கோவையில் சங்கம் வைக்க என்ன கஸ்டப்பட்டார்களோ அதை விட கஸ்டபட்டு
கெட்ட பெயர் ஏற்படுத்தி விட்டார்கள் .
தொழிலாளர்களின் உரிமைகள், அவர்களின் கூலி உயர்வு,போனஸ்
குடிதண்ணீர், ஓய்வரை வசதி போன்றவற்றிற்காக தொழிற்சங்கம் அமைக்க
அரசு அனுமதி அளிக்கிறது .
யூனியன் அமைக்கும் உரிமை , கூட்டமாக சேர்ந்து சம்பளம் கோரும் உரிமை
என்பது மிக முக்கியம் ஆனால் கூட்டமாக சேர்ந்து கொலை செய்யும் உரிமை
யாருக்கும் கிடையாது .
ப்ரிகாலின் மனிதவள மேலாளர் கொல்லப்பட்டது மிகவும் கண்டனத்துக்கு உரியது
எந்த அடிப்படையில் இந்த கொலை நிகழ்ந்து இருந்தாலும் தவறுதான்
தொழிற்சங்கங்கள் வெறும் சந்தா வாங்கி கூலி உயர்வை பெற்று தரும்
வியாபார ஸ்தாபனங்களாகி போனதன் விளைவு ,
தொழிற்சங்கங்கள் என்றாலே முதலாளிகள் ஒரு முட்டுகட்டையாக
நினைக்க இயலாமல் செய்து விட்டது .
தொழிற்சங்கங்கள் கூலிபடையாக மாறினால் உழைக்கும் மக்களிடம் இருந்து
தனிமை பட்டு போவது உறுதி
யாரையும் கொலை செய்து எந்த உரிமையை யும் நிலை நாட்ட இயலாது
வேலை நீக்கம் செய்தால் போராடத்தான் வேண்டும்
கொலை செய்ய கூடாது
எப்படி அடிப்படை ஊழியன் சம்பளம் வாங்கி வேலை செய்கிறானோ
அதே போல அவனை வேலை வாங்கும் மேல் நிலை ஊழியனும்
வேலை காரனே எனும் வர்க்க சிந்தனை இல்லாமல்
மனித வள மேலாளரை கொல்வது செக்கூரிட்டியை கொல்வது
என போகும் போக்கு திரும்ப இயலாத ஒற்றையடி பாதை
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================