கட்சி முக்கியமா.. கனிமொழி முக்கியமா?'' ஆனந்த விகடன் முக்கியமா

தந்தை மருகிறாரம் மகள் பட்டும் படாமலும் பேசுகிறாராம் இதை மக்கள் எந்த மனநிலையில் படிக்க கூடாதோ அந்த தனி குடும்பத்தின் மன நிலையில் எழுதி இருக்கிறார்கள் விகடன் .

அரசு பதவிக்கு வந்தவுடன் தந்தை மகள் கூட்டு கொள்ளை பேரம் என நடத்தி விட்டு திருடர்கள் கூட்டம் நடந்தது போல இருக்கிறது எழுதிய விதமோ கொஞ்சம் கூட மக்களுக்கு இந்த விசயத்தில் ஆளும் திமுகாவின் மீதான கோபத்தை பிரதிபலிக்காமல் என்னமோ இட்டலிக்கு சட்னி வைக்கவில்லைங்கிற விசயம் மாதிரி எழுதுகிறது .

நல்ல பத்திரிக்கைகள் நல்ல ஜனநாயகம்

ஆனால் பாருங்கள் மத்தியதர வர்க்கத்தின் அதிக வாசிப்பாளார்கள் படிக்கும் ஒரு பத்திரிக்கையாக இந்த விகடனும் நக்கீரனும்தான் இருக்கிறது

ஜனநாயகத்தின் ஒரே தூணாக தேர்தல் கமிசன் இருப்பது போல இந்த முனை மழுங்கி பத்திரிக்கைகள்தான் ஒரே தகவல் கருத்து களமாக தமிழ் நாடெங்கும் வலம் வருகிறது


இந்தமாதிரி செய்திகளை படித்து விட்டு கோபப்படுவதற்கு பதில் ஒரு வாசகன் அய்யோ பாவம்னு பரிதாபம்தான் படுவான் பாவம் கருணாநிதி மகளுக்கு பேசுவாரா கட்சிக்குன்னு பேசுவாரான்னுதான்
நினைப்பார்கள் வாசகர்கள்


இந்த கூட்டத்தில் தெரிவதோ அப்பட்டமான திருகல் வேலையும் மொள்ளமாறித்தனத்தை மறைக்க உதவும் செண்டிமெண்டு பிதற்றல்களும் கால்வாரும் அரசியலும் பீ நாற்றமடிக்கும் சுயநல உண்ணிகளின்
குரலும் தான்

இப்படியே எழுதுங்க விகடன் இன்னும் நூறு வருடத்துக்கு

மக்கள் மனம் எந்த அரசியல்வாதிகள் மேலயும் கோபப்படாது

---------------------
கட்சி முக்கியமா.. கனிமொழி முக்கியமா?''

இடியாய் வெடித்த அழகிரி

உயர் நிலை செயல் 'திட்ட'க் குழு என எந்த நேரத்தில் அந்தக் குழுவுக்குப் பெயர்
வைத்தார்களோ... திட்டலுக்கும் குட்ட​லுக்கும் குறைவு இல்லாத கூட்டமாகவே அது அமைந்துவிட்டது.

ஸ்பெக்ட்ரம் குற்றப் பத்திரிகையில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டதால், காங்கிரஸுக்கு எதிராகத் திகீர் கிளப்பும் கூட்டமாகத்தான் அதை நடத்த முடிவு எடுத்தார் கருணாநிதி. ஆனால், எப்போதும் இல்லாத அளவுக்கு, கட்சி நிர்வாகிகளே அவருடைய வாயைக் கட்டிப்போட்டதுதான் அதிர்ச்சியான ஆச்சர்யம்!

உயர் நிலை செயல் திட்டக் குழு கூட்ட அறிவிப்பு வெளியானதுமே, அழகிரியின் கோபம் உக்கிரமானது. ''கனிமொழிக்காக கட்சியின் முக்கியக் குழுவைக் கூட்டுகிற அளவுக்கு தலைவர் முயற்சி எடுப்பது நியாயமா? போகிற போக்கைப் பார்த்தால் கட்சி முக்கியமா? கனிமொழி முக்கியமான்னே தெரியலை?' என்று கொந்தளித்தாராம் அழகிரி.

விளைவு, அழகிரியின் ஆதரவு அமைச்சர்களான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு ஆகியோரும் எம்.எல்.ஏ. தளபதி உள்ளிட்ட பலரும் சென்னை பார்க் ஹோட்டலில் முதல் நாள் மதியம் திடீர்க் கூட்டம் நடத்தினார்கள். ''உயர் நிலைக் கூட்டத்தை ரத்து செய்வது சாத்தியம் இல்லை. காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கப்பட்டால், அதை அழகிரி சார்பாகக் கடுமையாக எதிர்க்கலாம்!'' என முடிவு எடுத்தார்கள். இதற்கிடையில், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோரை அழைத்த கருணாநிதி, ''கனிமொழியின் பெயர் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்டதைக் கண்டித்து நீங்கள்தான் பேச வேண்டும். காங்கிரஸுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கச் சொல்லியும் வலியுறுத்​துங்கள்!'' எனச் சொன்னாராம்.

27-ம் தேதி காலையில் சி.ஐ.டி. நகர் வீட்டுக்கே வந்து, கூட்டத்துக்கு கனிமொழியை அழைத்தார் கருணாநிதி. ஆனால், கனிமொழி மௌனத்தையே பதிலாக்க, ''உன்னுடைய பிரச்னையைப்பற்றி நீதான் பேச வேண்டும். இனியும் நீ அமைதியாக இருக்க வேண்டியது இல்லை!'' என தைரியம் ஊட்டி அழைத்துப் போனார்.

'உள் விவகாரங்கள் மீடியாக்களுக்குக் கசிந்துவிடக் கூடாது!' என்கிற கறார் உத்தரவுடன் தொடங்கியது கூட்டம். ''காங்கிரஸ் திட்டமிட்டு நம்மைப் பழி வாங்கு​கிறது. சி.பி.ஐ-யின் ரிமோட் காங்கிரஸ் கையில்தான் இருக்கிறது!'' என்கிற வாதங்கள் ஆரம்பிக்க, அமைப்புச் செயலாளர் கல்யாணசுந்தரம் எழுந்தார். ''நம்முடைய தன்மானத்தை இனியும் இழக்க வேண்டியது இல்லை. 63 தொகுதிகளை ஒதுக்கியது தொடங்கி, காங்கிரஸுக்கு நாம் எவ்வளவோ செய்துவிட்டோம். ஆனால், அவர்கள் நம்மை ஆடவைத்து வேடிக்கை பார்க்கிறார்கள். அவர்களுடைய துரோகத்துக்கு நாம் சரியான பதிலடி கொடுத்தால்தான், அடங்குவார்கள்!'' எனக் கொந்தளித்தார். அந்த ஆவேசம் அப்படியே பெருக்கெடுக்கும் என கருணாநிதி நினைக்க, திருநெல்வேலி ஏ.எல்.சுப்ரமணியன் எழுந்தார்.

''இந்த விவகாரத்தில் நாம் முழுமையாக காங்கிரஸுக்கு எதிராகத் திரும்பிவிட முடியாது!'' என அவர் மறுக்க, சட்டென தயாநிதி மாறன் மைக் பிடித்தார். ''காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து பிரிவதால், நம்முடைய பிரச்னைகள் சரியாகிவிடுமா என்பதை யோசிக்க வேண்டும். தேர்தல் முடிவு நமக்கு சாதகமாக இருக்கும் என நம்புவோம். ஆனால், காங்கிரஸ் தயவோடு ஆட்சி அமைக்கும் சூழல் உருவானால், அப்போது அவர்களின் தயவை நாம் எந்த முகத்தோடு நாட முடியும்? அவசர​கதியில் எடுக்கிற முடிவு, நமக்கு எதிராகவே திரும்பிவிடும் அபாயம் இருக்கிறது!'' என அவர் அடித்துச் சொல்ல, அழகிரி முகத்தில் சட்டென பிரகாசம்.

ஆனால், கருணாநிதி அப்படி ஓர் அதிரடியை எதிர்பார்க்கவில்லை. திணறிப்போய், ஸ்டாலின் முகத்தைப் பார்க்க, அவர் குனிந்தபடி மௌனம் காத்தாராம்.

அடுத்தடுத்த வாதங்களும், 'கனிமொழிக்காக காங்கிரஸை உதற வேண்டாம்!' என்றே அமைய, 'கனிமொழியைப் பேசச் சொன்னால், நிலைமை புரிபடும்' என நினைத்து அவரை அழைத்தார் கருணாநிதி.

''ஸ்பெக்ட்ரம் வழக்கை நான் தக்கபடி எதிர்கொள்கிறேன். தந்தை என்கிற ஸ்தானத்தில் இருந்து, தலைவர் எனக்காக எதையும் செய்ய வேண்டும் என்று நான் எதிர்​பார்க்கவில்லை. கட்சியின் தலைவராக அவர் என்ன முடிவு எடுத்தாலும், நான் கட்டுப்படுவேன். என்னால் கட்சியின் பெயர் ஒருபோதும் கெடாது!'' என்று பட்டும் படாத வார்த்தைகளை தேர்ந்த அரசியல்வாதியாகப் பேசி கனிமொழி அமர, கருணாநிதி தத்தளித்துப்போனார்.

''கனிமொழியை, கட்சியின் தொண்டராகத்தான் நான் பார்க்கிறேன். என்னுடைய மகள் என்பதாலேயே, அவர் கட்சியில் உயர்ந்துவிடவில்லை. கட்சி நிர்வாகிகளோடு இணைந்து வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தியும், சங்கமம் விழா மூலமாகவும் கட்சிக்கு மிகுந்த நல்ல பெயரை அவர் ஏற்படுத்தி இருக்கிறார். கனிமொழியின் செயல்பாடுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான், அவருக்கு எதிராக சிலர் பேசுகிறார்கள்!'' எனப் பாசம் மிகுந்த தந்தையாகப் பட்டியல் போட்ட கருணாநிதி சட்டென தழுதழுத்த குரலுக்கு மாறி, ''இந்தக் குழுவைக் கூட்டியதற்குக் காரணம், என் மகளைக் காப்பாற்ற​வேண்டும் என்பதற்காக அல்ல. கட்சி சார்பாகக் கனிமொழியைக் காப்பாற்றினால்தான், கட்சியின் செல்வாக்குக்கு ஊனம் ஏற்படாமல் தடுக்கப்படும். கனிமொழி மட்டும் அல்ல... அவருடைய தாயார் உள்ளிட்டவர்கள் படுகின்ற பாடு எனக்குத்தான் தெரியும். கடந்த மூன்று நாட்களாக நான் அங்கு செல்லவில்லை. எனக்குள்ள சங்கடங்களைப் பெரிதாக்கி என்றைக்குமே நான் கட்சியைக் காட்டிக்கொடுக்க மாட்டேன்!'' என உணர்ச்சிப்பெருக்கோடு முடித்தார்.

27 உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில் தனது எண்ணத்துக்கு மாறான 'பின்வாங்கல்' முடிவு அமைந்ததில், கருணாநிதிக்கு ரொம்ப வருத்தம். ஒரு தந்தையாகத் தடாலடி காட்ட முடியாமலும், ஒரு தலைவராகத் தீர்க்கம் காட்ட முடியாமலும், அவர் தடுமாறிப்போனது கண்கூடு!

- இரா.சரவணன்

படங்கள்: வி.செந்தில்குமார்
--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post