பல்வேறு கலைகளில் நுட்பமான கருத்தை வெளிப்படுத்துவதில் கவிதை முக்கிய
பங்காற்றுகிறது . கவிதை என்பதை வார்த்தைகளின் கோர்வையாக கருத்துடன்
இருக்கும் உரைநடையை போல புரிந்து கொள்ள முடியாது அப்படி புரிந்து கொண்டால்
நாம் தவறான அர்த்தம் கொள்ள நேரிடும் படிமங்களை எடுத்து கையாளுவார்கள்
உவமைகளையும் உவமானங்களையும் சொல்லுவார்கள், தாங்கள் அனுபவிக்காத
ஒன்றை சுட்டுவார்கள் . உலகத்தில் நடக்கவே முடியாத ஒன்றை சொல்லுவார்கள் .
இதெல்லாம் கவிதை பாணியான வெளிப்படுத்தல்.
லீனாவின் கவிதையில் அவர் சொல்லும் விசயம் அவரது அனுபவமாக இருக்கலாம்
இல்லையெனில் அவர் கற்பனையாக கூட இருக்கலாம் அல்லது யாருடனாவது
பேசி கொண்டு இருக்கையில் இப்படி எல்லாம் பாதிக்கப்பட்டேன் என ஒரு பாதிக்கப்பட்டபெண்
சொல்லி இருக்கலாம் . இதன்மூலம் அந்த கவிதையில் அவர் வெளிப்படுத்திய
கருத்துக்கு உடன்படுகிறேன் என்பது அர்த்தமல்ல கவிதை அதன் அமைப்பு , அது வெளிபடுத்தும்
கருத்து , யார் வெளிப்படுத்துகிறார்கள் என்பது இதை சார்ந்துதான் பார்க்கப்படுகிறது.
ஒரு பெண்ணால் காதல் கவிதையோ காமக்கவிதையோ எழுதப்படும் போது பரவலாக
சமூகத்தின் கண்டனத்துக்கு உட்படுத்தப்படுகிறது.
காலம் காலமாக பெண் என்பவள் இப்படி நடக்கவேண்டும் இப்படி இருக்கவேண்டும்
என சமூக ஏற்படுத்திய தடைகளின் வெளிப்பாடே இது
எப்படி ஒரு தாழ்த்தபட்ட சகோதரனுக்கு சம அளவில் டீக்கடையில் கூட டீக்குடிக்க
உரிமை இல்லையோ அதே போலத்தான் பெண்ணுக்கென்று சில உரிமைகள் இல்லாத
சமூகமாக இருக்கிறது .
சமூகமே ஆண்களின் பார்வையில் அமைந்து இருக்கிறது .
ஆண் சரியென சொல்வது ஆணுக்கு சரியென பட்டதை பேச பெண் பழக்கப்படுகிறாள்
பெண்ணுக்கு பேச்சுரிமை என்பது வீட்டிலேயே ஒடுக்கப்படுகிறது .
ஆண்தான் இங்கே ஆளும் சக்தி அவன் சொல்வதுதான் நடக்கும் என்பதே தற்போது
சமூகம் எங்கும் நடக்கும் விசயம்
ஆக ஒரு கவிதை என்பதை கூட பெண்கள் வெளிப்படுத்துவதில் பல்வேறு
தடைகளை எழுதப்படாத விதிகளை ஏற்படுத்துகிறது ஆண்களின் உலகம்
காதல்கவிதையோ காமகவிதையோ பெண் எழுதுவதை எந்த ஆணும்
விரும்புவதில்லை இவன் எழுதும் கவிதையை படிக்க அதை ரசிக்க
மட்டுமே பெண்ணாகியவள் இருக்கிறாள் என்பது இவனது புத்தி.
ஒரு காதல் கவிதை எழுதினாள் ஒரு பெண் என்று வைத்து கொள்ளுங்கள்
வீட்டில் தர்ம அடிதான் விழும் அதே ஒரு ஆண் எழுதினால் வயசு கோளாறில் எழுதுகிறான்
எல்லாம் சரியா போயிடும் என்பார்கள்
நிலவே மலரே என்கிறவகையில் இருக்கும் இந்த மாதிரி கவிதைகளை எழுதும் பெண்ணின்
ஒழுக்க நடவடிக்கை கேள்விக்குட்படுத்தபடும் இதுதான் பொதுவாக உள்ள புத்தி
"யாரை காதலிக்கிறா இவள் "
"இப்படி கவிதை எழுதுபவள்
ஒழுக்கமான பெண் தானா? "
என்ற கேள்விகளே விரியும் சமூகம் இது .
பெண்ணை ஒடுக்குவதில் இங்கே முதலிடம் வகிப்பவை மத நிறுவனங்கள் பர்தா அணிவிக்கும்
முஸ்லீம் மதமாக இருக்கட்டும் , உடன்கட்டை ஏற சொன்ன இந்துமதமாக இருக்கட்டும்,
இந்த இருமதங்களின் போக்கை வாழ்வியல் நடைமுறையாக அப்படியே ஏற்றுகொள்ளும்
கிறித்தவ மதமாக இருக்கட்டும் .
போட்டி போட்டு பெண்ணுக்கான கட்டுபாடுகளை மத நிறுவனங்கள் விதிக்கின்றன .
லீனாவின் கவிதை இந்த இடத்தில் ஒரு மத அமைப்பால் கண்டனத்துக்கு உள்ளாவதை
நாம் எந்த அடிப்படையில் என புரிந்து கொள்ளலாம் .
பெண் எழுதுகிற கவிதை என்பதே பெண்ணின் அனுபவமாகத்தான் இருக்கும்
என நினைக்கும் சமூகத்தில் லீனாவின் கவிதையும் அவரின் அனுபவமாகத்தான்
இருக்கும் என நினைக்கும் நண்பர்கள் இருக்கவே செய்கிறார்கள் .
அவர்களுக்கும் சமூகத்தில் இருக்கும் சாதாரண ஆணாதிக்க நண்பர்களுக்கும்
என்ன வேறுபாடு .
பெண் இந்த மாதிரி கவிதைகள் எழுதினால் அவளது அனுபவம் இது
மிக மோசமான பாலியல் காட்சிகளை சொல்லும் கவிதை எனவே
இது அவரது அனுபவம் என்றால் அவரது ஒழுக்கம் கேள்விக்குறியாகிறது .
இப்படியே சிந்திக்கும் இவர்கள் அவரை ஒரு விபச்சாரி ரேஞ்சுக்கு
கொண்டு செல்கிறார்கள் தனது சிந்தனையால்
சமூகத்தில் பெண் மேல் இருக்கும் பிற்போக்கு கருத்துக்களை அப்படியே
ஏற்றுகொண்டுதானே சிந்திக்கிறார்கள் .
எனவே அவர் நடத்திய கூட்டத்துக்கு போய் "நீ பார்த்த ஆண்குறிகளின்
வகைமாதிரியை சொல் " என்கிறார்கள்
வரலாற்று பொருள்முதல் வாத அடிப்படை பேசும் இவர்கள் குடும்பம்
எப்போது உருவாகி தனிசொத்து தோன்றிய உடனே பெண் குடும்பத்தின்
ஒரு சொத்தாக மட்டுமே பார்க்கப்படும் இன்றைய முதலாளித்துவ
காலகட்டம் வரை பேசும் இந்த நண்பர்கள் .
பெண் விடுதலை , பெண் உரிமை எல்லாவற்றையும் லீனாவுக்கு
தர கொஞ்சமும் விரும்பவில்லை .
குறைந்தபட்சம் அவரது கவிதையை பற்றி அவர் கதைக்க அதை
உக்கார்ந்து கேட்க கூட இவர்களது ஆணாதிக்க புத்தி விடுவதில்லை
எழுதி வைத்த எங்கள் கேள்விக்கு பதில்சொல் என்பதாகவே இவர்கள்
நடத்தை இருக்கிறது .
முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட முடிவுகளுடன் இறங்கிவிட்டார்கள்
கேட்டால் வீட்டில் உக்கார்ந்து இருக்கும் சாதரண பெண் என்ற
அடிப்படை அளவுகோல் எல்லாம் வைத்து இவரை பார்க்க வேண்டாம்
என்பார்கள் . நிலவும் சமூகத்தில் பெண்மேல் இருக்கும் நிபந்தனைகள்
அனைத்தும் லீனா என்ற பெண்மேலும்தான் இருக்கிறது என்பதை
ஒத்துகொள்கிறார்களா இல்லையா?
ஏற்கனவே சமூகத்தில் இருக்கும் அனைத்துவகை பிற்போக்குதனங்களையும்
எதிர்க்கிறேன் என்பவர்கள் நடைமுறையில் அப்படி இல்லையே .
நடைமுறையில் ஒரு ஆண் எப்படி பிற்போக்குதனக்களுடன் இருப்பானோ
அதே நடைமுறையில்தானே இருக்கிறார்கள் .
1.மார்க்சிசத்தின்மேல் பெண்ணிய போர்வையில் அவதூறு அதை எப்படி
எதிர்கொள்ளப்போகிறீர்கள் .
2.மேல்தட்டு வர்க்கத்தின் பெண் , தொழிலாளி வர்க்க விரோத பெண்,
பல்வேறு காம களியாட்டங்களை நடத்திய பெண்,இவள் மீது
உங்கள் கண்டனம் என்னவாக உள்ளது என்பதே அடிப்படையாக
இவர்கள் வைக்கும் கேள்வி.
அ) மார்சியத்துக்கு எல்லாவகை நமது செயல்பாடுகள் மீதும்
எல்லா போர்வையிலும் அவதூறுகள் கிளம்பத்தான் செய்யும்
கம்யூனிஸ்டுகள் மீது கம்யூனிச போர்வையிலேயே வந்து
அவதூறு செய்வார்கள். அதற்காக செயல்திட்டம் நிச்சயமாக
நீங்கள் செய்தது இல்லை இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல்
ஆ) இதற்கெல்லாம் ஆதாரம் என்ன இருக்கிறது மேல்தட்டு
பெண் என்ற உடனே அவர்மீது நாம் பழிசுமத்திவிட முடியுமா?
கிசு கிசு பாணியில் யாரோ சொன்னதை வைத்து அவர் தொழிலாளர்
விரோத பெண் என்பதை எப்படி சொல்வீர்கள்
அவர் எடுத்த படத்தின் கேமராவை எடுத்துகொண்டு ஓடிய
கேமராமேன் தவறே செய்து இருந்தாலும் தொழிலாளி வர்க்கம்
என்பதாலும் விசாரிக்காமல் முடிவு கட்டமுடியுமா
மார்க்சியம் பெண்விடுதலையை, பெண் கருத்து சுதந்திரத்தை
ஆதரிக்கிறதா இல்லை - ஆம் ஆதரிக்கிறது
பெண் என்பவள் எல்லா இடத்திலும் இருக்கிறாளா இல்லையா
பணக்கார பெண்ணாக இருந்தாலும், மேல்தட்டு வர்க்க பெண்ணாக
இருந்தாலும் ஆண்களின் ஆதிக்க பிடியின் கீழ் இருக்கிறாளா
இல்லையா?
ஆம் இருக்கிறாள்
அப்படியெனில் மேல்தட்டு , ஆதிக்க சாதி பெண்களின் உரிமையை
மறுப்பதன் மூலமே கீழ்தட்டு உழைக்கும் பெண்களின் உரிமையை
நிலைநாட்ட முடியுமா ?
விசயத்தை இப்படியா அனுகுவது ?
வர்க்கமே சாதியாக மாறி அமைந்திருக்கும் சமூகம் எங்கும்
பெண் அடிமைத்தனம் மட்டும் எல்லா வர்க்கத்திலும் இருக்கிறது
எப்படி இது பேசுபொருள் இல்லையா?
அல்லது அதை நாம் ஒரே தாவில் கடந்துவிட வேண்டுமா?
பெண் என்பவள் அனைத்து சாதிகளாலும், அனைத்து வர்க்கத்தாலும்
ஒடுக்கப்படுகிறாள் என்பதை ஏற்றுகொள்கிறோம்.
மார்க்சியத்தின் மீதான அவதூறாக , சேறடிப்பாக இருந்தால்
உடனே நாம் ஆணாதிக்கத்தை கையில் எடுக்கிறோம்
என்ன செய்கிறோம் "நீ பார்த்த உறுப்புகளின் வகைமாதிரியை
சொல் " என்கிறோம் .
பொதுவா பார்க்கலாம் "ஏ ----------- பாத்து இருப்படி நீன்னு
" ரோட்டோர தகறாரில் ஈடுபடுபவர்கள் கத்துவதை
பெண்ணுக்கு எதிராக அவளது ஒழுக்கத்தை சிதைப்பவர்களை
பார்க்கலாம்;அவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் .
நாம் பேசும் வார்த்தைகள் மட்டுமே வித்தியாசம்
குறிக்கோள் மட்டுமே முக்கியம் நடைமுறை எப்படி வேண்டுமானாலும்
இருக்கலாம் என செல்பவர்கள் இப்படித்தான் நாலாந்தரமாக
பேசுவார்கள்.
கவிதை , அது ஏற்படுத்தும் கருத்து , அதை ஒட்டிய செயல்
கவிதை அதை புரிந்துகொள்ளுதல் புரிதலின் அடிப்படையில்
செயல்படுதல் என்றவாறா நடைமுறை இருந்தது இல்லையே
எழுதியவரிடம் விவாதத்தையே கிளப்பவில்லையே நீங்கள்
மத அடிப்படைவாதி, முதலாளித்துவவாதி , பிற்போக்குவாதி
ஆணாதிக்கவாதி என சமூகத்தில் எல்லாருடனும் விவாதிக்கும்
நீங்கள் ஏன் லீனாவுடன் விவாதிக்கவில்லை .
குறைந்தபட்சம் ஒரு மடலாவது அனுப்பி கேட்டு இருக்கலாம்
இந்த கவிதை மூலம் சொல்லவருவது என்னவென ?
அடுத்து அவரது கவிதையை பிரிண்டுபோட்டு வீடு வீடாக
இலவச சேவை செய்ய போகிறீர்களாம்
சிரிப்புதான் வந்தது நடைமுறை வேலைகளை இப்படியெல்லாம்
தீர்மானிக்கும் உங்களது செயல்திட்டம் என்னை வியக்க வைக்கிறது
எந்த சமூகம் பெண்ணுக்கு எதிரான பிற்போக்குதனமாக இருக்கிறதோ
அந்த சமூகத்திடம் போய் நீதி கேட்க போகிறீர்களா?
அது என்ன கம்யூனிச சமூகமா , நீங்களும் நானும் திருத்தபோராடும்
பிற்போக்குத்தனம் நிறைந்த சமூகமாகத்தானே இருக்கிறது .
லீனாவின் பக்கத்து வீட்டு காரனை நீதிபதியாக்குகிறீர்கள் என
வைத்து கொள்வோம் அவன் எந்த வகையில் நீதிபதி
அவனுக்கு பெண்ணியம் குறித்த என்ன புரிதல் இருக்கும்.
ஆகா ஒரு கொடுங்கோலனின் கையில் உங்கள் எதிரியை
தருகிறீர்கள் ?
இதையெல்லாம் செய்வீர்கள் ஆனால் அந்த பெண்ணிடம்
மட்டும் விவாதிக்க மாட்டீர்கள் கூட்டத்தில்போய் பெண்களை
அழைத்து போய் கெட்ட வார்த்தையில் திட்டுவதுதான்
உங்களது விவாத முறையா ?
ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமூகத்தை படைக்க தற்காலிகமாக
பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் வேண்டும் என்கிறார் மார்க்ஸ்
அதற்கு புரட்சி நடத்த வேண்டும் என்கிறார் .
சமூக கலாசார பிற்போக்குதங்களை அழிக்க கலாசார புரட்சி
நடத்த வேண்டும் என்கிறார் மாவோ .
ஆயிரம் பூக்கள் மலரட்டும் ஆயிரம் கருத்துக்கள் உதிக்கட்டும்
என்கிறார் மாவோ ஒரு வேளை லீனாவின் கருத்து
அந்த ஆயிரத்துக்குள் அடங்க வில்லையோ .
இப்போது மட்டுமல்ல கம்யூனிச சமூகம் அமையும் வரை
மேல்தட்டு வர்க்கத்தின் கருத்துடன் நமது கருத்து போர்
என்பது நடந்தே வரும் அதற்கு முடிவில்லை என்பதுதானே
அவரது கருத்து.
ஆயிரம் பூக்கள் மலரும்போது தொழாயிரத்து தொன்னூற்று
ஒன்பது பூக்களை வெட்டி விடுங்கள் என சொல்லி இருக்கிறாரா?
ஒரு கருத்து நமக்கு ஏற்புடையதல்ல எனும் பட்சத்தில் நமது
எதிர்வினை என்ன ?
நாம் எப்படி எதிர்கொள்ள போகிறோம் ?
நமது செயல் எப்படி அமைய போகிறது,
ஏற்கனவே இருக்கும் பிற்போக்குதனதின் அடிப்படையில்
நமது செயல்திட்டம் இருக்குமா அல்லது வேறுவகையில்
இருக்குமா?
சாதாரணம் அதிமுக ,திமுக வின் போராட்டத்துக்கும்
நமது போராட்டத்துக்கும் என்ன வேறுபாடு
புரட்சிகர செயல்திட்டம் கொண்டுள்ள நாம் கருத்து
மோதல்களில் நமது எதிரியுடன் எப்படி நடந்துகொள்ள
போகிறோம் .
இதையெல்லாம் பேசுபவன் துரோகி என்றால்
நாம் யார் நமக்கு புரட்சிபற்றி பேச என்ன யோக்கியதை
இருக்கிறது .
சுயவிமர்சனம் செய்யாத தனிமனிதனும் கட்சியும்
எப்படி உருப்படும் .
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================