இலக்கியமும் அது பற்றிய தோழர்களின் பார்வையும்

முதலில் எனக்கு படிக்க கிடைத்தவை 80 களில் ராஜேஸ்குமார் நாவல்களும் செம்மலரும் தான் இந்தியா டுடேவில் அப்போது இருந்த கதைகளில் இருக்கும் புனைவு கூட செம்மலரில் இருக்காது எந்த கதையை பார்த்தாலும் எதார்த்தமாய் எழுதுகிறேன் பேர்வழி என்று சலிப்புதட்ட எழுதி இருப்பார்கள் .

ஒரு தொழிலாளி ஒரு முதலாளி இருவருக்கு இடையேயான சண்டை,முரண்பாடு இவைதான் கதைகளிலும் இருக்கும் பொதுவா கட்டுரைகளில் என்ன இருக்குமோ அதுதான் கதைகளில் இருக்கும் ஒரு கதை போடவேண்டுமே என கட்டுரையை கதையாக்கி இருப்பார்கள் .

சமூகத்தில் முதலாளியும் தொழிலாளியும்தான் இருக்கிறான் உயர்ந்த சாதிகாரன் தாழ்ந்த சாதிக்காரன் இதெல்லாம் இல்லை என்பது சிபிஎம்மின் பார்வை சாதி வேறுபாடுகள் வர்க்கமாய் திரட்டும்போது மறைந்துவிடும் என அவர்கள் சொன்னது அப்படியே புத்தகத்திலும் இருக்கும் பெரிசா சாதிய
முரண்பாடுகள் பற்றிய கதைகள் கவிதைகள் இருக்காது செம்மலரில் .

பிறகு சமீபத்தில் தோழர்கள் சொன்னபிறகு புதியகலாசாரம் இதழ்களை பார்த்தாலும் அதே தட்டையான செம்மலரின் பிரதிபலிப்பான கதைகள் விரவி கிடப்பதை காணலாம் .

வர்க்கம் ,முரண்பாடு , ஆதிக்க சாதி , இதைத்தவிர பெரிய கதை கரு எதுவும் கிடைக்கவில்லையோ அல்லது அதை எழுதினால் பிரசுரிக்க மாட்டார்களோ எனும் எண்ணமாக இருக்கலாம்.

கதை அல்லது கவிதை சொல்லுதலில் பல்வேறு உத்திகள் புனைவுகள் என்று இலக்கிய உலகம் எங்கோ பயனிக்கும்போது தோழர்கள் இன்னும் மார்க்சிம் கார்க்கி காலத்தின் கதைகளையும் கவிதைகளையும் நேரடியா தெரிவிக்கும் பாணியில் ஓட்டி கொண்டு இருக்கிறார்கள்

இதுதான் மக்களுக்கான இலக்கியம் , இதுதான் மக்களின் இசை , என ஒருவாறு வரையறுத்து செயல் பட தொடங்கி விட்டார்கள் .

கூட்டங்களில் பறை மட்டும் ஓங்கி ஒழிக்கும் , இசை நிகழ்ச்சிகள் என சொல்லப்படுவதிலும் அவ்வாறே .

தமிழர்களின் இசைதான் கர்நாடக இசை என சொல்பவர்கள் அதே தமிழர்களின் பண்களை வைத்து இனிதான புதிய இசைகளை ஏன் இயற்றவில்லை .

கதை கவிதைகளை புரிந்து கொள்வதிலும் தோழர்கள் அந்த காலத்திலேயே இருக்கிறார்கள் யதார்த்த இலக்கியம் மட்டுமே மார்க்சிய இலக்கியம் எல்லா விசயத்தையும் நேரடியாக புரிந்து கொண்டு பழகனும் என்பார்கள் .

எல்லா கதைவடிவங்களையும் உள்வாங்கி அதன் மூலம் முரண்பாடுகளை மக்களுக்கு சொல்லும் தீர்வுகளை சொல்லாமல் இருப்புகளை சொல்லும் கதைவடிவங்களும் கவிதை வடிவங்களும் வளர மார்க்சிய வாதிகள் இடம் தரவேண்டும் .

இப்படித்தான் இருக்கனும் என்பது லட்சியம் . நடப்பில் இப்படி இருக்கிறது என்பதை அதே லட்சிய வடிவத்தில் சொல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை .

கலை கலைக்காகவே என்பதை விட கலை மக்களுக்காகவே என வாதிப்பார்கள்
மக்களின் விடுதலைக்கு கலையை பயன்படுத்த வேண்டும் என்பார்கள் .
மக்கள் விடுதலைக்கு கவிதையோ கதையோ பயன்படுத்தலாம் என்பது வேறு
மக்கள் விடுதலைக்கு பயன்படும் கலைவடிவம் மட்டுமே கலை என நிராகரிப்பது வேறு .

கலையின் இயக்கபோக்கில் அது வளர்ந்துள்ள வடிவங்களை மறுப்பவன் எப்படி
இயக்கவியல் வாதியாக இருக்க முடியும் .

பல்வேறு வடிவங்கள் ஏன் வருகிறது என்பதை பரிசீலித்தால் அது வாசிப்பவனை
சோர்வடையாமல் இருக்க செய்ய .

ஒரு ஓவியத்தை பார்பவனை சோர்வடையாமல் இருக்க செய்யனும் அது முதல்
தேவை பிறகு கருத்தை சொல்லனும் . முதல் படம் போலவே இரண்டாவது படமும் இருந்தால் முதல் படத்தில் காட்டப்பட்ட உத்தியே இரண்டாவதிலும் இருப்பதை பார்க்கும் பார்வையாளன் மிக கஸ்டப்பட்டுதான் உங்கள் படத்தை பார்ப்பான்.

சுகமாக ஏசி அறையில் உக்கார்ந்து இருக்கும் நண்பா நீ வயல் வெளிகளில்
வேலை செய்து இருக்கிறாயா அங்கே இருக்கும் எதார்த்தம் கலையாக
வெளிப்படும் போது அப்படியேதான் இருக்கும் என சொல்வீர்கள் ?

அந்த சோகத்தை ஏன் ஒரே ராகத்தில் வெளிப்படுத்த வேண்டும் பல்வேறு
வடிவங்கள் அமைப்புகள் இலக்கியம் இன்று வளர்ந்துள்ள முறைகளில்
வெளிப்படுத்தலாமே .

தோழர் துரை சண்முகத்தின் கவிதையை நான் மொக்க கவிதை என்றது
பல நண்பர்களுக்கு வருத்தம் ஆனால் கவிதை வடிவத்தை கணக்கில் எடுக்காமல்
அதன் சுவை குன்றாமல் கொடுக்க வேண்டும் எனபதை விட
அவருக்கு மொத்தமாக எல்லா விசயத்தையும் ஒரு கவிதையில் சொல்லிடனும்
என்ற துடிப்புதான் இருக்கு .

சினிமா விமர்சனத்தில் கூட இப்படி இருக்கனும் அப்படி இருக்கனும் என்பார்கள்
விமர்சனமே ஒரு படைப்புக்கு மாற்றாக முடியுமா என்றால் நாங்கள் விமர்சிக்கத்தான் முடியும் என்பார்கள் .

இதையெல்லாம் பேசலாம் என வந்தால் பேச தகுந்த இடமாக இருப்பதில்லை
இவர்களது தளம் .

கருப்பு சட்டை போட்டுஇருக்கிறானே அவனை அடின்னு ஒருத்தன் சொன்னா
எல்லாரும் போட்டு கும்முவதில் முடியும் .

பல்வேறு பட்ட கதை வடிவங்கள் இலக்கிய உத்திகளை படிப்பது ,படைப்பது ,
புரிந்து கொள்ள முயலுவது என்பது தேவையின் கருத்து எனது தனிபட்ட கருத்து
அல்ல .

சில மொழிபெயர்ப்பு கவிதைகளே நமக்கான கவிதை தேவையின்
அனைத்து அம்சங்களையும் வழங்கி விடாது என்பது எனது கருத்து .
==

46 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post