அன்னா ஹ்சாரே -காந்தி -அகிம்சை - தொடர்ச்சி

மேற்கண்ட கட்டுரையில்

அகிம்சை என்பது சமூகபார்வை இல்லாமலிருக்கிறது என்றும் அதே போல சமூகபார்வை கொண்டவர்கள் தனிமனிதனின் நேர்மை அகிம்சை அவனது நோக்கம் ஆகியவற்றை பார்க்க மறுக்கிறார்கள் என்றும் சொல்ல முயல்கிறோம் .

தனிமனித மாறுதலே சமுகத்தின் மாறுதல் என்ற அடிப்படையில்வரும் தனிமனிதவாதத்தில் அகிம்சை என்கிற ஒரு கருவியைஎப்படி சமூக மாற்றத்துக்கு பயன்படத்தலாம் என காந்தி பயன்படுத்தியதும் அதை தனிமனிதர்கள் எளிதாக புரிந்துகொண்டார்கள் .

அதிலும் ஒரு குறைபாடு என்னவென்றால் சமூகத்தை

பற்றிய பார்வை யற்றதாக இருக்கிறது அகிம்சை

1.வர்க்க போராட்டம்

2.சுரண்டல்

3.மதத்தின் நிலை ஆகியவற்றை பற்றிய

தனிமனித ரீதியான முடிவுகள் தவறாவை அதே நேரத்தில்

சமூக ரீதியாக சிந்திக்கும் மார்க்சிய வாதிகளிடம் தனிமனிதனின்

1.கொல்லாமை

2.சத்தியம்

3.நேர்மை ஆகியவை சமூகமாற்றத்தின் ஊடாகவே நிகழும்

என்றும் மேற்கண்ட அடிப்படையில் செய்யப்படும் எல்லா போராட்டங்களும் போலித்தனமானவை என்றும் சொல்லும் போக்கு நீடிக்கிறது

இங்கே ஒரு பாரிய இடைவெளி இருப்பதை அறிகிறீர்களா

ஊழலுக்கான எதிர்ப்பு நிலையை பிரதிபலிக்கும் அனைத்து மக்களும் பொழுதுபோக்குக்காக போராடுகிறார்கள் என்பதும் மற்றும் இழப்பதற்கு பயந்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராடுவார்கள் என்பது கண்மூடித்தனமான முன்முடிவு என்கிறேன்

திருப்பூர் குமரன் இழப்பு வரும்னு நினைச்சு போராட்டத்தை துவங்கலை

இழப்பு தயாராகவும் துவங்கவில்லை ஆனால் இழப்பு வரும் போதும்

சாவு வரும் போது தனது கொள்கையை விட்டு தரலை இதுபோல எத்தனையோ மக்கள் அகிம்சை போராட்டத்தில் உயிரை விட்டு இருக்கலாம் .

அவர்கள் எல்லாம் கோழைகள் என்று சொல்வதும் அன்னாஹசராவின் போராட்டத்தில் வந்தவெனெல்லாம் கோழை என சொல்வது ஒரே வகை மாதிரிதான்

அடுத்து அகிம்சை என்பது துரோகம் அல்ல அதை ஒரு போராட்ட முறையாக கொள்ளலாம் ஆனால் அகிம்சையில் சமூகமாற்றத்துக்கான தீர்வு இல்லை என்பதை உணரவைத்துவிட்டு போராடனும்


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post