செயலமைப்பு பொறியமைவின் வெற்றி( System and its sucess)

செயலமைப்பு பொறியமைவின் வெற்றி

எல்லா செயல்களும் திட்டமிட்ட ஒரு செயலமைப்பு முறையின் கீழ் இயங்குவது
குறித்து மார்க்சியத்துக்கு என்ன கண்ணோட்டம் இருக்கிறதென்றால் எந்த
செயலைப்பு தத்துவமும்
தோன்றாத காலத்திலேயே இருக்கிறது .
அரசு எந்திரமும் மற்ற எந்த தனியார் செயலமைவும் வெற்றிகரமாக ஒரு தனிநபரின்
மேற்பார்வையை உதரி தனித்து செயல்பட ஒரு செயலமைப்புக்கு (system)
வந்துவிட்டு தான் அதை
செய்கிறது .
ஆனால் மார்க்சியவாதிகள் இது சம்பந்தமாக படித்து செயல்பட பத்தொன்பதாம்
நூற்றாண்றாண்டில்
எழுதப்பட்ட லெனின் நூலை படிப்பார்கள் அதில் சோசலிச அரசு அமையும் போது
இப்போதிருக்கும்
சிக்கலான ஒரு பொறியமைவான அரசு தேவை இல்லை என்கிறார்.மேலும் குறைந்த பட்சமான
பொறியமைவுள்ள ஒரு அரசு எந்திரமே இருக்கும் என்கிறார்கள் .
அதென்ன சிக்கலான பொறியமைவு என்பதை ஆராயவேண்டும் சுமார் நூறு ஆண்டுகளுக்கு
முன்பு ஒரு அரசு எப்படி செயல்பட்டது என பார்த்தால் முழுக்க முழுக்க குறைந்த அளவு
செ்யலமைப்பு பொறிகளை யே கொண்டு இயங்கியது என்பதை காண்கிறோ ம்

செயலமைப்பு என்றால் என்ன what is mean by system

ஒரு குறிப்பிட்ட செயலை அல்லது செயல்களை தொடர்ந்து செய்விக்க உரிய வழிமுறைகளை
வகுத்து கொண்டு அதை தொடர்ந்து நடத்துவதே செயலமைப்பு அல்லது சிஸ்டம் எனப்படும்

1 A group of interdependent items that interact regularly to perform a task.

2 An established or organized procedure; a method.

சோசலிசத்தின் படி உற்பத்தி உறவுகள் மாற்றியமைத்து உற்பத்தி கருவிகளை தொழிலாளர்
வர்க்கத்தின் சொந்தமாக்கினாலும் இந்த செயலமைப்பு என்பது தனிச்சையாக
இயங்கும் படிக்கு
முதலாளிக்கு பதிலாக தொழிலாளரின் கண்காணிப்புக்கு மட்டும் கட்டுபட்டதாக
அமைக்க இயலாது

சுருக்கமாக சொன்னால் முதலாளிக்கு பதில் தொழிலாளர்களை மாற்றீடு செய்வதால்
எல்லா செயல் முறைகளும் அமைப்புகளும் கல்வி சாலைகளும் தொழிற்சாலைகளும்
ஆயுதம் தாங்கிய தொழிலாளர்களே கண்காணித்து செயல்படுத்தி நிறைவேற்றுவார்கள்
என்பது தவறானதாகும்

எப்படி எனில் முதலாளித்துவத்தில் வளர்ச்சி கண்ட பொருள் உற்பத்தி முறையானது
அதன் உடன் வளர்சியாக சிஸ்டத்தையும் வளர்த்துள்ளது அந்த சிஸ்டத்தின் மூலமே
பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டும் வந்துள்ளது சிஸ்டத்தில் சில மாற்றங்களை செய்வதன்
மூலம் தனது நேரடி கண்காணிப்பில் இல்லாத போதிலும் ஒரு தொழிற்சாலை அல்லது
வங்கி இயங்குவதை உறுதி செய்கிறது.

ஆனால் சோசலிஸ்டுகள் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்துள்ள இந்த சிஸ்டத்தை
மறுப்பதன்மூலமாக
இயக்கவியல் ரீதியாக பின்னோக்கி குறைந்த பொறியமைவுள்ள ஒரு சிஸ்டத்தை
படைப்பதன்மூலமாக்
அல்லது நிறைய தொழிலாளர்களின் நேரடி கண்காணிப்பின் மூலமாக ஒரு தொழிற்சாலையை
அல்லது வங்கியை கண்காணிக்கலாம் என நினைக்கிறார்கள் அது தவறு .

ஆக ஒரு விசயத்தில் அதாவது சோசலிச பொருளுற்பத்தி என்ற வகையில் முற்போக்காகவும்
சோசலிச மேலாண்மையியலில் பிற்போக்காகவும் சிந்திக்கிறார்கள் இதான் இவர்களின்
முரண்பாடு


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post