நாம் ஏன் திமுகவை மாற்றினோம்(கும்மாங் குத்து)

ஜெயாவின் ஆட்சியை பார்க்காதவர்கள் அவரின் அடக்குமுறைக்கு உட்படாதவர்களல்ல தமிழக மக்கள்
உண்மையில் அவரின் ஆட்சியே தேவலாம் என்கிற நிலமைக்கு வந்ததற்கு கருணாநிதியின் கார்பரேட் கொள்ளையே காரணம்

1.ஊழல்
2.விலைவாசி உயர்வு
3.கரண்டு கட்

என்கிற மூன்று விசயங்களும் இந்த ஆட்சியை நைய்ய புடைத்து அனுப்பி உள்ளது

ஜெ ஆட்சியோ இதெல்லாம் இல்லாத பொற்கால ஆட்சின்னு கனவு கினவு கண்டுகிடாதீங்க

ஆனால் நடந்து வந்த ஒரு துரோகம் (தமிழின துரோகம் ) மற்றும் கொள்ளையை தடுத்து இருக்கிறோம்
அனைத்து மக்களும் சேர்ந்து

எங்கெல்லாம் மக்கள் சக்தி கிள்ளு கீறையாக நினைக்கப்பட்டதோ அங்கெல்லாம் அது
தனது சக்தியை நிலைநாட்டி உள்ளது

இணையத்தில் திமுக வரும்னு சொல்லி சப்பைகட்டு கட்டிய
அனைத்து முற்போக்கி களுக்கும் இது ஒரு கும்மா குத்து
--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post