நேபாளா போராட்டம் - ஈழ விடுதலை போராட்டம் ஒப்பீடு சரியா

அண்ணன் வினவு சில படுபயங்கர கட்டுரைகளை எழுதி வருகிறார் அதிலொன்றுதான் //
/

ஈழம் – இந்தியா முதுகில் குத்துவது ஏன்?

//

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை இன்னொரு நாட்டின் பொருளாதாரத்துடன் ஒப்பிட்டு
அதன் சமூக பொருளாதார மாற்றத்தை உருவாக்க முடியாது என்பது பாலபாடம்
ஆனால் ஒரு நாட்டின் விடுதலை போராட்டத்தை இன்னொரு நாட்டின் விடுதலை போராட்டத்துடன் ஒப்பிட முடியாது என்பதும் அப்படித்தான்

என்னவோ புலிகளில் வலதுசாரி சந்தர்ப்பவாதம் என்பது பிழையானதாக இருந்தது
அதன் செயல்தந்திரங்களுக்கு தோல்வியே அதன் வலதுசாரி சந்தர்ப்பவாதம்தான்
என்பதை சொல்லும் அதே நேரத்தில் -

இலங்கையின் இனபோராட்டத்தையும் நேபாளத்தின் மாவோயிஸ்டுகளின்
போராட்டத்தையும் ஒப்பிட முடியாது ஏனெனில் இலங்கையில் ஒரு ஒடுக்கும் பேரினவாத
சிங்கள அரசும் ஒடுக்கப்படும் பல சிறிய இனங்களையும் கொண்டது நேபாளத்தில்
அப்படி இன ஒடுக்குமுறை இல்லை .நேபாளத்தில் இருந்தது ஒரு மன்னர் குடும்பம் மட்டுமே
அதை போலவே மன்னர் குடும்பம் இலங்கையில் இருந்தால் இன்னேரம் எப்பவோ
ஈழ விடுதலையும் கிடைத்திருக்கும்

இப்படித்தான் சிந்திப்பதா இது மார்க்சிய வழிமுறையா என்பதெல்லாம் கேள்வி இல்லை
வினவுக்கு ?

இலங்கையில் நடக்கும் இன ஒடுக்குமுறை சர்வதேச அளவில் அதன் ஆதரவை
எப்படி பெறுகிறது அதன் கேந்திர முக்கியத்துவமான அமைப்பு நிலை நேபாளமோ அப்படி கேந்திர முக்கியத்துவமான ஒரு அமைப்பு நிலையில் இல்லை இருந்தாலும் இலங்கையை போன்ற ஒரு இராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததில்லை .

அடுத்து தேசிய சுயநிர்ணய போராட்டம் என்பது பாட்டாளி வர்க்க கோரிக்கைக்கு உள்ளடக்கி புலிகளால் கிளப்பப்படவில்லை என்கிற விமர்சனத்தை வைத்தால் அது சரியே ஆனால் இந்த விடுதலை போராட்டமே இந்தியாவின் தயவை அனுசரித்து அமைந்தது என்றால் அது தவறு .

இராணுவ ரீதியான நிலைபாடுகளை 90 களுக்கு முன்பு இந்தியா எடுத்து இருக்கலாம் அதன் விளைவாக இலங்கையை மிரட்டி வைக்க விடுதலை புலிகள் உட்பட நிறைய போராளி குழுக்களை அது உருவாக்கி இருக்கலாம் ஆனால் இப்போது பிறகு இந்தியா தனது
பொருளாதார கனவுகளை இலங்கையில் செயல்படுத்த முயற்சிக்கிறதே அன்றி
அதன் இராணுவ முக்கியத்துவத்தை கருதவில்லை என சொல்லி விட்டு இந்தியாவின் செயல்பாடுகளை குறுகலாக வரையறுக்க முடியுமா

1.இராணுவ முக்கியத்துவத்தை பற்றிய கேள்வி எழுப்பி இருந்தால் இந்தியா நிச்சயம் விடுதலை புலிகளை ஆதரித்து இருக்கும் ஆனால் காங்கிரசின் ஒரே எதிரி பிரபாகரனாகி போனதினால் இந்தியாவின் ஒட்டு மொத்த இராணுவ முக்கியத்துவத்தை விட ஒரு குடும்பத்தின் பழிவாங்கள் உணர்ச்சி வெல்கிறது

2.இது இப்படி இல்லாமல் இராஜிவ் காந்தி சாவு புலிகளால் நடத்தபடாமல் இருந்திருந்தால்
இராணுவ முக்கியதுவத்தை கருதி இன்னமும் போர் நடந்துகொண்டுதான் இருக்கும்

இரண்டுக்கும் என்ன வித்தியாசம் ஒரு குடும்பத்தின் பழிவாங்கள் உணர்ச்சியை நாம் மறுகாலனியாதிக்க கலைசொற்களை கொண்டு மூடி மறைக்க முடியுமா ஆனால் இப்படித்தான் நடந்துள்ளது ஒரு புறம் தனது கேபிடலை இலங்கையில் நிலை நிறுத்த இந்தியா விரும்பினாலும் மறுபுறம் தனது ப்ழிவாங்கல் உணர்ச்சி மேலேலும்பி போட்டு தள்ளியது லட்சகணக்கான மக்கள் .

இதன் இராணுவம் முக்கியத்துவ பின்னடைவை இனிமேல் வரும் இந்திய அரசுதான் சந்திக்க போகிறது அது இந்திய மேலாண்மை அரசுக்கும் தெரியும் ஆனாலும் இன்னும் இந்தியா ஒரு மன்னராட்சியை போன்ற நிலைமையை விட்டு வெளிவரவில்லை என்கிற  உண்மையும்
நிலபிரபுத்துவ தப்ப்ண்ணங்களே இன்னும் இந்தியாவில் காங்கிரசுக்கு ஓட்டுக்ளை பெற்று கொடுப்பதாலும் இன்னும் முழுமையான ஒரு முதலாளித்துவ உற்பத்திக்கு இந்தியா செல்லாமையாலும் அதன் மதிப்பீடுகள்  இப்படித்தான் இருக்கின்றன .

இந்தியா புலிகளை ஆதரிக்கும் ஆன் எனிகாஸ்ட் எனும் புலிகளின் குருட்டு நம்பிக்கை வேண்டுமானால் பொய்யாகலாம் ஆனால் இந்தியா புலிகளின் மேல் கொண்ட வெறுப்பே இந்த வேரறுப்புக்கு காரணம் என்பதில் 80 சதவீதம் உண்மை இருக்கிறது .

நல்லவேளை இராஜிவ்காந்தி நேபாளத்தில் கொல்லப்படவில்லை அப்படி கொல்லப்பட்டு இருந்தால் நேபாள விடுதலையும் தோழர்களின் அறிவுரையும் சாத்தியம் அல்ல .

மற்றபடி புலிகள் தனது இருப்பை மிதமிஞ்சிய கற்பனைக்கு இட்டு சென்றது இந்தியா போன்ற நாடுகளின் உதவியால் அல்லது அமைதியால் ஈழம் வெல்லப்படும் என கனவு கண்டதும் தவறானதுதான் ஆனால் இந்த போராட்டத்தை கரு சிதைவு செயதது இரண்டு விசயங்கள்
1. ராஜிவ் கொலைக்கு இந்தியாவின் பழிவாங்கல் உணர்ச்சி
2.புலிகளின் கருத்து குருடான தன்மை (மக்களை நம்பாமல் ஆயுதங்களையும் பேரங்களையும் நம்பியது)மக்களை ஆயுதபாணிகளாக மாற்றாமல் விட்டது அவர்களுக்கு
அரசியல் போதிக்காமல் விட்டது அரசியல் ரீதியா எப்படி சிந்திக்கனும் என சொல்லாமல்
விட்டது


மாற்றாக புலிகள் இலங்கையுடன்   போர் புரிந்தது பின்வாங்கியதெல்லாமே இந்தியா
வந்து காப்பாற்றும் என்பதால் அல்ல போரின் திசைவழியே அப்படி தீர்மானித்தது
இப்படி எப்பவாவது இந்தியா தேவைபடும் என நினைத்து இருந்தால் ரா.காந்தியை
போட்டு தள்ளாமலே மழுங்கட்டையா புலிகள் இருந்திருப்பார்கள் .

ஏன் தோற்றார்கள் என்பதற்கு ஆயிரம் காரணம் இருக்கு அதில் அகவய புறாவய காரணங்கள்
நிறைய இருக்கும் போது ஒரு சிலதை மட்டும் போகஸ் செய்வது மீளாய்வு அல்ல மாறாக
அரைகுறைத்தனம்

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post