நடைமுறையில் வன்முறை லட்சியத்தில் அகிம்சை
-------------------------------------------------------------------
நாம் வன்முறையை வாழ்க்கையாக தெரிவுசெய்து கொண்டுள்ளோம்
நமது எதிப்புக்கு வன்முறை தவிர நமக்கு வேறு வழிகள் இல்லை violence in our every thought .
வாழ்வில் போராட்டத்தில் என எங்குமே அதற்கெதிரான கருத்தை
அகிம்சையை சுய ஒழுக்கத்தின் மூலம் கொண்டுவரலாம் நமது தனிவாழ்க்கை என்பதை ஒழுங்கோடும் அகிம்சையாக அமைத்து கொள்வதன் மூலம் சமூகத்தை மாற்றலாம் என கனவு கண்டது மட்டுமில்லாமல் அதை வாழ்வில் செய்தும் காட்டியவர் காந்தி .
எண்ணம் சொல் செயலின் மூலம் மற்றவர்களை துன்புறுத்தாமல் இருப்பது ஏனெனில் அவனும் நம்மை போன்றாதொரு மனிதன் என்கிற அடிப்படையே அதாவது இந்த சமூகத்தின் வர்க்கம் வர்க்க போராட்டம் என்கிற விசயங்களை எல்லாம் காந்தி கணக்கில் எடுக்கவில்லை என்பது அவரது கருத்துமுதல்வாதமதவாத கண்ணோட்டத்தின் அடிப்படையில் அகிம்சை என்கிற கருத்தை உருவாக்கி கொண்டார் என்றும் பார்கிறோம் .
ஒரு வர்க்கமானது இன்னொரு வர்க்கத்தை ஒடுக்கித்தான் இயங்கி வந்து
இருக்கிறது என்கிற விசயங்களுக்குள் போகாமல் அதாவது சமூக விதிகளை ஆராயாமல் தனிமனித ரீதியாக விசயங்களை அலசி ஒரு தீர்வு கண்டோமானால் எப்படி இருக்கும் அந்த தீர்வு நாம் நல்லது செய்யனும் கெட்டது செய்றவனுக்கும் நல்லது செய்யனும் இப்படியே இந்த ஒழுக்க கோட்பாட்டை வளர்த்து அதை சமூகம் முழுக்க பரப்பிட்டம்னா மொத்த சமூகமும் திருந்திடும் என்ற முடிவுக்கு வருவோம் .
ஆனால் பாருங்கள் மனிதன் பணக்காரன் ஏழை படித்தவன் படிக்காதவன் என மனிதர்கள வகைமாதிரியாக இருக்கிறார்கள் அவர்களின் உற்பத்தி முறை
உற்பத்தி உறவுகளை கொண்டே அடிப்படை வாழ்க்கை முறை சிந்தனை முறை இருக்கிறது - அதாவது வர்க்கம் சார்ந்தே இருக்கிறது
வர்க்கத்துக்கு இடையே முரண் நிலவுகிறது முரண் அதிகரிக்கும் போது
அது புரட்சியாக வெடிக்கிறது என மார்க்ஸின் ஆய்வு முறை செல்கிறது
இங்கு காந்தியோ அகிம்சை வாதிகளோ வர்க்க அடிப்படையில் இயங்கும்
சமூகத்துக்கு பதிலாக தனிநபர் விருப்பப்படியே லட்சியங்களின் படி இயங்கும் சமூகத்தை கருத்தில் கொண்டு தீர்வுகளை படைக்கிறார்கள் போராட்ட முறைகளை வகுக்கிறார்கள் .
காந்தியை தனிமையில் அல்லது பொதுவில் தாக்கியவர்களிடமும் அவர்
திருப்பி தாக்காமல் தனது எதிர்ப்பை வைத்தார் போராட்டத்தின் மூலம்
உண்மை,சத்தியம் என்ற சங்கிலியின் வழியேதான் அகிம்சைக்கு வருகிறார் காந்தி - உண்மையை அடையும் ஒரு பாதையாக அகிம்சையை
கொண்டிருக்கிறேன் என்கிறார் .
சமத்துவ உலகமே அடைய கூடிய ஆகபெரிய லட்சியம் என்கிறோம் நாம்
கண்ணுக்கு தெரியாத கடவுளை அடைய ஒரு லட்சியம் என்றால் கண்முன்னே நடக்கும் அநீதியை அகற்ற ஒரு லட்சியமும் பாதையும் நம்மால் போடப்படுகிறது .
வர்க்க அடக்குமுறையே அரசின் முந்தேவை என்கிற லெனினது கருத்துபடி வர்க்க சார்பற்ற அரசு நிலவ முடியாது . அகிம்சை வாதிகள் சமூகத்தை ஆய்வு
செய்து அது எப்படி மாறி வந்திருக்கிறதென்றெல்லாம் விளக்குவதில்லை
சமூகத்தின் மாற்றத்திற்கான காரணிகளை விளக்க அவர்களிடம் மெய் விபரங்கள்
இல்லை.
அகிம்சை என்கிற கொல்லாமை துன்புருத்தாமையை ஒரு ஆயுதமாக்கி
சுதந்திர போராட்டத்துக்கு பயன்படுத்தி பெருவாரியான மக்களை கவர்ந்தார் இந்த மக்கள் எல்லாம் இழப்பதற்கு ஏதும் இருப்பவர்களோ இழப்பதற்கு அஞ்சுபவர்களாகவோ இல்லை .
நாம் துன்பத்தை ஏற்று கொள்ளலாம் ஆனால் எதிரியை துன்புறுத்த கூடாது
அல்லது நாம் துன்பத்தை ஏற்று கொள்வதன் மூலம் எதிரிக்கு நாம் சொல்ல
வருவதை உணர்த்துவது என்கிற ரொம்ப டீசண்டான நாகரீகத்தில் முன்னேறிய வடிவமாக இந்த போராட்டம் அமைந்தது காரணமாகும் .
போராட்டம் மட்டும் போதுமா கோரிக்கைகள் நிறைவேறினால் போதுமா
எல்லாருக்கும் எல்லாம் கிடைத்து விடுமா ? அங்கதான் காந்தி சொல்கிறார்
பணக்காரர்கள் தங்களது சொத்துகளுக்கு டிரஸ்டியாக இருக்கனும் என்றும்
பணக்காரர்களிடமும் நில உடமையாளர்களிடமும்பணிந்து கேட்டே நிலத்தை
பிரித்து கொடுக்கலாம் என்றும் சொன்னார் இதை வினோபா செய்தார்
(என்ன மாதிரி நிலம் என்றால் விளைச்சலுக்கு உபயோகப்படாத நிலம்)
சமூகரீதியான ஒடுக்குமுறைக்கும் வன்முறைக்கும் உள்ளாகும் தாழ்த்தபட்ட
பிற்படுத்த பட்ட மக்களும் , நாள் முழுவது ஒட்ட சுரண்டி விட்டு சம்பளத்திற்கும் போனசுக்கும் இழுத்தடிக்கும் முதலாளிக்கு எதிராகவும் அகிம்சையை பயன்படுத்தி போராடினால் உண்ணாவிரதம் இருந்தால் என்னாகும் ?
நாள்தோறும் இத்தகைய போராட்டங்களை வேலை இழப்புகளை பார்த்து
வருகிறோம் .
முதலாளிகளின் கருணையை மட்டும் சாராது வேலை நிறுத்தங்களை செய்தால்
மட்டுமே கூலி உயர்வோ போனசோ கிடைக்கும் என்பதை கண்கூடாக பார்த்து
வருகிறோம் .
வசதிபடைத்தவன் தரமாட்டான் வயிறு படைச்சவன் விடமாட்டான் என்கிற கருத்துபடிதான் நடைமுறை இருக்கு என்பதை பார்கிறோம்.
இதையே முழு சமூகத்துக்கும் விரிவு படுத்தினால் அரசியல்வாதிகள் முதலாளி வர்க்கத்தின் சுரண்டலுக்கு ஆதரவாக இருப்பதுதான் தனியார்மயம் காட்டுகிறது இந்த அமைப்பில் ஊழல் என்பது இந்த இணைப்பின் வெளிப்பாடே அரசியல் வாதிகள் முதலாளிகளுக்கு சாதகமாக நடந்து கொள்ள குறிப்பிட்ட தொகையை பரிசாக வாங்குவது ஊழல் எனப்படுகிறது .
அன்னா கசாரே முதல் காந்திய வாதிகள் முதலாளிகள் சுரண்டல் பற்றிய பார்வை இல்லாமல் அரசமைப்பின் அன்பளிப்பை மட்டும் ஒழித்து விட்டு மேற்செல்லலாம் எனவும் இந்த அமைப்பை அப்படியே பாதுகாத்து அதன் குறைகளை மட்டும் களை எடுக்கலாம் என்கிறார்கள் .
மேற்படி சொல்லாவிட்டாலும் அவர்களது கண்ணோட்டம் இப்படித்தான் இருக்கும் என உறுதியாக சொல்லலாம்.
நாட்டில் 39 சதவீத மக்கள் மிக அதிக வறுமையில் இருக்கையில் 65 சதவீதம் மக்கள் எல்லாம் பெற்றவர்களாக இருப்பது இரண்டு பிளவு பட்ட இந்தியாவாக இருக்கிறதுன்னு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்புகிறது
இந்த 39 சதவீதத்தின் வறுமையை எப்படி போக்குவீர்கள் என்றால் அதற்கு
அன்னாவிடம் பதில் இருக்காது .
முதலாளித்துவத்தின் சுரண்டல் அமைப்புதான் அதை பாதுகாப்பதுதான் இந்த ஜனநாயகம் என்பதை புரிந்து கொள்ளாமல் , ஊழலை மட்டும் ஒழிப்பது பொருளை ஒழிக்காமல் நிழலை மட்டும் ஒழிப்பதாகும் .
இதை பற்றி மார்க்சியவாதிகள் சொல்வது மிகச்சரி
இனி அடுத்தபகுதியை பார்ப்போம் ஊழலை ஒழிக்கவேண்டும் என்றால் முதலாளித்துவ சுரண்டல் அமைப்பை முடிவுக்கு கொண்டு வந்து சோசலிச பொருள் உற்பத்தி அமைப்பை நிறுவனும் என்பது இறுதி லட்சியம் .
ஆனால் ஊழலை கட்டுபடுத்தவும் ஊழலை தடுக்கவும் சில சட்டங்களை
போடலாம் .
சோசலிச அரசு என்பது தற்போதையை முறையில் நிலவாது என்பது அதன் சட்டங்களும் தற்போதைய நோக்கத்தில் இருக்காது என்பதும் சரியே
ஆனால் சட்டத்தின் மூலம் தண்டனை தருதல் கோர்டு நடைமுறைகள்
எல்லா குற்றச்செயல்களையும் தடுத்தல் ஆகிய அனைத்தும் சிறுவீத பொருளுற்பத்தி - ஏற்றத்தாழ்வான பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்
இருக்கும் வரை நீடிக்கும் அதுவரை அரசு நீடிக்கும் அதுவரை சட்டங்களும் நீடிக்கும் .
சட்டத்தின் படி வழிமுறைகள் நெறிமுறைகள் ஆகியவற்றை உடனே தூக்கி
எறிய முடியாது இந்த இடத்தில் ஒரு சட்ட மசோதா வரைவை செயல்படுத்த மக்களின் அகிம்சை போராட்டம் நடக்கிறது .
நிச்சயமாக ஊழலை ஒழிக்க அல்லது அரசை தூக்கி எறிய அல்லது மாற்றாம் கோரிய போராட்டம் அல்ல
எந்த சமூகத்திலும் ஒரு புரட்சியோ ஆயுத போராட்டமோ தடாலென உடனே நிகழாது , சிறு சிறு கிளர்சிகள் தோன்றும்போது மக்கள் போராட்ட உணர்வில் உந்தப்பட்டே மேலும் மேலும் வீதிக்கு வருவார்கள் .
இந்நிலையில் இத்தகைய போராட்டங்களை இறுதி லட்சியத்துடன் பொறுத்தி பார்த்து இதை செய்பவர்கள் மத்தியதரவர்க்கம் எனவே இவர்கள் இழக்க பயப்படுவார்கள் என முடிவு செய்து காந்தியம் முதலாளித்துவத்தை ஒழிக்காது என்கிற முடிவில் இருந்து போராட்டத்தை பொழுதுபோக்கு என தீர்மானிப்பவன் கருத்து குருடனே
- மேலும் இதை தொடர்ந்து விவாதிக்கலாம்
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================