அரசாங்கத்துக்கு கோவில் அர்ச்சகனுக்கு பொங்க சோறு

 
தோழர் கலகம் அனுப்பிய செய்தி ;

சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத்துறை எடுத்தது செல்லும்: ஐகோர்ட்

 

சிதம்பரம் கோயிலை இந்து அறநிலையத்துறை எடுத்துக் கொண்டது சரியே என சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

சிதம்பரத்தில் உள்ள உலக புகழ் பெற்ற நடராஜர் கோயில் நிர்வாகம் ஆண்டாண்டு காலமாக தீட்சிதர்கள் வசம் இருந்து வந்தது.

இந்நிலையில் கோயில் நிர்வாகத்திற்கு செயல் அதிகாரியை நியமனம் செய்து இந்து அறநிலையத்துறை 31.7.1987 அன்று உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து பொது தீட்சிதர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்து அறநிலையத்துறை ஆணையாளரிடம் முறையீடு செய்யாமல் நேரடியாக உயர்நீதிமன்றத்தை நாடியது தவறு என்று கூறி தீட்சிதர்களின் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து தீட்சிதர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதற்கிடையே இந்த உத்தரவை அரசு வாபஸ் பெற்றுக் கொண்டதால், வழக்கை உச்சநீதிமன்றம் பைசல் செய்தது.

இந்த நிலையில் கடந்த 2006 ம் ஆண்டு அறநிலையத்துறை ஆணையாளரின் பரிந்துரையை ஏற்று கோயில் நிர்வாகத்திற்கு செயல் அதிகாரியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை பொது தீட்சிதர்கள் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் செயல் அதிகாரி நியமனத்திற்கு இடைக்கால தடை பிறப்பித்தது.

இந்த தடையை நீக்கக்கோரி, சிதம்பரம் ஆறுமுகசாமி, தமிழ் வழிபாட்டு பயிற்சி மைய இயக்குனர் சத்தியவேல்முருகன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை நீதிபதி ஆர்.பானுமதி விசாரித்து நடராஜர் கோயில் நிர்வாகத்தை மேற்கொள்ள செயல் அதிகாரியை நியமித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு வழங்கினார்.

இதனை எதிர்த்து தீட்சிதர்களும் அவர்களுக்கு ஆதரவாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமியும் மேல் முறையீட்டு மனுக்களை கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தனர். இவற்றை நீதிபதிகள் கே.ரவி ராஜபாண்டியன், டி. ராஜா ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் முடிவில் தீர்ப்பை அந்த நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இன்று நடராஜர் கோயில் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீட்சிதர்கள் மற்றும் சுப்பிரமணியசாமி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரியவந்ததையடுத்து, இந்து அறநிலையத்துறை ஆணையர், செயல் அதிகாரியை நியமிக்க உத்தரவிட்டார்.

அறநிலையத்துறை சட்டம் பிரிவு 45 (1) ன் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளது தெரிய வந்தால் நிர்வாகத்தை ஏற்பதற்கு செயல் அதிகாரியை நியமிக்க ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. எனவே இந்த வழக்கில் அரசு பிறப்பித்துள்ள உத்தரவு செல்லும்.

இது தொடர்பான அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தன.
 

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

5 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post