கலைஞரே பெரிய ஆளுதான் நீர்

கலைஞரே உமது திருவிளையாடல் எம்மாம் பெருசு
இலங்கை மக்கள் குண்டு மழையில் செத்த போது கடிதம் எழுதுவது
அவர்களுக்காக போராட்டம் பெரிய அளவில் நடக்கும் போது
போலீச விட்டு வக்கீலையும் லீவு உட்டு மாணவர்களையும் நசுக்குவது

போராட்டம் முடிந்ததும் தேர்தல் வெற்றில் இத்தனை மந்திரிகள் வேணும்னு

போராடி போராடி பெற்றீரே !உமது அருமை தெரியாத சனங்கள்

நீர் இலங்கைக்கு அநீதி இழைத்ததா சொன்னதும், இதோ இந்திய குடியுரிமை

என இந்திய குடியுரிமையை இலவச வேஸ்டி கணக்கா சும்மா தூக்கி போட்டீரே

"நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் " என உமது வசனத்துக்கு தகுந்தாப்பல

இல்லையா நீர் நடந்து கொண்டீர் .

தினமலர் காரன் என்னென்ன எழுதினான் இலங்கை பிரச்சனையில்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பார்பனியத்தின் கூசாவாக திகழ்ந்த அவனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு நமீதாவும் , ஸ்ரீபிரியா விபசாரம் பண்ணுவதாக புவனேஸ்வரி சொன்னார் என போட்டதற்கு எழுதியவரை உள்ள தூக்கி வச்சு "நமீதாவின் கற்பை " காப்பாற்றிய உம்மை " கற்பு காத்த காவலர் " என பட்டம் கொடுத்து புகழலாம் .


வாலி கிட்ட சொன்னா கவிதை அலையை தோற்றுவித்து இதுபோல

"உமது புகழை "தமிழால் பாடி தமிழுக்கு பெருமை சேர்த்து இருப்பாருல்ல .



எம்பி குழு போய் " அட நீங்க வேற மூணு வேளையும் பிரியாணியா துண்ணுட்டு

இருக்காங்கன்னு சொன்னா " நாங்க் உங்களை நம்பிருவம்னு என்னமா

யோசிச்சு ஒரு முடிவு எடுத்தீங்க அதை பாராட்ட வார்த்தையே கிடையாது கலைஞரே


" நீ தண்ணி அடிக்கறவன் தானே' ன்னு சொல்ல " நீ ஊத்தி கொடுத்தியான்னு; கேட்டு மோதிகிட்டு திரிந்த விசயகாந்து , செயா மாமியும் கூட்டு சேர்ந்து நம்ம டவுசரை வரும் எலக்சனில் கழட்ட வாய்ப்பு இருக்குன்னு தெரிந்ததும் ' மருத்துவரை "

கூப்பிட்டு வந்துரு நாம ஒன்னா இருக்கலாம் என சொன்ன உமது மதியூகத்துக்கு
முன்னால் இந்த பயலுவ நிக்க முடியுமா?

கிடக்கிறதெல்லாம் கிடந்துட்டு போவுதுன்னு இப்போ பத்திரிக்கை -சினிமா உலக சண்டையை

சுவைத்து பார்க்கும் நீர்

நாளை அவனுகளை அழைத்து "பத்திரிக்கை யாளர் குடும்ப பாதுகாப்பு நிதி" அப்படின்னு

ஒன்றை ஏற்படுத்தினா சும்மா வாலை இந்த பக்கம் அந்தபக்கம் ஆட்டிகிட்டு

உமது புகழை இந்த பத்திரிக்கை எழுதாதா என்ன /

கலைஞரே உம்ம மாதிரி ஆளுக இருக்கிற வரை

நூறு பெரியாரில்லை ஆயிரம் பெரியார் வந்தாலும்

"திராவிட மாயையை " ஒழிக்க முடியான்னேன்


























--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post