ஓசாமா கொலை
ஓசாமாவை கொல்ல ஒபாமா கையெழுத்திட்டாராம் பின்னவரோ நிறைய கொலைகளை சட்டபூர்வமாக செய்து வருகிறார்.
அமெரிக்க எதிர்ப்பாளர்கள் எல்லாரும் தீவிரவாதிகள் என்கிற எண்ணம் உருவாக்கி எண்ணெய் ஊற்றி வளர்க்கப்படுகிறது ஆனால் தீவிரவாதிகள் எல்லாரும் அமெரிக்க எதிர்ப்பாளர்கள் ஏன் என்கிற கேள்வி மட்டும் பதில் மெளனமாக விடுப்படுகிறது .
எண்ணெய் வள நாடுகளில் திடீரென மக்கள் கிளர்ந்தெழுகிறார்கள்
அமெரிக்க நேட்டோ படைகள் உடனடி குண்டு போட்டு
அந்த நாட்டின் அதிபரை கொல்ல துடிக்கிறது
எண்ணெய் வளமில்லாத இலங்கை போன்ற நாடுகளில் மக்கள்
படுகொலை செய்யப்படுகிறார்கள் என வெறும் அறிக்கை மட்டுமே
தாக்கல் செய்யப்படுகிறது
சைக்கிள் திருடியவன் மேல் 108 கேஸ்களை போடுவது
ஸ்பெக்ட்ரம் திருடியவனுக்கு ஓட்டு போட்டு கீழிறக்குவதும்தான்
வழக்கமென்ற முறை மேலும் மேலும் வழக்கமாகிறது
ஈராக்கில் அனுகுண்டு இருந்ததோ இல்லையோ
அங்கே நிச்சயம் பெட்ரோல் இருக்கிறது
இலங்கையில் மனிதர்கள் இறந்தார்களோ இல்லையோ
அங்கே நிச்சயம் பெட்ரோல் இல்லை
அரசு மக்களை காப்பதற்குன்னு அமெரிக்காவில்
நாள் தோறும் சொல்லப்படுகிறது பள்ளிகளில்
அது எந்த மக்களை என்று மட்டும் சொல்லாமல் விடப்படுகிறது
ஒசாமாவை கொன்றது ஒபாமா புத்தராகிவிட்டாரா
புத்தர் இந்த காட்சியை கண்டு சிரிக்கிறார்
ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்ட சொல்கிறது
ஒபாவின் மதம்
ஒரு கன்னத்தின் அடிக்க எதிரிக்கு கையே இருக்க கூடாதென்பவன்
ஒபாமாவின் அரசில்
ஒசாமாவின் செயல்களுக்கு மதம் காரணமென்றால்
ஒபாமாவின் செயல்களுக்கு எது காரணம்
கொலைகளை சினிமா காட்சிகளாக பார்த்துவிட்டு
சினிமா காட்சிகளை நிஜம் போல பார்க்கும் நம்மிடம்
நிறப்ப வேண்டிய அரசியல் பொருளாதார பகுதி
நிறைய இருக்கிறது
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================
Tags
விமர்சனம்