மார்க்சிய அழகியலும் சில தவறான புரிதல்களும்




மார்க்சிய கலை இலக்கிய ஆய்வாளர்கள் மார்க்சிய அழகியலை பற்றி மிக விரிவாக விளக்கமாக எழுதி இருக்கிறார்கள் .
தற்போது கூட காக்கா முட்டை என்கிற திரைபடத்தை எடுத்துகொள்வோம் இதை மார்க்சிய அழகியல் பார்வையில் எப்படி பார்ப்பது என்பதை நாம் அறிந்து கொள்ளாமல் .
நமது மனம்போன போக்கில் விமர்சனம் செய்து விட்டு இடையே மானே தேனே போட்டு கொள்வதை போல மார்க்ஸ் எங்கெல்ஸ் என போட்டு கொண்டால் அது மார்க்சிய விமர்சனம் என்று நினைத்து கொள்கிறார்கள்.
பொதுவா மார்க்சிய ரீதியில் இலக்கியத்தை விமர்சனம் செய்யுங்கள் என்றால் உடனே என்ன செய்வார்கள்
அந்த கதாநாயகன் என்ன வர்க்கம் என்று பார்பார்கள்
அவன் மத்தியதரவர்க்கமா உடனே அவன் செயல் அனைத்தும் கொஞ்சமும் நிலை இல்லாததாகத்தான் இருக்கும் எனவே அந்த அடிப்படையில் விமர்சனம் எழுத தொடங்கி விடுவார்கள் உதாரணம் “அழகி” என்று ஒரு தமிழ் படத்துக்கு வந்த இடதுசாரி விமர்சனத்தை பார்த்தால் தெரியும் .
மார்க்சியம் என்றாலே அது பொருளாதார கோட்பாடுதான் என்கிற குறுகிய வாதமும் இருக்கிறது அதுவும் தவறு .
மார்க்சியம் என்பது பொருளாதார அடிப்படையில் மனிதன் தன் உழைப்புக்கு அந்நியமாதல் வரை பேசிய தத்துவம்
அதாவது சோற்றை வாய்வரைக்கும் கொண்டு செல்வதுதான் மார்க்சியர்களின் பணி அதை திண்பதும் கனவு காண்பதும் எங்கள் வேலை என்கிறார்கள் சிலர்
மனிதனின் மன ஆழத்திற்கோ அல்லது மனிதனின் சிந்தனை போக்குக்கோதர்க்க நியாயம் கற்பிக்க இயலாது என சொல்வதும் இதைத்தான்.

பல்லவர் கால சிற்பங்கள்
                        அந்த கால குகை ஓவியம்




அப்படி அல்ல எந்த செயலும் காரணமின்றி நடப்பதில்லை .
காரணம் – காரியம் என்கிற தர்க்கத்திற்கு அப்பால் எதுவும் இல்லை
விசயத்துக்கு வருவோம், மார்க்சியம் பேசும் சிலர் வெறும் வர்க்க முரண்பாடுகளின் பிரதிபலிப்பாக இலக்கியத்தை , சினிமாவை பார்க்கும் போது தவறு செய்கிறார்கள்.
மனிதன் உழைப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறான் தனது அவசியமான உழைப்பு போகவும் இயற்கையை மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடத்தான் செய்கிறான்.

“உளி படு கல்லுக்கே
உரியனவாம் வணக்கங்கள்.
உளிக்கில்லை .
அகத்தில் மறைத்திருக்கும்
சிற்பத்தை உணர்ந்து,
உளியை நகைத்து நிற்கும்
இன்னும் உளி படா
ஓராயிரம் கற்கள்.”
அந்தகால குகை ஓவியங்கள் – சமூக அடிப்படை கொண்டவையாகவே இருந்தன .






அதன்பிறகு கலை என்பது கலைக்காகவே வளர்ந்துவந்ததுன்னு வச்சிகிட்டால் கூட . தனது உழைப்பு நேரம் போக உண்மையை அழகியல் என்பதை தரிசிக்க மனித மனம் விளைந்தே இருந்தது.
இந்த உபரி நேரத்தை பல்வேறு கலைகளில் செலுத்தினார்கள். அந்த கலைகளும் உருவம் பெற்றன .
அழகு என்றால் என்ன?
புறப்பொருளை பார்க்கும் மனிதன் தனது சிந்தனா சக்தியை , தனது உழைப்பு ஆகியவற்றை செலுத்துகிறான் . அதற்கு வேறொரு உருவம் தருகிறான்.
பின்பு அதை கண்ணுரும் போது அந்த பொருள் ஒரு படைப்பாகிறது.
அதாவது தான் தன்னை அந்த புறப்பொருளில் காண்கிறான்.
இதனைதான் மனிதமயமாக்கல் என்கிறோம்
ஆக அழகை புறத்தில் தேடும் முயற்சி என்று வைத்து கொண்டால்
மனிதன் – புறவுலகம் –மனிதன்
என்கிற சங்கிலி நமக்கு கிடைக்கிறது இதைத்தான் அழகியல் என்கிறோம்.
இப்போது நாம் வந்திருப்பது அழகியல் என்கிற ஒரே ஒரு கான்செப்ட் பற்றி மட்டுமே. 

அடுத்து அதென்ன மார்க்சிய அழகியல் என்று கேட்டோமானால்
எந்த அழகியலும் ஒரு சமூக தன்மையை பெறுகிறது .(அழகியல் என்பது ரசனை என பொருள் கொள்ளலாம்)

அது வர்க்கத்தின் சேவையை செய்தே தீரும் , அதனால் இலக்கியம் என்பதும் முதலாளிவர்க்கத்தின் ஊழியம் செய்யவே செய்யும் என்கிற கோட்பாட்டை நோக்குவதும் .

”பக்தி இலக்கியம் முழுக்க இலக்கியம் அல்லவென்றும் அதன் அழகியல் இசை சார்ந்து இயங்கும் போது அது தேங்கி விட்டதாகவும் நிராகரிக்கிறார்கள்”

”ராமனை தேடும் தியாகய்யரின் பாடல்களை இதனால் ஒதுக்குவதோடு அல்லாமல் கர்நாடக இசையை தமிழ் இசைக்கு நேரெதிராக திருப்புகிறார்கள் - ஆக இதன் மூலம் தமிழ் இசை என்கிற வகைக்கு மார்க்சியத்துக்கு விரோதமாக அதிக முக்கியதுவமும் , கர்நாடக இசை மேல் வெறுப்பும் பரப்புதல் நடக்கிறது ”

தமிழ் இசையும் பக்தியிலேயே வளர்ச்சி அடைந்தது
ஆன்மீகம் என்பதை மார்க்சியம் நிராகரிக்கிறது என்பதால்
அதை சார்ந்த அனைத்து இலக்கியமும் பிற்போக்குதனம் என சொல்வதும் இதனால்தான் நடந்தது.

//
பக்தி இலக்கியத்தைப் பற்றி நான் முதன் முதலில் வாசித்தது கைலாசபதி எழுதிய அடியும் முடியும், பண்டைய தமிழர் வாழ்வும் வழிபாடும்தான். தொடர்ந்து நான் இயங்கிக் கொண்டு இருக்கும் போதுதான் ஒரு விடயம் விளங்குகிறது. அதாவது எங்களுக்கான சமூக மாற்ற செயற்பாடு என்பது பண்பாட்டுப் புரட்சி ஊடாகத்தான் இதுவரை நடந்திருக்கிறது. இன்றைக்கு வரைக்கும் இலங்கையர்களிடமும் இந்தியர்களிடமும் இனக்குழு பண்பு இருப்பதால் சமூக மாற்றங்களே நடக்கவில்லை என்ற பார்வை கூட காரல் மார்க்சிடம் இருந்தது. கா. மார்க்ஸ் இங்கே வந்து நேரடியாக பார்க்க வில்லை. அதனால் அவருக்கு கிடைத்தது எல்லாம் ஆங்கிலேயர்களின் பார்வையில் எழுதப்பட்டது. வடிவமும் எங்கள் முன் இருக்கிறது. எங்களுக்குள் இனக் குழுமரபும் முழுவதாக உடைக்கப்படாமல், முன்னேறிய இனக்குழு மேலாதிக்கம் செலுத்துவதன் மூலமாக ஏனைய இனக்குழுக்களை சாதிகளாக மாற்றிக் கொண்டு ஏற்றத்தாழ்வான, சுரண்டல் முறை ஏற்படுத்திக் கொண்ட காரணத்தினாலே பாரம்பரியமாக பண்பாட்டில் இருக்கக்கூடிய வீரியம் எங்களுக்குள் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. வெறும் அரசியல் மாற்றத்தை செய்து கொண்டு, பிறகு இதை செய்யலாம் என்றால் மக்கள் இணங்கி வர முடியாதவர்களாக இருப்பார்கள்.
பக்தி இயக்கத்தைப் பொறுத்தவரைக்கும் காவிரி நதிக்கரை சார்ந்த விவசாயப் பகுதிகளில் உள்ள கோயில்கள்தான் பாடு பொருளாகி இருக்கின்றன. இந்த திருத்தலங்களில் நாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் தேவாரம் இசைத்துக் கொண்டு செல்வதும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நீலகண்டர் யாழ் மீட்டிப் பாடுவதும், இதன் மூலமாக மக்கள் ஈர்க்கப்படுவதும் நிகழ்ந்திருக்கிறது. இந்த மாதிரியாகத்தான் பக்தி இயக்கம் வெற்றி பெற்றது.
வணிக வர்க்க அதிகாரத்தோடு அரசு இருந்த போது வணிக வர்க்கத்துக்குரிய சந்தைகளை பாதுகாப்பாக ஏற்படுத்திக் கொடுப்பது என்று அரசு இருந்த நிலையில் விவசாயத்திற்கான வாழ்கைமுறைக்குரிய ஏர், கலப்பை மண்வெட்டி போன்ற உற்பத்தி சாதனங்களை அதிக அளவு உற்பத்தி செய்கிற அரசியலுக்கு மாற்ற வேண்டி தேவை ஒன்று பக்தி இயக்கத்தால் வருகிறது. வணிக வர்க்கம் அதிகாரத்தில் இருந்த காலத்தில் பஞ்சம் பசி, நோய்கள், பெருகி இருந்தன. மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் இதைப் பற்றிப் பேசப்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் வரும் பக்திப் பேரியக்கம் விவசாயிகளைக் கவருவதாக இருக்கிறது. அதனால் விவசாயிகளின் இயக்கமாக மாறுகிறது. அரசர்கள் சைவத்திற்கும், வைணவத்திற்கும் மாறுவது என்பது விவசாய அரசியலுக்கு மாறுவதாகத்தான் அர்த்தம். சமணத்திற்கும், பௌத்தத்திற்கும் விவசாயத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை. சமண பௌத்த துறவிகள் விவசாயம் செய்யக் கூடாது. ஏனெனில் விவசாயம் செய்யப் போனால் நிலத்திலிருக்கும் பூச்சிகள் எல்லாம் அழிக்கப்படும்.//



எந்த படைப்பாக இருந்தாலும் அதன் சேவை யாருக்கு என சந்தேகபடுவதும்மார்க்சிய விமர்சனமாக கொள்ளப்படுகிறது. ஆனால் அதுமட்டுமே சரியல்ல.
இது மட்டுமே அழகியல் மற்றதெல்லாம் அழகியல் வகைப்பட்டதல்ல என மறுப்பது தவறான வாதம்அதாவது இயக்கவியல் வகைப்பட்ட வாதமல்ல .
அழகியல்
மார்க்சிய அழகியல்

மனிதன் –இயற்கை-மனிதன்
வர்க்கம் சார்ந்தது எழுத்தை விமர்சிப்பது,
அந்நியமயமாதலையும் பேசுகிறது
இலக்கியத்தை வர்க்க நலனுக்காக உபயோகிக்கலாம் “தாய் “ நாவல்”

அழகியல் குறித்த மார்க்சிய கண்ணோட்டமே மார்க்சிய அழகியல் தவிரவர்க்கம் சார்ந்த அதன் கண்ணோட்டம் என்பது இல்லை .

மிக சாதரணமா ஒரு கதையை படித்து பாருங்கள் அதில் ஏழை பணக்காரன் , முதலாளி தொழிலாளி , என்கிற அடிப்படி முரண்பாடுகளை பேசுவதுதான்

மார்க்சிய இலக்கியம் என புரிந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் இதழ் ”செம்மலர் “ வந்த கதைகள் கதைக்களம் இப்படித்தான் இருக்கும்.

ஆனால் ஒரு குடும்பத்தின் அண்ணன் தம்பி பிரச்சனை, மதம் , அன்பு , எண்ணற்ற குடும்ப சிக்கல்கள் இவற்றை மார்க்சியம் சார்ந்து எழுதுபவர்கள் தவிர்ப்பதற்கு காரணம் இதில்தான் உள்ளது.

உடனே, ”இந்த உலகம் இப்படி இருக்கிறது அதை சொல்வதும் மற்ற தத்துவஞானிகளின் வேலை எனதுவேலை அதை மாற்றுவதாகும்” என்ற மார்க்சின் கொட்டேசனை சொல்வார்கள்.
அப்படி அல்ல அது மார்க்ஸ் தத்துவஞானத்தின் பயன்பாடு பற்றி பேசும்போது சொன்னது.

இலக்கியம் என்பது ஒரு துண்டறிக்கை மாதிரி இருக்க முடியாது.
அது மனிதனுக்கு வாசிப்பனுவத்தை தராது . போர் அடிக்கும் அடுத்து அவன் தனது வேலையை பார்க்க சென்றுவிடுவான். (மார்க்சியர்கள் இலக்கியத்தை எப்படி படைக்கவேண்டும் என்று ஏற்கனவே லெனின் சொல்லி இருக்கிறார் அதை படிக்கவும்)

ஆண்டன் செகாவ் நாவல்கள் சிறுகதைகளை படித்து பாருங்கள் .
அதன் கருப்பொருள்கள் பல்வேறுவிதமானவை .ஆக, அழகியலின் நோக்கம் வர்க்க வேறுபாட்டை பேசனும் , புரட்சிக்கு பாதை போடனும் என்பது மட்டுமல்ல எனப்தை புரிந்தால் சரி
மேலும் இலக்கியமாகட்டும் , மொழியாகட்டும் , அழகியலாகட்டும்
திடீட் பாய்ச்சல்கள் , அளவு மாற்றம் பண்பு மாற்றமாக மாறுவது என அனைத்து மாற்றங்களுக்கும் உட்பட்டு மாறிக்கொண்டே இருப்பதாகும்.
மார்க்சிய அழகியலும் இந்த மாற்றங்களை தனக்குள் வாங்கி தனது விமர்சன போக்கையும் விரிவாக வளர்த்து செல்வதாக இருக்கவேண்டும்.
எப்போது எந்த படம் வந்தாலும் ஒரே மாதிரியான பார்வை என்பது
நாம் வளரவில்லை என்பதை காட்டுகிறது.
அடுத்து இலக்கியம் உள்ளிட்ட கலைவடிவங்களின் ஆளும் வர்க்க ஆதிக்கம் என்பது குறித்த பார்வை இருக்கிறது.
ஆளும் வர்க்கத்தை நையாண்டி செய்தும் படைப்புகள் வரும் .
ஆளும் வர்க்கத்தை கிண்டலடிக்கும் இலக்கியம் மட்டுமே இடதுசாரி இலக்கியமாகாது.
இடது சாரி என்பது மனிதமயமாக்கலை குறித்து பேசுவதேயாகும்

சாராம்சம்:
மார்க்சிய அழகியல் என்பது மனிதமயமாக்கல் எனப்படுகிறது.
வர்க்கம் சார்ந்த எதார்த்தவாத இலக்கியம் ,கலைகள் மட்டுமே மார்க்சிய அழகியல் வகைபட்டதல்ல மாறாக ஒரு சிறந்த மனிதமயமாக்கல் முயற்சி மார்க்சிய அழகியலின் படி உண்மையே.

உண்மை என்பது மனிதன் எதார்த்ததுடன் கொண்ட தொடர்பின் மூலம் பெறுவது அதிலேயே அழகியல் உள்ளடக்கம் கொண்டுள்ளது

அழகியல் உணர்வு என்பது முரணியக்கத்தில் வளர்ந்து வருவதாக பார்க்க தெரியவேண்டும். தேங்கிபோன நேற்றைக்கான அழகியல் இன்றைக்கு உதவாது



http://keetru.com/index.php?option=com_content&view=article&id=8320:2010-05-07-10-27-14&catid=1080:10&Itemid=352
https://www.marxists.org/archive/marx/works/subject/art/preface.htm
மார்க்சிய அழகியல் இன்னும் வளர்தெடுக்கப்பட வேண்டிய தாக உள்ளது

மார்க்சிய மருத்துவயியல்
மார்க்சிய மனோதத்துவயியல் ஆகியமை இனிமேல் பட்ட காலங்களில்
சிந்திக்கவும் வளர்க்கவும் வேண்டியனவாகும் ..

சாராம்சத்திற்கு வலு சேர்க்கும் கட்டுரைகள் :

பிந்தைய மார்க்ஸிய எழுத்தாளர்கள் செய்த முயற்சிகளின் சாரத் தினை ‘யதார்த்தத்தை வடிவமைத்தல்’ என்ற தொடருக்குள் அடக்கிவிடலாம். இதற்கு அடிப்படையாக அமைவது மார்க்ஸின் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் இயங்கியலுமாகும். இவற் றைப் பின்பற்றினால் யாரும் இலக்கியப் படைப்புகளையோ அவற் றின் அழகியலையோ பொருளாதார வரலாற்றுமைய வாதத்திற் குள் முடக்கிவிடமுடியாது. என்றாலும் எப்படியோ பின்னாளைய இலக்கியப் படைப்புகளும் விமரிசனங்களும் மார்க்ஸிய அடிப்படை யிலான ஓர் அறவியல் பிரசாரத்திற்குள் முடக்கப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது. பெரும்பாலும் வர்க்கப் பார்வை, யதார்த்தத்தை மீள்படைப்புச் செய்தல் என்ற அளவிலேயே மார்க்ஸியப் படைப் புலகம் முடங்கிவிட்டது.

அதே கட்டுரையில்

//துண்டுதுண்டாக உள்ள இந்தக் குறிப்புகள், பலவேறு விதமான அழுத்தங்களும் நிலைப்பாடுகளும் மார்க்ஸிய அழகியல் கொள்கை யில் உருவாக வழிவகுத்துள்ள்ன. பொதுவாக நோக்கினால் மார்க்ஸின் எழுத்துகளை வைத்து ஓர் மனிதமைய அழகியல் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி கலை என்பது படைப்புச் சக்தி யுள்ள ஓர் உழைப்பு (creative labour). பிற அந்நியப்படாத உழைப்புக ளிலிருந்து இது எவ்விதத்திலும் வேறுபட்டதல்ல. கட்டடக் கலை ஞனையும் தேனியையும் தொடர்புபடுத்தி மார்க்ஸ் தமது மூல தனம் நூலின் ஐந்தாம் அத்தியாயத்தில் பேசுகிறார். இங்கு கட்டடக் கலைஞனை அவர் உதாரணம் தந்தது, அவனுக்குப் பிரதானம் தரவேண்டும் என்ப தற்காக அல்ல. மனித உழைப்பாளி ஒருவன் என்ற அளவிலேயே அங்கு அந்த உதாரணம் அளிக்கப் படுகிறது. அந்நியமாகாத எந்த உழைப்பும் படைப்பாற்றல் கொண் டதே ஆகும் என்பது மார்க்ஸின் கருத்து. மார்க்ஸின் இந்த அற்புதமான கருத்து, கலையினை அதன் மாயத் தன்மையினின்றும் விலக்கி, வரலாற்றுப் பூர்வமாக அதை நம்மை நோக்கவைத்து, பிற செயல்களிலிருந்து கலைச்செயல் உயர்ந்ததோ மாறுபட்டதோ அல்ல, அனவைர்க்கும் அது இயல்பாகக் கைவருவது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.//










 



   

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post