சிலிண்டர் திருட்டு

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது தவறு

திருடனாய் பாத்து திருந்தவில்லை என்றால் பொதுமக்களின் தர்ம அடி அவர்களை திருத்தும்

நண்பரும் அவர் மனைவியும் வேலைக்கு செல்பவர்கள் எனவே காலி சிலிண்டரை கொடுத்து அதற்குரிய

பணமும் புத்தகமும் கொடுத்து பக்கத்து வீட்டு காரரிடம் வந்தால் வாங்கி வைக்க சொல்லி இருக்கிறார்

(மதியம் சுமார் 3 மணி அளவில்)அவர்களும் வாங்கி இவர் வீட்டு வாசலில் வைத்துவிட்டு உள்ளே சென்று திரும்பும்முன் இரு நபர்கள்

மோட்டார் சைக்கிளில் வந்து கண்முன்னே சிலிண்டரை எடுத்து கொண்டு ஓடிவிட்டார்களாம்

(வண்டியை ஸ்டார்ட் செய்தபடி ஒருத்தனும் சிலிண்டரை தூக்கி பின்புறம் ஓடி ஏறுபவன் ஒருத்தனும் ஆக இருவர் "கேட்டவர்களுக்கு எடுத்துகொள்ள சொல்லிவிட்டார்கள் என மட்டும் சொல்லிவிட்டு வண்டியை விரட்டி தப்பி இருக்கிறார்கள்)

இது சம்பந்தமாக போலீசில் புகார் கொடுத்துவிட்டு வந்தோம் ..

இத்துடன் இந்த பகுதியில் மொத்தம் 10 சிலிண்டர் திருட்டு போய் உள்ளது

எனது சந்தேகம் சிலிண்டர் வழங்கிய நபர் மேல் இருக்கும் என தெரிவித்தேன்

ஏனெனில் சரியாக சிலிண்டர் தரும்போது வந்து தூக்கி சென்று இருக்கிறார்கள்

பணம் ,நகை முதலானவற்றை மதிப்பு திரும்ப பெறக்கூடியது ஆனால் சிலிண்டர் அப்படி அல்ல

காணாமல் போய்விட்டது என சொன்னால் உடனே காஸ் கம்பெனி பதில் சிலிண்டர் தராது

முதலில் எப் ஐ ஆர் பதியவேண்டும் , பிறகு காணாமல் போன சிலிண்டரை கண்டு பிடிக்க முடியவில்லை

என போலீசார் எழுதி தரப்வேண்டும் இதெல்லாம் இருந்தால்தான் இன்னொரு சிலிண்டர்

தருவார்கள் மீண்டும் அட்வான்ஸ் தொகை பெற்றுகொண்டு எனவே மக்கள் சிலிண்டரை மிக

கவனமுடன் பாதுகாத்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்

மேலும்

1.சிலிண்டர் வினியோகிப்பாளருக்கும்(who bring to house) திருடுவர்களுக்கும் உள்ள கள்ள தொடர்பை அறிந்து கொண்டு அதை போலீசுக்கோ அல்லது நமது அண்டை வீட்டாருக்கோ சொல்லவும்

2. அடுத்தவன் சிலிண்டர் தானே என மெத்தனமாக இருக்காமல் எடுத்து செல்லும்போது யாருடையது என கேட்பதும்

3.சிலிண்டர் கம்பெனிகளும் வேலைக்கு சேர்க்கும் நபர்களின் குற்றபின்னனி என்னவென தெரியாமல் வேலைக்கு சேர்ப்பதை தவிர்க்கலாம்
( குற்ற பின்னனி விசாரிப்பது ரொம்ப சிம்பிள் அவர்கள் இருக்கும் பகுதி யில் இருக்கும் நாலு போலீச் ஸ்டேசன்களில் விசாரித்தால் தெரிந்து விடும்
டிவிஸ் குரூப் இப்படித்தான் ஆள் சேர்க்கிறார்கள்(குற்றபின்னனி விசாரித்து வழக்கு ஏதும் இல்லை என தெரிந்த பிறகு) என கேள்விபட்டேன்

4.இன்றுள்ள விலைவாசி உயர்வு ஏழைகளை மிகவும் ஏழைகளாக்கி
அவர்களில் ஒரு சிலரை திருடர்களாக மாற்றுகிறது இந்த சூழலை மாற்றனும் இல்லாவிட்டால் பாக்கெட்டில் நூறு ரூபாய் தாளுடன் யாரும் போகமுடியாதபடி பீகார் நிலவரம் சீக்கிரம் தமிழ் நாட்டில் வரும் எனலாம்





















--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post