அதியமான் தரும் தீர்வும் அதிலுள்ள ஓட்டையும்


அதியமான் தரும் தீர்வும் அதிலுள்ள ஓட்டையும்
---------------------------------------------------------------------------------

ரோட்டில செல்லும்போது வாகனநெரிசலில் சிக்கும் ஒவ்வொருவரும் நினைப்பது எப்படி இத்தனை கார்கள்
பைக்குகள் வந்தால் இடம் எங்கே கிடைக்கும் என்ன செய்யலாம்
என்பதே .

நமது முதலாளி அதியமானுக்கு ஒரு யோசனை மண்டைக்குள்
பல்புமாதிரி எரிந்தது பஸ்ஸு இருப்பதால்தான் பிரச்சனை
அந்த பஸ்ஸு வந்து அரசாங்கத்திடம் இருப்பதால்தான் பிரச்சனை எனவே பஸ்ஸுதான் போகனும் மற்ற வாகனங்கள் போக கூடாதுன்னு (http://athiyaman.blogspot.com/2009/01/mtc-bus-serives-unable-to-meet-rising.html
ஒரு பதிவை எழுதி தொலைச்சுட்டார்.

சரி இந்த பிரச்சனைக்கு நாம் மீன்முள் வரைபடம் போடலாம்
பஸ் போக்குவரத்து சரியில்லாமையால் காரும் பைக்கும் வாங்கினார்கள் என்கிறார் இது உண்மையா

//ன்று கடுமையான பற்றாக் குறை, ஊழல் மற்றும்
நெரிசல். பேருந்தில் ஏற முடியாதவர்கள் இரு சக்கர வாகனங்களை வாங்க முயல்கின்றனர். அவை மலிந்து விட்டன.சென்னையில் ஒரு 700 மினி பஸ்களுக்கு
permit வழங்கப்பட்டால் (ஏல முறையில்) பிரச்சனையைக் குறைக்கலாம். தனியார் பேருந்து மற்றும் parking மற்றும் bus stops அனுமதிக்கப்பட்டு, மினி வேன், ஷேர் ஆட்டோ, இரண்டு சக்கர டாக்ஸிகளும் அனுமதிக்கப்பட்டால் பொதுமக்களுக்கு மிகப் பயன்படும். நெரிசல் குறையும்.//

ஒரு கீழ்தட்டு நடுத்த்ரவர்க்கம் இன்னும் ஓட்டை டிவிஸ் 50 மொத்தமா கட்டி வாங்க முடியவில்லை என்பது நிதர்சனம் தொடர்ந்து எழுதுகிறேன்

ஆக மத்திய தரவர்க்கம் காசில்லை என்றால் இந்த வாகனங்களை கூட வாங்க முடியாது அதான் முக்கிய காரணம் கொஞ்சம் காசு வந்துள்ளது
சரி இவர்களுக்கு காசு வந்துள்ளது யாருக்கு பிரச்சனை என்றால்
முதலாளிகளுக்கு காரில் செல்பவர்களுக்கு பிரச்சனை கப்பல் போன்ற தனது காரை திருப்ப முடியாமல் இருப்பது இந்த முதலாளிகளுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது எனவே அதியமான் போன்ற முதலாளிகள்
என்ன தீர்வு சொல்கிறார்கள் அனைவரும் பஸ்ஸில் போகட்டும்
அந்த பஸ்ஸோ தனியாருக்கு போகட்டும் மற்றவர்கள் நாசமா போகட்டும் என்பதே .


சரி இவர் சொல்வது போல அனைவரும் ஒரு போக்குவரத்த்து வாகனத்தை தேர்ந்தெடுப்பதால் நெரிசல் குறையுமா

இல்லை அதிகரிக்கவே செய்யும்

இன்று உருவாகி உள்ள நகரங்களை எடுத்து பாருங்கள் அவற்றின் அந்த காலத்ட்திய மக்கள் தொகையை கணக்கில் கொண்டே சாலைகள் அமைக்கப்பட்டன ஆனால் மக்கள் தொகையோ நாளுக்கு நாள் அதிகரிக்கும் போது சாலைகள் விரிவடையாது
மேலும் நகரங்களை நோக்கி மக்கள் குமிவது இதன் காரணங்கள் இவற்றை ஆராயாமல் போக்குவரத்து நெரிசலை மட்டும் சரி செய்ய முடியாது .

சென்னை அந்தகாலத்தில் ஐந்து லட்சம் பேர்களுக்கு போடப்பட்ட சாலைகள் இன்று ஐம்பது லட்சம் மக்களுக்கும் தாங்கவேண்டும் என எதிர்ப்பார்ப்பது மடமை இது ஒருபுறம் இன்னொரு புறம்

சென்னையை நோக்கி ஏழை விவசாயி கூலி மக்களின் படையெடுப்பு அதன் காரணம் விவசாயம் அழிதல் அதைபோல திருப்பூரிலும் தொழில் சாலைகளை நோக்கி படையெடுக்கும் விவசாய மக்கள் அந்தந்த கிராமங்களில் சிறு நகரங்களில் அவர்களது சிறு தொழில்கள் ஏன் அழிந்தன உதாரணமாக் மதுரையில் இருந்த முட்டாய் கம்பெனியும் சில்வர் பட்டரைகளும் அப்பள உற்பத்தியும் அழிந்ததன் பின்னனி
அவர்களை திருப்பூரை நோக்கி உந்தி தள்ளுகிறது

ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் வைச்சு இருப்பவன் அதை வித்துவிட்டு சென்னையை நோக்கி வர ஆரம்பிக்கிறான் ஏன்

அவனது இடத்தில் ஒரு ஏக்கருக்கு வெறும் இருபதாயிரம் மட்டுமே கிடைக்கும் - இரண்டு போகம் பயிரிட்டால் நாற்பதாயிரம் மட்டுமே கிடைக்கும் ஏதேனும் இயற்கை சீரழிவு என்றால் அதுவும் கிடைக்காத
ஒரு பார்டர் நிலமை இந்த சமூகம் ஏற்படுத்தி உள்ளதான் மேலும்
விவசாயம் நம்பகதகுந்த தொழிலாக இல்லாமல் போய் கொண்டு இருப்பதால் மக்கள் நகரங்களில் குமிகிறார்கள்

இவை யெல்லாம் காரணங்கள் சரி தீர்வு என்ன
எல்லாரு பஸ்ஸிலதான் போகனும் என்பது தீர்வா
இல்லை

தொழிற்சாலைகளை பரவலாக்கனும் திருப்பூரில் மைய்யப்பகுதியில் அனைத்து தொழிற்சாலைகளும் அமைந்து இருப்பதால் மைய்யத்தை நோக்கி சுமார் 5 லட்சம்பேர் தினமும் வரவேண்டும் போகவேண்டும் கடைகள் முதல் அனைத்தும் மைய்ய பகுதிக்கு வைச்சுட்டா

பஸ்சில்ல ராக்கெட் உட்டாலும் நெரிசலை சரிபண்ண முடியாது

ஆக இவர் கூறுவது முழுமையான பிரச்சனைகளை ஆராய்ந்து இல்லை
தனிநபர் பிரச்சனையை சமூக பிரச்சனையாக்கி அதற்கு தனிநபர்
ரீதியான தீர்வே இது

நான் காரில் போகனும் எனவே மற்றவன் எல்லாம் பஸ்ஸி போகட்டும் என்கிற சுயநல போக்கு ஒரு சமூக பிரச்சனைக்கு தீர்வளிக்காது

அடுத்து அரசு பஸ்ஸுகளின் மீதான குற்றச்சாட்டை பார்போம்

அரசு போதிய பஸ்ஸுகளை இயக்கவில்லை போதிய வழிதடங்களுக்கு இயக்கவில்லை உபயோகிக்க பயனுள்ளதாக இல்லை என்பதே

காரணம் அதிலுள்ள லஞ்சம் போன்ற காரணங்களை அடுக்குகிறார்

மேலும் இம்மாதிரி அரசு இயக்குவது சோசலிச பாணி பொருளாதாரத்தின் எச்சம் என்கிறார்

அந்த பாணியின் எச்சம் இருப்பதால்தான் இன்னும் ஏழைகள் பஸ்ஸிலாவது போகமுடிகிறது .நீங்கள் காரில் போகும் அதே வேளையில்
Edit


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post