கடவுளை தேடிய கிச்சா



காதில் ஏறி கை வழியாக அந்த வண்டோ எதுவோ சென்றது தெரிந்ததும் எழுந்தேன்.
நான் படுத்திருந்த இடம் அப்படி ………..
விடிந்து விட்டதும் இரவு பூராவும் பயணம் செய்த கலைப்பு இல்லை ஆனால் இப்படி அடுத்த வேளை சோற்றுக்கு வழி இல்லாமல் இருக்கிறோம் என்ற நினைப்பு இல்லை நினைப்பு பூராவும் சிவன் மேலேயே இருந்தது.
சுற்றி சுற்றி ஓடி கொண்டிருந்த சின்ன பையன்கள் என்னை பார்த்தார்கள் என நினைக்கிறேன்.
வெள்ளை சட்டை வேட்டி , யாரோ சாமியை பார்க்க இரவு வந்தார்ன்னு சொன்னேன்ல அவருடா என்றான் ஒருத்தன் .
இன்னொருத்தனுக்கு சிரிப்பு …
எதுக்கு வந்தாருடா ! தெரியலை எதாவது உதவி கேட்க இருக்கலாம் .
அவனுக்குள்ளே அவன் பேசிட்டு என்னை பார்த்து சிரித்துவிட்டு
ஓட்டம் எடுத்தார்கள்.
மெல்ல எழுந்து அலுவலகம் என கொட்டை எழுத்தில் எழுதி இருந்த இடம் நோக்கி நடந்தேன்.
”சாமி இருக்காரா !”
”இல்லை 8 மணிக்கு டைனிங் ஹால் வருவார் அப்போதான் பார்க்க முடியும்” இந்த வாட்சு மேனை இதுவரை பார்த்ததில்லை 
நல்ல கடோத் கஜனை போல இருந்தான் . மடத்தின் சாப்பாடு 

”சரி கேசவன் சாரை பார்க்கனுமே” .
இந்த கேசவன் –எனது நெருங்கிய நண்பன் . இப்போ மடத்திலேயே வேலை பார்க்கிறான்…  கல்யாணம் ஆகியிருக்கலாம் . கொஞ்சம் சிகப்பு தலை வழுக்கை நிறைய விவாத திறமை இதான் கேசவன்
”எல்லாருக்கும் எட்டு மணிதான் டைம்.”

சரி கடவுளை அடைவது என்ன லேசுபட்ட காரியமா, இப்பதானே சாமியாரை பார்க்க வந்திருக்கோம்.

மடத்தில் எப்படியாவது சேர்ந்துட்டா நிச்சயம் ஒரு நாள் கடவுளை பார்க்கலாமில்லையா?

கடவுளை பார்க்க கிளம்பிய நாள் முதல் எதுவும் சரியாக செய்யவில்லை,
பேருந்தில் எதோ மட்டமான உணவை சாப்பிட்டு எதிர்தாப்பில் இருந்தவன்மேல் வாந்தி எடுத்து, அவன் அடிக்க வந்து.
பிறகு யாரோ அவனிடம் இருந்து என்னை காப்பாற்றினார்கள்

சரி கடவுளை பார்த்ததும் என்னாவோம்
கடவுளை பார்த்திட்டா ரெண்டு கொம்பா முளைக்கும் அதெல்லாம் இல்லை என சாரதா தேவி சொன்னதை நினைத்து கொண்டேன்.
இந்த மடம்தான் நான் படிச்ச பள்ளி நான் அறிந்து கொண்ட குருகுலம்
இங்குதான் உலகின் பெரிய பெரிய தத்துவஞானிகளின் நூல்களை பயின்றேன் என்னும் போது வியப்பாக இருந்தது.
தாத்தா சொன்னார் ஒருமுறை நீ ஒரு பிறவி மேதை
”சே என்ன கர்வம்”
கர்வம் வந்தால் கடவுள் தெரியமாட்டார்
சாமி வருவார் அது வரை இந்து பேப்பர் படிக்கலாம்
ஆனால் இன்னும் பல் விளக்கலை
என்ன செய்யலாம் எனமெதுவா வெளியே வந்து வேப்பங் குச்சில் பல் துளிக்கிட்டு முகத்தை அலம்பிட்டு காந்திருந்தேன்.
”என்னப்பா சவுக்கியமா?”
சங்கர் மகராஜின் குரல் , நல்லா இருக்கேன் சாமி
”என்ன இந்த பக்கம்”
”மடத்தில் சேரனும்னு வந்தேன்”
”ஏன் மடத்தில் சேரனும்”
”கடவுளை பார்க்க”
கொஞ்சம் அப்பட்டமாக பேசியதாகவே எனக்கு பட்டது ஆனால் சிரித்துவிட்டார் சாமி .
இவர் அழகான துறவின்னு சொல்லலாம் மிகவும் அடக்கமானவர் கடவுளின் மேல் தீராத பற்றும் அமைதியான சுபாவமும் உடையவர் .எப்போதும் கோபம் வராது வருமான்னு எனக்கும் சந்தேகம். அப்படி ஒரு பிறவி
”மடத்தில் சேர்ந்து நான் சாமியை பார்த்துட்டேனா
அல்லது பெரிய சாமிதான் பார்த்தாரா ?
ஏன் உனக்கு இந்த வேண்டாத வேலை தம்பி”
”அப்ப பார்க்க முடியாதா?”
”ம்ம், பார்க்கலாம்! முதலில் டிபன் சாப்பிடு”
”பொங்கலும், காபியும் உள்ள போனா உனக்கு கடவுள் தெரிவார்”
என்றார் மகராஜ்
மிக அதிக நாட்கள் இவருடன் தர்க்கம் செய்தது நினைவுக்கு வந்தது
புத்தர் எவ்ளோ பெரிய ஞானி அவர் ஏன் கடவுளை பத்தி பேசலை
எல்லாம் தெரிஞ்ச அவர் பேசாதப்போ மத்தவுங்க ஏன் கடவுளை வச்சிட்டு ஆட்டம் போடுறா, சாப்பிட்டு கை கழுவியதும் விசாரித்தார்
”தம்பி எப்போ சேர போற”
”இப்போதான்”
”சரி ஒரு இடத்தில் விடுறேன் ஆறுமாதம் தாக்கு பிடிச்சா
நீ சேரலாம்”
”சரி”
எனக்கு என்மேல் அளவுக்கு அதிகமான நம்பிக்கை 
டீ குடிக்க வேண்டாம் என நினைத்தால் 1 மாசம் ஆனாலும் குடிப்பதில்லை , வைராக்கியம் நமக்கு தண்ணீர் பட்ட பாடுன்னு நினைச்சிட்டேன்.
அவர் சொன்ன இடம் மயிலாப்பூரில் ஒரு பக்தரின் வீடு
பக்தர் என்றால் கல்யாணம் ஆகாமல் சதா கடவுளை வேண்டியவர்
கை கால் வராமல் கிடக்கிறார்.
“ நீதான் அவருக்கு எல்லாம் செய்யனும்”
சரி என்றவனுக்கு சோதனை இப்படியா வரும்
இரவு முழுவதும் அணத்த ஆரம்பித்த பக்தர் தனது சொந்த கதையை
சொல்ல ஆரம்பித்தார்
எங்கம்மா இருக்காலே அவளும் அந்த ரூமிலதான் இருந்தா என்றார் சம்பந்தமில்லாமல்
அவளை பார்த்து கொள்ள உன்னை போல ஒருத்தன் இருந்தான் அவன் அவளை என்னமோ செய்தான்னு நினைக்கிறேன் என்றார்.
அய்யோ காதை பொத்தி கொண்டேன்.
உடலில் தாகத்தை அடக்க அடக்க அது மனோ வியாதியாகி இருக்கலாம்னு
காமத்தை அடக்காதே அதை மடை திறந்துவிடு என ஓஷோ வை படித்தது
ஞாபகம் வந்து தொலைத்தது.
வேலை காரி என்ன சொன்னா என்றார் .
ஒண்ணும் சொல்லலையே . இந்தா இந்த புடவை எல்லாம் அவளுக்கு கொடு
சரி என்றேன்.
ஒரு நாள் தம்பி என் மேல் ஏறி படு என்னால் காமத்தை அடக்க முடியலை
என்றதும்
………….
அடுத்தநாள் மடத்தில் வந்து நின்றேன்
என்னாச்சு
சாமி நான் வீட்டுக்கு போறேன்
ஏன்
கடவுளை பார்த்திட்டேன்…..





2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post