நண்பகளே தோழர்களே -லீனா பற்றிய வெட்டி வேலையின் தொடர்ச்சி


அன்புள்ள தோழர்களே,

மிக நயமாக நீங்கள் நான் சொன்ன விசயங்களை கடந்து சென்றுவிடுகிறீர்கள்
கவிதை எப்படி உருவாகலாம் அதன் வாய்ப்புகள் பற்றி சொன்னபோது
நான் மணிமேகலையின் கவிதை அப்படி உருவானது என சொல்லவில்லை.

உடல்மொழி கவிதைகள் அனைத்தும் தனது சொந்த அனுபவமே
என பார்க்கும் பார்வை சரியானது அல்ல என சுட்டி காட்டுகிறேன்
அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

கவிதைகளை புரிந்து கொள்ளும் விசயம் பற்றி பேசும்போது இந்தம்மாவின்
கவிதை அதுபோன்ற சூட்சும கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு காலத்தின்
கல்வெட்டில் பொறிக்கப்படவேண்டிய கவிதை என சொல்லவில்லை .

நான் உங்களுக்கு பதில் அளிக்கையில் எதிர்தரப்பை முற்றிலும் ஆதரிக்கவில்லை
அவரது கவிதை உங்களுக்கு எந்தளவு மனபாதிப்பை ஏற்படுத்துகிறதோ
அதே அளவு எனக்கும் மனபாதிப்பை ஏற்படுத்துகிறது.ஆனால் எனது புரிதல்
வேறு . (அதை ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்)

கோபத்தில் செய்யும் செயல்களுக்கு விளக்கம் கேட்காதீர்கள் தோழர் என்கிறார்கள்.
அறிவைவிட உணர்ச்சி மேலீட்டால் ஒரு செயலை செய்வதும் செய்விப்பதும்
ஒரு கம்யூனிஸ்டு செய்யும் காரியமா என்ன .

உங்க டீசண்டு எல்லாம் சாதாரண உழைக்கும் தொழிலாளிக்கு வரவே வராது
" உறுப்புகளின் வகைமாதிரி என்னவென சொல்" அப்படின்னுதான் பேசுவான்
என்கிறீர்கள்

ஒரு விசயம் தெரியுமா சாதாரண உழைக்கும் வர்க்கம் லீனா போன்றவர்கள்
இருப்பது அவர்கள் கவிதை எழுதுவது இது எதுவுமே அவ்வளவா தெரியாது ?

 நிறைய பெண்கவிஞர்கள் உடல்மொழி கவிதை எழுதுவதில்லையா அவர்களது
கவிதைகளையும் இந்த சாதாரண உழைக்கும் வர்க்கம் எப்படி பார்க்கும்
பொதுபுத்தி ஏற்றுகொள்வதில்லையே ?

நான் லீனா எழுதி இருப்பதை வினவில்தான் பார்த்து தெரிந்து கொண்டேன்.
அப்போ படித்த அறிவுஜீவி நண்பர்கள் இந்த விசயத்தை பார்த்து எடுத்து சொல்லி
தானே அவர்களுக்கு தெரியும்.

"உழைக்கும் வர்க்க தொழிலாளிக்கு " லீனாவை, அவர் எங்கே கவிதை எழுதி வருகிறார்,
அவரது புத்தகம் வருவது, போவது இது எதுவும் தெரியாதே?
எனக்கும்  அந்த கவிதையை பற்றி சொன்னது வினவு கட்டுரைதான்

ஒரு விசயத்தை கவனிக்கும் நண்பர்கள் அதற்கு "எதிர்வினை ஆற்றுவது" என்கிற
விசயத்துக்கு தான் பொறுப்பில்லை என்பது பொறுப்பற்ற பதில்தானே.

எதா இருந்தாலும் சட்டத்தின் படி நட என நாம் இஸ்லாமிய அடிப்படை வாதிகளுக்கு
சொல்கிறோம் ஜனநாயகத்தின் படி நடக்க வேண்டும் என அனைவருக்கும் ஓதுகிறோம் .

நாம் நடப்பது அராஜக வழிமுறை.

சுதந்திரம் ஜனநாயகம் ,பேச்சுரிமை எல்லாம் வேணும் என சொன்னால் விசயத்தை
பாக்சைட் எடுக்க மலையை குடையும் முதலாளியின் சுதந்திரத்துடன் லீனாவின்
கவிதை சுதந்திரத்துடன் ஒப்பிடுகிறீர்கள். அடுத்து தாக்கரேயின் சுதந்திரத்துடன் லீனாவின்
சுதந்திரத்தை ஒப்பிடுவீர்கள் அடுத்து உங்களுக்கு தெரிந்த கொடுங்கோல் ஆட்சியாளார்கள்
பண்ணைமுதலாளிகள் பெரு நில செல்வந்தர்களின் சுந்திரம் எல்லாம் லீனாவின்
சுதந்திரத்துடன் ஒப்பிட படும் இப்படியே பேசிட்டே இருந்தீங்கன்னா கருப்பு வெள்ளை
கண்ணாடியை போட்டு இருக்கீங்களே அது உங்க முகத்துல பிக்ஸ் ஆகிடும்.

எல்லாவற்றையும் ஒப்பிட்டு பார்பதல்ல விசயத்துக்கு தகுந்தமாதிரி பிரிச்சு பார்பதுதான்
சரி என கம்யூனிஸ்டுகள் எனக்கு சொல்லி தந்து இருக்கிறார்கள்.

நாங்கள் என்ன செய்தோம் விளக்கம் தானே கேட்டோம் மிக நியயாமான கேள்வி :

இதோ விளக்கம் கேட்டு எழுப்பப்பட்ட கேள்வி

அ)ஆண்குறிகள்தான் எல்லாம் என எழுதி இருக்கிறீர்கள்
நீங்கள் சந்தித்த ஆண்குறிகளின் வகைமாதிரிகள்
எத்தனை ?
 
இப்படி கேட்டுவிட்டு வினவில் வந்து என்ன எழுதுகிறீர்கள் "அனுபவத்தைதான் கேட்டோம்
அதைத்தானே அவர் எழுதி இருக்கிறார் சொல்வதில் என்ன வந்தது "

"நாங்களே ஐம்பதுபேர் போயிருந்தோம் " அங்க வந்திருந்ததே ஐம்பதுபேர்தான் ஆட்களின்
எண்ணிக்கையை வைத்து எள்ளி நகையாடுவது"  ஆட்களின் எண்ணிக்கையை வைத்து
அதிகாரமொழியை பேசுவது அராஜகமாக கத்துவது

இந்த வழிமுறையை மறுபரிசீலனை செய்யுங்கள் .அராஜகவாதத்தை, அருவருப்பு ஏற்படுத்தும்
கேள்வியை தவிர்த்து எதிர்ப்பை கடுமையாக தெரிவிப்பது என்றால்; அருவருப்பாக தெரிவிப்பது
என அர்த்தமில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

கூட்டம் போட்டு பேசும் உரிமையை அங்கீகரித்து பழகுங்கள் .சபை நாகரீகத்தை உடைத்து
புது நாகரீகம் கற்பிப்பது எந்த வகை போராட்ட முறை என தெரியவில்லை

நாகரீகம் என்றாலே எதோ பணக்கார படித்த வர்க்கத்துக்கு உட்பட்டது
இதெல்லாம் அந்த வர்க்கத்தின் பேச்சாச்சே இதை ஏன் இவரு பேசுறாரு ரொம்ப
டீசண்டானவரோ  ஒருத்தர் பேசுகையில் குறுக்க பேசாமல் இருப்பது சாதாரண
உழைக்கும் வர்க்க நண்பர்கள் கடைபிடிக்கும் நடைமுறைதான் என்னமோ ஆக்ஸ்போர்டு
பல்கலைகழகம் சொல்லிதரும் நடைமுறை அல்ல.

செய்வதை செய்துவிட்டு "கொஞ்சம் கூட வர்க்கபண்பு இல்லை தோழர் உங்களிடம்"

"உங்களை தோழர் என்பதற்கு வெக்கமாக இருக்கிறது"

"நீ எல்லாம் ஒரு மார்க்சிஸ்டா"

"போய் நல்லா படி "

"நீ ஒரு கோழை முதலில் சுய விமர்சனம் ஏற்றுகொள்"

என என்னை சொல்கையில்

சிரிப்புதான் வருகிறது --------------தன்னுடைய ஈகோவில் இருந்து
இறங்கிவராத வினவு என்னை ஈகோ பேர்வழி என சொல்வது -------

1.கவிதை அருவருப்பாக இருக்கிறது என்பதற்காக
அதே அருவருப்பான நடைமுறையை நம் செய்வதா?

2.லீனா தராத விளக்கத்தை பொதுமக்களிடம் கேட்கிறேன்
என்கிறீர்களே இந்த பொது மக்களுக்கு உடல்மொழி
கவிதை என்பது புரியுமா?

அ)அதற்காக அவர் அடித்த சேற்றை துடைத்து விட்டு செல்வதா?
"இல்லை என்பதே எனது பதில் " கண்டிப்பா போராடனும்
ஆனால் அருவருப்பான , அதிகார அராஜக கேள்விகளுக்கு பதில்

கறாரான போராட்டம் ,கண்டிப்பான எதிர்ப்பு என்ற
அடிப்படையில் தெருக்கூட்டங்கள், கண்டன ஆர்பாட்டங்கள்
பத்திரிக்கையில் எழுதுவது என்பன இதை செய்ய தயங்குவதேன்

அசுரன் சொல்கிறார் நண்பர்கள் , தெரிந்தவர்கள் இவர்களிடம்
ஒரு நக்சல் தான் நக்சல்பாரி என்பதை சொல்லிவிட்டுதான்
போராடுகிறான் .

நண்பர்கள் தெரிந்தவர்கள் நமக்கு தீமை செய்யாதவர்கள்
சரி ! நமது வர்க்க எதிரிகள் முதலாளிகள் , வீட்டு உரிமையாளர்கள்
பாசிச மத அடிப்படை வாதிகளிடம் நாம் நமது ஐடண்டிடியை
ஏன் மறைக்கிறோம் .

ஏனெனில் அவனுக்கு அவ்ளோ சீக்கிரம் புரியவைக்க முடியாது
சமூக பொருளாதார உறவை அவன் துண்டித்து விடுவான்
என்பதாலேயே.

இந்த சமூகத்தில் தனி நபர் மிக அற்பமானவனாக இருக்கிறான்
அவனுக்கு அழைத்தவுடன் வர ஒரு ஐம்பது பேர் இல்லை
படித்தவனுக்கோ அதைவிட தண்ணி அடித்து ஆள் சேர்க்காதவனுக்கு
அடிதடிக்கு வர ஆள்குறைவு.

விடியல்காலையில் பத்துபேர் போய் வீட்டு கதவை தட்டினால்
மன்னிப்பு கடிதம் புஜ அலுவலகத்தில் வந்து தரத்தான் செய்வான்.

இந்த வழிமுறை தவறு என்கிறேன் . உன்னோடு பேசனும் நீ சரியான
விளக்கம் தரவேண்டும் என்பதை ஒருவர் சென்று கேட்கலாமே . பல நபர்கள்
குடியிருக்கும் ஒரு பகுதியில் அடியாள் மாதிரி கந்துவட்டிகாரன்மாதிரி
பத்துபேர் போய் கேட்கும் நடைமுறையை மாற்றிகொள்ளலாமே .

"அவன் அப்படி என்ன எழுதி இருந்தாலும் சரி "

"சுயவிமர்சனத்தை ஏற்காதவன் கோழை" என்கிறார் வினவு
நான் வினவு சொல்வதை தட்டாமல் கேட்பவன் அப்போ
வினவு.

இன்னும் பல விசயங்கள் எழுத இருக்கிறது .

ஆனால் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் நின்று கடினமான
பணிகளுக்கிடையே போராடும் தோழர்களை பலவீனமாக்கி
விட துடிக்கும் சக்திகளுக்கு இடம்தரும் விதமாக
அதற்கு ஒரு கருவியாக நான் எழுதுவது இருக்க கூடாது.

வழிமுறை தவறே தவிர இந்த மாதிரி லீனாக்களை எதிக்கும்
அவர்களது கரங்கள் வெற்றிகரங்களே .

சொந்தமா யோசிங்க தோழர் . கருத்துக்கு நூல்களை படியுங்கள்
செயலுக்கு சொந்தமா யோசிங்க

முத்திரைகளை அதிகமா உருவாக்காதீங்க எங்கள் முதுகுகள்
பெரிசு என்பது நீங்கள் முத்திரை குத்த அல்ல

கலை இலக்கியம் எதுவும் இன்னும் நாம் படைக்கவில்லை
துரை சண்முகத்தின் மொக்க கவிதை எல்லாம் இலக்கியமே இல்லை
மக்கள் இருக்கிறார்கள் கலை இலக்கியம் மருந்துக்கும்
இல்லை அப்படி எனக்கு தெரியாமல் இருந்தால்
மக இக வின் படைத்த இலக்கியத்தை எடுத்து போடுங்கள்

ஏன் சொல்கிறேன் என்றால்?

இந்தமாதிரி அல்பைகளை விளம்பரபடுத்த செலவழிக்கும்
நேரத்தில் அழகான இலக்கியங்கள் படைக்கலாம் .

ஆயிரம் பூக்கள் மலரட்டும் அதில் இந்த தியாகுவின்
கருத்து ஒரு பூவாக இல்லாவிட்டாலும் ஒரு சின்ன
புல்லாக முளைக்க அனுமதி தாருங்கள் .

தோழமையுடன் என்றும் நேசிக்கும் கட்சி
எனது நேசிப்பின் காரணத்தாலேயே எழும் எனது
விமர்சனத்தை ஈகோன்னு சொல்லி கொச்சை
படுத்தாதீங்க

செவ்வணக்கங்கள்











--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

5 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post