லீனா பற்றிய விவாதத்தின் தொடர்ச்சி அல்லது வெட்டி வேலையின் தொடர்ச்சி

1.கவிதை என்றால் என்ன ?

கவிதை என்பது ஒரு வெளிப்பாட்டு முறை , கட்டுரையை போலவே கவிதையும் சொல்ல விரும்பும் கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது

கவிதை எழுதுபவர் அதை அனுபவித்து இருந்தால்தான் எழுதமுடியுமா?
இல்லை கவிதை எழுதுபவர் தூரதேசத்தில் நடக்கும் ஒரு விசயத்தை கேள்வி பட்டால் கூட அதுபற்றி எழுத முடியும் இலங்கையில் தமிழன் கொல்லப்படுகிறான் என்பதை கேட்டு நிறையபேர் கவிதை எழுதினார்கள்
ரஸ்யாவில் புரட்சி நடந்ததை படித்து கவிதை எழுதுகிறார்கள் இதெல்லாம்
சொந்த அனுபவத்தில் நடக்கவேண்டும் என அவசியமில்லை

லீனா எழுதிய கவிதை என்ன சொல்கிறது அதில் உங்களுக்கு உடன்பாடா?
லீனாவின் புணர்ச்சியின் போது மார்க்ஸ் , எங்கெல்ஸ் , உபரிமதிப்பு எல்லாவற்றையும் இழுத்துவந்து போடுகிறது இந்தளவு வக்கிரமாக ஆண்கூட எழுத முடியாது . ஒரு மஞ்சல் பத்திரிக்கையில் இருக்கும்
கதைக்கு ஒப்ப்பாக இருக்கிறது

3 . இதை லீனாவின் சொந்த அனுபவமாக எடுத்து கொள்ளலாமா?
கூடாது . அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை ஆனால்
அதை எழுதியதற்கு அவரே பொறுப்பாளி அதற்கு விளக்கம் அல்லது
மறுப்பு சொல்ல கடமை பட்டவர் அவர்

4 ஏன் பதில் சொல்லவேண்டும்

லட்சகணக்கான மக்களின் வாழ்வியல் லச்சியமாக இங்கே மார்க்சியம் விளங்குகிறது அதை கொச்சை படுத்த ஆண் குறியின் அரசியலாக பார்க்கும் இவரது பார்வை ஏன் என அவர் விளக்க வேண்டும்

5 .அதைத்தானே தோழர்கள் கேட்டார்கள் அது சரிதானே ?

தோழர்கள் கேட்டதை சரி என்கிறேன் அதில் அருவருப்பான
கேள்விகளை கேட்டு கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி கடைசியில்
பதில் வாங்கமலே வந்துவிட்டார்கள்

6 . பதில் சொல்வார் என நினைக்கிறீர்களா?

சொல்லி இருக்கலாம் சொல்லாமலும் இருக்கலாம் ஆனால் நாம்
கூச்சல் போட்டு வெளியே வந்தது . கருத்துரிமையை மறுப்பது
என்பதாகிவிட்டது

7 . தோழர்கள் நடந்து கொண்டதை பற்றி உங்கள் கருத்து என்ன?
நான் அவர்களின் கவிதை எதிர்ப்பை சரி என்கிறேன்
ஆனால் நடந்து கொண்ட விதம் தவறு என்கிறேன்
அப்படித்தான் நடக்க முடியும் சுதந்திரம் என்பதெல்லாம்
வர்க்க சார்பானது என்கிறார்கள் .
அடக்கும் வர்க்கத்துக்கு சுதந்திரம் தரமுடியாது என்கிறார்கள்
லீனாவை ஆளும் வர்க்கம் என்கிறார்கள் அல்லது மேட்டுகுடி
ஆளும் வர்க்கம் எனவே அவர்களுக்கு கருத்து சொல்ல உரிமை
இல்லை என்கிறார்கள்

8 அது சரிதானே ?

நடப்பில் சோசலிசம் இருந்தால் அது சரிதான் நடப்பில் போலி ஜனநாயகம் இருக்கிறது கற்பனையாக் சோசலிசம் இருப்பதுபோல நடந்துகொள்ள முடியாது .பெருவாரியான மக்கள் இன்னும் பாட்டாளி வர்க்க அரசியலை
ஏற்று கொள்ளவில்லை ஓட்டு போடும் அரசியலில் இருந்து வெளியே வரவில்லை இப்போவே நாம் அதிகாரம் கையில் கிடைத்ததுபோல
கற்பனையாக் நடக்கமுடியும் என நினைக்கிறீர்கள் போல தெரிகிறது

சோசலிசம் ஆளும் வர்க்கமாக இருந்தாலும் சரியான பதில் கூறும்படி
நாம் லீனாவை சரியான வார்த்தைகளால் கேட்க முடியுமே தவிர
தோழர்களை போல " நீ பார்த்த ஆண்குறிகளின் வகை மாதிரிகளை "
சொல் எனபது போல கேட்க முடியாது.

அது சோசலிச அரசாக இருந்தாலும் பாட்டாளிகள் ஆண்டாலும்
பரவலான மக்களின் பார்வைக்குட்பட்டு அவர்களது கவனிப்பில்
இருக்கும் கம்யூனிஸ்டுகள் என்பதற்காக என்னவேண்டுமென்றாலும்
பேச முடியாது

"இந்த மாதிரி கேள்வி பதில் எழுதலாம் இன்னும்நிறைய
ஆனால் மேலும் மேலும் இந்த விசயத்தை எழுதுவது பேசுவது '
விளம்பரமாக இருக்கும் அந்த லீனாவுக்கு "
தோழர்கள் விரும்பினால் இத்துடன் நிறுத்தலாம் அல்லது
விவாதத்தை தொடரலாம்

-தியாகு



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post