இந்தியாவில் பல்வேறு படங்கள் எடுக்கப்படுகிறது தமிழில் அவ்வாறே
சில படங்கள் சர்ச்சைக்குள்ளாகின்றன இன்னும் சிலவை சர்ச்சையை பற்றிய கூறு இருந்தாலும்
கவனிக்காமல் விடப்படுகின்றன .
சர்ச்சைக்கு உள்ளாகிய இந்த படம் அதான் இந்து கமலகாசனின் 'உன்னைபோல் ஒருவன்'
சரி என்ன சொல்கிறார் இதில் ஒரு காமன் மேனாக காட்டப்படும் கமல் சமூக அக்கரைகொண்டு
நாலு தீவிர வாதிகளை போட்டுத்து தள்ளுகிறார்
இதான் படத்தின் கதை யாரை தீவிரவாதி என்கிறார் ;
முஸ்லீம்களில் ஒரு சிலர் கோவை குண்டு வெடிப்பு மற்றும் மும்பய் குண்டு வெடிப்பு போன்றவற்றில் ஈடுபடுபவர்களை பொதுவாக பொதுமக்களை கொன்று ஜிகாத் நடத்துபவர்களை
இதற்கு முன்பு குருதிபுனலில் ஆந்திராவில் செயல்படும் நக்சல்பாரிகளை தீவிரவாதிகள் என்றார்
சரி என்ன செய்ய சொல்கிறார் (அல்லது அந்த படம் சொல்கிறது) ; தீவிரவாதிகள் என போலீஸ் யாரை பிடித்தாலும் கோர்டு விசாரனை தேவை இல்லை இரண்டு நிமிடத்தில் கொன்று விட வேண்டுமாம்
ஏன் அப்படி என்றால் : 2 நிமிடத்தில் அவர்கள் பல ஆயிரம் பேரை கொல்லும் போது ஏன் தீர்ப்பு மட்டும் பல ஆண்டுகள் கழித்து வருகிறது என்கிறார்
ஏன் குண்டு வைக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் : காமன் மேனுக்கு அது தேவை இல்லை குண்டு வைத்து
அப்பாவிகளை கொன்றால் பதிலுக்கு குண்டு வைத்து அவர்களை கொல்வான் காமன்மேன் என்கிறார் அதாவது
தீவிரவாதத்துக்கு தீவிரவாதம்தான் தீர்வு .
கேள்விகள் காமன்மேனிடம் ;
1.புலிகள் தீவிரவாதிகள் என சொல்லி சுமார் 20 ஆயிரம் பேரை
இலங்கையில் அடைத்து வைத்து இருக்கிறதே அவர்கள் அனைவரையும் உடனே கொன்று விடலாமா
இந்த படம் இலங்கையில் வெளியானால் கமலுக்கும் இதை எடுத்தவர்களுக்கும் ராஜபக்சே விருந்து கொடுத்து
இருப்பார் "நம்மவிட பெரிய பாசிஸ்டுகளாக இருக்கிறானே " என்று
2.காஸ்மீர் விடுதலைக்கு போராடும் அனைத்து போராளிகளையும் தூக்கில் போடவேண்டுமா/
3.ஒரு போராட்டம் என்பது எப்போதூ ஆயுத போராட்டமாக மாறுகிறது அதற்கு காரணம் யார்?
4.காரணத்தை களையனும் அல்லது ஒழிக்கனும் உதாரணமா வறுமையினால் மக்கள்
ஆயுதம் தூக்கி போராடினார்களே உலகெங்கும் அவர்கள் அனைவரும் தீவிரவாதிகளா/
5.காமன்மேனுக்கு சாவுகளின் எண்ணிக்கை பற்றி இருக்கும் அளவு கவலை சாவுக்கான காரணம் பற்றி
ஏன் இருப்பதில்லை /
6.குண்டு வைப்பவர்களும் முதலில் காமன்மேந்தானே அந்த காமன்மேன் ஏன் இவ்வாறாக மாறினான்
7.இந்தியாவில் இஸ்லாமிய மக்களை தூண்டிவிட்டு அவர்களை எதிரிகளாக சித்தரித்து
குஜராத்முதல் கோவை வரை கலவரங்கள் நடத்தி கொலை செய்த இந்து தீவிரவாதிகளை
பற்றி என்ன சொல்கிறார் காமன்மேன்
8.அரசாங்கம் தடாவிலும் பொடாவிலும் போட்டு கொன்ற அந்த அப்பாவி காமன்மேன்களை பற்றி
எண்ணிக்கை சிறியது என்பதால் விட்டு விடலாமா காமன்மேன்
இப்படி இந்து பாசிச எண்ணப்போக்க்கில் அப்படியே எடுக்கப்பட்ட இந்தபடம்
முழுதாக நிராகரிக்கப்படும் கருத்து ஒழிக்கவேண்டிய கருத்து
--
தியாகு
-
"
============================
Tags
சினிமா விமர்சனம்