சமூகத்தில் புரட்சிக்கான தேவை இருக்கிறதா
இந்த விவாதத்தின் தொடர்ச்சியே இந்த பதிவு
இந்த சுட்டியில் நடைபெற்ற இந்த விவாதத்தை தொடர்ந்து இந்த பதிவு அளிக்கப்படுகிறது
இந்த சமூகத்தில் மாற்றம் சாத்தியமே அதில் இணையத்தின் மூலம் புரட்சி என்கிற நிலையை எகிப்து துனியா மக்கள் போராட்டங்களை பாத்த பிறகு நான் எழுதிய பதிவு
சரி மாற்றம் அல்லது புரட்சி என்றால் என்னவோ ஒரு ஆயுதம் தாங்கிய கும்பல் வந்து ஆட்சி அதிகாரத்தை கைபற்றி ஆட்சி நடத்தும் என்றுதான் பொதுவான புத்தியின் அபிப்பிராயமாக உள்ளது .
அதுக்கும் மேலே இந்த அமைப்பில் என்ன குறை ஏன் மாற்ற வேண்டும்
என்கிற கேள்வியும் வைத்தார்கள்
அப்போ ஒரு விசயம் தெளிவாக புரிகிறது மாற்றம் என்றால் என்னவென
புரட்சி என்றால் என்னவென்று புரியவில்லை என்பதே அது
ஏன் புரட்சி தேவை என்கிற கேள்விக்கு ஏன் வறுமை ஒழியவில்லை என்கிற எதிர்கேள்வி என்னால் வைக்கப்பட்ட போது வறுமை என்பது விகிதாசாரத்தில் குறைந்து வருவதாகவும் இனிமேலும் கொஞ்சம் கொஞ்சமாக அது இல்லாமல் போய் விடும் என்றும் குத்துமதிப்பாக
சொல்லப்படுகிறது
வறுமை என்பது ஒழிந்து விடும் என்பவர்கள் எந்த காரணிகளால் வறுமைவருகிறது என்பதையும் எது உண்மையில் வறுமையை ஒழிக்கமுடியும் என்கிற அரசியல் பொருளாதார அடிப்படையில் பேசுவதில்லை எல்லாம் புள்ளி விபர அடிப்படையில் இந்த புள்ளி விபரங்கள் இருக்கிற டேட்டாவை எடுத்து சொல்லும் ஒரு கருவியே தவிர அவை வேறெதுவும் செய்யாதவை .
புரட்சி வறுமை இந்த இரண்டு சொல்லாடல்களும் என்ன தெரிவிக்கின்றனஎன பார்போமானால் இரண்டுக்கும் தொடர்புள்ளது என்பதே.
புரட்சி பத்தி பேசினால் உற்பத்தி உறவுகள் உற்பத்தி சக்திகள் வர்க்கம் வர்க்க சுரண்டல் என்பனவெல்லாம் என்னவென தெரியாமல் புரட்சி என்பது ஆயுதம் தாங்கிய மக்களின் தாக்குதல் என்று மட்டுமே புரிந்துகொள்ளப்படும்
ஒரு சமூகத்தை புரிந்து கொள்ள அந்த சமூகத்தின் உற்பத்தி நடைமுறை என்னவாக உள்ளது அதன் அரசு என்னவாக பங்காற்றுகிறது என்பதை பார்க்க வேண்டும்.
இந்த சமூகம் இந்தியாவை எடுத்துகொண்டால் அது அரை நிலபிரபுத்துவ,அரை முதலாளித்துவ இருக்கிறது மறுகாலனியாதிக்கம் தற்போது நடந்து வருகிறது .
இதில் மாற்றம் தேவையா என்றால் கண்டிபாக தேவை ஏற்கனவே இருந்த அரசு சோசலிசம் எனப்படும் பெரும்பான்மை தொழில்கள் லாபநோக்கின்றி அரசிடம் இருந்தது போய் நாள்தோறும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதும் விலைவாசி ஏற்றத்தினால் மக்கள் நாள் தோறும் செத்து மடிவ்தும் போலி ஜனநாயகமானது பிழைப்புவாதமாக போனது மக்களுக்கான எந்த நியாயமான தீர்வுமில்லாமல் இயங்கும் இந்த சமூகத்தை மாற்றித்தான் ஆகனும்
மாற்றம் என்றால் என்ன என்கிற கேள்வி புரட்சிக்கு விடை கூறுகிறது மாற்றம் என்பது முழுதாக உற்பத்தி நடைமுறையில் மாற்றம் என்பதே
உற்பத்தி நடைமுறை என்பது உற்பத்தி கருவி உற்பத்தி செய்பவன் உற்பதியை அனுபவிப்பவன் இடைநிலை பாத்திரங்கள் ஆகியவற்றை கொண்டது.
வரலாற்றில் இதுவரை இருந்த உற்பத்தி முறைகள்
1.அடிமை உற்பத்தி
2.நிலபிரபுத்துவ உற்பத்தி
3.முதலாளித்துவ உற்பத்தி
4.சோசலிச உற்பத்தி (ருஸ்யாவில் நிலவியது)
சமூகத்தில் நிலவும் உற்பத்தி நடைமுறையே அந்த சமூகதின் அனைத்து மட்டங்களிலும் பிரதிபலித்து அரசியல் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் ஒன்றாக அமைகிறது .
முதலாளித்துவ உற்பத்தி ஜனநாயக அரசமைப்பில் மட்டுமே நிலவ முடியும் எனவே உலகெங்கிலும் சனநாயக வழிமுறைக்கு திரும்ப ஆரம்பித்தன இந்த நிக்ழவு சாதாரணமாக் நடக்கவில்லை ஏற்கனவே இருக்கும் நிலபிரபுக்கள் முதலாளிகளை ஏற்றுகொள்ள முடியவில்லை எனவே புரட்சி வெடிக்கிறது .
சமூகத்தின் உற்பத்தி முறை ஒரு மிக முக்கிய புறவயமான காரணமாகும்
இந்தியாவில் கூட டாடாவுக் பிர்லாவும் இந்திய தேசிய போராட்டத்தில் கலந்து கொண்டது இந்தியாவில் தொழில் வளர வேண்டும் என்றால்அதற்கு சனநாயக அரசமைப்பு முறை தேவை என்றுதானே அல்லாமல்இந்திய மக்களின் மேல்கொண்ட பாசத்தால் அல்ல .
அடுத்து இந்த உற்பத்தி முறை நிலவுவதே வறுமை , விலைவாசி உயர்வு முதல் அனைத்து தனிதனி பிரச்சனைக்கும் காரணம் அதை ஒழிக்காமல் ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டால் வறுமையை ஒழிச்சிடலாம்னு யாராவது பேசினால் சிரிப்புதான் வரும் உற்பத்தி நடைமுறையை விரிவாக பார்த்தால்
1.உழைப்பு
2.உற்பத்தி சக்திகள்
3.உற்பத்தி உறவுகள் இது மூனும்தான் உற்பத்தி நடைமுறை என சொல்கிறோம் .
உழைப்புதான் அடிநாதமாக இருப்பதையும் சமூகத்தின் தேவைக்கான பொருட்களை மனிதனின் உழைப்பே செய்து தருகிறது என்பதையும்
பார்கிறோம் இந்த உழைப்பை தறுபவர்கள் உழைப்பாளிகள் அதை பெறுபவர்கள் முதலாளிகள் என்று முதலாளித்துவ சமூகத்திலும் லபிரப்புகள் என்று நிலபிரப்புத்துவ சமூகத்திலும் ஆண்டான் என்று ஆண்டான் அடிமை சமூகத்திலும் அழைக்கப்படுகிறது .
உழைப்பின் நோக்கம் உற்பத்தியே , சமூகம் பொருட்களை மட்டுமல்ல கருத்துகளையும் ஜனங்களையும் உற்பத்தி செய்தால்தான் தொடர்ந்து நீடிக்க முடியும் .
உற்பத்தி' - இதுதான் மனித சமுதாயத்தின் அத்தனை அம்சங்களையும்
தீர்மானிக்கக் கூடிய உயிர்நாடி. மனித சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் உற்பத்தி எந்த முறையில் நடக்கிறது என்பதுதான் - அதாவது உற்பத்தி முறை (Mode of Production) தான் - சமுதாயத்தின் அமைப்பையே தீர்மானிக்கிறது. அதாவது உற்பத்தி முறை வளர்ச்சி குன்றியதாக இருந்தால் சமுதாய அமைப்பும் வளர்ச்சி குன்றியதாக இருக்கும்.
முன்னது மிகவும் வளர்ந்த நிலையில் இருந்தால், பின்னதும் அவ்வாறேஇருக்கும். இன்னும் இதை ஆழமாகச் சொல்ல வேண்டுமானால்,சமுதாய அமைப்பில் எந்தவொரு சிறிய அல்லது பெரிய மாற்றம் நிகழ வேண்டும் என்றாலும் கூட அதற்கு முன்பாக உற்பத்தி முறையில் மாற்றம் நடக்க வேண்டும்
உற்பத்தி நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யாத வெறும் ஆட்சி மாற்றம் அல்ல புரட்சி அடுத்து உற்பத்தி சக்திகள் தேவை அதென்ன உற்பத்தி சக்திகள் என்றால் ஒரு தொழிலை செய்யும் கருவிகள் அதற்கான அறிவு அதற்கான இடம்அந்த தொழிலை செய்ய தேவையான உற்பத்தி திறன் இவை எல்லாமே
உற்பத்தி சக்திகள் என்கிறோம் .
இந்த உற்பத்தி சக்தி எந்தளவு வளர்ச்சி பெற்று இருக்கிறதோ அதைபொறுத்தே சமூகத்தின் வளர்ச்சி இருக்கும் மாறாக இலவசம் வழங்குவதால் அல்ல
தொடரும் ................
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================