர்களா என கேட்டால்
எகிப்தை பாருங்கள்

ஒருங்கிணைப்பு :

தற்போது இருக்கும் பிளாக்கர்களை பேஸ்புக்கிலோ அல்லது டிவிட்டரிலோ ஒருகிணைக்கப்படவேண்டும்
ஒரு கம்யூனிட்டி என்பது குறைந்தது பொரு லட்சம் பேர் வரை கொண்டு வர முனைந்தால் இந்திய அளவில்
விசயங்களை கொண்டு போக முடியும்

பிளாக் எழுதுவதும் அதை கொண்டு செல்வதும் ஒரு விழாவை போன்று நடத்தப்படவேண்டும் முதலில் இது செய்யப்பட்டது தற்போது இல்லை ( 2005- 2006 )


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post